வியாழன், 11 ஏப்ரல், 2019

உள்ளங் கேட்குமே மோர் உடலும் சொல்லுமே நோ


                                   உள்ளங் கேட்குமே மோர்  உடலும்  சொல்லுமே நோ
                                     -------------------------------------------------------------------------------

காலாற நடை பயிலப் பூங்கா சென்றிருந்தேன்.
ஆங்கே, பொன்காட்டும் நிறம் காட்டிப்
பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,
இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,
கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்க
விழியாலேவலைவீசி வழி நோக்கிக் காத்திருந்தாள்


காலன் கயிறு கொண்டு கடத்திச் செல்லக்
காத்திருக்கும் காலம்தான் என்றாலும் உள்மனதில் 
காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய்
தஞ்சமாகத் துணையுடனே தழைக்கும் 
பூஞ்சோலை இங்கிருக்க நீ அதனில்கொஞ்சவே 
எண்ணுகின்றாய்,இது தகுமோ, முறையோ முரணன்றோ?


எண்ணிப் பார்க்கிறேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு
காதலுடன் கழிந்த காலம் உன்னும்போது
உணர்கின்றேன் எனக்கென்றும் இளமைதான் என்று. 


என்னதான் நடக்கும் நோக்கலாமே என்றே எழுச்சியுடன்
ஓரடி ஈரடி நாலடி நான் நடந்தவள் முன் செல்ல
எனைக் கண்டெழுந்தவளிடம் நானறியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை..


பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை. 
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி.
 இது முன்பு எப்போதோ எழுதியதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய  சில நியதிகள் என்னை அறியாமலேயே பாட்டில் வந்து விட்டதுமுன்பு எழுதிய போது நண்பர் ஒருவர்  தடுத்தாட்கொள்ளப் பட்டீரோ என்று பின்னூட்டமெழுதி இருந்தார்  ஆனால் முரண்களிருக்குமோ .தெரியவில்லை காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய் இந்த வரிகள் என்னில் இருக்கும்  வேறுஒரு நானைக் காட்டுகிறது  பல நேரங்களில் நானெழுதியதுண்டு  சந்தர்ப்பம் கிடைக்காதவரை   தவறுகள் நடப்பதில்லை  ஆனால் ஒரு பெண்ணைக்கண்டால்  மனதில் ஏற்படும்  சலனங்கள்  தவறா? இன்னொன்று தவறு சரி என்பதெல்லாம் ஆளாளுக்கு மாறும் 
இந்த வயதிலும் பெண்களைக் கண்டால் மனம்  அவர்கள் பால் ஈர்க்கப் ப்டுகிறது. எது என்னை ஈர்க்கிறது என்று மனைவியிடம் கேட்டால்  உனக்குப் பெண் குழந்தைகள் இல்லாததால் இருக்கும் என்கிறார்
 இம்மாதிரி ஈர்ப்பு பால்சம்பந்தப் பட்டதா  இப்போது எல்லாம் அவ்வாறு ஈர்க்க வென்றேபெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொ;ள் கிறார்களோ சின்ன வயதில் உடலை மறைக்க ஆடை என்று  நினைத்துக் கொண்டிருந்தேன்  ஆனால் இப்போதெல்லாம்   அரைகுறையாய்க் காட்டி காட்டப்படாததில் மனதைக் செலுத்த வைக்கிறார்கள்
ஆண்சிங்கத்துக்கு பிடரி அழகு  இன்றைய பெண்களுக்கு  கூந்தல் அழகு  கூந்தலே இல்லாவிட்டாலும்   அதை சீர் செய்து  அழகு படுத்துவதில் விசேஷ கவனம்செலுத்துகிறார்கள்
தொலைக்காட்சி தொடர்களில்  வரும் பெண்களின்  கூந்தல் அலங்காரம்பற்றி என் மனைவியுடன்  விவாதிப்பேன்  அதற்கு செலவிடப்படும் நேரம்   வீணாவதில்லை என்றே தோன்றுகிறது சரி பதிவு எழுத ஆரம்பித்த போதுநான் மட்டும்தான்  பெண்களால் ஈர்க்கப்படுகிறேனா  என்னைப்போல் வயதானபலருக்கும் இம்மாதிரி எண்ணங்கள் எழுமாஎன்று கேட்க நினைத்திருந்தென் யாரும்பதில் சொல்வர்களா தெரியவில்லை   இன்னொன்று பெண்களும்   இம்மாதிரி சலனப்படுவார்களா
கடைசியாக தலைப்பே உதவி உள்ளங்கேட்குமே  மோர் உடலும் சொல்லுமே  நோ  சரியா நண்பர்களே        


39 கருத்துகள்:

  1. உள்ளம் கேட்குமே மோர்!

    சிந்தனைச் சிதறல்கள்.... மனதுக்கு வயது ஏது....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயசுக்கேற்ற்படி மனம் இல்லையோ என்று தோன்றியது

      நீக்கு
  2. சிந்தனைகள் சிதறுவது நல்லதே ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலையர்கள் சிதறும் சிந்தனைகள்சரியா என்று சொல்ல மாட்டே என்கிறார்களே

      நீக்கு
  3. பதில்கள்
    1. பின்னூட்டங்கள் முடலில் வந்ததை ஒட்டியே இருப்பது எதிர்பார்த்ததுதானே

      நீக்கு
  4. எழுதின பொருளுக்கு தலைப்பு மிகச் சரியானது.

    உங்க கேள்விக்கு விடையை எதிர்பார்க்கலை போலிருக்கு. //ன்னைப்போல் வயதானபலருக்கும் // - இங்க வரவங்கள்ல உங்கள் வயது யாருக்குன்னு யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்கள் விடை தருவதாயில்லை என்னைப் பொல் வயதான பலருக்கும் என்பதை அட்சர சுத்தமாக கவனிப்பவர்கள் பதில் சொல்லாமல் நழுவுகிறார்கள்

      நீக்கு
  5. இப்போதைக்கு மோர் தான் அதிகம் தேவைப்படுகிறது... உடலுக்கு குளிர்ச்சி...!

    பதிலளிநீக்கு
  6. மனதை அதன் போக்கில் அலைய விடாமல் நிலையாக வைத்திருப்பதே வயதானவர்களின் கடமை.

    பதிலளிநீக்கு
  7. அலையாமல் வைத்திருப்பதுநல்லது அதுவல்ல நோக்கம்மனம் அலைகிறதா என்பதே கேள்வி

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ[மற்றவர்களும்தான்] ஆண், பெண் உடம்புக்குள் உறைந்து கிடக்கும் மலம், சளி, சீழ் போன்ற அசிங்கங்களே அடிக்கடி என் நினைவுக்கு வருகின்றன. பேரழகிகளைப் பார்க்கும்போதுகூட அவர்களின் அழகிலும் கவர்ச்சியிலும் லயித்துப்போவது சில கணங்கள் மட்டுமே. மனத்திரையில் மீண்டும் அதே அசிங்கக் காட்சிகளின் அரங்கேற்றம்தான். என்னுடைய இந்த மனப்போக்கிற்கு சித்தர்களின் சில கொச்சையான பாடல்களைப் பலமுறை ஆழ்ந்து படித்ததும் காரணமாக இருக்கலாம்.

    உங்களின் கேள்விக்கான பதில்: மனம் அலையவே செய்யும். பல வழிகளிலும் சிந்தனையைத் திசை திருப்புவதன் மூலம் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனப்போக்கிற்கு சித்தர்களின் > மனப்போக்கிற்குச் சித்தர்களின்.....

      நீக்கு
    2. பாலுணர்வை அசிங்கமாக கருதுவது சித்தர்களுக்குச் சரியாகப் படலாம் மனம் அலைகிறதா என்பதே என் வினா எப்படி அடக்குவதுஎன்பதல்ல வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
    3. என்கவிதை எப்படி அடக்கினேன் என்று கூறுகிறது

      நீக்கு
  9. மனம் ஒரு குரங்கு. அது அலையும் தான். அதை கட்டிப்போடுவது உங்கள் திறமை.

    பதிலளிநீக்கு
  10. இது முற்றிலும் உடலியக்க பெளதீக சமாச்சாரம்.

    டெசுடோசிடிரான் ஆர்மோன் உற்பத்தி அதிகமிருக்கும் நேரங்களில் பழக்கப்பட்ட உணர்வுகள் தூண்டப்படுவதால் செமினல் பிளாசுமா அதிகரிப்புக்கான இரசாயன மாற்றங்கள் உடலில் முனைப்பு காட்டத் துவங்குகின்றன.

    ஒருவிதத்தில் பார்க்கப்போனால் MAN என்ற வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்ட Manly attitude--ஏ இதான். ஒரு மனிதன் வாழும் சூழ்நிலையும், அவனது உடலமைப்பை கட்டமைக்கும் உணவு பழக்க வழக்கங்களுமே பல ஆர்மோன்களின் செயல்பாடுகளைத் தீர்மனிக்கின்றன. அவனின் வயதிற்கும் இந்த செயல்பாட்டிற்கும் சம்பந்தமே இல்லை.

    மூப்பாகி விட்டோம் என்ற சுய பட்சதாபத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகள், அல்லது இதை விட உயர்ந்தது இது என்று எதிலாவது (உ.ம். கடவுள் ஈடுபாடு) மனதை திசை திருப்பி தீவிரமான பயிற்சிகளுக்கு உட்படுத்தினால் பிட்யூட்டரி சுரப்பியின் தீவிர சுரப்பை ஓரளவு மட்டுப்படுத்தலாம்.

    குளிர்ந்த நீரில் தினமும் குளித்தல், உப்பின் உபயோக அளவை மட்டுப்படுத்துதல், மெத்தையில் படுக்காமல் பாய் விரித்து தரையில் படுத்தல் போன்றவையும் ஆண்மை உணர்வுகளின் தீவிரத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வரும். முக்கியமாக உணாவுப் பழக்க வழக்கங்களே உடலின் செயல்பாடுகளுக்குக் காரனமாக இருக்கின்றன.

    இந்த மாதிரியான எண்ணங்கள் கூட இல்லை, கோபம், ஆத்திரம், பொறாமை, இழப்புணர்ச்சி, சுய பட்சதாபம் போன்ற உணர்வுகள் கூட இதயத் துடிப்பை அதிகரிக்கும் என்ற உண்மையில் தான் வயதாகி விட்டவர்கள் இறை வழிபாடு போன்றவற்றில் தம் கவனத்தை மடை மாற்றி தம் சுய உணர்வுகளை மட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் அல்லது மழுங்கடித்துக் கொள்கின்றனர் என்பது இன்னொரு பகுதி உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதானால் ஆண்மை உணர்வு போகாது என்பதை அறிகிறேன் நன்றி எனக்கு மட்டும்தானா என்ற சந்தேகமிருந்தது நன்கு விளக்கி விட்டீர்கள் கட்டுப்படுத்துவது அவரவர் திறமை

      நீக்கு
    2. எந்தக் கட்டுப்பாடும் வேண்டாம், சார்! அந்தக் கட்டுப்பாடுகள் வேறு சில தொந்தரவுகளுக்கு இட்டுச் செல்லும். உண்மையில் இப்படியான உணர்வுகள் உடலுக்கு ஆரோக்கியமானவை. நீங்கள் பெற்ற வரம் அவை.

      நீக்கு
    3. அப்படியா சொல்கிறீர்கள் நன்றி

      நீக்கு
  11. 'பால்' கவர்ச்சி, கேட்குமே 'மோர்'....

    தினம் காலை "மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்" பாடலை இரண்டு முறை பாடலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் நகைச் சுவை யாக்கி தப்பிக்கும் திறன் வாழ்க

      நீக்கு
  12. உங்களின் சத்திய சோதனையை அதிகமாக ரசித்தேன் ஐயா. இவ்வாறாக எழுதுவதற்கும் ஒரு துணிவு வேண்டும். நீங்கள் கூறிய கருத்துகளில் பெரும்பாலானவற்றை ஏற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரிடமும் தனியாகக் கேட்க முடியாது பொடு வெளியில் உண்மைபேசுவது சத்திய சோதனைஎனக்கு உண்டு வருகிக்கு நன்றி சார்

      நீக்கு
  13. அழகான தலைப்பிற்கு முதலில் பாராட்டுகள் சார்.

    உங்கள் சிந்தனைகளை, மனதில் தோன்றுவதை கவிதை வடிவில் சொன்னதும் ரசித்தோம்.

    துளசிதரன், கீதா

    கீதா: சிறிய பெண்களுக்கு இது போன்ற கவர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. ரசிக்கும் தன்மையும். ஆனால் வயது கடந்து வரும் போது அழகாய் இருக்கிறன் என்று சொல்லுதையும் கடந்து வேறு எதுவும் வருமா என்பது பெரும்பான்மைக்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களின் உணர்வுகள் பற்றி ஏதும் தெரியாது நாற்பதுக்கு மேல் நாய்க்குணம் என்பார்கள்பெண்களுக்கும் அது பொருந்துமா

      நீக்கு
  14. நீங்கள் டிரம்ப்ஐ விட மோசமில்லை. ஒரு வேளை மீசை காரணமாக இருக்குமோ? தாடியும் வைத்து விடுங்கள். அப்போது இது போன்ற எண்ணங்கள் வராது என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீசை தாடிக்கும் மன சஞ்ச லங்களுக்கும் சம்பந்தம் உள்ளதா உங்களைப் பற்றிசொல்லாமல் ட்ரம்ப் ஐ ஏன் இழுக்கிறீர்கள்

      நீக்கு
    2. ஆம். மீசை உள்ளவர்கள் நான் ஆண் என்ற எண்ணம் ஓங்கியவர்களாக இருப்பார்கள். அதுவே கவர்ச்சியைத் தூண்டும்.
      ஆனால் தாடி என்பது வயதான காலத்தில் துறவு மனப்பான்மை வந்ததின் அடையாளம் ஆகிறது. தாடி எப்போதும் மற்ற எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வைக்கிறது.
      டிரம்ப் தான் முதன்முதலாக காம இச்சைகளை வெளிப்படையாக கூறியவர். உ-ம். இவாங்கா என் மகள் இல்லாவிட்டால் அவளை டேட் செய்வேன். இன்னும் பல.
      சாதாரணமாக என்னைப் போன்றவர்கள் இச்சைகளை வெளிப்படையாகச் சொல்வதில்லை.
      கருத்துரைக்கு மன்னிக்கவும்.மனதில்பட்டதைச் சொன்னேன்.

      நீக்கு
    3. ஒரு உண்மையைச் சொல்கிறேன் நான் மீசை வைக்க ஆரம்பித்ததேஎன் முதல் மகன் திருமண வீடியொவில் என்னைக் கண்டபின் தான் பார்க்கவே பாவமாய் இருந்தேன் மீசை இல்லாமல் மனசில் தோன்றுவதை நான்

      நீக்கு
    4. வெளிப்படையாகக் கூறுவேன் என்னைப் பற்றித்தானே எனொபதிவு காம இச்சைகளைப் பற்றி இருந்ததா மனசின் அலை பாய்தல் என்றுதான் எழுதி இருக்கிறேன்

      நீக்கு
  15. உங்கள் எண்ணங்களைச் சற்றும் மறைக்காமல் பகிர்ந்தமைக்குப்பாராட்டுகள். மற்றபடி எல்லோருக்கும் இருக்குமா என்றால் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  17. //பெண்களும் இம்மாதிரி சலனப்படுவார்களா ///

    எனக்கு தெரிந்த வரையில் ஆமாம் அவர்களும் சலனப்படுவார்கள். என் கூட வேலை செய்த பெண்ணுக்கு (அவருக்கு வயது 57 ) ஹைட்டான நரைத்தை முடியுடனும் ப்ளுகலர் கண்களுடன் இருப்பவர்களை கண்டால் ஒ ரு பெருமூச்சை விட்டபடி இப்படிப்பட்ட ஆண்கள் கிடைத்தால் நான் அவர்களுடன் படுத்துறங்குவதற்கு ரெடி என்பார்... இந்த பெண்மணி இன்னும் ஆக்டிவாக மீயூசிக்கல் கான்சர்டில் கலந்து கொள்வார் அவளுக்கு இங்குள்ள பிரபல சிங்கரை தெரியும் அடிக்கடி அவரின் கான்சர்ட் செல்லுவார்

    இது போல எனது பழைய மேனேஜர் அவரும் ஒரு பெண்மனிதான் இப்போது மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார் அவருக்கு 25 30 வயதில் பெண் குழந்தைகளும் உண்டு அவரும் சில ஆண்களை கண்டால் பெருமூச்சு விடுவார்...


    இது போல மேலும் இரண்டு லேடிகள் எங்க்கௌ நல்லாவவே தெரியும்.....வெளிநாட்டு பெண்கள்மட்டும்தான் இப்படி என நினைக்க வேண்டாம் இந்திய பெண்களும் இப்படித்தான் ஆனால் என்ன அவர்கள் இப்படி பெருமுச்சை இழுத்து வெளியே விடாமல் இருப்பார்கள் அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பொதுவாக இப்படி யாரும்சொல்வது இல்லை

      நீக்கு

  18. இதிகாசத்தில் முனிவர்களே பெண்களின் நடனத்தை கண்டு சலனப்பட்டு இருக்கிறார்களே அந்த காலத்திலே அப்படி என்றால் இந்த காலத்தில் சலனப்ப்டாமல் இருப்பவர்கள் எவரும் உண்டா?

    ஏகபத்தினி விரதனான இராமபிராணைத்தவிர வேறுஎவரும் சலனப்பாடமல் இருந்திருக்க முடியாது வேண்டுமானால் சலனப்படாமல் இருப்பதாக வெளியுலகத்திற்கு நடித்து கொண்டிருப்பார்கள் அவ்வளவுதான்

    ஏன் உங்களின் நண்பர் ஒருவர் மூத்த பதிவர்தான் அவரும் சலனப்பட்டு சக பெண்பதிவரிடம் இமெயிலில் பேசி இருக்கிறார்..அந்த பெண் நல்லா பதிலுக்கு திருப்பி கொடுத்து இருக்கிறார் அவரை பலரும் மிகவும் யோக்கியாவான் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  19. அமெரிக்காவில் இருந்தாலும் நிறைய விஷயங்கள் உங்களுக்குத் தெரிகிறது /உங்களின் நண்பர்/ பதிவுலகில் எனக்கு நண்பர்கள் என்பதே இல்லை எல்லோரும் வெறும் அறி முகங்களே

    பதிலளிநீக்கு