ஞாயிறு, 21 ஜூலை, 2019

சில பிரகிருதிகள்


                                                          சில பிரகிருதிகள்
                                                         ----------------------------
நாம் நம் வாழ்வில் பல ரகமான மனிதர்களை சந்திக்கிறோம்  அவர்களில் சிலரைப் பற்றிய  ஒரு அறிமுகம்  இது இன்னும் தொடரலாம்

 “அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
   
சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
   
அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
   
ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
   
இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
   
என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
   
அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
   
நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
   
பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
   
கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
   
சாலையே விலாசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
   
பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
   
பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
   
இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
   
இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
   
சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
     
பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
     
நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
     
சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
     
என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
     
கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
     
விட்டேன்.

 “
நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.

நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று....... ”

அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
               
மகன் இருக்கிறான்.”

நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
               
என்கிறீர்களே.”

அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
               
அம்மாவுடன் இருக்கிறான்.”
நான்:- “புரியவில்லை.”

அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
               
வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
               
செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
               
நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
               
வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
               
கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
               
இருந்துகொள் என்று கூறிவிட்டேன்

நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
               
எடுத்து விட்டீர்களோ.?”

அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
               
நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
               
கொடுக்க முடியாது.  அப்படி இப்படி என்று பதினெட்டு
               
வருடங்கள் ஓடிவிட்டது.

நான்:  ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
             
பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
             
பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?”

அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
               
ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
               
பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
               
வைத்திருக்கிறேன். “

நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
               
மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
               
இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
               
உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?”

அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பெசுகிறீர்கள் ?”

நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
               
நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
               
பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை. உங்கள் மகனிடம்
               
பேசினீர்களா.?”

அவர்:-“அவன் அம்மாவைவிட மோசம் சொன்ன பேச்சைக் கேட்க
               
மாட்டான். ஊதாரித்தனமாக செலவு செய்வான். எல்லாம்
             
அவள் கொடுக்கும் இடம். “

நான்:-”உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள் ?”


அவர்:-”அவள் ஒரு டாக்டர். எல்லோருடைய பிணிக்கும் மருந்து
               
கொடுப்பவள்.அவளுக்குள்ள வியாதியே தெரியாதவள். “

பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோதுஎல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.


26 கருத்துகள்:

  1. வித்தியாசமான அனுபவம்தான்.

    சில நேரங்களில் சில மனிதர்கள்.

    சிலரை எந்த நிலையிலும் மாற்றவே முடியாது. தன் கருத்தே சரி என்று வாதிடுவார்கள். அடுத்தவர்களுக்கு கருத்து உண்டு என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அந்த மனைவி இன்னும் இத்தனை வருடங்களில் விவாகரத்துக் கோராதது ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்

      நீக்கு
  2. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரி மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா

      நீக்கு
  3. ஈகோ யாரையும் வாழவிடாது நிம்மதி இழந்த பிறகே ஈகோவின் உருவம் கண்ணுக்கு தெரியும்.

    ஐயா முன்பு இதனைக்குறித்து பதிவு எழுதினீர்களோ...?

    பதிலளிநீக்கு
  4. நம்மால் முடியாதவைகளைத் தான் ஆலோசனைகளாக பிறருக்கு வழங்குகிறோம் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே உணர்ந்திருக்கிறேன் பல பின்னூட்டங்களில்

      நீக்கு
  5. பேசித் தீர்க்க முடிந்த ஒரு விஷயம் ஈகோ தடுக்கிறது அவருக்கு. அழகாக டிஸ்கஸ் செய்திருந்தால் நல்ல முடிவு கிடைத்திருக்கும். ஆனால் மற்றவர் கருத்தைக் கேட்கும் மனது இல்லாதவர்களுடன் குடும்பம் நடத்துவது என்பது சவாலான விஷயம். அந்த மனைவி டாக்டர், சுய சம்பாத்தியம் எல்லாம் இருக்க தனியாக இருந்தாலும் ஏன் சட்ட ரீதியான பிரிவு பெறவில்லை ஏனோ

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பதினெட்டு வருடங்கள் பிரிந்து வாழ்ந்தாயிற்று மனிதருக்கு பணம் குறி ஏதாவது சொன்னால் கம்யூனிஸ்ட் என்கிறார் சடப்படி பிரிந்தால் அலிமனி ஏதாவது கொடுக்கவேண்டி இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பாதித்த லட்சங்கள் அவருக்கு நிம்மதியைத் தரவில்லை. ஈகோ அவருக்கு குடும்பத்தையும் தரவில்லை.

      'பாவிகாள் அந்தப் பணம்' என்ற நல்மொழிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

      பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
      கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
      ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
      பாவிகாள் அந்தப் பணம்

      நீக்கு
    2. அவர் சென்றவுடன் என்னால் அவரை கணிக்க முடியவில்லையே

      நீக்கு
  7. திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
    திருடும் கையை கட்டி வச்சாலும்
    தேடும் காதை திருகி வச்சாலும்
    ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

    மாறாதையா மாறாது...
    மனமும் குணமும் மாறாது...
    துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
    தூய தங்கம் தீயில் வெந்தாலும்

    மாறாதையா மாறாது...
    மனமும் குணமும் மாறாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் இணைப்பு காண முயற்சிக்கிறேன்

      நீக்கு
  8. சில மனிதர்கள்! ஆனால் இது ஏற்கெனவே படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  9. முன்பே படித்தது போல் இருக்கே! என்று நினைத்தேன் கீதா சாம்பசிவம் அவர்களும் சொல்லி விட்டார்கள்.

    //நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
    ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
    பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
    வைத்திருக்கிறேன். “//

    சிலரால் சில க்ற்பனைகளிலிருந்து இறங்கி வர முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தைப் படித்தவுடன் எங்கோ படித்த நினைவிருக்கலாம் இருந்தாலும் இன்னொருமுறை படித்தபின் தானே எண்ணங்கள் தோன்றுகிறது

      நீக்கு
  10. சரியான நேரத்தில் தப்பித்துவிட்டீர்கள் போலுள்ளது ஐயா.

    பதிலளிநீக்கு
  11. அவருக்கும்விட்டால் போதுமென்றாகி இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  12. நான் இப்போதுதான் படிக்கிறேன். இரண்டு பேருக்குமே விட்டுக் கொடுக்க முடியவில்லை. அந்தப் பையனின் வாழ்வும் மிஸ்ரபில் ஆகத்தான் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. பதிவு அவரைப்பற்றியதுதானேபையனைப் பற்றியதில்லையே

    பதிலளிநீக்கு