புயல் அனுபவங்கள்
------------------------------
![]() |
| புயல் |
இந்தப்
பதிவை எழுதும்போது சென்னையில் புயல் வீசிக் கொண்டிருப்பதாக தொலைக்காட்சியில்
காட்டிக் கொண்டிருக்கிறார்கள் இது என்
நினைவுகளை நான் விஜய வாடாவில்
இருந்த காலத்தில் வீசிய புயல் பற்றி நினைக்க
வைக்கிறது அப்போது புயல்களுக்குப் பெயர் இடும்
வழக்கமில்லை என்று நினைக்கிறேன்
நவம்பர் மாதம் 1977 என்று நினைக்கிறேன்
அனல் மின் நிலையம் கட்டுமானப்
பணிகளில் இருந்தேன் கொதிகலன்
தொழிற்சாலையில் இருந்து கட்டுமானப்
பொருட்கள் வரும் திருச்சி தொழிற்சாலையில் யாருமே ஒரு முழு கொதிகலனைப் பார்க்க
முடியாது ஏராளமான ராட்சச பாகங்கள் மின்
நிலையத்தில்தான்
ஒருங்கிணைக்கப்படும் கிட்டத்தட்ட மூவாயிரம் டன் எடையுள்ள பாகங்கள்
பொருத்தப்பட அவற்றைத் தாங்க காலம்கள்(columns)
நிர்மாணிக்கப்படும் அவற்றின்
மேல்தான் கொதிகலனின் பாகங்கள் இணைக்கப் படும்
அன்று
மாலை ஒரு நாள் பணி முடிந்து வீடு
வரும்போதே காற்றின் வேகம் அதிகமாயிருந்தது
மழை பெய்யத் துவங்கி இருந்தது. இப்போது போல் எந்த எச்சரிக்கையும் இருக்கவில்லை.
இரவு நெருங்க நெருங்க காற்றின் வேகம் அதிகரிக்கத் துவங்கியது சன்னல்கள் அடித்துக் கொள்ளத் துவங்கின
காற்றின் ஊளைச் சத்தம் அதிகரிக்கத் துவங்கியது
கதவுகளுக்கும் சன்னல்களுக்கும் முட்டுக் கொடுத்து அவற்றின் ஆட்டத்தைக் குறைத்தோம்
மழையும் வலுக்கத் தொடங்கி இருந்தது இரவெல்லாம் தூக்கமிருக்கவில்லை. நாங்கள் ஒரு வீட்டின் முதல் தளத்தில் தங்கி
இருந்தோம் ஒரு வழியாக விடிந்தது வெளியில்
வந்து பார்த்தால் எங்கள் வீட்டு
வெராந்தாவில் இடப்பட்டிருந்த ஒரு நீள மர பென்ச் காணாமல் போயிருந்தது காற்று அதைத் தூக்கி
வீசி வெளியே போட்டிருந்தது.
அடுத்த நாள் பணி செய்யும் இடத்துக்குப் போனால் நாங்கள் கட்டியிருந்த காலம்கள் (columns) எல்லாம்
சரிந்து விழுந்திருந்தன ஏறத்தாழ இரண்டு மாதப் பணியும் சேதமாய் இருந்தது அவற்றை
மறுபடியும் உபயோகிக்க முடியாத அளவுக்கு
பெண்ட்(bend) ஆகியிருந்தன. காலையில் ரேடியோச் செய்தியில் ஆந்திரக் கடற்கரையோரம் சேதம் மிக அதிகம் என்றும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனரென்றும்
அறிந்தோம் அந்தப் புயலுக்கு எந்தப் பெயரும்
இடப்பட்டிருந்த நினைவில்லை பலத்த காற்றும் மழையும் இந்த அளவுக்கு சேதம் விளைவிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த நிகழ்வுக்குப்
பிறகு புயல் வரும் எச்சரிக்கை துவங்கியது
கூடிய அளவு சேதாரங்கள் குறைக்கப் பட்டது. கரையோரப் பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்
படுகின்றனர் ஒரு விஷயம் புரியத் துவங்கிற்றும் புயல் வீசத்துவங்கிய சிறிது
நேரத்துக்குப்பின் அமைதி ஏற்படுவதுபோல்
இருக்கும் இந்த அமைதி புயலின்
மையப்பகுதியில் இருக்கும்
மையப்பகுதி நம் இடத்தைக் கடக்கும் போது
வீசிய காற்று எதிர் திசைக்குத் திரும்பும்
அந்த
நிகழ்வை எதிர்கொண்டபின் புயலின் தாக்கம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொண்டோம் சென்னைப் புயலைத் தொலைக்காட்சியில் காண்பிக்கும்
அளவுக்கு நாம் முன்னேறி
இருக்கிறோம் உயிர்ச் சேதங்கள்
குறைக்கப்படுகின்றன. பாதுகாப்பு பற்றிய தெளிவும் இருக்கிறது இருந்தாலும் இயற்கையின்
சீற்றத்தைக் குறைக்க முடியுமா?
.
