நம்பிக்கைகள் ஒரு அலசல்
--------------------------------------------
நம்பிக்கை என்னும்
தலைப்பில் எழுதி இருந்தேன் இப்பதிவு இருபக்கங்களையும் கொண்டது யார் வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்
நிலந்திருத்தி விதைக்கும் விதை கிளர்ந்தெழு மரமாகி கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.---மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில் உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை ---- பயண சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறி சேருமிடம் சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப பெற்றெடுத்த பிள்ளை பிற்காலத்தில் நம்மைப் பேணுவான் என்பது நம்பிக்கை ---- நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர் பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை. நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி தந்தை என்றறியப்படுவதே தலையாய நம்பிக்கை.
ஒரு பதிவின் பின்னூட்டமாக வந்தது
நம்பிக்கைகளில் நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று உண்டா?
உங்களது நல்ல நம்பிக்கை, எனக்கு மூட நம்பிக்கையாகப் படும். என்னுடைய நல்ல நம்பிக்கை உங்களுக்கு மூட நம்பிக்கையாகப்படும்.
நீங்கள் (உதாரணத்துக்கு) சபரிகிரீசனை விரதமிருந்து கல்லிலும் முள்ளிலும் நடந்து சென்று வணங்குவதை 'கடவுள் நம்பிக்கை' என்று சொல்கிறீர்கள். சிலர், தீச்சட்டி ஏந்தி தீ மிதித்து கடவுளை வணங்குவதை 'மூட நம்பிக்கை' என்று சொல்வாங்க. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
நான் பின்பற்றும் இது 'மூட நம்பிக்கை' என்று நம்மால்தான் சொல்லமுடியும். மற்றவர்களைப் பற்றி அவ்வாறு சொல்வது சரியல்ல
நம்பிக்கை பற்றிய ஒரு அலசல் இது தெரிந்துகொள்பவர் தெரிந்து கொள்ளட்டும் அது பற்றிஎழுதுவதை நான் ஒரு taboo ஆக நினைக்க வில்லை
கோவிலுக்குப் போகிறோம் நம் துயரங்களைச்
சொல்லி வேண்டுகிறோம் அது வரை சரிதான் ஆனால்
என் துயரங்களைத் தீர்த்திடு உனக்கு நானிது செய்கிறேன் அது செய்கிறேன் என்றுவேண்டுவதுநமது கணிப்பில் கடவுளிடம் ஒப்பந்தம்போடுவதுபோல்
இருக்கிறதே இதை ஏதோ நம்பிக்கை என்று கூறுதல் சரியா பெரும்பாலோர் கணிப்பில் கடவுள் என்பவர் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்கிற அடிமுட்டாளாக இருக்கிறார்.
இதற்குப் பெயர் பக்தியல்ல,
ஏமாற்று வேலை.
பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறீர்களென்றால் அது உளவியல் ரீதியாக வேண்டுமானால் ஆறுதல் தரலாம். ஆனால், இதை நம்பிக்கையென்று சொல்லாதீர்கள்
பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறீர்களென்றால் அது உளவியல் ரீதியாக வேண்டுமானால் ஆறுதல் தரலாம். ஆனால், இதை நம்பிக்கையென்று சொல்லாதீர்கள்
விசுவாசம் அடிமைகளுக்கும் முட்டாள்களுக்கும் உரிமையானது
சற்றும் அசையாத கவனக்குவிப்பை வழங்குவதுதான் நம்பிக்கை. இதற்கு இரு
கதைகள்
ஒருவன் மலை உச்சிக்குப் போகிறான் கால் தவறி கீழே விழும் நிலையில் இருக்கிறான் விழும்போது ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொள்கிறான்
கடவுளே என்னை காப்பாற்று என வேண்டுகிறான் அப்போதுஒரு அசரீரியின் குரல் கேட்டது
அசரீரி : ‘நீ என்னை நம்ப
மாட்டாய்!.
மனிதன் : கடவுளே, என்னைக் கை
விட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.
அசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு
நம்பிக்கை இருக்கிறது. நீ தான் காப்பாற்ற வேண்டும்.
அசரீரி : சரி, உன்னைக்
காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.
மனிதன் : வேரை விட்டு விட்டால்
கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன்பின் வானத்தில் இருந்து எந்தக்
குரலும்கேட்கவில்லை
முன்பு ஒரு திரைப்படம்
பார்த்தேன் மாமன்மகள் என்று
நினைக்கிறேன் ஜெமினி கணேசன் நடித்தது அதில் அவர் மிகவும் கோழையாக
சித்தரிக்கப்பட்டிருந்தார் அவருக்கு வீர உணர்வு ஊட்ட அவரது பாட்டி ஒரு தாயத்து
கொடுத்து அது அவரது தாத்தாவுடையது என்றும்
அதை அணிந்தால் வீரனாகி விடலாம் என்றும் கூறு வார் ஜெமினி கணேசனும் அதை அணியும்
போது மிகவும்வீர உணர்ச்சி வருவதுபோல் தோன்றி எதிரிகளை துவம்சம்
செய்துவிடுவார் ஒரு முறை
சண்டையிடும்போதுதாயத்து தவறி கீழே விழவும் அவரது வீரமும் போய்விட்டு நன்கு உதைபடுவார் நம்பிக்கைக்கு ஒருகதை இது
அவரிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது.
கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து
போகும். அவரது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு
முயற்சியாக இருக்க முடியாது.
மரக்கிளையில் அமரும் #பறவை #கிளை உடைந்துவிடும் என அஞ்சுவதில்லை ஏனெனில் அதன் #நம்பிக்கை கிளையில் இல்லை அதன் #சிறகுகளில் உள்ளது உன்னில் #நம்பிக்கை வை #வெற்றி உன்னை தேடி வரும்
நம்பிக்கை
குறித்து நிறைய எழுதி இருக்கிறேன்
நம்பிக்க வெறும் எண்ணங்க்களினால் ஏற்படுவதுஅல்ல நம்பக்கூடியதாகவும் இருக்க
வேண்டும்
என்
நம்பிக்கை நான் எழுதுவதைப் பலரும் படிப்பார்கள் என்பதில்
இருக்கிறதுதொடர்ந்து எழுதுவேன் என்பதிலும் இருக்கிறது பெரும்பாலும் நம்பிக்கைகள்
பக்தி சார்ந்ததாக நினைக்கப் படுகிறது அதில் மாறுபட்டு எழுதியதுஇது
என்வீட்டின் அருகே ஒரு மரம்தழைத்து வள்ர்ந்திருந்தது அதன் வேர்ப்பகுதி வீட்டின் அஸ்திவாரத்துக்கே
ஊறு விளைவிக்கலாமென்று தோன்றியது அதை வெட்டி அகற்றிவிடநினைத்து ஒரு கூலித்தொழிலாளியை
அணுகினேன் அவர் மரத்தைப்பார்த்து வெட்ட
மறுத்து விட்டார் அது அத்திமரமாம் கடவுள் மரமாம் வெட்டினால் அவர் உயிருக்கு
ஆபத்தாம் என்ன வெல்லாமோ சொன்னார் பிறகு முதலில் நான் அந்தமரத்தை வெட்டத்துவங்கினால் அவர் முழுதும்வெட்டுவதாகக்
கூறினார் நான்சரியென்று வெட்டுக்கத்தியால்
மூன்று போடுபொட்டேன் பிறகு அவர்
அதைமுழுவதும்வெட்டினார் முதலில் நான்வெட்டியதால் எனக்குத்தான் கேடு என்றார் இது
நடந்து சுமார் இருபது ஆண்டுகளாகின்றன
இன்னும்நான் உயிரோடுஇருக்கிறேன்
நம்பிக்கைகளைப்பற்றி பேசும்போது எனக்கு இச்சம்பவம் நினைவுக்கு வரும்
மழைவேண்டி ஒரு யாகம் நடத்தினார்களாம் யாகம்முடியும் தருவாயில் நல்ல
மழைபெய்யத்தொடங்கிற்றுஎல்லோரும்திசைக்கு ஒருவராகஓடினர் ஆனால் ஒருவன்மட்டும்தன்குடையை
விரித்துக்கொண்டான் யாகம்முடிந்து மழை வருமென்னும் நம்பிக்கைஅவனுக்கிருந்தது குடை கொண்டு வந்திருந்தான்
மற்றவர்களுக்குயாகம்வெறும்சடங்காயிற்று
கொசுறு சென்றபதிவில் சந்திராயன் விண்கலம்பற்றிய பதிவை இட்டிருந்தேன் சரியாக வரும் என்னும் என் நம்பிக்கை பொய்த்து விட்டது ...
கொசுறு சென்றபதிவில் சந்திராயன் விண்கலம்பற்றிய பதிவை இட்டிருந்தேன் சரியாக வரும் என்னும் என் நம்பிக்கை பொய்த்து விட்டது ...
நம்பிக்கைகள் என்பதானது அவரவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது ஐயா.
பதிலளிநீக்குகண்ணோடங்கள் சரியாக இருக்க வேண்டு என்படே பதிவின் நோக்கம்
நீக்குஎன் அனுபவத்தில் அரச மரத்தைதான் வெட்ட யாரும் முன்வரவில்லை. அதற்குதான் குடும்பமே பாழ்பட்டுப்போகும் என்று சொல்லி வெட்ட மறுத்து விட்டனர். ஒருவர் கிளைகளை வேண்டுமானால் கழித்துத் தருகிறேன் என்றார்.
பதிலளிநீக்குபதிவைச் சொல ஒரு மாதிரியே மரம் வெட்டுதல் அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம் அதிலிருந்து நாம்கற்பது மட்டுமே குறி
நீக்கு// கணிப்பில் கடவுள் என்பவர் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்கிற அடிமுட்டாளாக இருக்கிறார். இதற்குப் பெயர் பக்தியல்ல, ஏமாற்று வேலை.// கடவுள் நம்மிடம் இருந்து எதையும் கேட்கவில்லை. அவர் முட்டாளும் இல்லை. மனிதன் தான் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான்.
பதிலளிநீக்குஅதைத்தானே சொல்லி இருக்கிறேன்
நீக்குமரங்களை வெட்டுவதே தப்பு என்னும்போது எந்த மரமானால் என்ன?
பதிலளிநீக்குச்ல மரங்களை கடவுள் நிலைக்கு கொண்டு செல்கிறோமே என்பதே ஆதங்கம்
நீக்கு//இதற்குப் பெயர் பக்தியல்ல, ஏமாற்று வேலை// - நீங்களும் இதைப் போல ப்ரார்த்தனை, வேண்டுதல் என்று கோவில்களுக்குச் சென்றிருக்கிறீர்களே...
பதிலளிநீக்குஎப்போதும் மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் மீது பழியைப் போடாதீர்கள். அதுவும் தவிர, 'கடவுள்' என்று எழுதும்போது அன்பார்லிமெண்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுதும்போது யாரையும் குறிப்பிடல் சரியல்ல நான்கோவிலுக்குச் சென்றது பிரர்த்தனைகளை நீறைவேற்ற என்று அஸ்யூம் செய்கிறீர்கள் படிவை சரியாகப் படித்து உள்வாங்க வேண்டும் ஆரம்பட்தில்லேயே கூறி இருக்கிறேன்/இப்பதிவு இருபக்கங்களையும் கொண்டது யார் வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்/ம்னிதனின் தவறுகள்என்று எதையும் சொல்ல வில்லை
நீக்குநம்பிக்கைகள்ல, நல்ல நம்பிக்கை மூட நம்பிக்கை என்று எதுவும் கிடையாது. அவரவர் பார்வையைப் பொருத்துத்தான். உங்கள் நம்பிக்கை எனக்கு கேலிக்குரியதாகத் தெரியும். எனது நம்பிக்கை உங்களுக்கு அதேபோல் தெரியும் அவ்வளவுதான்.
பதிலளிநீக்குஅவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு. அதேபோல, இந்த மாதிரி, இது தவறு, இது சரி என்று சொல்பவர்களால், அவர்கள் வீட்டில் உள்ளவர்களைக்கூட மாற்ற முடியாது. ஏனென்றால் அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு
நானில்லை என்று சொல்ல வில்லையே தவறு என்று படுவதை குறிப்பிட்டுஇருக்கிறேன் ஆண்டாண்டுகாலமாக் நிலவி வரும் எண்ணங்களைத் திருத்த முடியாது சிலருக்கு அவை சர்ரியில்லைஎன்று தெரிந்தாலும் திருந்த மட்டார்கள்
நீக்குநம்பிக்கைஅவனுக்கிருந்தது குடை கொண்டு வந்திருந்தான் மற்றவர்களுக்குயாகம்வெறும்சடங்காயிற்று
பதிலளிநீக்குஇந்த வரிகளை எதிர்பார்ககவே இல்லை. இது தான் திரை வசனத்தில் திருப்புமுனை ஏரியா என்கிறார்கள்.
நம்பிக்கைகளில் பலவகை உண்டு அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன் இப்பதிவு இரண்டுபக்கங்களையும் சொல்லும்
நீக்குநம்பிக்கை என்பது அவரவர் மனதைப் பொறுத்தது... நீங்கள் சொல்வது போல் நம் நம்பிக்கை சிலருக்கு மூட நம்பிக்கையாகத் தெரியலாம்... அருமையான பகிர்வு ஐயா.
பதிலளிநீக்குமனதைப் பொறுத்தது என்று சொல்லிச் செல்வது சரியல்ல நானது பற்றிஅலசல் என்றே எழுதி இருக்கிறேன்
நீக்குநம்பிக்கை அவரவர் மனம் சிந்தனை பொறுத்தது ஐயா
பதிலளிநீக்குநன்றி
சிந்தனை செய் மனமே என்னும் எண்ணத்தில்தான் எழுதியது
நீக்குஐயா இந்த இறை நம்பிக்கை சமயங்களில் விடுபட்டும், மீண்டும் நம்பிக்கையும் வருகிறதே...
பதிலளிநீக்குஇறை நம்பிக்கை ஏன் விடுபடவேண்டும் உள ரீதியாக ஆறுதல் பெறும் முயற்சிகளில் இதுவும் ஒன்று ஆனால் இறைவனிடம் பேரம் பேச வேண்டாம் உங்களை நம்புங்கள்
நீக்குஇரு கதைகள்...
பதிலளிநீக்குஇரு உண்மை நிகழ்வுகள்...
நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தேன்... முடிந்தால் பிறகு வருகிறேன் ஐயா...
அவசியம் வாருங்கள் கருத்துகளைக் கூறுங்கள்
பதிலளிநீக்குஉங்களது நல்ல நம்பிக்கை, எனக்கு மூட நம்பிக்கையாகப் படும். என்னுடைய நல்ல நம்பிக்கை உங்களுக்கு மூட நம்பிக்கையாகப்படும்.//
பதிலளிநீக்குமிகச் சரியாக சொன்னீர்கள். நம்பிக்கையில்தான் வாழ்க்கையே அமைந்துள்ளது என்பார்கள்.
/
பதிலளிநீக்குஉங்களது நல்ல நம்பிக்கை, எனக்கு மூட நம்பிக்கையாகப் படும். என்னுடைய நல்ல நம்பிக்கை உங்களுக்கு மூட நம்பிக்கையாகப்படும்/அவை என்பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்ட வரிகள் பகுத்டற்வுக்கு ஒவ்வாநம்பிக்கைகளை நன் மூட நம்பிக்கை என்பேன் நம்பிக்கை பற்றிய ஒரு அலசலே பதிவு
அடுத்த நொடி வாழ்வோம் என்ற நம்பிக்கையில்தானே நாம் பல முடிவுகளை எடுக்கிறோம்.
பதிலளிநீக்குஇறைவன் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. நாம் கொடுக்கிறோம் என்றால் அது நம் செயல். அதற்கும் இறைவனுக்கும் எந்த த் தொடர்பும் இல்லை. இப்படி இறைவனுக்குக் கொடுப்பதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது என்றால் அதை எப்படி எப்படிக் கேள்வி கேட்க முடியும் சார் அவர்களிடம். அது அவர்கள் நம்பிக்கை அவர்கள் சந்தோஷம். அதே போல் அப்படிச் செய்வதில் நம்பிக்கை இல்லாதவர்கள் செய்யவில்லை என்றால் அது அவர்கள் நம்பிக்கை அவர்களது சந்தோஷம். அதையும் கேள்வி கேட்பது கூடாதுதான் இல்லையா.
உலகில் ஒவ்வொருவர் அவரவர் நம்பிக்கை படி செயல்படுகிறார்கள். அதற்கும் இறைவனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
கீதா
/உளவியல் ரீதியாக வேண்டுமானால் ஆறுதல் தரலாம். ஆனால், இதை நம்பிக்கையென்று சொல்லாதீர்கள். என்று நான் எழுதி இருப்பதை படிக்கவில்லையா
பதிலளிநீக்குஇறைவன் மீது நாம் நம்பிக்கை வைப்பதை விட, இறைவன் நம் மீது நம்பிக்கை வைக்கும் வண்ணம் வாழ்வதே சிறந்தது என்று ஓர் எண்ணம் தோன்றுகிறது. நான் அப்படித்தான் முயன்று கொண்டு இருக்கிறேன். இராய செல்லப்பா நியூ ஜெர்சி
பதிலளிநீக்குமுதலில் நம் மீது நமக்கே நம்பிக்கை வேண்டும்
பதிலளிநீக்குThis sums up the essence of who we are and the objects that surround us. Adi Sankara's Atmasatkam.
பதிலளிநீக்குMeaning of Nirvana Shatakam
1) I am not mind, nor intellect, nor ego, nor the reflections of inner self. I am not the five senses. I am beyond that. I am not the ether, nor the earth, nor the fire, nor the wind (i.e. the five elements). I am indeed, That eternal knowing and bliss, Shiva, love and pure consciousness.
2) Neither can I be termed as energy (Praana), nor five types of breath (Vaayu), nor the seven material essences (dhaatu), nor the five coverings (panca-kosha). Neither am I the five instruments of elimination, procreation, motion, grasping, or speaking. I am indeed, That eternal knowing and bliss, Shiva, love and pure consciousness.
3) I have no hatred or dislike, nor affiliation or liking, nor greed, nor delusion, nor pride or haughtiness, nor feelings of envy or jealousy. I have no duty (dharma), nor any money, nor any desire (refer: kama), nor even liberation (refer: moksha). I am indeed, That eternal knowing and bliss, Shiva, love and pure consciousness.
4) I have neither virtue (punya), nor vice (paapa). I do not commit sins or good deeds, nor have happiness or sorrow, pain or pleasure. I do not need mantras, holy places, scriptures, rituals or sacrifices (yajna). I am none of the triad of the observer or one who experiences, the process of observing or experiencing, or any object being observed or experienced. I am indeed, That eternal knowing and bliss, Shiva, love and pure consciousness.
5) I do not have fear of death, as I do not have death. I have no separation from my true self, no doubt about my existence, nor have I discrimination on the basis of birth. I have no father or mother, nor did I have a birth. I am not the relative, nor the friend, nor the guru, nor the disciple. I am indeed, That eternal knowing and bliss, Shiva, love and pure consciousness.
6) I am all pervasive. I am without any attributes, and without any form. I have neither attachment to the world, nor to liberation. I have no wishes for anything because I am everything, everywhere, every time, always in equilibrium. I am indeed, That eternal knowing and bliss, Shiva, love and pure consciousness.
Copyright ⓒ 2018 Meditative Mind. All Rights Reserved.
I am afraid you got the message of the post incorrectly
பதிலளிநீக்கு