![]() |
குட்டியாய் என் மனைவி மடியில் buddy |
![]() |
மகன் வீட்டில் |
என் வீட்டில் buddy |
![]() |
திருச்சியில் நாங்கள் வள்ர்த்த நாய் செல்லி |
![]() |
எங்கு போனாலும்கூடவே |
போன மச்சான் திரும்பி வந்தான் என் இளைய மகன் ஒரு கோல்டென் ரெட்ரீவர் நாய் வாங்கி அதை ஒருவருக்கு கொடுத்ததை எழுதி இருக்கிறேன் 2015ம் வருடம் அடுக்கு மாடி குடியிருப்பில் நாய் வளர்ப்பது மிகவும் சிரமம் ஒரு வழியாய் நாயைக் கொடுத்துவிட்டான் ஆனால் அந்த நாய்க்கும் இவனுக்கும் உள்ள பந்தம் அறு படவில்லை அவ்வப்போது சென்று பார்த்து வருவான் நாயை யாரிடம் கொடுத்தானோ அவருக்கு சில சிரமங்கள் காரணமாக நாயைத் தொடர்ந்து பராமரிக்கஇயலாததால் நாயை எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டார் இவனும் வேறு வழி இல்லாததால் திரும்ப வாங்கி வந்து விட்டதாகச் சொல்கிறான் எனக்கு செல்லப் பிராணிகளிடம் வெறுப்பில்லை ஆனால் நல்ல விதமாய் நாய் வளர்ப்பதுஎன்பது மிகவும்சிரமமான ஒன்று என்பது தெரியும் எனக்கும் நாய் வளர்த்த அனுபவம் உண்டுஎன் மனைவி எங்கள் நாயை ஒரு மாமியார் என்று கூறுவாள் அந்த நாய் ஒரு முறை ஒரு எலும்பைக் கடிக்க அந்த எலும்பு வாயில் நீளவாக்கில் சிக்கிக் கொள்ள அண்ட எலும்பை எடுப்பதற்கு நாங்கள்பட்ட பாடு சொல்ல முடியாததுஎன்மனைவிநாகைஆரோக்கிய மாதா கோவிலுக்கு வேண்டிக்கொள்ள அண்ட வேண்டுதலை நாங்கள் நிறைவேற்ற நாகப்பட்டினம்போனதும் போதுமப்பா சாமி செல்லங்கள் பலநேரங்களில் தொல்லையே. இவனது நாயே ஒருமுறை ஒரு சின்ன தொப்பியை விழுங்கி அது வெளிவரும்வரை பட்ட பாடும்கொஞ்சமல்லவீடை விட்டு எல்லோருமெங்கும் செல்ல முடியாது பிள்ளைகளின் பட்ப்பு கெடும் மேலு நாயின் சுதந்திரமும் போய் விடும் ஆனால் என்ன சொல்லி என்னபயன் பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்போல் இருக்கிறது நம் பட்டறிவுக்கு மதிப்பில்லை நாங்கள் தனியேதான் இருக்கிறோம் நாய் இருந்தால் நல்லதுதான் என்று நினைக்க முடியவில்லை என்னால் தனியாகவே சரிவர நடக்க முடியவில்லை வயதும் ஆகிறது நான் அடிக்கடிசொல்வதுதான் THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED
![]() |
என்பேரனுடன்BUDDYஇப்போது நாயுடன்விளையாட்டு |
வாட்ஸாப்பில் வந்தது