மதங்கள் ஒரு அலசல்
---------------------------------------
மதத்திற்கான தோற்றுவாய் (தோன்றுவதற்கான காரணம் என்ன?) என்று ஏதாவது தெரிந்து கொள்ள முடிகிறதா?
தேடினேன்
தேடினேன் எதுவும் சரியாகக்
கிடைக்கவில்லை பிறர் சொல்லித்தான்
மதம்பற்றி அறிய வேண்டுமா முதலில் நம்
ஹிந்து மதம்தோன்றியதைப்பார்ப்போம் இது என் அனுமானம்மட்டுமே ஹிந்து மதம் தோன்றவே இல்லை அது இருந்தது என்று தான் நம்பப்படுகிறதுபொதுவாக
மதம் என்றால் சில சடங்குகளிருக்க
வேண்டும் சடங்குகளே மதமென்று
நம்பிக்கையை நம் முன்னோர்கள் தோற்று வித்தனர்
மதம் என்பதே பயத்தின் வெளிப்பாட்டை
போக்க என்று ஏற்படுத்தப்பட்டாதாய் இருக்கலாம் முடிந்தவரை தர்க்க ரீதியாக
அணுகுகிறேன் உடனே குய்யோ முறையோ என்று
குதிக்க வேண்டாம் பல முறை எழுதியதுதான் ஆதி மனிதன் இயற்கையின்
செயல்களுக்கு அர்த்தம் புரியாமல்
பயந்தான் அந்தபயமே இயற்கையை வழிபட வைத்தது மழை வெள்ளம் நெருப்பு காற்று
போன்றவற்றை வழிபட வைத்தது எதையும் செய்ய சில வழிமுறைகள்
தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம் அதையே நாம்
வேதமென்று கூறி இருக்கலாம்
வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:
1.
சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
2.
பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
3.
ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
4.
உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ;
இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்
இவை பற்றி
எழுத எனக்கு ஞானம் போதாது ஏன் இல்லை என்றே
சொல்லலாம் இருந்தாலும் சில தர்க்கங்கள்மூலம் தெளிய விரும்புகிறேன் இயற்கையின்
சீற்றங்கள் பல வற்றை அவற்றை வழிபடுவதன் மூலம் குறைக்கலாம் என்று எண்ணி
இருக்கலாம் மோத முடியாத எதிரியின் கால்களில்
விழுவது போல் ஆனால் வழிபட
எப்போதும் அவை இருக்க வேண்டுமே அவற்றுக்கு தன்னைப்போல் ஒரு உருவம் கொடுத்து வழிபட முனைந்திருக்கலாம் என்ன சொல்லி
வழிபடுவது? கடவுளால் தரப்பட்டவை என்று
மக்களை நம்பவைத்து அவற்றையே மந்திரங்களென்று கூறி இருக்கலாம் இடிக்கு இந்திரன் என்னும் பெயர் கொடுத்து அதற்கான
சில மந்திரங்கள் மூலம் வழிபட நினைத்திருக்கலாம் காற்று வாயுவாகி
இருக்கலாம் நெருப்பு அக்னிஆகி இருக்கலாம் எண்ணங்களுக்கு மெருகூட்டஒவ்வொரு
செயலுக்கும் ஒரு கடவுள் என்று வந்திருக்கலாம்கடவுளை யாரும் பார்த்திராததால் அவர்களுக்கு நம்மை போன்ற உருவம்கொடுத்துநல்லகுணங்களின் மொத்த சேர்க்கை என்று தெளிவு படுத்தி இருக்கலாம் நல்லது செய்தால் நல்லது
நடக்கும் இல்லையென்றால் உம்மாச்சி கண்ணைக் குத்தும் என்றுபயத்துடனேயே கடவுள்சிந்தனைகளும் மெருகேற்றப்பட்டிருக்கலாம்
அப்படி
இருக்கலாம் இப்படி இருக்கலாம்
என்றுதான்சொல்ல முடியும் நிச்சயம் இப்படித்தானென்று சொல்ல முடியாது
எப்படி
எப்படி இருக்கலாம் என்பதை அறிய அப்போதைய நடைமுறைகளில் நம்பிக்கை ஏற்படாது போக மனிதன் தன் வாழ்வில் கண்டறிய முயன்ற விஷயங்களை
பிறருக்கு எடுத்துச்சொல்ல முற்பட்ட போது அவனுடைய வார்த்தைகளில் நம்பிக்கைஏற்பட்டதும்
அவனது வாக்குகளுமே ஒரு புது மதங்களளாக உருமாறி இருக்கலாம்
புத்தர்கண்ட
உண்மைகளாகச் சொல்லப்படுபவை
1.
துன்பம் ("துக்கம்"): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
2.
ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
3.
துன்பம் நீக்கல்:
ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
4.
எட்டு நெறிகள்:
எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்
. பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான நிலையாமை (அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பது -
Anicca), ஆன்மா இன்மை (அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது -
Anatta), துக்கம் இருக்கிறது (துயரம், துன்பம், மகிழ்வற்ற நிலை - Dukkha) மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது.
இப்படித்தான் ஒவ்வொருவர்
உபதேசங்களில் உருவானவையே மதங்கள் இஸ்லாமிய
. கிருத்துவமதங்கள் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இம்மதங்களின் போதனைகளில் திருப்தி ஏற்படாததாலேயே அவற்றுக்குள்ளும் வெவ்வேறு கிளைகள் தோன்றி இருக்கலாம் ஆனால் பெரும்பாலும் எல்லா மதங்களும் நல்லதை செய்யவே போதிக்கின்றன
கிருத்துவ மதத்தில் பத்து கட்டளைகள் என்று சொல்லப்படுபவற்றைக்
காணலாம்
1) “You shall have no other gods before me
1) “You shall have no other gods before me
10) “You shall not covet
மொத்தத்தில் இவை போதிப்பவை நல்ல விஷயங்களையே
ஆகையால் இதனால் தெரிவது என்னவென்றால்வெவ்வேறுகாலத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு மதத்தின் பெயரால் நல்லது நினைத்தால் நல்லதுசெய்தால் நல்லது
விளையும் என்பதேசொல்லப்பட்டிருக்கிறது
தெய்வத்தின்
குரலில் பெரியவர் சொல்லி இருப்பது நினைவுக்கு வருகிறது கிறிஸ்து கிருஷ்ணனாகவோ ஜீசஸ் ஈசனாகவோ ,இருந்திருக்கலாம் அப்படி நினைத்தாலும் பல மதங்களின் போதனைகள் ஒரே இலக்கை நோக்கியே
செல்கின்றன
மனிதனுக்கு
எப்பவுமே தன் கீழ் பலரும் இருக்க வேண்டும் தன் கை ஓங்கியேஇருக்க வேண்டும் என்பதால் மதங்களின்பெயராலேயே ஏற்ற தாழ்வுகளையும்படைத்திருக்கிறான்
அதுவே சரி என்னும் பலரும் இருப்பதைக்காணும்பொது கண்ணதாசனின் வரிகள் நினவுக்கு
வருகிறது மனிதன் மாறி விட்டான் மதத்தில் ஏறி விட்டான்
Quad Erat Demonstrandum
சுருக்கமாக QED quite easily done
(சில செய்திகள் கூகிள்தேடலில் இருந்து
மதத்திற்கான தோற்றுவாய் (தோன்றுவதற்கான காரணம் என்ன?) என்று ஏதாவது தெரிந்து கொள்ள முடிகிறதா? மதங்கள் ஒரு நாளில் தோன்றியதாக இல்லை அவை இவால்வ் ஆகின்றன என்றே நினைக்கிறேன்
Quad Erat Demonstrandum
சுருக்கமாக QED quite easily done
(சில செய்திகள் கூகிள்தேடலில் இருந்து
அடிப்படையான சில நம்பிக்கைகளுக்குள்ளே ஆராய்ச்சி செய்யாதே என்கிறது ஆன்மிகம். எல்லாவற்றுக்கும் விஞ்ஞானப்பூரவமாக விளக்கம் உண்டு என்கிறது விஞ்ஞானம். இரண்டுமே தடுமாறி நிற்குமிடங்களும் உண்டு. ஆதார கேள்வி ஒன்றுக்கு விடை கிடைக்கும் நாளில் கடவுள் காணாமல் போகலாம்!
பதிலளிநீக்கு//ஆதார கேள்வி ஒன்றுக்கு விடை கிடைக்கும் நாளில் கடவுள் காணாமல் போகலாம்!//
நீக்குஎன் எண்ணமும் இதுவே. நன்றி ஸ்ரீராம்.
எது என்ன எப்படி என்று கேள்வியே கேட்கக் கூடாதா நம்பிக்கைகளே நல்ல அடிப்படையில் எழுந்திருக்க வேண்டும்ஆரய்ச்சி செய்யக்கூட்டாது என்று சொல்வது சரி அல்லஎன்றே தோன்றுகிறது ஆராயாதே என்பதுதான் ஆன்மிகமா
நீக்குஆதாரக் கேள்விக்கு விடை கேட்க விட முடியாமல் செய்வதேநம் நம்பிக்கைகளும் மதங்களும்
நீக்குஸ்ரீராம்.July 19, 2019 at 6:30 AM
நீக்குஇதற்குப் பெயர் தான் பட்டாசு விமர்சனம். கலக்கல்.
பட்டாசு விமரிசனம் ரசித்தேன்
நீக்குஸ்ரீராம் ரொம்ப ரொம்ப ரசித்தேன் உங்கள் கருத்தை. எனக்கும் இப்படியான எண்ணம் உண்டு, அடிக்கடி மனதில் வரும் என்றாலும் என்னால் இப்படி அழகாக அதுவும் இங்கே சொல்ல வந்திருக்காது. சூப்பர்...
நீக்குகீதா
அதைவிட பலருடன் ஒத்துப்போனால் நல்லதே
நீக்குநல்ல ஆராய்ச்சி
பதிலளிநீக்குநன்றி என்மனதில் தோன்றியது எழுத்தில்
நீக்கு//மனிதனுக்கு எப்பவுமே தன் கீழ் பலரும் இருக்க வேண்டும் தன் கை ஓங்கியே இருக்க வேண்டும்//
பதிலளிநீக்குஇதுதான் ஐயா மனிதனால் மதங்கள் தோன்ற அடிப்படை காரணம்
பயத்தில் இருந்து பிறந்தது கடவுளும் அது பற்றி கூறும் மதங்களும் அதில் இருந்து விளைந்ததே அடக்கி ஆளல்
நீக்குGood beginning.. sir! I hope you will continue your quest.
பதிலளிநீக்குRajan
if people start questioning they are looked downThanks for visiting my blog
நீக்குபடம் : ராமன் அப்துல்லா (1997)
பதிலளிநீக்குபாடியவர் : நாகூர் ஹனீஃபா
வரிகள் : கவிஞர் வாலி
ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்னதெல்லாம் போதலையா
மொத்தமாக காதுல தான் ஏறலையா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா...?
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா
அந்த ஆண்டவன் தான் கிருஸ்துவனா...?
முஸ்லிமா...? இல்லை இந்துவா...?
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பண்ணு
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னதான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மம்மடா
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது
அடியே ஞான தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதை பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்
அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது
உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்...?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
/உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...?
நீக்குநல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்/ அது அல்ல கேள்வி மதங்கள் தோன்றியவிதமே என் சிற்றறிவுக்கு எட்டிய வரை
தனபாலன் நாகூர் ஹனிபா குரல் ஒலிக்கின்றது.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமதத்தின் தோற்றுவாய் சரி தான். ஆனால் அதன் வளர்ச்சி தான் எங்கைங்கையோ கொண்டு போய் விட்டு விட்டது போலும்.
பதிலளிநீக்குஇம்முறை என்கருத்தோடு ஒத்துத்ப்போனது மகிழ்ச்சி நன்றி சார்
பதிலளிநீக்குமதம் தோற்றம் எப்படியாயினும், அதன் போக்கு என்பதானது பல சிக்கல்களைத் தருகிறது, நம்மவர்களால்.
பதிலளிநீக்குமதம்தோன்றிருக்கக்ஜ் காரணம் பற்றி எழுத முனைந்தது
நீக்குஐயா
பதிலளிநீக்குமதங்கள் பற்றிய பதிவு பார்த்தேன். எனது எண்ணங்களையும் பின்னூட்டமாக எழுத விழைகிறேன்.
நான் அனுமானிப்பது மதங்கள் என்பவை ஒரு வழிகாட்டுதலாக, நெறிமுறைகளாக, சட்டங்களாக, சடங்குகளாக ஒரு சமூகத்தால் உருவாக்கப்பட்டவை. எல்லா மதங்களிலும் மேற்கூறிய எல்லாம் இருக்கவேண்டும் என்பதில்லை.
இந்த வழிகாட்டுதல் ஒரு தனி ஒருவராலோ, அல்லது பலராலோ செய்யப்பட்டது. உதாரணமாக இந்து மதம். பலர் சொன்ன வேதங்கள், உபநிஷத்துக்கள் போன்றவை நெறிமுறைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதே சமயம் பௌத்தம், சமணம், கிருத்துவம், இஸ்லாம் போன்றவை ஒரு தனி ஒருவரின் வழிகாட்டுதல் மூலம் அமையப்பெற்றன.
நீங்கள் ஒன்றை கவனித்திருக்கக் கூடும். மதத்தை தோற்றுவித்தவர் இது மதம், இதன் பெயர் இது என்று எங்குமே சொல்ல வில்லை. கிறிஸ்து என்னைப்பின்பற்றுபவர் கிருத்துவர் என்று அறியப்படுவர் என்று சொன்னதே இல்லை.
ஆக மதங்கள் என்பது சமூகத்தின் வழிமுறைகளே. குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுபவர்கள் அந்த மதத்தை பின்பற்றுவபவர் என்று அறியப்பட்டனர். மதம் இல்லை என்று சொல்பவரும் ஒரு மதத்தை சார்ந்தவர் தான். அவரது மதம் நாத்திகம் அல்லது கடவுள் மறுப்பு. எனவே மதம் சாராதவர்கள் யாரும் இல்லை. நீங்கள் சொல்லியது போன்று கடவுள் என்பது மதத்திற்கு தேவையில்லை.
வாதம் விதண்டா வாதம் இவற்றை ஒழித்து அவரவர் விருப்பப்படி ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுவோம்.
இவை எனது கருத்துக்கள் மட்டுமே.
Jayakumar
வழிகாட்ட என ஏற்பட்டது பிற்காலத்திய புரிதல் மதங்கள் இவால்வ் ஆனவையே பெரும்பாலும் அப்போதைய நிலைகளில் திருப்தி ஏற்படாததால்புதியதாகத் தோன்றியவை சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது வதமோ விதண்டாவாதமோ அல்ல புரிந்து கொள்ளும் முயற்சியே
நீக்குஅச்சங் காரணமாகத்தான் மனிதர் இயற்கை ஆற்றல்களை வழிபட்டார்கள் ; பிரார்த்தனை மூலம் அவற்றின் அருளைப் பெறலாம் என நம்பினர் ; இன்றும் மழைக்காக வேண்டுதல் செய்வதைப் பார்க்கிறோம் .பற்பலருடைய நற்போதனைகள் சேர்ந்து நாளடைவில் மதமாகியிருக்கலாம் எனக் கருதுகிறேன் .
பதிலளிநீக்குநற்போதனைகள் மட்டுமே மதங்களாய்ருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் எத்தனை எத்தனை விதமான *(மூட)நம்பிக்கைகள்
பதிலளிநீக்குஜி.எம்.பி சார்....
நீக்குநம்பிக்கைகளில் நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று உண்டா?
உங்களது நல்ல நம்பிக்கை, எனக்கு மூட நம்பிக்கையாகப் படும். என்னுடைய நல்ல நம்பிக்கை உங்களுக்கு மூட நம்பிக்கையாகப்படும்.
நீங்கள் (உதாரணத்துக்கு) சபரிகிரீசனை விரதமிருந்து கல்லிலும் முள்ளிலும் நடந்து சென்று வணங்குவதை 'கடவுள் நம்பிக்கை' என்று சொல்கிறீர்கள். சிலர், தீச்சட்டி ஏந்தி தீ மிதித்து கடவுளை வணங்குவதை 'மூட நம்பிக்கை' என்று சொல்வாங்க. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
நான் பின்பற்றும் இது 'மூட நம்பிக்கை' என்று நம்மால்தான் சொல்லமுடியும். மற்றவர்களைப் பற்றி அவ்வாறு சொல்வது சரியல்ல.
பகுத்தறிவுக்கு ஒத்துவராததை மூட நம்பிக்கை எனலாமா
நீக்குமனிதன் மாறி விட்டான் மதத்தில் ஏறி விட்டான்
பதிலளிநீக்கு