புயல் அனுபவங்கள்
------------------------------
புயல் |
இந்தப்
பதிவை எழுதும்போது சென்னையில் புயல் வீசிக் கொண்டிருப்பதாக தொலைக்காட்சியில்
காட்டிக் கொண்டிருக்கிறார்கள் இது என்
நினைவுகளை நான் விஜய வாடாவில்
இருந்த காலத்தில் வீசிய புயல் பற்றி நினைக்க
வைக்கிறது அப்போது புயல்களுக்குப் பெயர் இடும்
வழக்கமில்லை என்று நினைக்கிறேன்
நவம்பர் மாதம் 1977 என்று நினைக்கிறேன்
அனல் மின் நிலையம் கட்டுமானப்
பணிகளில் இருந்தேன் கொதிகலன்
தொழிற்சாலையில் இருந்து கட்டுமானப்
பொருட்கள் வரும் திருச்சி தொழிற்சாலையில் யாருமே ஒரு முழு கொதிகலனைப் பார்க்க
முடியாது ஏராளமான ராட்சச பாகங்கள் மின்
நிலையத்தில்தான்
ஒருங்கிணைக்கப்படும் கிட்டத்தட்ட மூவாயிரம் டன் எடையுள்ள பாகங்கள்
பொருத்தப்பட அவற்றைத் தாங்க காலம்கள்(columns)
நிர்மாணிக்கப்படும் அவற்றின்
மேல்தான் கொதிகலனின் பாகங்கள் இணைக்கப் படும்
அன்று
மாலை ஒரு நாள் பணி முடிந்து வீடு
வரும்போதே காற்றின் வேகம் அதிகமாயிருந்தது
மழை பெய்யத் துவங்கி இருந்தது. இப்போது போல் எந்த எச்சரிக்கையும் இருக்கவில்லை.
இரவு நெருங்க நெருங்க காற்றின் வேகம் அதிகரிக்கத் துவங்கியது சன்னல்கள் அடித்துக் கொள்ளத் துவங்கின
காற்றின் ஊளைச் சத்தம் அதிகரிக்கத் துவங்கியது
கதவுகளுக்கும் சன்னல்களுக்கும் முட்டுக் கொடுத்து அவற்றின் ஆட்டத்தைக் குறைத்தோம்
மழையும் வலுக்கத் தொடங்கி இருந்தது இரவெல்லாம் தூக்கமிருக்கவில்லை. நாங்கள் ஒரு வீட்டின் முதல் தளத்தில் தங்கி
இருந்தோம் ஒரு வழியாக விடிந்தது வெளியில்
வந்து பார்த்தால் எங்கள் வீட்டு
வெராந்தாவில் இடப்பட்டிருந்த ஒரு நீள மர பென்ச் காணாமல் போயிருந்தது காற்று அதைத் தூக்கி
வீசி வெளியே போட்டிருந்தது.
அடுத்த நாள் பணி செய்யும் இடத்துக்குப் போனால் நாங்கள் கட்டியிருந்த காலம்கள் (columns) எல்லாம்
சரிந்து விழுந்திருந்தன ஏறத்தாழ இரண்டு மாதப் பணியும் சேதமாய் இருந்தது அவற்றை
மறுபடியும் உபயோகிக்க முடியாத அளவுக்கு
பெண்ட்(bend) ஆகியிருந்தன. காலையில் ரேடியோச் செய்தியில் ஆந்திரக் கடற்கரையோரம் சேதம் மிக அதிகம் என்றும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனரென்றும்
அறிந்தோம் அந்தப் புயலுக்கு எந்தப் பெயரும்
இடப்பட்டிருந்த நினைவில்லை பலத்த காற்றும் மழையும் இந்த அளவுக்கு சேதம் விளைவிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த நிகழ்வுக்குப்
பிறகு புயல் வரும் எச்சரிக்கை துவங்கியது
கூடிய அளவு சேதாரங்கள் குறைக்கப் பட்டது. கரையோரப் பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்
படுகின்றனர் ஒரு விஷயம் புரியத் துவங்கிற்றும் புயல் வீசத்துவங்கிய சிறிது
நேரத்துக்குப்பின் அமைதி ஏற்படுவதுபோல்
இருக்கும் இந்த அமைதி புயலின்
மையப்பகுதியில் இருக்கும்
மையப்பகுதி நம் இடத்தைக் கடக்கும் போது
வீசிய காற்று எதிர் திசைக்குத் திரும்பும்
அந்த
நிகழ்வை எதிர்கொண்டபின் புயலின் தாக்கம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொண்டோம் சென்னைப் புயலைத் தொலைக்காட்சியில் காண்பிக்கும்
அளவுக்கு நாம் முன்னேறி
இருக்கிறோம் உயிர்ச் சேதங்கள்
குறைக்கப்படுகின்றன. பாதுகாப்பு பற்றிய தெளிவும் இருக்கிறது இருந்தாலும் இயற்கையின்
சீற்றத்தைக் குறைக்க முடியுமா?
.
இயற்கையின் சீற்றத்தினை குறைக்க முடியுமா? நல்ல கேள்வி. இப்போது இத்தனை எச்சரிக்கைகள் தந்தாலும், மக்கள் வேடிக்கைப் பார்க்க வெளியே செல்வதை சென்னையில் பார்த்தேன். ஆபத்தானது என்று தெரிந்தும் வெளியே செல்லும் - அதுவும் வேடிக்கை பார்க்கவும், செல்ஃபி எடுக்கவும் வெளியே செல்லும் இவர்களை என்ன சொல்ல....
பதிலளிநீக்குநெய்வேலியில் இப்படி சில புயல் சமய மழைக் காலங்களில் வீட்டு வராண்டாவிலிருந்து வேடிக்கை பார்த்திருக்கிறேன்.
பூ ஒன்று புயலானது படம் வேண்டுமானால் பார்த்திருக்கிறேன் ,நேரடியாக புயலின் சீற்றத்தை பார்த்ததில்லை :)
பதிலளிநீக்குநானும் ஒரு புயலின் சீற்றத்தைக் கண்டிருக்கிறேன். சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு பரீட்சகராகப் போனபோது ஒரு புயல் வீசிற்று. மழைத்தண்ணீர் மேலிருந்து கீழே விழாமல் தரையை ஒட்டியே போனது. தென்னை மரங்களின் மட்டைகள் எல்லாம் ஒரு பக்கமாகத் திரும்பி இருந்தன.
பதிலளிநீக்குதிரும்பி ஊர் வருவதற்கு படாத பாடு பட்டோம்.
இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன் என்று ஞாபகம்.. சென்னையை புயல் தாக்கி! அப்போதும் இதே வீட்டில் தான் இருந்தேன். அப்போது ஒரு வாரம் கரண்ட் இல்லாமல் கஷ்டப் பட்டோம். இப்போது நான்கைந்து நாட்களில் வரலாம். அவ்வளவுதான் முன்னேற்றம்.
பதிலளிநீக்குநாங்கள் மாயவரத்தில் இருந்த போது மழை, புயல் வந்து மரங்கள் சாய்ந்து அப்புறபடுத்தவே பல நாட்கள் ஆனது. கரண்ட் பத்து நாட்கள் இல்லை. மிகவும் கஷ்டபட்டோம். அம்மி, ஆட்டுக்கல் உபயோகபடுத்தியது அப்போதுதான்.
பதிலளிநீக்குஉண்மைதான், இப்போது விஞ்ஞான வளர்ச்சியால் எச்சரிக்கை செய்ய முடிகிறது. ஆனாலும் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொள்வது என்றைக்குமே எளிதாக இருந்ததில்லை. நெல்லையிலும், இங்கே பெங்களூரிலும் புயல் காற்றுடனான அச்சுறுத்தும் பலத்த மழையை சில சமயங்களில் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ்
ஆச்சரியமான முதல் வருகைக்கு நன்றி சார் புயலாலும் மழையாலும் என்றும் அவதிக்குள்ளாகிறவர்கள் ஏழை மக்களே . துப்புரவுப் பணி சாலை களை சீராக்குதல் மின்சாரம் வினியோகித்தல் என்று எல்லாப் பைகளிலும் இருப்பவர்கள் பாராட்டுக்குரியவர்களே
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
பூ ஒன்று புயலானால் அது தனிப்பட்டவரையே தாக்கும் வருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
மழைத்தண்ணீர் மேலிருந்து கீழே விழாமல் தரையை ஒட்டியே சென்றது புரியவில்லை ஐயா வருகைக்கு நன்றி
@ ஸ்ரீராம்
பதிலளிநீக்குஎடுத்துப் போட்ட சென்னையை சீராக்குவது பெரிய பணி அல்லவா. அனைவரையும் பாராட்டுவோம் வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ கோமதி அரசு.
இந்தப்புயல் உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதா வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ராமலக்ஷ்மி
இந்த மாதிரி புயல் பெங்களூரைத் தாக்கினால் நிலைமையைச் சீராக்குவது பெரும் பாடாகி விடும் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்
1977 புயலைப் பற்றி தாங்கள் கூறியவை பழைய நினைவுகளை எழுப்பிவிட்டது.. அப்போது வெள்ளமும் சேர்ந்து கொண்டது தஞ்சை மாவட்டத்தில்..
பதிலளிநீக்குகாற்றில் விழுந்த மரங்களை நண்பர்களுடன் அப்புறப்படுத்தியதெல்லாம் மனதில் நிழலாடுகின்றது..
சூழலை எதிர்கொள்ளும் பக்குவப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் துணிவு பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
பதிலளிநீக்கு1977 ம் வருடத்துப் புயலின் பாதிப்பு நாங்கள் உணர்ந்ததுமிக சொற்பமே கடலோரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான உயிர் சேதங்கள் இருந்தது
பதிலளிநீக்கு! டாக்டர் ஜம்புலிங்கம்
நீரில் எறியப் பட்டால் பக்குவம் தானாக வருமோ வருகைக்கு நன்றி சார்
மிக அதிசயமாக நாங்கள் இந்தப் புயலின் தாக்கத்திலிருந்து தப்பி இருக்கோம். இறை அருள் தான் காரணம்.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
பதிலளிநீக்குபொதுவாக புயலால் அதிக உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. அரசின் பணிதான் அதிகமாகும் புயலை அனுபவித்தவர்கள் யாரும் மாட்டிக் கொண்டதாக எழுதவில்லையே நன்றி