மகளிர் சக்தி( பக்தி..?)
-----------------
மகளிர் சக்தி
சில மாதங்களுக்கு முன் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் தலைப்பில் ஒரு பதிவு
எழுதினேன்
இந்த
விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணத்தால் நான் பல முறை வீட்டில் தனியாக
விடப்பட்டிருக்கிறேன் மனைவி ஒவ்வொரு
இடத்திலும் நடக்கும் இந்த
பாராயணத்துக்குச் சென்றுவிடுவாள் நான்
அவளை மிகவும் நேசிப்பதால் அவளது விருப்பத்துக்குக் குறுக்கே நிற்பதில்லை
மேலும் எங்கள் வீட்டில் ஒருமுறை
பலரும் கூட இந்தப் பாராயணம் செய்யும்
விருப்பம் அவளுக்கு இருந்தது மனைவியை நேசிப்பவன் அவள் சொல்லைத் தட்டலாமா நடத்திக் கொள்
என்று கூறி விட்டேன் என் மூத்த மகனின்
பிறந்த நட்சத்திரமான மூலம் வரும் நாளில்
வீட்டில் எல்லோரும் சேர்ந்து பாராயணம் செய்ய விரும்பினாள் இந்த டிசம்பர்
மாதம் முதல் தேதி வாய்த்தது இம்மாதிரிப் பாராயணம் செய்பவர்கள் சிரத்தையுடன் செய்ய
வேண்டுமென்று அவளுடைய குழு லீடர் விரும்பினாள் ஆகவே பாராயணம் செய்யத் தெரிந்தவர்களுக்கு அழைப்பு
விடப்பட்டது மதியம் இரண்டு மணியில் இருந்து பதினோரு முறை பாராயணம் செய்யச்
சொல்லப்பட்டது இந்த சமயத்தில் நான் விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு தமிழில் பொருள் எழுத முனைந்தது நினைவுக்கு
வந்தது நிலைமையில் ஏதும் மாற்றமில்லை. பலரும்
பொருள் தெரியாமலேயே பாராயணம் செய்கிறார்கள் இருந்தாலும் ஏதோ நம்பிக்கையோடு செய்கிறார்கள் என்று
நினைக்கும் போது பொருளாவது ஒன்றாவது என்று நினைக்கத் தோன்றுகிறது
இந்த ஸ்தோத்திரமே அவனது
ஆயிரம் நாமங்கள் கொண்டது. நாமஜபம் செய்வதற்கு மொழி ஒரு தடைக்கல்லே அல்ல என்னும்
அபிப்பிராயம் உடையவர்களே
இருந்தாலும் பீஷ்மரிடம் ஆறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அவர் கூறியதானவிடையில் ஐந்து ஆறாவது
கேள்விகளுக்கான விடைகளை இப்போது எழுதுவது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது
Q.5 , Ko dharmah sarva-dharmaanaam Bhavatah paramo matah?
கோதர்மசர்வ தர்மானாம் பவத பரமோ மதா
உங்கள் கருத்துப்படி சிறந்த தர்மம் அல்லது நெறி யாது
Q.6 Kim japan muchyate jantuh Janma-samsaara-bandhaaat?
கிம்ஜபன்முச்யதேஜந்துர் ஜன்ம சம்ஸாரபந்தனாத்
எதை தியானித்து
உயிரிகள் சம்ஸாரத் தளையிலிருந்து விடுதலை அடையலாம்
Ans..5&6Anaadi-nidhanam vishnum Sarvaloka-maheshvaram
Lokaadhyaksham stuvan nityam Sarva-duhkha-atigo bhavet.
ஆதி அந்தம் இல்லாத விஷ்ணுவின் நாமத்தைப் பஜிப்பதாலும்
நினைப்பதாலும் எல்லாத் தளைகளில் இருந்தும் விடுபடுவதே சிறந்த நெறியாகும்
இருந்தாலும் இதைப்
பாராயணம் செய்பவர்கள் தெரிந்துதான்
செய்கிறார்களா தெரியவில்லை
அன்று என்
வீட்டுக்கு சுமார் முப்பது பெண்மணிகள் வந்திருந்தார்கள் சுமார் மூன்று
மணிநேரம் பாராயணம் செய்தார்கள் இந்த மகளிர் சக்தி முன் என்போன்றோரின் வாதங்கள் எடுபடாது என்று
தெரியும் முதல் சுலோகத்தையும் பொருளையும்
பதிவிடுகிறேன்
--------------------------------------
“விஸ்வம் விஷ்ணு
வஷட்கார பூதபவ்ய பவத்ப்ரபு
பூதக்ருத்
பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன:
அண்டமெலாம் வியாபித்து இருப்பவர் அனைத்திலும் நீக்கமற
நிறைந்திருப்பவர் அனைத்தையும் தான் நினைத்தப்டி நடத்தி தன் வசம்
வைத்திருப்பவர்,முக்காலங்களிலும் இருப்போர்க்கெல்லாம் தலைவர்,தன் நினைவாலேயே
அனைத்தையும் படைப்பவர், படைத்த அனைத்தையும் தாங்குபவர், பிரபஞ்சமே தன்னைச்
சார்ந்திருப்பதாகக் கொண்டவரனைத்துக்கும் ஆத்மாவாக இருப்பவர்,அனைத்துக்கும் அவரே
உடல், அனைத்தையும் பேணி வளர்ப்பவர், தலைவர்.
இம்மாதிரி 108
சுலோகங்களில் சஹஸ்ர நாமங்களும் வெளியாகிறது என்று நினைக்கிறேன் இதையே பதினொரு முறைகள் சொன்னார்கள் சில
காட்சிகளைப் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும்
பதிவிடுகிறேன்
தொடரும்பாராயணம் |
பாராயணத்தின் கடைசி கட்டம் |
சஹஸ்ர நாம பாராயணம் முடிந்தவுடன் வந்திருந்தோருக்கு டிபன் காப்பியுடன் வெற்றிலை பாக்கு பழம் தேங்காயுடன் ரூ 51-/ கொடுக்கப்பட்டது மனைவிக்குச் சந்தோஷம் எனக்கு அதுவே திருப்தி
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தாலும் கேட்டாலும் புண்ணியம் உண்டு. ஆகவே உங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு சீட் ரிசர்வ் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநேரடியாகப் பார்ப்பது போல
பதிலளிநீக்குகாணொளியாக்கிப் பதிவிட்ட விட்டவிதம்
மிக மிக அருமை
(என் வீட்டிலும் இதைச் செய்ய வேண்டும்
என துணைவியார் சொல்லிக் கொண்டு உள்ளார்
செய்வோம் எனச் சொல்லிக் கொண்டு உள்ளேன்
அவர்கள் திருப்தியும் முக்கியம்தானே )
அன்பும் அமைதியும் முக்கியம்..
பதிலளிநீக்குஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் எல்லாருக்கும் நன்மைகளைத் தரட்டும்..
ஒரு கெட் டுகெதர் எப்போதுமே ஒரு சந்தோஷத்தைத் தரும்.
பதிலளிநீக்குவிஷ்ணு சஹஸ்ரநாமம்பாராயணம் அருமை.
பதிலளிநீக்குகாணொளிகள் அருமை.
கூட்டுப் பிராத்தனை மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
நல்ல வேளை,என் மனைவி பக்தியில் இவ்வளவு தீவிரமில்லை !எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்பதும் காரணமாய் இருக்கலாம் :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@டாக்டர் கந்தசாமி
இங்கேயே சொர்க்கத்தில்தானே இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ரமணி
அவர் திருப்தியும்முக்கியம் தானே அல்ல அவர் திருப்தியே முக்கியம் வருகைக்கு நன்றி சார்
@ துரை செல்வராஜு
பதிலளிநீக்குஅகில உலக விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண மண்டலிகளின் தலைவர் உலகின் ஏதாவதுஒரு பகுதியில் எப்போதும் இந்த பாராயணம் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் வருகைக்கு நன்றி சார்
@ ஸ்ரீராம்
பதிலளிநீக்குஇம்மாதிரி கெட் டுகெதர்கள் செலவு வைப்பவை. வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ பகவான் ஜீ
எனக்கும் இமாதிரிக்கும் ஏழோ எட்டாம் பொருத்தமோ தெரியலை மனைவிக்காக இது. வருகைக்கு நன்றிஜி
இவ்வாறான நிகழ்வுகள் குடும்பத்தாருக்கு மட்டுமன்றி கலந்துகொள்வோரும் மன நிறைவைத் தரும் ஐயா. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ உங்கள் மனைவிக்கு பிடித்திருப்பதால் இப்படி பாராயணம் வைத்துக் கொள்வது தவறில்லை.
பதிலளிநீக்குசெலவு! - எத்தனையோ செலவு. அதில் இதுவும் சேர்ந்து கொள்ளட்டும்....
பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
மனநிறைவு கிடைப்பதாயிருந்தால் சரி. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
மனைவிக்காக எதையும் செய்யலாம் செலவு என்ன செலவு திருப்திதானே முக்கியம் வருகைக்கு நன்றி சார்
மனைவியின் விருப்பத்தை நிறைவு செய்வது முக்கியமே.
பதிலளிநீக்குவிஷ்ணு சஹஸ்ரநாமம் பொருளுடன் கூடிய புத்தகம் ராமகிருஷ்ணா மிஷினால் பல்லாண்டுகள் முன்னரே வெளியிடப்பட்டு விட்டது. ஆகவே பொருள் தெரியாமல் எல்லோரும் சொல்கின்ற்னர் என நினைக்க முடியாது. அவரவருக்குப் புரிந்த விதத்தில் பொருள் கொண்டே எல்லோரும் சொல்வார்கள். மேலும் பகவான் நாமங்கள் என்று உணர்ந்து சொல்வதே போதுமே!
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
பதிலளிநீக்குஅவரவருக்குப் புரிந்த விதத்தில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம் என் பதிவின் தலைப்பே சொல்லுமே மகளிரின் பக்தி / சக்தி பற்றி வருகைக்கு நன்றி