புதன், 17 ஜூலை, 2019

வயதும் எழுத்தும்



                      வயதும்   எழுத்தும்
                    --------------------------------

 சிலநாட்களுக்கு முன் உள்ளம் கேட்குதே மோர்உடலும் சொல்லுதே நோ  என்னும் பதிவு எழுதி இருந்தேன் அதற்குபின்னூட்டமாக
 / உங்க கேள்விக்கு விடையை எதிர்பார்க்கலை போலிருக்கு. /என்னைப்போல் வயதானபலருக்கும் // - இங்க வரவங்கள்ல உங்கள் வயது யாருக்குன்னு யோசிக்கிறேன்/ என்னைவிட வயதானவர் பலரும்  இருக்கிறார்கள்  பலரும்  அவர்கள் வட்டத்தைக் குறைத்துக் கொண்டுஇருக்கிறார்கள்
 சிலநாட்களுக்கு முன் எனக்கு பரிசாக ஸ்ரீ ராம்  தந்த அவரது தந்தையின் சிறு கதைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருந்தேன்   அதை அவர் எழுதிய போது  அவரது வயது என்னிலும்  அதிகமாய் இருக்கும் என்று  எண்ணுகிறேன் எனக்குப் பிடித்தது என்னவென்றால் விதௌட்  எனி  இன்ஹிபிஷன் மனதிலிருப்பது எழுத்தில் வீழ்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்
இவன் அதுகளைப்பார்த்து சப்புக் கொட்டினான்  உள்ளிருந்தமோகமிருகம்
ஆவேசமாகப் பாய்ந்துசென்று அவர்களுடன் கட்டிப்புரண்டது  நாயகபாவத்தில் கட்டிலில் இழுத்து தள்ளி மனசுக்குள்ளேயே விளக்கை அணைத்தான்  “கட்டேல போறவன்    என்ன ப்டம் எடுக்கிறான்  தூத்தெறி  பக்கத்தில் யாரோ ஒரு கிழவி வெறுப்புடன்நொடித்துவிட்டுப் போவது  இவனுக்கு எரிச்சலாய் இருந்தது  “போ ,,,,டீ கெய்வி ,!”
 அவ்வப்போது பட்டும்படாமலும் அவளதுமென்மையான ஸ்பரிசம்  இவன் மனசுக்குள்மென்மைக்கும் பண்பாட்டுக்கும்  தொடர்பில்லாத   மிருக வேகம் விகாரமான கற்பனைகளுடன் ஆட்டோவின் வேக அசைவுகளுக்கேற்ப அவ்வப்போடு நிர்வாண நடனமாடிற்று “
 இதைப்படிக்கும்போது  உள்ளம்சொல்வதைஅப்படியே எழுதி இருக்கிறார்என்றே தோன்றுகிறது
 என் தள முகப்பில்காணும் காணும் வாசகங்களைபாருங்கள் இவர் எழுத்திலும் ஒரு உண்மைத்தனம் இருக்கிறது கற்பனையிலும்  தான் நினைப்பதை எழுத்தில் கொண்டு வருகிறார் 
 ஒரு புத்தக விமரிசனமாக எழுத எண்ணி இருந்தேன்   ஆனால் எழுத்துக்கு ஒரு நிறை இருக்காது  அவரெழுதிய போதுஇருந்த மன நிலைக்கு என்னை  கொண்டு வரவேண்டும்  பொத்தாம்பொதுவாக எழுத எனக்கு வருவதில்லை மனம் வரும்போது  கதைகளை விமரிசிப்பேன்  இப்போதெல்லாம் கதைகளைப் படிக்க முடிவதில்லை  படித்து உள்வாங்கினால் தானே எழுத முடியும்இவனும் அவனும் தொகுப்பை வாசிப்பேன் என் ஒத்த வயதினரின்    எண்ண ஓட்டங்கள் எவ்வாறுஇருக்கு என்னு கேள்விக்கு பதில் கிடைக்கலாம்
 சில நேரங்களில்திரைப்படங்களைப்பார்க்கும்போது  எப்படி அவர்களால் நெருங்கி நடிக்க முடிகிறது என்றும்தோன்றும் 
  நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ[மற்றவர்களும்தான்] ஆண், பெண் உடம்புக்குள் உறைந்து கிடக்கும் மலம், சளி, சீழ் போன்ற அசிங்கங்களே அடிக்கடி என் நினைவுக்கு வருகின்றன. பேரழகிகளைப் பார்க்கும்போதுகூட அவர்களின் அழகிலும் கவர்ச்சியிலும் லயித்துப்போவது சில கணங்கள் மட்டுமே. மனத்திரையில் மீண்டும் அதே அசிங்கக் காட்சிகளின் அரங்கேற்றம்தான். என்னுடைய இந்த மனப்போக்கிற்கு சித்தர்களின் சில கொச்சையான பாடல்களைப் பலமுறை ஆழ்ந்து படித்ததும் காரணமாக இருக்கலாம்.
 சில எண்ணங்கள் வருவதைத்தவிர்க்க  நேர் எதிரான எண்ணங்களில் மூழ்க சொல்கிறாரோ என்னவோ
நினைத்ததை  எழுதுவதை சத்தியசோதனைஎன்கிறார் முனவர் ஜம்புலிங்கம்
 என்ன இருந்தால் என்ன ஒரு பதிவு தேற்றி விட்டேன்    சர்ச்சையாக இல்லைஎன்றே  நினக்கிறேன்     
           




37 கருத்துகள்:

  1. அந்த அசிங்க எண்ணங்களைப் பற்றி பட்டினத்தார் எழுதி இருக்கார் இல்லியோ?"ஒன்பது வாய் ஓட்டைக்கு ஒருநாளை போல..."

    அப்பா எண்பது வயதுக்குமேல் எழுதியவை அல்ல அவை.அவர் இளமைப்பருவத்தில் எழுதி ஆனந்தவிகடன், ராணி, குண்டூசி உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளிவந்தவை.

    எனக்கு அப்பாவின் இந்தப் புத்தகத்தைவிட அவரின் ஹேமாஞ்சாலியும் தூறல்கள் புத்தகமும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களிடம் எற்படும் ஈர்ப்பு அசிங்கமென்கிறீர்களா இவனும் அவனுநூல் 2012 க்கு பிஎழுதியது என்று தெரிகிறதுஅதனால் ஏற்ப்ட்ட தவறக இருக்கலாம் என் அனுமானம் இந்தப்புத்தகமே நீங்கள் கொடுத்தது பட்டினத்தார் சொன்னால் எல்லாமே ஏற்புடையதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் எனக்கும் தூறல்கள் புத்தகம் மிகவும் பிடிக்கும். அவ்வப்போது எடுத்து வாசிக்கின்றேன். ஆதங்கம், நறுக் சுறுக், தத்துவங்கள் வெளிப்பாடுகள் என்று பல எண்ணங்கள் கலந்து கட்டியவை!

      கீதா

      கீதா

      நீக்கு
    3. எனக்கு அந்த வாய்ப்பு இல்லை

      நீக்கு
  2. மனதில் தோன்றுவதை ஒளிவு மறைவின்றி எழுதுவது எல்லோருக்கும் வராது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வராவிட்டாலும் பரவாயில்லைஎழுதியதை தவறக எண்ண வேண்டாமே

      நீக்கு
  3. சின்ன வயசில் ஆசைப்பட்டதை நினைத்தால் வயதானதும் இதுக்கா இவ்வளவு ஆசைப்பட்டோம் எனத் தோன்றத் தான் செய்யும்! பெண்கள் விஷயத்தில் நீங்கள் நினைப்பது போல் எல்லா ஆண்களும் நினைத்துவிட்டால் பாலியல் பலாத்காரத்தால் துன்புறும் பெண்களே அதிலும் சின்னக் குழந்தைகளே இருக்க மாட்டார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கீசா மேடம்.... நல்லாப் படிக்கலை போலிருக்கே.

      //அழகிலும் கவர்ச்சியிலும் லயித்துப்போவது சில கணங்கள் மட்டுமே.// - 'பேராண்மை' இல்லாதஆண்களுக்கு இந்தக் கணங்களைக் கடந்து வருவது சுலபமல்லவே

      நீக்கு
    2. @கீதா சாம்பசிவம் பாராட்டா புரியவில்லையே மேம்

      நீக்கு
    3. நான்பலமுறை எழுதி இருக்கிறேன் சந்தர்ப்பம்சரியாக இருந்தால் எல்லோரும் தவறு செய்யலாம்

      நீக்கு
    4. >>> நான்பலமுறை எழுதி இருக்கிறேன் சந்தர்ப்பம்சரியாக இருந்தால் எல்லோரும் தவறு செய்யலாம்..<<<

      இதை நான் மறுக்கிறேன்...

      எல்லாம் சம்மதமாய் இருந்தும் நெறி பிறழாமல் கடந்து வந்திருக்கிறேன்...

      நீக்கு
    5. தனிமரம் தோப்பாகாது சார்

      நீக்கு
    6. தங்களது பதில் என்னை வருந்தச் செய்கிறது ஐயா...

      பிள்ளைகளின் கடமை பெற்றோர் தமக்குப் பொருளைத் தருவது அல்ல...

      நல்ல பெயரை ஈட்டித் தருவது...

      அது இன்றைய கல்வி முறையால் மற்க்கடிக்கப்பட்டதனாலேயே

      எல்லாம் தறுதலைகளாகிப் போயின..

      அதனால் தான் காவல் நிலையத்திலும் நீதி மன்றங்களிலும் கூட்டம் பெருகிக் கிடக்கின்றது...

      கடைசி வரைக்கும் எனது மனசாட்சி என்னைத் துன்புறுத்தது...

      அதுவே எனக்கு நிம்மதி...

      நீக்கு
    7. மனசாட்சி பற்றிய என்கருத்தே வேறு சார் எதைச் செய்தாலும் மனசாட்சிப்படி என்று நியாயப்படுத்துவதும்நிகழ்கிறதேநான்பொதுவாக எழுதுவதை தங்கள்வாழ்வியல் அனுபவங்களுடன் ஒப்பீட்டு நோக்கினால் தவறாகத் தோன்றலாம்

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. ஜி.எம்.பி. சார்.... மனசு நினைப்பதெல்லாம் எழுத்தில் ஒருவர் வடிக்கமுடியாது (அதாவது கதையாசிரியரின் மன உணர்வை). இதைத்தான் வலம்புரி ஜான் சொல்வார், 'எண்ணங்கள் ஏப்பங்கள் அல்ல..அப்படியே வெளியே விட' என்று.

    கதை எழுதும்போது, பாத்திர நிலையில் இருந்து அது என்ன மாதிரி யோசிக்கும் என்று கண்டு, அதற்கேற்பத்தான் எல்லோரும் எழுதுவார்கள்.

    நினைத்ததெல்லாம் எழுத்தில் வடிக்கணும்னா, நாட்டுல 'சரோஜாதேவி' எழுத்தாளர்களுக்குப் பஞ்சமே இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலம்புரி ஜான் சொன்னதால் அது வேத வாக்காகாது எண்ணங்களை எழுத்தில்வடிக்க மனபலம் வேண்டும்முன்பல்லில்சிரித்து கடைவாய்ப்பல்லில் கடிப்பவருக்கு சாத்டியமாகாது நிறைய சரோஜா தேவியைப்பறி எழுதுகிறீர்களே நிறைய படிப்பீர்களோ

      நீக்கு
    2. //சரோஜா தேவியைப்பறி// - மலின எழுத்துக்கு எனக்குத் தெரிந்த உதாரணம் அந்த ஆசிரியர் தான் (எல்லோரும் எழுதுவது. So I assume). Porno என்பது subjective. சுஜாதாவின் சில நாவல்களில் அந்த எழுத்துக்களும் pornoதான்

      நீக்கு
    3. இருந்தாலும் சுஜாதா ஆகா ஓஹோ எனறு புகழப்படுகிறாரே சுஜாதா எப்போதாவது மெக்சிகன்சலவைக்காரி ஜோக்ஸ் சொல்லி இருக்கிறாரா

      நீக்கு
  6. வயதாக வயதாகத் தான் எழுத்தில் மெருகேறுகிறது. பெறும் அனுபவம் அதற்குக் காரணம்.

    தனக்குத் தானே நினைக்கும் நினைப்பில் தான் ஒரு மனிதன் சத்யவந்தனாக இருக்கிறான். அவனை விட்டு அந்த நினைப்பு
    நாலு பேருக்குத் தெரிகிற மாதிரி வெளிப்படும் பொழுதே பொய்மை தன்னாலே நுழைந்து விடும்.

    இது தான் எழுத்து என்று வரும் பொழுது சத்தியத்திற்கு வரும் சோத்னை.

    இது தான் சத்தியத்திற்கு வரும் சோதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /அவனை விட்டு அந்த நினைப்பு
      நாலு பேருக்குத் தெரிகிற மாதிரி வெளிப்படும் பொழுதே பொய்மை தன்னாலே நுழைந்து விடும் இது தெர்யாமல் எழுதுகிறேனோ சத்தியத்துக்கு நிறையசோதனைகள்தருகிறேன்போலும்.

      நீக்கு
    2. //தனக்குத் தானே நினைக்கும் நினைப்பில் தான் ஒரு மனிதன் சத்யவந்தனாக இருக்கிறான். அவனை விட்டு அந்த நினைப்பு
      நாலு பேருக்குத் தெரிகிற மாதிரி வெளிப்படும் பொழுதே பொய்மை தன்னாலே நுழைந்து விடும். ///

      ஜீவி சார் சொல்வது 100% சரியாக எனக்கு படுகிறது

      நீக்கு
    3. இதில் பொய்ம்மை எங்கே நுழைந்தது சுட்டியில் கண்ட பதிவை படிக்க வில்லையா

      நீக்கு
  7. வயதான பின் பெண்களின் மீது ஈர்ப்பு இருக்காது அல்லது இருக்க கூடாது என்பது சரியல்ல... ஆண் பெண் ஈர்ப்பு என்பது இயற்கையானதே... ஆனால் அந்த ஈர்ப்பு யாரையும் பாதிக்காத காமமாக மாறினாலும் தவறில்லை ஆனால் அளவுக்கு மீறி காமவெறியாக மாறிவிடக் கூடாது. அதனால்தான் என்னவோ அந்த காலங்களில் வயதாக ஆகும் போது ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுகாட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள் அல்லது சந்நியாயசம் வாங்கி சென்றுவிடுவார்கள்... ஆனால் இந்த காலத்தில் வயதான போது ஆன்மிகத்தில் ஈடுபடுவது போல பாவிப்பது தனது அசிங்கங்களை மறைத்து தன்னை தூய்மையானவனாக காட்டிக் கொள்வதற்காக என்பதாகிவிட்டது


    எனக்கு பெண்களின் மீதான ஈர்ப்பு இன்றுவரை இருக்கிறது அதுவும் ஒரு பெண் மாம்பழக்கலரில் சேலை உடுத்தி சிவப்புகலர் ரவிக்கை அணிந்து நெற்றியில் அழகாக பொட்டு இட்டு தலையில் மல்லிகைபூ சூடி மிகவும் வெள்ளையாக அல்லது சிவப்பாக இல்லாமல் மாநிறமாகவோ அல்லது கருப்பாகவோ இருந்தால் அதாவது தமிழர்கலராக இருந்தால் மிகவும் ஈர்ப்பு வந்துவிடும்


    இதன் மூலம் பெண் பதிவர்களுக்கு சொல்லவருவது என்றாவது நாம் சந்திக்க நேர்ந்தால் மேற்சொன்னப்படி சேலை அணிந்து என் முன்வரவோண்டாம் என்பதே.... ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பெண்களின் மீதான ஈர்ப்பு இன்றுவரை இருக்கிறது அதுவும் ஒரு பெண் மாம்பழக்கலரில் சேலை உடுத்தி சிவப்புகலர் ரவிக்கை அணிந்து நெற்றியில் அழகாக பொட்டு இட்டு தலையில் மல்லிகைபூ சூடி மிகவும் வெள்ளையாக அல்லது சிவப்பாக இல்லாமல் மாநிறமாகவோ அல்லது கருப்பாகவோ இருந்தால் அதாவது தமிழர்கலராக இருந்தால் மிகவும் ஈர்ப்பு வந்துவிடும்

      சங்கத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளவும்.

      நீக்கு
    2. ஹலோ ஜோதிஜி சங்க தலைவரே நீங்கள்தானே ...தமிழகத்தில் வசிக்கும் நீங்கள் நேடியாக காணும் வாய்ப்பை பெற்றவர் நீங்கள்தானே எனக்கு எல்லாம் அது கனவுதான் ஹும்ம்

      நீக்கு
  8. எனக்கு ஈர்ப்பு என்பதெல்லாம் Athing of beauty is a joy efor ever என்பது வரைதான் பதிவில் கண்ட சுட்டியை படிக்க வில்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதுதான் சுட்டியை படித்து என் மனதில் தோன்றியதை அங்கே கிறுக்கி வைத்திருக்கிறேன்

      நீக்கு
    2. நான் மட்டுமல்ல என்பது தெரிகிறது

      நீக்கு
    3. எனக்கு நினைவுக்கு வந்தது வ்சுவாமித்திரர்தான்

      நீக்கு
  9. சார் மனதில் தோன்றும் பலதையும் எழுத்தில் அதுவும் கதையில் வடிப்பது கடினம். நாம் எழுதும் கதைக்கு உகந்ததை அந்தக் கேரக்டர் எப்படிச் சிந்திக்கும் என்பதைத்தான் எழுத முடியும். நம்முடைய எண்ணங்களை எப்படி அதில் திணிக்க முடியும்? அது சுய சரிதை அல்லவா? அப்படியே எல்லா சுய சரிதைகளும் கூட உண்மையாக இருப்பதில்லை.

    சமீபத்தில் கூட இந்திய தத்துவ மேதை என்று சொல்லப்படும் ராதாகிருஷ்ணன் அவர்களின் மறு பக்கத்தை அவரது மகன் எழுதியிருந்ததை கொஞ்சம் வாசிக்க நேர்ந்தது. அவர் செய்தது இப்போது பல பேராசிரியர்களிடம் காணப்படுகிறது!! பிஹெச்டி அதூவ்ம் ஒரு பெண் வாங்க வேண்டும் என்றால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. /அவர் செய்தது இப்போது பல பேராசிரியர்களிடம் காணப்படுகிறது!! பிஹெச்டி அதூவ்ம் ஒரு பெண் வாங்க வேண்டும் என்றால்.../ புரியவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்... ஒரு ஆண் பி.எச்.டி வாங்கணும்னா, அவர் Guide வீட்டுக்கு காய் வாங்கிக்கொடுப்பதிலிருந்து கிட்டத்தட்ட அடிமையா இருக்கணும். அதுவே பெண் பி.எச்.டி வாங்கணும்னா, 'அட்ஜஸ்ட்' செய்யத் தெரியணும் என்று தமிழக பல்கலைக் கழகங்களில் இருப்பதாக நான் பலர் எழுதிப் படித்திருக்கிறேன். இல்லைனா, ஆராய்ச்சியை இழுத்துக்கிட்டே போவாங்க, அவங்க எழுதுவதைக் குறை சொல்லிக்கிட்டே பி.எச்.டியை முடிக்க விட மாட்டாங்க.

      இதுக்கு அர்த்தம், எல்லா முனைவர்களும் இதனைச் செய்திருக்கிறார்கள் என்பதல்ல. கல்வி உலகில் நிறைய களைகள் இருக்கின்றன என்றே அர்த்தப்படுத்திக்கணும்

      நீக்கு
  11. ராதாகிருஷ்ணனைப் பற்றியுமா நம்பவே கஷ்டமாக இருக்கிறது படிப்பதை எல்லாம் நம்புவதா

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  13. மன எண்ணத்தை அப்படியே எழுதுதல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை... ஊருக்கு வரும்போது ஸ்ரீராம் அண்ணாவிடம் வாங்கி வாசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு