சனி, 20 ஏப்ரல், 2019

மழை விட்டும் தூவானம்,,,,,,,,,


                                   மழை விட்டும் தூவானம்..................
                                  --------------------------------------------------
தமிழ்நட்டிலும் இங்கு பெங்களூரிலும் நாடாளுமன்றத் தேர்தல்  நடந்து முடிந்து விட்டதுமுடிவு தெரிய இன்னும்  ஒரு மாதத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டும்  மழை விட்டும் தூவானம் விடாது போல,
முதலில் தேர்தல் குறித்த சில வார்த்தைகள் முதலில் இந்த தேர்தல் முறையிலேயே நம்பிக்கை இல்லை பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும்  என்பதே நோக்கம் ஒரு ஹைபதெடிகல் கேஸ் மூலம் விளக்க  முயல்கிறேன்   ஆயிரம் பேர்  கொண்ட ஒரு இடத்துக்கு தேர்தல் நடக்கிறது என்றால்  ஐநூறு பேருக்கும்மேல் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் பெரும் பான்மையினரின்  ஆதரவு  இருகிறது என்று எடுத்துக் கொள்ள முடியும்  ஆனால் நடை முறை அப்படி இருக்கிறதா ? ஆயிரம்பேரில் வாக்களிப்பவர்கள் அதிகபட்சமாக  700 பேர் இருப்பார்களா  இந்த எழுநூறு பேர் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுபவர் ஐநூறு வாக்கு பெறு கிறாரா என்பதே கேள்வி இந்த700 பேரின் வாக்குகள் குறைந்தது நான்கு பேராவது   பிரித்துக்கொள்கிறார்கள்என்று வைத்துக் கொண்டால் அதிக பட்சமாக முன்னூறு நானூறு  வாக்கு பெற்று தேர்வாக வாய்ப்பு உள்ளது  அதாவது இருக்கும் ஆயிரம் வாக்காளார்களில் அறுநூறு  எழுநூறு பேரின்வாக்குகள் வெற்றி பெற்றவருக்கு இல்லை  இது எப்படி பெரும்பான்மை வெற்றி யாகும் இதுவே தேர்தல் முறையின்  நம்பகத் தன்மைக்கு சவால் எது எப்படியோ போகட்டும்  இந்தமுறையில் தேந்தெடுக்கப்படுபவர்  பெரும்பானமை என்னும்பெயரில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள் அவர்களது வார்த்தை சாதுர்யத்தினால்கழுதை குதிரையாகலாம்
நமக்கு கிடைப்பது இதுதான் என்று  திருப்தி அடைவதே சரி பாஜகவின்   தலைவர்களில் நல்லவர் என்று வாஜ்பாயே ஐச் சொல்லலாம்  அவர் அன்பை விளைக்க முயன்றார்  கோத்ரா கலவரம் போது மோடி குஜராதின்   முதலமைச்சர்  வாஜ்பாயே இந்தியப்பிரதமர்  ஒரு முதலமைச்சராக மோடி ராஜ தர்மத்தைக்கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்ஆனால் மோடி செவி சாய்க்கவில்லை  வாஜ்பாயேயும் ஒரு ஆர் எஸ் எஸ்  பிரசாரக் காகவே துவங்கினார்  ஆனால் அவருக்கு முஸ்லிம்கள் மேல் காழ்ப்புணர்ச்சி இருக்கவில்லை லாஹோர் பேருந்து  செர்வீசைத் துவக்கி அதில் பயணமும்செய்தார்
 வாஜ்பாயேக்கு இண்டெலிஜெண்ட் தகவல் இருந்தது கோத்ரா ரயில் எரிப்பில் இறந்தவர் சடலங்களை  அஹமதாபாத்  வீதிகளில் எடுத்து ஊர்வலம் செல்லமோடியின் ஆணை  இருந்தது ஆர் எஸ் எஸும் வி எச் பியும்  ஒரு கலவரம் நடத்த திட்டமிட்டு  முஸ்லிம்களைப் பலிவாங்க திட்டம் இருந்தது அதைஅடக்காமல் வன்முறைக்கு துணைபோன மோடிக்கு ராஜதர்மம் பற்றி போதனை செய்தது செவிடன் காது சங்காயிற்று
 தன்னை நிலை நாட்டிக் கொள்ள  மோடி எந்தஎல்லைக்கும் போவார்
சர்ஜிகல் ஸ்ட்ரைக் கினை தான்தான்நாள்குறித்து நடத்தியதாக கூறியதுபடித்ததுநினைவுக்கு வருகிறதுகாலையில் போய் மாலைக்குள் திரும்பவேண்டும் என்று திட்டமிட்டதாகக் கூறி இருந்தார் சர்ஜிகல் நடத்திய ராணுவத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யவேண்டும்  எபடிசெய்ய வேண்டு என்று கூறும் தகுதியை தனதாக்கிக்கொண்டாரா  மோடி ? நாட்டு மக்கள்  அறியாத சர்ஜிகல் ஸ்ட்ரைக் இருந்ததாகவும் தகவல்
 அவரது பல திட்டங்கள் பலவும்  கடன்  வாங்கியதே   பல முந்தைய அரசின் திட்டங்களை  டிங்கெரிங் செய்து தனதாகக்காண்பிப்பார் இப்போதைய எதிர்கட்சியினர் திட்டம்  மாதம் ரூ 6000 ஒவ்வொரு  குடும்பத்துக்கும் என்பதை கேலி செய்கின்றனர் ஆனால் பலநாடுகளில்  வேலை இல்லாதவருக்கு அரசாங்க dole   இருப்பதாக  அறியாதவர்களா  மேலை நாடுகளில் செயல் படுத்த முடியும்போது இந்தியாவில் ஏன் முடியாது என்பதே என் கேள்வி  நானொரு பொருளாதார  வல்லுனன் அல்ல இருந்தாலும் ஆனல் பொருளாதார வல்லுனர்கள் சொல்படி இந்தச் செலவுக்கு இருப்போரிடம் இருந்து பணம்பெறமுடியும் என்றே தோன்றுகிறது .
ஒரு சாதாரணக் குடிமகனுக்கு யார் ஆண்டாலும் பெரிதாக எந்த மாற்றமும்தெரிவதில்லை  ராமனாண்டால் என்ன ராவணன்    ஆண்டால் என்ன ?
பதிவுலகில் பலரும் தங்கள்  கருத்துகளைத்தவிர்க்கிறார்கள் அதனால் பலன் இல்லை என்னும் எண்ணமாயிருக்கலாம்  எல்லாவற்றையும் நகைச்சுவையாகப் பார்க்கும் பலருக்கும்மாகவேநான் இடும் இந்தக் காணொளி 








30 கருத்துகள்:

  1. //மழை விட்டும் தூவானம் விடாது போல,//

    ஊடங்களுக்கும் பொழுது போகவேண்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் பிரதமர் எழுது பொருளாகி விட்டார்

      நீக்கு
    2. பொம்மை மாதிரி, யார் என்ன கொள்ளையடித்தாலும் நான் கண்டுகொள்ளமாட்டேன் என்று நவீன திருதிராஷ்டிரனாக இருப்பதைவிட, செயல் செய்வதால் எல்லோராலும் விமர்சிக்கப்படுவது மேலானதுதானே...

      நீக்கு
    3. என்ன செயலுக்காக விமர்சனம் என்பதும் முக்கியம்

      நீக்கு
  2. பொதுவாக நம் மனதுக்கு சரி என்று பட்ட விஷயங்களை ஆதரிக்க ஏகப்பட்ட விஷயங்களை மனம் சேர்த்து வைத்துக்கொள்கிறது.

    எதிர்க்கும் .விஷயங்களுக்கும் ஆதரவான கருத்துகளை கையில் வைத்துக்கொண்டு, "மாற்றுக்கருத்து உடையவனா நீ? வா... வா... நீ சொல்வதை நான் காதிலும் கருத்திலும் வாங்கிக்கொள்ள மாட்டேன். என் கருத்துகள்தான் சரி" என்று வாதிடுபவர்களையே காண்கிறேன்.

    ஒரு எல்லைக்குமேல் நாகரீகமற்ற வார்த்தைகளால் அர்ச்சனையும் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பு வெறுப்புகள், கருத்துகள் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளா உலகம் இது. அ டுத்த வீட்டு அடுப்பங்கரைக்குள் புகுந்து அவர்கள் கலாச்சாரத்தை சீண்டிப்பார்க்கும் நிலை.

    பட்டுக்கொள்ளாமல் பதில் அளிப்பதும் நகைவச்சுவையாய் கடந்து போவதும் நம் நட்பு நீடிக்கவேண்டும், அவை நம் தனிப்பட்ட கருத்துகளுக்கும், அரசியல் நிலைப்பாடுகளும் அப்பாற்பட்டது என்பதை எண்ணியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. oஓஓ அப்படியா இருந்தாலும் ஒத்தகருத்து இருக்கிறதா என்றுஅறிய விழைகிறதே மனசு

      நீக்கு
  3. ஒரு சாதாரணக் குடிமகனுக்கு யார் ஆண்டாலும் பெரிதாக எந்த மாற்றமும்தெரிவதில்லை என்பது முற்றிலும் உண்மை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மை நாமே தேர்ந்தெடுக்கும் நேரமல்லவா இது நாடு போகும் போக்கு தெரிய வேண்டாம

      நீக்கு
  4. சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் ஐயா.

    மக்களே ஏமாற்றுக்காரர்களாகவே இருக்கும்போது அரசியல்வாதிகளை குற்றம் சுமத்தி பயனில்லை.

    இரண்டு பக்கமும் பணம் பெற்றுக்கொண்டு மூன்றாம் அணியிடம் பேரம் பேசுகின்றார்ஙளே...

    காணொளி கண்டு இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரடி பணப்பட்டுவாடா செய்தால் அகப்பட மாட்டார்களா

      நீக்கு
  5. எத்தனையோ அக்கிரமங்கள்... பித்தலாட்டங்கள்...

    அதில் ஒன்று :- எதிர்த்து பேசியவர்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை கிடையாது... அதில் குமரி மாவட்டம் முதலிடம்...

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்வதில்லை சார்

      நீக்கு
  7. //இப்போதைய எதிர்கட்சியினர் திட்டம் மாதம் ரூ 6000 ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்பதை கேலி செய்கின்றனர் //

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

    'ஒரு மீனை எனக்குத் தானமாக வழங்குவதை விட, மீன் பிடிக்க எனக்குக் கற்றுக் கொடு; அதுவே மேலான செயல்' என்று.

    இன்னொருவர் பணத்தில் மீனை உனக்குத் தானமாக வழங்கி நான் பெருமையும் அதற்கான பலனையும் அடைவேன் என்று சொல்லுவோர் மத்தியில் N.மோடி, மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன் என்கிறார்.

    யாரும் கேலி செய்யவில்லை. மக்களின் வரிப்பணத்தை நாட்டின் மேம்பாட்டிற்காக செலவிட்டால் நல்லது. எக்காலத்தும் மக்களை உங்களை எதிர்ப்பார்க்கும் நிலையில் வைத்திருக்காதீர்கள் என்றே வேண்டுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  8. எனக்கு நினைவுக்கு வரும் பாட்டு, 'வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் வாழ்ந்து ஏசப்படுகிறார் எப்படி என்றும் தெரிவித்திருக்கலாமோ

      நீக்கு
  9. பெரும்பான்மை என்பது அபத்தம் என்பதை நீங்கள் விளக்கியிருப்பது சிறப்பு. உண்மையும் கூட. இதற்கு மாற்று வழி என்ன என்று சிந்திக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயல் நாடுகள் சிலவற்றில் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்போல

      நீக்கு
    2. //பெரும்பான்மை என்பது அபத்தம்// - அப்படி இல்லை பா.வெ. மேடம், ஜி.எம்.பி சார்... வாக்களிக்க வருபவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்ல வந்தவர்கள். வாக்களிக்காதவர்கள், யார் வந்தாலும் எங்களுக்கு சரிதான் என்று ஒப்புக்கொள்பவர்கள். அதனால் பெரும்பான்மை பெற்ற வாக்குகளும் வாக்களிக்க வராதவர்களின் வாக்குகளையும் முதலில் வந்தவர் பெற்றதாகத்தான் அர்த்தம்.

      வாக்குகளுக்கேற்ற பிரதிநிதித்துவம் என்ற முறை இந்தியாவில் கிடையாது. உலகின் பெரிய ஜனநாயக நாடுகளில் நம்முடைய முறைதான் பின்பற்றப்படுகிறது.

      நம் ஜனநாயகத்தில் ஒன்றே ஒன்று செய்யலாம். 15% வாக்குகள் வாங்கினால்தான் (இந்திய அளவில் 15% வாக்குகள் வைத்திருக்கும் கட்சி தவிர) மறுமுறை தேர்தலில் நிற்கமுடியும், சுயேட்சையாக நிற்கமுடியாது என்ற மாற்றம் கொண்டுவந்தால், 'லெட்டர் பேட் கட்சிகளை ஒழித்துவிடலாம்'.

      நீக்கு
    3. / வாக்களிக்க வருபவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்ல வந்தவர்கள். வாக்களிக்காதவர்கள், யார் வந்தாலும் எங்களுக்கு சரிதான் என்று ஒப்புக்கொள்பவர்கள். அதனால் பெரும்பான்மை பெற்ற வாக்குகளும் வாக்களிக்க வராதவர்களின் வாக்குகளையும் முதலில் வந்தவர் பெற்றதாகத்தான் அர்த்தம்.
      எப்படியெல்லாம் அர்த்தம் செய்து கொள்கிறார்கள் நம்மில் பலரும் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டாலென்ன என்னும் நிலைப்பாட்டில்தானிருக்கிறார்கள் ஒரு கட்சியாக அங்கீகாரம்பெறம் 10% வாக்குகள் பெற வேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாகவே நினைக்கிறேன்

      நீக்கு
  10. உங்கள் கருத்துகள் சரியானவை . பெரும்பான்மை இல்லாத
    தொகுதிகளில் பிரான்சில் அடுத்த வாரம் மறு தேர்தல் நடத்துகிறார்கள் , முதல் இரண்டு வேட்பாளர் மட்டும் போட்டியிட முடியும் . நம் நாட்டுக்குக் கட்டாது , பணச் செலவு கட்டுபடி ஆகாது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்று சொல்வார்கள்

      நீக்கு