ஞாயிறு, 14 ஜூலை, 2019

வீடும் வருமானமும்


                         வீடும்   வருமானமும்
                         ----------------------------------

எனக்கு சொந்த வீடு கட்டுவதில்   அக்கறையே இருக்கவில்லை. எல்லாம் அந்தந்த நேரத்து எண்ணங்களால் இருந்த  கருத்தே காரணம்  நானொரு பப்லிக் செக்டார் கம்பனியில் வேலையில் இருந்தேன்  வேலையில் இருந்தவரைஇருப்பிடம் பற்றி கவலை இருக்கவில்லை அவர்களாகவே இருக்க இருப்பிடமோ அல்லது அதற்கான வாடகைப்பணமோ தந்துவிடுவார்கள் எனக்கு அதுபோதும் என்றி ருந்தது மேலும் ஓய்வு பெற்றபின்  என்னாகும்  என்னும்கேள்வி எழுந்ததும்  எனக்கு அதற்கு ஒருபதிலுமிருந்தது
அப்போதெல்லாம்  ஒரு இந்தியனின் சராசரி வயது  60  வாக்கில் இருந்தது  ஓய்வு பெற்றபின்  வீடு என்பதுஒரு சொற்பகால தேவையாய் இருக்கும் என்று எண்ணினேன்  அப்படியெ இருந்திருந்தால் அது எவ்வளவு தவறாய் இருந்திருக்கும்   இப்போது எனக்கு 81 வயதாகிறது ஒரு நண்பனின் அறி வுறுத்தலில்  ஒரு சொந்த வீடு கட்டினேன் அது தான் இன்று எனக்கு சோறுபோடுகிறது பென்ஷன் ஏதும் இல்லாத வேலை எந்த வருவாயும் இல்லாமல் இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறதுவாடகைக்கு ஒரு மேல் தளத்தை விட்டு அதில் வரும்வாடகையே வருமானம்  எனக்கு யார் கையையும் எதிர்பார்க்க பிடிக்காது  fiercely independent மக்களிடம் பணம் ஏதும்கோரி பெறுவது பிடிக்காது இந்தநிலையில் வீட்டுக்கு வாடகைக்கு ஆளில்லையென்றால் ……….. இதுவரைஅப்படி நேரவில்லை ஆனால்கடந்த இரண்டு மாதமாக   வாடகைக்கு ஆளில்லை  சுருஙகச்சொன்னால் எனக்கு வருவாய் இல்லை
வீடு வாடகைக்கு  என்று போர்ட் மாட்டி இருந்தேன்   என்வீடு அமைந்திருப்பது  ஒரு மெயின் சாலையில்  செண்ட்ரல்லி லொகேட்டட் மெட்ரோ வசதி ஒன்றரை  கி மீட்டருக்குள்  வீட்டை சுற்றி எல்லாப் பொருளும்கிடைக்கு பொது வாகவே  வாடகைக்கு என்று போர்ட் மாட்டினால்  ஒரு வாரத்துக்குள் குடி வந்துவிடும் ஆனால் இம்முறை பலரும்வந்தாலும்பெரும்பாலோர்க்கு  வீடு பெரிதாய் இருந்தது
  வாடகைக்கு கேட்டு வருபவர்களின்  எண்ணிக்கைக்கு  குறைச்சல் இல்லை  ஆனால் குறை இருக்கிறது  வாடகைக்கு குடி வைப்பவர்களைப் பற்றி பெரும் பாலும் நமக்கு தெரியாதுஆனால் சில கண்டிஷன்கள்  என்மனைவிக்கு உண்டு முஸ்லிம் களுக்கு 
 வீடு கொடுக்க என் மனைவி விரும்புவதில்லை  அது ஏனோ  ஒரு வேளை என் மனைவியும் ஹிந்துத்தவா  கொள்கைஉடையவரோ ஓரிரு முஸ்லிம் கள் வந்துபோயினர் ஒரு கிறுத்துவ ஃபாமிலியும் வந்தது அவர்களுக்கும் இல்லை என்று சொல்லி விட்டாள் என்மனைவி அவர்களையும்  என்மனைவி  நிராகரித்து விட்டாள் வாரந்தோறும்  அவர்கள்குழுவாக கூடி தொழுகை நடதுவார்களாம்நம்வீட்டில் கூட விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்நடந்ததே  என்று சொன்னால் அது எப்போதோ ஒருமுறைதானே  என்கிறாள்
பேசிலர்களுக்கு  கட்டயம்வீடு இல்லை  அவர்களை கட்டுப்படுத்துவது  சிரமம் சோமபானம் அருந்தி கலாட்டா செய்தால்………….என்று பல கேள்விகள்
 பெண்கள் படிப்பவர்கள் என்று வந்தால் யோசிக்கலாம்  என்றாள் காலேஜ்  போகும் மூன்றுபெண்கள்  வந்து வீடு கேட்டார்கள் நான்  அவர்களை என்பேத்திகள்போல் நினைத்தேன் ஆனால் வாடகைக்கும் அட்வான்சுக்கும்  யார் பொறுப்பேற்பார்கள், எப்படி என்று அறியத்தோன்றியது பெரியவர்கள்யாரையாவது கூட்டி வந்தால் பேசலாம் என்றேன் ஒருபெண்ணின்  பெற்றொர் மைசூரிலிருப்பதாகவும் அவர் வந்து பேசுவார் என்றும் சொல்லஎனக்கு அப்பாடா என்றிருந்தது ஒரு பெண்ணின் பெற்றொர் வந்தனர்  மூன்று பெண்களுக்கும் சேர்ந்து அவர் அட்வான்ஸ் தருவார் என்றும்ஒரு வழியாகப் பேசி முடிந்தது இதில் ஒருபெண் விடுமுறையில் ஜாம்ஷெட்பூர் சென்றுள்ளதாகவும் மற்ற இருபெண்களுக்கும் விடு முறை  வருமென்றும் இன்னும் ஒருமாதம் கழிந்து வரலாமா என்றும் கேட்டனர்  வீட்டைக் காலியாக வைக்கமுடியாது என்றும்  உடனே வருவதாயிருந்தாலும்  இல்லாவிட்டாலும்  உடன் வந்ததாகவே எடுத்துக் கொள்ளப்படும்  என்றும்    கூறினேன்அது அவர்களுக்கு உடன்பாடாய் இல்லை  ஆக வீடு இன்னும்கொடுக்கப்படாது போயிற்று
ஒரு மாலை வீடுபார்க்க இருவர் வந்தனர் வீடு யாருக்கு என்று கேட்டேன் அவர்களில் ஒருவர் தனக்கு என்றார் வீட்டில் எத்தனை பேரிருப்பார்கள்  என்று கேட்டேன்  அவர் பெருமிதமாக அவரும் அவரது இரு மனைவிகளும்  குழந்தைகளும்  மொத்தம் பத்துபேர் என்றார்  அத்தனை பேருக்கு வீடு போதாது  என்று அனுப்பிவிட்டேன்  வடக்கிலிருந்து சிலர் பீஹாரிகள் என்றுகூறிவந்தனர்  அவர்கள்வீட்டைச் சுத்தமாக வைக்க மாட்டார்கள் என்று என் மனவி மறுத்து விட்டாள்  தரகர் மூலம்வாடகைக்கு விட எனக்கு விருப்பமில்லை   மொத்தத்தில்வீட்டுக்கு சரியான  பார்ட்டி கிடைப்பதில் பிரச்சனைகள்  இருந்தது சிலர் இரவு எட்டு மணிக்கு மேல் தொலை பேசியில் அழைத்து கேட்பார்கள் சின்னவீடாக தேடுவதாகக் கூறுவார்கள்  சிலர் பகலில் வந்துவீடுபார்க்கவேண்டுமென்று கூறி  வீட்டைப்பார்த்து வாடகை அட்வான்ஸ் சொசோன்னதும்பேசாமல் போய்விடுவார்கள்
 வீட்டைக்கட்டிப்பார்  கல்யாணம் செய்து பார்  என்பதோடு வீட் டை வாடகைக்கு விட்டுப்பார் என்றும்சொல்லத் தோன்றுகிறது 
கடை சியாகஒரு பார்ட்டி  எல்லாம் சரியாக வரும் போல் இருக்கிறது  ஆனால் அவர்களிடம் ஒரு நாய் இருக்கிறதாம்   எதையாவதுவிட்டுக் கொடுத்தால்தான்  வீட்டுக்குகுடி வரும்போல் இருக்கிறது  மேலும் நாயால் தொந்தரவு கூடாது என்றுசொல்லி இருக்கிறேன் அவர்களுக்குஎல்லாம் சரியாக இருக்கிறது  கன்னடக் காரர்கள் இதுஆஷாட மாதம் என்றும்  அது முடிந்தபின் தான்   குடி வருவார்கள் என்றும் சொல்லி ஒரு டோக்கன் அட்வான்சும் கொடுத்து  ரிசர்வ் செய்திருக்கிறார்கள்  எனக்குமட்டும் இதெல்லாம் புரிவதில்லை

வீட்டின் முகப்பு 


மாடி வீட்டுக்குச் செல்லும் வழியும்   என்நடைக்களமும் 


 
 











                               

30 கருத்துகள்:

  1. உண்மைதான் ஐயா இன்றைய சூழலில் வாடகைக்கு விடுவது சாதாரண விசயமில்லை.

    ஊர் பேசும் அவனுக்கென்ன... நல்ல வாடகை வருமானம் என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வீட்டு வாடகை மூலம் வரும் வருமானம் கைக்கும் வாய்க்கும் போதவில்லை

      நீக்கு
  2. நல்லோரை கண்டுபிடிப்பது சிரமமே.
    நலமே அமைய வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
  3. எங்கள் வீட்டில் குடி இருப்பவர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் சண்டை .அவர்களை காலி செய்ய சொல்லுங்கள் என்று ஆறுமாதமாய் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நம்மிடம் சொல்ல , இப்போது காலி செய்தார்கள். இனி ஆவணி மாதம் தான் ஆள் வருவார்கள். ஆனால் ஏதாவது ரிப்பேர் வேலைகள் இருக்கா என்று பார்த்து சரி செய்த பின் விட வேண்டும். அந்த வீட்டை போய் பார்க்க கூட போக முடியவில்லை.

    வீடு வாடகைக்கு வைப்பதும் பெரிய விஷயம் ஆகி விட்டது.

    உங்கள் வீடு அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. என் கசின் ஒருவன் வாடகைக்கு குடியிருந்தவரை வீட்டைக் காலி செய்விக்க மிகவும் கஷ்டப்பட்டான்

    பதிலளிநீக்கு
  5. சொந்த விஷயங்கள் அந்தந்த நபர்களின் அந்தந்த நேரத்து
    கையாளலைப் (handling) பொருத்து அமைந்து விடுகின்றன.

    பதிலளிநீக்கு
  6. வீட்டைக்கட்டிப்பார்... வாடகைக்கு விட்டுப்பார் என்று சொல்லவேண்டும் போல... ஆடி மாதத்தில் தமிழ்நாட்டிலும் யாரும் குடிவரமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடி மாதத்துக்கும் ஆஷாடமாதத்துக்கும் ஏறக்குறைய 15 நாட்கள் வித்தியாசம் இருக்கிறது

      நீக்கு


  7. வீடு இருந்தாலும் ப்ரச்னை. இல்லாவிட்டாலும் ப்ரச்னை!

    உங்களுக்குப் பேத்திகளைப்போல் தோன்றிய பெண்களுக்கு வீடை வாடகைக்கு விட்டிருக்கலாம். ஏனோ ஒரு மாதம் பொறுக்க உங்களால் முடியவில்லை! மற்றவர்களை ஆராய்வதை விடவும், சில சமயங்களில் உங்களை நீங்களே ஆராய்ந்துகொள்வதும் முக்கியம் எனத் தோன்றவில்லையா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்... வீடு இல்லாவிட்டால் பிரச்சனை இல்லவே இல்லை சார்.. வாடகைக்கு ஒரு வீடு பார்த்துக்கொண்டுவிடலாம், தேவைக்கு ஏற்ப வேறு இடங்களுக்குச் சென்றுவிடலாம்.

      சொந்த வீடு என்பது பெரிய தொல்லை என்பது என் அனுபவம்.

      நீக்கு
    2. நானும் அந்த எண்ணத்தில்தான் இருந்தேன் நல்ல வேளை என்கருத்தைமாற்றிக் கொண்டேன் என் வீடுதான் எனக்கு இப்போது சோறு போடுகிறது

      நீக்கு
    3. உங்கள் வீடு, செண்ட்ரல் பெங்களுரிலிருந்து மிக தூரத்தில் இருக்கிறது. இருந்தாலும், சரியான காலகட்டத்தில், குறைந்த விலையில் ப்ளாட் வாங்கி, தாமதிக்காமல் பார்த்து,பார்த்துக் கட்டியிருப்பதாகத் தெரிகிறது. Timely decision and action. இப்போது மிகவும் பயனுள்ளதாக அமைந்துவிட்டது.

      நீக்கு
    4. இப்போது என்வீட்டிலிருந்து மெட்ரோ ரயில் நிலையம்சுமார் ஒன்றரைகி மீ தான் வளர்ந்துவரும்பெங்களூரில் எல்லாமே செண்ட்ரல்தான்

      நீக்கு
  8. வந்திருந்த பெண்களிடையே ஒற்றுமை இருக்க வில்லை என்று தோன்றியது

    பதிலளிநீக்கு
  9. வீடு வாடகைக்கு விடுவது, அதுவும் வருபவர், ஓரளவு ரொம்ப காலம் இருப்பவராகக் கிடைப்பது என்பதெல்லாம் ஒரு கொடுப்பினைதான் சார்.

    எனக்கு ஓஎம்.ஆரில் உள்ள ஃப்ளாட், 8-10 மாதங்கள்கூட வாடகைக்கு ஆள் வராமல் இருந்திருக்கிறது.

    எனக்கும் பேச்சலர் குரூப்புக்கு வாடகைக்கு விடுவதில் சம்மதமில்லை. அவங்க பாட்டுக்கு 'காதல், தற்கொலை' இல்லை 'பாட்டில்' என்று இறங்கிவிடுவார்களோ என்று சந்தேகம். யார் யார் தங்குவார்கள் என்று அவ்வப்போது கண்காணிக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வீட்டுக்கு குடி வந்தவர்கள் பெரும்பாலும் நல்லவர்களே சொந்த வீடு கட்டிக் குடி போனவர்களே அதிகம் பலரும் என்னுடன் டச்சில் இருக்கிறார்கள்

      நீக்கு
    2. குடித்தனக்காரர்களும் வீட்டுக்காரரான நீங்களும் நன்றாகப் பழகியிருக்கிறீகள் எனத் தெரிகிறது. நல்ல ஆட்கள்/குடும்பம் அமைவது எளிதல்லதான். பொறுமை தேவைப்படுகிறது.

      நீக்கு
    3. பொறுமையால் எனக்கு வருமானம் போகிறதே

      நீக்கு
  10. சென்னையில் இருக்கும் போது, அலுவலக குடியிருப்பு கிடைக்கும் வரை வாடகை வீட்டில் தான் குடியிருந்தோம்... நாங்கள் பட்ட இன்னல்கள் எங்களுக்கு பாடம்... தற்போது எனது வீட்டில் குடியிருப்போர்,சந்தோசமாக உள்ளார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அதற்கு பிரச்சனையுமிருக்கிறது பலனும் இருக்கிறது

      நீக்கு
  11. I thought the folks retired from public sector organizations get pension- looks like my understanding is not correct- may be only Provident fund? Your home looks very beautiful. May be there are few difficulties but having own roof is bliss.— Rajan

    பதிலளிநீக்கு
  12. வாடகை வீடே பெட்டெர் சொந்த வீடு என்பதை விட என்பது என் தனிப்பட்டக் கருத்து. வாடகைக்கு விடுதல் என்பதும் நன்றாக அமைந்தால் மட்டுமே சுகம்.

    வாடகை வீடு என்றால் வயதான காலத்தில் வீட்டை மாற்றிக் கொண்டே இருக்க முடியாதே. அல்லது ஒவ்வொரு முறை மாற்றும் போது அதற்கு ஏற்ற பொருளாதார வசதி வேண்டுமே.

    எல்லாவற்றிலும் ப்ளஸ் மைனஸ் உண்டு. அவரவர் நிலைக்கேற்ப அந்தந்த சூழலிலுக்கேற்றபடி நடக்கும்.

    உங்கள் வீடு அழகான வீடு சார்...

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகள் என்றும் ஒரே மாதிரி இருப்பதில்லை

      நீக்கு
  13. நீங்களே தொடர்ந்து இருந்து வருவதால் வீடு நன்றாகப் பராமரிக்கப் பட்டு இருக்கிறது. முகப்பு அழகாய் உள்ளது.வீட்டை வாடகைக்கு விட்டு அவர்களால் நாங்கள் பல தொல்லைகள், பண நஷ்டங்கள் என அனுபவித்திருக்கோம். கடைசியாகக் குடி இருந்தவர் வியாபாரத்துக்கு எனக் கொடுக்கும் எரிவாயு சிலிண்டரை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். அக்கம்பக்கத்திலிருந்து ஒரே புகார்கள்! ரொம்ப அழுத்தம் கொடுத்து ஒரு வக்கீல் நண்பர் மூலம் காலி செய்ய வைத்தோம். அதன் பின்னர் வீட்டையே விற்றாகி விட்டது. இப்போது அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பு வருகிறது. :( எங்கள் விருப்பத்துக்கு மாறாக இதெல்லாம் நடந்தாச்சு! என்ன செய்ய முடியும்!

    பதிலளிநீக்கு
  14. நான்முதலிலேயே வீடு வியாபார நோக்குக்கு அல்ல என்று சொல்லி விடுவேன்பிரச்சனைகள் கூடாது என்பதாலேயே வாடகைக்கு விடுவதில் நேரம் கடக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி தொல்லைகள் இருக்கக்கூடாது என்பதற்காக மிகக் குறைவான வாடகைக்குத்தான் பெங்களூர் மற்றும் சமீபத்தில் ஓ.எம். ஆர் வீட்டை விட்டிருக்கிறேன். ஆனால் வாடகை என்பது மெயிண்டெனன்ஸுக்குப் போதாது. வித்துட்டு வங்கில காசைப் போட்டால் அதில் வரும் வட்டி, வாடகையைவிடப் பலமடங்கு அதிகம்னு தோன்றும் (குறைந்த பட்சம் இரு மடங்கு)

      நீக்கு