குட்டியாய் என் மனைவி மடியில் buddy |
மகன் வீட்டில் |
என் வீட்டில் buddy |
திருச்சியில் நாங்கள் வள்ர்த்த நாய் செல்லி |
எங்கு போனாலும்கூடவே |
போன மச்சான் திரும்பி வந்தான் என் இளைய மகன் ஒரு கோல்டென் ரெட்ரீவர் நாய் வாங்கி அதை ஒருவருக்கு கொடுத்ததை எழுதி இருக்கிறேன் 2015ம் வருடம் அடுக்கு மாடி குடியிருப்பில் நாய் வளர்ப்பது மிகவும் சிரமம் ஒரு வழியாய் நாயைக் கொடுத்துவிட்டான் ஆனால் அந்த நாய்க்கும் இவனுக்கும் உள்ள பந்தம் அறு படவில்லை அவ்வப்போது சென்று பார்த்து வருவான் நாயை யாரிடம் கொடுத்தானோ அவருக்கு சில சிரமங்கள் காரணமாக நாயைத் தொடர்ந்து பராமரிக்கஇயலாததால் நாயை எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டார் இவனும் வேறு வழி இல்லாததால் திரும்ப வாங்கி வந்து விட்டதாகச் சொல்கிறான் எனக்கு செல்லப் பிராணிகளிடம் வெறுப்பில்லை ஆனால் நல்ல விதமாய் நாய் வளர்ப்பதுஎன்பது மிகவும்சிரமமான ஒன்று என்பது தெரியும் எனக்கும் நாய் வளர்த்த அனுபவம் உண்டுஎன் மனைவி எங்கள் நாயை ஒரு மாமியார் என்று கூறுவாள் அந்த நாய் ஒரு முறை ஒரு எலும்பைக் கடிக்க அந்த எலும்பு வாயில் நீளவாக்கில் சிக்கிக் கொள்ள அண்ட எலும்பை எடுப்பதற்கு நாங்கள்பட்ட பாடு சொல்ல முடியாததுஎன்மனைவிநாகைஆரோக்கிய மாதா கோவிலுக்கு வேண்டிக்கொள்ள அண்ட வேண்டுதலை நாங்கள் நிறைவேற்ற நாகப்பட்டினம்போனதும் போதுமப்பா சாமி செல்லங்கள் பலநேரங்களில் தொல்லையே. இவனது நாயே ஒருமுறை ஒரு சின்ன தொப்பியை விழுங்கி அது வெளிவரும்வரை பட்ட பாடும்கொஞ்சமல்லவீடை விட்டு எல்லோருமெங்கும் செல்ல முடியாது பிள்ளைகளின் பட்ப்பு கெடும் மேலு நாயின் சுதந்திரமும் போய் விடும் ஆனால் என்ன சொல்லி என்னபயன் பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்போல் இருக்கிறது நம் பட்டறிவுக்கு மதிப்பில்லை நாங்கள் தனியேதான் இருக்கிறோம் நாய் இருந்தால் நல்லதுதான் என்று நினைக்க முடியவில்லை என்னால் தனியாகவே சரிவர நடக்க முடியவில்லை வயதும் ஆகிறது நான் அடிக்கடிசொல்வதுதான் THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED
என்பேரனுடன்BUDDYஇப்போது நாயுடன்விளையாட்டு |
வாட்ஸாப்பில் வந்தது
அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஆயிரமாயிரம் நன்மைகள் சேர்வதற்கு அம்மையப்பன் அருள் புரியட்டும்..
நன்றி சார் உங்களுக்கும் இனிய புத்தாண்டாக அமையட்டும்
நீக்குபிராணிகளை வளர்ப்பது முக்கியமில்லை அதனுடைய சுதந்திரம் பறிபோகக்கூடாது பக்கத்து வீட்டில் நாய்க்குட்டியை தண்ணீர்த் தேங்குமிடத்தில் கட்டி விட்டு வேலைக்கு போய் விடுவார்கள் கத்திக்கொண்டே இருக்கும்...
பதிலளிநீக்குஅதனை அவுத்து சுத்தமான இடத்தில் கட்டி வைத்து பிஸ்கட் வாங்கி போடுவது எனது வேலை.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.
நாய் வளர்ப்பது அதற்கு வேளைக்கு உணவு இடுவது மட்டுமல்ல
நீக்குசெல்லப் பிராணிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு ஐயா
பதிலளிநீக்குஎங்களின் வீட்டிலும் ஒரு செல்லப் பிராணி இருக்கிறது
ஆம் எப்படி சிரமங்களை எதிர் கொள்வது என்றும்கற்க வேண்டும்
நீக்குபிராணிகள் வளர்ப்பதில் பல சிரமங்கள் உண்டு. சுதந்திரமாக இருக்க முடியாது என்பது கொஞ்சம் சோகம் தான்.
பதிலளிநீக்குகாணொளிகள் இரண்டும் நன்றாக இருக்கிறது.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நமக்கும் செல்லப்பிராணிக்கும் சுதந்திரம் போய் விடுகிறது உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குசிரமம் இருந்தாலும் உங்களின் அன்பு புரிகிறது ஐயா...
பதிலளிநீக்குவெறும் அன்பு போதாது சார் சிரமங்கள் அதிகம் நாய் என்னோடு இல்லை
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குசெல்லப்பிராணிகள் காணொளி மிக அருமை.
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வருகைக்கு நன்றி மேம் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குbuddy ரொம்ப க்யூட்டாக இருக்கிறான்.
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் சார்.
கீதா
நன்றி கீதா உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குவிளையாட்டுக் காணொளியும், வாட்சப் காணொளியும் ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
நாய்பாடு என்பார்கள் அதுவே தேவலாம் போல் இருக்கிறது
நீக்குநாய்கள் வளர்ப்பதில் உள்ள சிரமங்களை சொல்லி நீங்கள் அலுத்துக் கொண்டாலும், அடி மனதில் அவைகளின் மீது உங்களுக்கிருக்கும் பாசம் தெரிகிறது.
பதிலளிநீக்கு//That which cannot be cured must be endured// மிகவும் சரி.
எல்ல உயிரினங்கள் மீதும்பாசமுண்டு நமக்கு தொந்தரவு தராதவரை
பதிலளிநீக்குநாய் வளர்ப்பது கஷ்டமோ இல்லையோ வளர்த்த பின்னர் பிரிவது தான் அதைவிடக் கஷ்டம்! ஆகவே நாங்க மோதிக்குப் பின்னர் செல்லங்களே வேண்டாம்னு வைச்சுட்டோம்.
பதிலளிநீக்குஅதுவும் சரிதான்
பதிலளிநீக்குசெல்லப் பிராணிகள் என்றாலே எங்கள் வீட்டில் அனைவருக்கும் அலர்ஜி.
பதிலளிநீக்குநீங்க சொன்னது போல் அதிக கவனிப்பு வேறு கொடுக்க வேண்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
செல்லப்பிராணிகள் விலையாடுவத்தைப் பார்த்து ரசிக்கலாம் நாமே வளர்ப்பதில் தொல்லைகள் அதிகம்
பதிலளிநீக்கு