Saturday, December 17, 2016

பாட்டியும் முட்டைத் தலையும்


                                          பாட்டியும்  முட்டைத்தலையும்
                                        ---------------------------------------------
 (  படித்தவை எல்லாம்ன் நினைவில் இருக்கிறதா என்ன?என் சிந்தனையோடு ஒத்துப் போவதும் பலரும் படிக்காமல் விட்டதுமான சில பதிவுகளை மீள் பதிவாக்குவதில் தவறில்லை என்று தோன்றுகிறது )

.பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடுஎன்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ ப்ரஜாவாணி “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்களையா “ என்று கேட்டேன்.
படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே
நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.என்றேன்.
சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். “
“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம் என்கிறார்கள். “


“ மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.
பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?


“ சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.
 “எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். “
“ இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...
“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி....
அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே. ?
“ பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லது என்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே உனக்கு...!
(  “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை நீங்கள் மேலே படித்தது.) .
                
  

19 comments:

  1. ஹா...ஹா...ஹா... ரசித்தேன் ஐயா

    ReplyDelete
  2. நவயுகப் பாட்டியின் கருத்துக்கள் அருமை.

    ReplyDelete
  3. குடிகாரர்கள் எப்படி வேண்டுமானாலும் நியாயப் படுத்துவார்கள் ,எழுத்தாளரும் இதற்கு விதிவிலக்கில்லை :)

    ReplyDelete
  4. முட்டைத்தலை சொற்பயன்பாடு ரசிக்கும்படி இருந்தது. பாட்டிக்கு தரப்பட்ட வைத்தியம் அருமை.

    ReplyDelete
  5. ஹா...ஹா.... ரசித்தேன்... ஐயா... அருமை...

    ReplyDelete
  6. சுவாரஸ்யம்தான். ஆனால் இப்போதெல்லாம் பள்ளியில் முட்டை போடுகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். (மத்திய உணவில் சொல்கிறேன்... பரீட்சை பேப்பரில் எப்போதுமே உண்டு!!)

    ReplyDelete
  7. காலங்கள் மாறும்போது - காட்சிகளும் மாறிவிடுகின்றன..

    பதிவு நன்றாக இருக்கின்றது..

    ReplyDelete

  8. @ கில்லர் ஜி
    @ டாக்டர் கந்தசாமி
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    @ பகவான் ஜி
    @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ கரந்தை ஜெயக் குமார்
    @ பரிவை சே குமார்
    @ துளசி கோபால்
    @ ஸ்ரீராம்
    @ துரை செல்வராஜு
    அனைவரது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  9. அருமையான பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete
  10. இப்படித்தான் பல பேருக்கும் தினமும் சளி பிடிக்கிறது....!

    ReplyDelete
  11. விசித்திரமான பதிவு.

    ReplyDelete

  12. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ கீதா சாம்பசிவம்
    பாராட்டுக்கு நன்றி. சளியைப் போக்கும் மருந்தாகதான் சொல்லி இருக்கிறது சளிபிடிக்கக் காரணமாகச் சொல்லவில்லை
    என்ன விசித்திரம் கண்டீர்களோ தெரியவில்லை.

    ReplyDelete
  13. பால்...நீர் மாமிசம். ... அட ஆமாம். அப்போ இன்னும் நான் அசைவம் தானா. ? ஈஸ்வரா ..

    ReplyDelete
  14. @ சிவகுமாரன்
    டி பி கைலாசம் பிரச்சனையைக் கிளப்பி விட்டாரோ வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. இரசித்தேன்! மைசூரை சேர்ந்த திரு டி.பி.கைலாசம் கோரூர் இராமசாமி ஐயங்கார் போலவே தமிழர். அவரைப் போலவே கன்னடத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் என்பது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை. திரு கைலாசம் தனது பெயரை விளையாட்டாய் சொல்வராம் Typical Ass I am என்று .

    ReplyDelete