என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
-------------------------------------------------[
இப்படி இருந்த நான் ..... |
என்
சென்றபதிவு “காலைக் காட்சிகளில் ” அந்த நிகழ்வு என்னில் என்னென்னவோ சிந்தனைகளை
எழுப்பிச் சென்றது என்று முடித்திருந்தேன்
இந்த வயதில் என்ன சிந்தனைகள்தான்
இருந்திருக்கும் ஒரு இண்ட்ராஸ்பெக்ஷன்
என்னுள் எழுந்தது நான் வாழ்ந்த வாழ்வு என்ன எதை நோக்கி என் சிந்தனைகள் எழுகின்றன
இதுவே பதிவாகிறது என் வாழ்வு பற்றி
நிறையவே பகிர்ந்து விட்டேன் அவை என் அனுபவங்களைச்
சார்ந்தது. அந்த
அனுபவங்கள் என்னைச் செதுக்கி இருக்கின்றன, இன்னொரு முறை இதே வாழ்வு வாய்க்குமானால்
அதையே அப்படியே ஏற்றுக் கொள்வேன் அந்த அளவு நான் என்னுடைய குணங்களிலும் கொள்கைகளிலும் பிடிப்பாய் இருந்திருக்கிறேன்
ஆனால் என்னைப் பற்றி நான் நினைக்கும் போது
பிறரும் என்ன் நினைப்பார்கள் என்றும் தோன்றுகிறது
அப்போது
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
என்று தோன்றுகிறது மேலும்
ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
யாரும் சிறியர், நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நீயோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
இப்படியாகி.......... |
என்னும்
எண்ணங்களே மேல் நோக்கி வரும் வாழ்ந்து
முடித்தாய்விட்டது எனக்கு யயாதிபோல் ஆசை வருவதில்லை என்னேரமும் என்
முடிவை நோக்கித் தயாராய் இருக்கிறேன்
என்ன, யாருக்கும் எந்த
தொந்தரவும் தராமல் போய்ச்
சேரவேண்டும்முன்பொரு முறை வீழ்ந்த போது காலா என்
அருகில் வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்
என் காலால் என்று எழுதி இருந்தேன் எனக்குத் தெரியும் சண்டைகளில் நான்
வெல்லலாம் இறுதிப் போரில் அவனே வெல்வான் அவ்வப்போது அவன் என்
தோள் மேலேறி காதில் உன் நாட்களை எண்ணிக் கொள் என்பது போல் சொல்வது கேட்கும்
உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி
என்று
எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் இனி எனக்குள்ள ஆசையெல்லாம் இதுதான்
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
மூடிய கண்கள் விழித்து விட்டால்
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.
பதிவில் யாரோ அனாயாச மரணம்நேர அதிஷ்டம் செய்து
இருக்க வேண்டும் என்பது போல் எழுதி இருந்தார்கள் நான் அம்மாதிரி அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனா
எனக்கு எப்படி தெரியும் நான் இறந்து
விட்டால் நான் நானாக இல்லாமல் நினைவாகவேதானே இருப்பேன் இது இப்போதைய சிந்தனை
மட்டுமல்ல பலவும் என் சிந்தனைகளின்
தொகுப்பே
இப்போது இப்படியாகி விட்டேன் ....! |
.
தன்னைத்தானே உணர்ந்து பார்க்க சில நபர்களால் மட்டுமே முடியும் ஐயா
பதிலளிநீக்குபடங்களையும் வசனங்களையும் இரசித்தேன் ஐயா
வயதாகும்போதுதான் அனுபவங்கள் கூடுகின்றன. அவையே சிந்தனைகளாகவும் வெளிப்படுகின்றன. சிந்தனைதான் வாழ்வாகிறது.
பதிலளிநீக்குவயதானால் வரும் சிந்தனைகள். நானும் இப்படி சிந்திப்பது உண்டு. கவிதைகள், சிந்தனை தொகுப்பு, படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குகவிதை அனாயாசமாக வருகிறது உங்களுக்கு. பொருள் பொதிந்தவை. உங்கள் சிந்தனைகள் எங்கள் அனுபவங்களுக்கும் உதவலாம்.
பதிலளிநீக்குஉங்கள் இளவயதுப் படங்களைக் காணும்போது சற்றே கடுமையானவராகத் தோற்றமளித்தாலும் நெருங்கிப் பழகுவோரிடம் இலேசான நகைச்சுவை உணர்வுடன் பழகுவீர்கள் என்று தோன்றியது!
இந்த எண்ணம் அனைவருக்கும் ஒருநாள் வந்தே தீரும்... எதையும் எதிர்கொள்ளும் இந்த தைரியம் பலருக்கும் வருவதில்லை... காரணம் ஆசையே வருவதில்லை என்று சொல்லி விட்டீர்கள்...
பதிலளிநீக்குவயதோடு
பதிலளிநீக்குநல் முதிர்ச்சியும் சேர்ந்தே அடைந்திருக்கிறீர்கள் ஐயா
பெரும்பாலோருக்கு வாய்க்காத கிடைக்காத மனநிலை
தங்களுக்கு வயப்பட்டிருக்கிறது
தன்னைத்தானே நினைத்துப் பார்ப்பது என்பதானது ஆரோக்கியமான பண்பாகும். அது அனைவராலும் முடியாது ஐயா. அதற்கும் ஒரு துணிவு வேண்டும்.
பதிலளிநீக்கு"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே"
பதிலளிநீக்குஇந்த துணிவு எல்லோருக்கும் வராது ,திருப்தியாய் வாழ்ந்து விட்டோம் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டுமே வரும் :)
எதிர்பார்த்து இருப்பதற்கு மட்டுமல்ல
பதிலளிநீக்குஅது குறித்து யோசிக்கக் கூட
நிச்சயம் முதிர்ச்சி வேண்டும்
பதிலளிநீக்குகரந்தை ஜெயக்குமார் கூறியிருப்பது படியே ...
மாலி
வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரும் போது ஏற்படுகிற தவிர்க்க முடியாத சிந்தனைகள். கவித்துவமான வரிகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@கில்லர் ஜி
உங்களாலும் முடிகிறதே வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஜி
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
உங்களுக்குத் தெரியாததை ஏதும் சொல்லவில்லை சார்
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
எப்போதாவது சிந்திக்கலாம் தவறில்லை நம்மை நாமே அறிய வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ஸ்ரீ ராம்
எப்போதாவதுதான் எழுத்து அழகாக வருகிறது சில நேரங்களில் முயற்சித்தாலும் முடிவதில்லை. கண்களை நம்பாதே ஸ்ரீ கண்களை நம்பாதே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
இப்படி எண்ணம் வரௌம்முன் போய் விட்டால் நல்லது வருகைக்கு நன்றி டிடி
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார் வயதாகும் போது இதுகூட தெரியவில்லையானால் என்ன பயன் சார் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
தன்னைத்தானே எடை போட்டுக் கொண்டு பார்க்காவிட்டால் மேலும் மேலும் தவறுகள் இழைப்போமே வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்குபகவான் ஜி
சரியாகச் சொன்னீர்கள் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ ரமணி
எனக்கு சில சமயம் தோன்றும் இருட்டில் தைரியமாக இருக்க சீழ்க்கை அடிக்கிறேனோ என்று வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு!மாலி
எல்லோருக்குமிருப்பதுதான் ஆனால் நான் வெளிப்படையாகச்சொல்கிறேன் அவ்வளவே நன்றி சார்
பதிலளிநீக்கு@ ராமலக்ஷ்மி
எண்ணங்கள் தீவிரமாகும் போது எழுத்தும் நன்றாக வருகிறதோ வருகைக்கு நன்றி மேம்
என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற மனோ நிலை அனைவருக்கும் வாய்ப்பதில்லை.....
பதிலளிநீக்குஎல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் என்பது தானே அனைவரின் எண்ணமும்.
வெவ்வேறு காலகட்டங்களில் உங்கள் படங்கள் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ வெங்கட் நகராஜ்
தவிர்க்கப் பட முடியாதவைகள் அனுபவிக்கப்பட்டுதானே ஆகவேண்டும் வருகைக்கு நன்றி சார்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகாலனை காலால் மிதித்த, காலடி மண்ணாகமல்; அதின் தூரத்தை வொன்ற: நித்திய மதியின் மகிழ்வாய் இருப்போம்!
நீக்குhttp://www.lighthouse0arts.com/
எனக்கு எதையும் நேராகச்சொல்லியும் புரிந்தும்தான் பழக்கம் இங்கு சிலவை புரியவில்லை வருகைக்கு நன்றி சார்
நீக்குஎன்றாலும், ஒன்றுமில்லாமையிலிருந்து நல் எண்ணம் கொண்ட நல்லவர்களின் திண்ணியத்தால்; எழுத்தை விளைவித்த நம் முன்னோரின் சிந்தனையின் சிறப்பாய்: இன்றும் நம் சீர் செயல்பாட்டால் நித்திய சீர் சிறப்பை நம்மாலும் காண முடியும். நல்லவருக்கு நன்றியுடன்!
நீக்குஅன்பருக்கு, மரணமென்னும் இலக்கில் கூட இறைமன்னிப்பென்னும் நித்திய இலக்கு பளிச்சிடுகிறதே; பார்வையற்றோனாகிலும் நம் நல் நம்பிக்கை என்னும் உள்ளுணர்வின் ஊனத்தில்: எண்ணச்சுதந்திர ஏற்றமிதில் பதுவருட உயர் நல் வாழ்த்தாய் வளம் கொள்ள!http://www.lighthouse0arts.com/
பதிலளிநீக்குநாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பு என்று நினைப்பவன் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஏதும் அறிந்து செய்யவில்லை. இருந்தால்தானே இறையும் மன்னிப்பும் தேவை வருகைக்கு நன்றி சார்
நீக்குஇவ்வுலக மானிட பிறப்பே ஊடலில் ஒன்றிணைவே, பாலும் பாதகமில்லாமல் வராது; இதுவே இறையறிவின் எண்ண்ணச்சுதந்திர ஏற்றெடுப்பில் மன்னிப்பின் நல் வரமாய் நம்மில்: நன்றியின் நிரூபணமாய் இன்றும் அன்புடன்!
நீக்குஉங்கள் எழுத்தில் உள்ள நிஜத்தையும், நேர்மையையும் வணங்குகிறேன்.
பதிலளிநீக்குஎன் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ள எழுத்துக்களை கவனித்தீர்களா. பாராட்டுக்கு நன்றி
நீக்குஎதை வைச்சி என்னை நினைப்பாங்க...?
பதிலளிநீக்குVisit :-
http://dindiguldhanabalan.blogspot.com/2016/11/End-of-Life-Part-1.html
எதை வைத்து உங்களை நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் உங்களுடைய ப்ளசும் மைனசும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே யார் என்ன நினைத்தால் என்ன. வருகைக்கு நன்றி தனபாலன்
நீக்குசமுதாயம் என்பது நற்க்கனிமர நல் மலர் தோட்டம், அதில் மற்றவரை மறந்து போகாமல் மறுபடி அணைத்துக்கொள்ளவே; விதையின் வீரிய நட்ப்பாய் நல்லுறவு நம்மில்: நலம் நாடும் நண்பரே!http://www.lighthouse0arts.com/
நீக்கு