என்கேள்விக்கு என்ன பதில்
--------------------------------------------
Jk38224
இந்தப் பதிவு என்னையும் சில குழப்பத்திற்கு உள்ளாக்கியது. அதனால் நீங்களே கேள்வி கேட்டு பதில் எழுதுவதற்கு பதிலாக நான் சில கேள்விகளை முன் வைக்கிறேன். அதிகப்பிரசங்கம் என்றால் மன்னிக்கவும்.
1. மதம் என்றால் என்ன? மதம் கடவுள், அல்லது தோற்றுவித்தவர், அல்லது கோட்பாடுகள் என்ற முறையில் கூறப்படுவதா?
2. மதத்திற்கு கடவுள் என்ற ஒன்று அவசியமா?
3. கடவுளைப் பற்றி குறிப்பிடாத சில "மதங்கள்" உண்டு. உ-ம். பௌத்தம். இவை மதங்கள் இல்லையா?
4.இந்து என்ற பெயரில் மதம் இருந்ததாக தெரியவில்லை. இந்துமதம் என்ற பெயர் காரணம்? இதுவும் சனாதன தர்மம் என்று கூறப்படுவதும் ஒன்றா?
5. இந்து மதத்தில் கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் உண்டா? உண்டு எனில் அவற்றை உண்டாக்கியவர் யார்?
6. நாத்திகர்களுக்கு மதம் உண்டா? இல்லை எனில் ஏன் அவர்களுக்கு ஜாதி அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது?
1. மதம் என்றால் என்ன? மதம் கடவுள், அல்லது தோற்றுவித்தவர், அல்லது கோட்பாடுகள் என்ற முறையில் கூறப்படுவதா?
2. மதத்திற்கு கடவுள் என்ற ஒன்று அவசியமா?
3. கடவுளைப் பற்றி குறிப்பிடாத சில "மதங்கள்" உண்டு. உ-ம். பௌத்தம். இவை மதங்கள் இல்லையா?
4.இந்து என்ற பெயரில் மதம் இருந்ததாக தெரியவில்லை. இந்துமதம் என்ற பெயர் காரணம்? இதுவும் சனாதன தர்மம் என்று கூறப்படுவதும் ஒன்றா?
5. இந்து மதத்தில் கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் உண்டா? உண்டு எனில் அவற்றை உண்டாக்கியவர் யார்?
6. நாத்திகர்களுக்கு மதம் உண்டா? இல்லை எனில் ஏன் அவர்களுக்கு ஜாதி அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது?
நான் கற்றதும் பெற்றதும் என்னும் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் மேல்
இருப்பதும் ஒன்று கேள்விகள் கேள்விகள்
என்னால் இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடியுமா தெரிய
வில்லை ஆனால் முழுவதும் படித்தால் பதில்கள் தெரியலாம்
எனக்குத் தெரியாதவற்றுக்கு தெரிந்தவர்கள்
என்று அறியப்பட்டவர்களைப் படித்துக் கூறி இருக்கிறேன்
முதலில் மக்கள் நல்வழியில் நடக்க சில
விதிமுறைகளை ஏற்படுத்தி அதை பயன்படுத்த ஏற்பட்டவையே மதம் ஆனல் நம் ஹிந்து மதமென்பது யாராலும் ஏற்படுத்தப்பட்டதல்ல ஹிந்துமதமென்பதுதானென்ன ஒரு
ஹிந்து தந்தைக்கும் ஹிந்து தாய்க்கும்
பிறந்ததால் நானொரு ஹிந்து என்று
அறியப்படுகிறேன்
”ஒருவன்
ஒரு கடவுளை நம்புபவனாக, ஹிந்துவாக இருக்கலாம். பல கடவுள்களை நம்புபவனும் ஹிந்துவாக
இருக்கலாம். கடவுளையே நம்பாதவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளே இல்லை என்று
சொல்லும் நாத்திகனும் ஹிந்துவாக இருக்கலாம்
” இந்தமாதிரியான
எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத ஒரு மதம் மாற்றாரின் தாக்குதலைதாங்கி இத்தனை வருடங்கள்
இருக்க முடியுமா இருந்திருக்கிறதே
”நான் தொடர்ந்து கோயில்களுக்குச்
செல்வதில்லை. எந்த வழிபாட்டு முறையையும் செய்வதில்லை. சின்ன வயதில்
செய்திருக்கிறேன்.இப்போது சில நேரங்களில்
செய்யும்போதும் விரும்பிச் செய்கிறேன்.மகிழ்ச்சியாக இருக்கும்.”
“ விரும்பிச் செய்கிறீர்களா.? கடவுளிடம் பயம் இல்லையா.?”
“ கடவுள் ஒரு நண்பர். அவரிடம் பயம் ஒன்றுமில்லை. மேலும்
இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாரும் எப்போதும் கட்டாயப் படுத்துவதில்லை.“
. ஹிந்துயிஸம் என்பது ஒரு மதமல்ல. வாழ்க்கை நெறியும்
முறையும் என்று. கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் போல் எந்த ஒரு தனி மனிதராலும்
தோற்றுவிக்கப் படவில்லை. எந்த அமைப்போ குழுவோ சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதில்லை
“ அப்படியானால் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா”
“ நான் அப்படிச் சொல்லவில்லை. ஒரு தெய்விக சக்தியை மறுத்து
ஒதுக்கவும் இல்லை. எங்கள் நூல்கள், ஸ்ருதிக்களும்,
ஸ்மிருதிக்களும், வேதங்களும், கீதையும் உபநிஷத்துக்களும் கடவுள் இருக்கலாம் ,
இல்லாமலும் இருக்கலாம் என்றே கூறுகின்றன. ஆனால் நாங்கள் எங்கும் நிறைந்த, சர்வ
சக்தி மிகுந்த அந்த பரப் பிரும்மத்தை இந்த பிரும்மாண்டத்தை
சிருஷ்டி செய்தவராக வணங்குகிறோம்.”
உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட கடவுள் கிடையாதா து.?”
” எங்களுக்கு
கடவுள் என்பது ஒரு கோட்பாடு. நம்பிக்கை. விவரிக்க இயலாத எங்கும் விரவி இருக்கும்
அரூபம். ஒரு குறிப்பிட்ட கடவுளின் பின் மறைந்து அவரை நம்பாவிட்டால்
தண்டனைஎன்றெல்லாம் பயமுறுத்தி அவரை வணங்க வைக்க அவர் ஒன்றும் கொடுங்கோலர் இல்லை.
பயத்தையும் மரியாதையையும் திணிப்பவர் அல்ல. ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து
கொள்ளாதவர்களை ஏமாற்றி , மூட நம்பிக்கைகளை வளர்த்து ,மதம் குறித்த சிந்தனைகளையே
தடம் மாறச் செய்பவர்களும் அவர்கள்போதனையில் மயங்கி ஏமாறுபவர்களும் இருக்கலாம்.
ஆனால் வேதாந்த ஹிந்துமதம் இவற்றை எல்லாம் மறுதளிக்கிறது.”
“ நல்லது கடவுள் இருக்கலாம் என்று நம்பி வழிபடுகிறீர்கள். வேண்ட்வும் செய்கிறீர்கள்..உங்கள் வேண்டுதல்தான் என்ன.?”
” லோக
சமஸ்த சுகினோ பவந்து. ஓம் ஷாந்தி ஷாந்தி.”( அமைதியுடன் வாழ்க வையகம்.)
. இந்த வேண்டுதலின் பொருள் என்ன. ?”
”இந்த
உலகும் அதில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் எங்கும்
அமைதி நிலவட்டும்”
இந்த மதம் பற்றிய விஷயங்கள் ஆர்வத்தை கிளப்பும். ஜனநாயக
முறையில் இருப்பதுது.பரந்த விசாலமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.”
“ உண்மையில் ஹிந்துயிசம் என்பது வேதங்களிலும் பகவத் கீதை
போன்ற நூல்களிலும் வேர் விட்டுக் கிளர்ந்த ஒரு தனி மனிதனின் மதம்..அவனது
வாழ்வியலுக்கும், எண்ண ஓட்டத்துக்கும் சித்தாந்தங்களுக்கும் ஈடு கொடுத்து அவன்
விரும்பும் பாதையில் அவனுடைய கடவுளை அடைய வழி வகுக்கும் மிக எளிமையான மதம்”
யாரும் யாரையும் ஹிந்து மதத்துக்கு மாற்ற
முடியாது. ஏனென்றால் அது ஒரு மதமே அல்ல. அது ஒரு வாழ்வியல். பல நம்பிக்கைகளையும்
பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய கலாச்சாரம்.ஹிந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக்
கொள்கிறது. அதற்கு எம்மதமும் சம்மதமே. சரி தவறு என்று கூறும் யாருடைய அதிகாரத்தின்
கீழும் அது இல்லை. வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மதம்
விட்டு மதம் மாறவோ, ஒரு குருவை விட்டு இன்னொரு குருவை வழி காட்ட நாடவோ தேவை இல்லை
உண்மையைத் தேடுபவனுக்கு பைபிளிலேயே வழி காட்டப் பட்டிருக்கிறது.’ஆண்டவனின் அரசு உன்னுள்ளேயே
இருக்கிறது. உன்னைப் போல் அடுத்தவனையும் நேசி’
” எங்கும்
நிறைந்திருக்கும் ஆண்டவனையும் அவனது சிருஷ்டியையும் நேசிப்பதேஅவனைத் தேடும்
முயற்சியின் முதல் படி. ’இசவஸ்யம்
இதம் ஸர்வம்’ ( ISAVASYAM
IDAM SARVAM ) எங்கும் நிறைந்திருக்கும் அவனை எதிலிருந்தும் பிரித்து அறிய
முடியாது. உயிருள்ள மற்றும் ஜடப் பொருளை கடவுளாக மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது
ஹிந்துயிசம் .அது சனாதன தர்மம் என்று கூறப்படுகிறது. வாழ்வின் நியதிகளைக்
கடைபிடிப்பதில் அடங்கி இருக்கிறது. அவனவனுக்கு உண்மையாக இருப்பதே முக்கியமாகக் கருதப்
படுகிறது.ஹிந்துயிசத்தில் கருத்துக்களுக்கு உரிமை கொண்டாட யாருக்கும்
அதிகாரமில்லை. எல்லோருக்கும் பொதுவானது. ஹிந்துக்கள் ஒரு ஆண்டவனை பல உருவங்களில்
பல நிலைகளில் வழிபடுகிறார்கள் அவர்களுக்கு ஆதியும் அந்தமும் இல்லாதவன் கடவுள்.
எம்மதமும் சம்மதமே என்றே முன்னோர்கள்
அறிவிறுத்தினர். ஆனால் சமீப காலத்தில் நம்பிக்கைகளுக்கு வெறி ஏற்றி சிலரது
ஆளுகைக்கும் கட்டுக்கும் கொண்டுவர பிரயத்தனங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தை சந்தைப்
பொருளாக்கி வியாபாரப் பொருளாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து மதமும்
விதிவிலக்கில்லாமல் பலியாகிறது.
நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். என் மனதை
எந்த கோட்பாட்டுக்கும் கட்டுபடுத்தாததால் நான் ஒரு ஹிந்து. பிறப்பில் இருக்கும்
மதத்தை மாற்ற விரும்புபவர்கள் போலிகள். வாழ்வின் மதிப்பீடுகளையும்
கலாச்சாரங்களையும் மதிக்காதவர்கள்.
யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில்
பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.”
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.
பழைய எழுத்தின் தாக்கம் இதிலும் வந்து விட்டதோ கேள்விபதிலாக
பதிவு நீள்வதால் தொடராக இன்னும் வரும் அடுத்து
திரட்டிக்கொடுத்திருக்கும் பதில்கள் ரசிக்க வைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎல்லாம் தெரிந்திருப்பதாக நன்ச்ப்ல்லவில்லையே
நீக்குநல்லதொரு தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅறிந்த தகவல்கள் பொருள் பொதிந்தவை. ரசித்தேன்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும்நன்றி சார்
நீக்குபட்டாசு போல பல உண்மைகள்... அருமை ஐயா...
பதிலளிநீக்குபலௌண்மைகள் அப்படிதான் நினைக்கிறேன்
நீக்குநீங்கள் எதையெல்லாம் எப்படி எப்படி நினைக்கிறீர்களோ, அதெல்லாம் தான் அப்போதைக்கு உண்மை.
பதிலளிநீக்குஇந்த 'எப்படி எப்படி' அடிக்கடி மாறலாம். மாற வேண்டும். அதான் உயிர்ப்புள்ள சிந்தனைக்கு அடையாளம்.
சிந்தனை என்பது ஏற்கனவே பிடித்து வைத்த பண்டம் அல்ல.
யாரோ எந்தக் காலத்திலோ எதுவாகவோ சிந்தனையோடு இன்றைய உங்களின் புத்தம் புது சிந்தனையோடு ஒப்பிட்டோ, நேற்றைய பழம் பாண்டத்தில் இன்றைய உங்களின் சிந்தனையை இட்டு நிரப்பித் தந்தாலோ அது பொய்யாகப் போகும். சிந்தனைக்கு வளர்ச்சியில்லை என்றாகிப் போகும்.
அதனால் அந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள். எதுவானும், எப்படியானும் யோசியுங்கள் அது உங்களின் யோசனையாக இருக்கட்டும். அதுவே முக்கியம். சிந்தனையின் வளர்ச்சிப் போக்குக்கு உரிய மரியாதையைக் கொடுத்ததாகவும் அமையும்.
சிந்தனைகள் ஒன்றுதான் ஒரு வேளை என்னைப்புரிந்து கொள்வதில் தவறோ
நீக்குஉங்களை நீங்களே புரிந்து கொள்வதைச் சொல்கிறீர்களா?
நீக்குமுன்பொரு பதிவு எழுதி இருந்தேன் அதில் இருந்த சிலவரிகள் மறுமொழியாக /எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
நீக்குஉன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவன் தானே நீ.?/
நல்லதோர் சிந்தனை.
பதிலளிநீக்குநன்றி மேம்
நீக்குபதிவின் தலைப்போ என் கேள்விக்கென்ன பதில் என்று சீண்டிப்பார்க்கிறது! உள்ளடக்கமோ, சிரமப்படவேண்டாம் கேள்வியும் நானே பதிலும் நானே என்று ஆசுவாசப் படுத்துகிறது. தத்துவ விசாரம் மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா! தொடருங்கள்!
பதிலளிநீக்குதிரு ஜெயக்குமாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயன்றிருக்கிறென் வருகைக்கு நன்றிசார்
நீக்குஉங்களின் ஆழ்ந்த புலமையும் அறிவும் எங்களுக்கு பல புதிய செய்திகளைத் தருவதை நான் அவ்வப்போது கூறிவந்துள்ளேன். அவ்வகையில் இப்பதிவும் அருமை ஐயா.
பதிலளிநீக்குபுலமை என்று ஒன்றுமில்லை ஐயா தானக எழுதினாலும் குறை படித்ததை எழுதினாலு குறை ஒன்றுமே புரிவதில்லை சார்
நீக்குஇந்து மதம் குறித்து இன்னமும் முழுமையாக படிக்கத் தொடங்கவில்லை. ஆனால் பா ராகவன் எழுதிய நிலமெல்லாம் ரத்தம் என்ற புத்தகத்தை வாசிக்க நேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். 900 பக்கங்கள். கிண்டில் இருந்தால் எளிது. முதலில் யூதர்களின் மதம் தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து உருவானது கிறிஸ்துவம். அதிலிருந்து உருவானது இஸ்லாம். பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள் உருவாக்கியது கிறிஸ்துவத்தில் உள்ள பிரிவுகள். இதே போல இஸ்லாத்திலும்.
பதிலளிநீக்குமதம் என்பது என் பார்வையில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. மன்னர்கள் காலம் முதல் இன்றைய மக்களாட்சி காலம் வரைக்கும். உயர்நிலையில் உள்ளவர்களுக்கு அது தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளும் ஊறுகாய் போன்றது. நடுத்தரவர்க்கத்திற்கு தங்கள் அந்தஸ்த்தை காட்டிக் கொள்ள உதவுவது. கீழ்த்தட்டு மக்களுக்கு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவுவது.
நம்பிக்கை என்பது அவரவர் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. தன்னை உணர்ந்தவனுக்கு, எதையும் பெரிதாக எதிர்பார்க்காதவனுக்கு தன் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப வாழத் தெரிந்தவனுக்கு எந்த நம்பிக்கையும் தேவையிருக்காது.
உலகளவி நின்றமதம்ஹிந்து மதமே நன் சொல்லவில்லை பலராலும்போற்றப்படும் மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின்குரல் படித்துப்பாருங்கள் அடுத்து அதைலிருந்து பகிர எண்ணி இருக்கிறேன்
நீக்குஎம்மதமும் சம்மதம் என்ற வார்த்தையை இந்து மக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்கின்றார்கள். இஸ்லாம் கிறிஸ்துவம் கொலை பாதக செயல்பாடு போல பார்க்கப்படும்.
பதிலளிநீக்குஹிந்து மதம் ஒரு மதமே அல்ல அது ஒரு வாழ்வியல் என்பதே அநேகராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது
பதிலளிநீக்குஇந்தப் படங்காட்டுவதை விட்டுவிட்டு, மனதில் ஓடும் படங்களைப்பற்றி கொஞ்சம் எழுத முயற்சியுங்கள்..
பதிலளிநீக்குசிலருக்கு படங்களுக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லையே
பதிலளிநீக்கு“ கடவுள் ஒரு நண்பர். அவரிடம் பயம் ஒன்றுமில்லை.//
பதிலளிநீக்கு//முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. //
நல்ல பாயின்ட்ஸ் சார்.
கீதா
ஆனால் பலருக்கும் புரியவில்லையே
பதிலளிநீக்கு