மழை விட்டும் தூவானம்..................
--------------------------------------------------
தமிழ்நட்டிலும் இங்கு பெங்களூரிலும்
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து
விட்டதுமுடிவு தெரிய இன்னும் ஒரு
மாதத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டும்
மழை விட்டும் தூவானம் விடாது போல,
முதலில் தேர்தல் குறித்த சில வார்த்தைகள்
முதலில் இந்த தேர்தல் முறையிலேயே நம்பிக்கை இல்லை பெரும்பான்மையினரால்
தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பதே நோக்கம் ஒரு ஹைபதெடிகல் கேஸ் மூலம்
விளக்க முயல்கிறேன் ஆயிரம் பேர்
கொண்ட ஒரு இடத்துக்கு தேர்தல் நடக்கிறது என்றால் ஐநூறு பேருக்கும்மேல் வாக்களித்து
தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் பெரும் பான்மையினரின்
ஆதரவு இருகிறது என்று எடுத்துக்
கொள்ள முடியும் ஆனால் நடை முறை அப்படி
இருக்கிறதா ? ஆயிரம்பேரில் வாக்களிப்பவர்கள் அதிகபட்சமாக 700 பேர் இருப்பார்களா இந்த எழுநூறு பேர் வாக்களித்து
தேர்ந்தெடுக்கப்படுபவர் ஐநூறு வாக்கு பெறு கிறாரா என்பதே கேள்வி இந்த700 பேரின்
வாக்குகள் குறைந்தது நான்கு பேராவது பிரித்துக்கொள்கிறார்கள்என்று வைத்துக் கொண்டால்
அதிக பட்சமாக முன்னூறு நானூறு வாக்கு பெற்று தேர்வாக வாய்ப்பு உள்ளது அதாவது இருக்கும் ஆயிரம் வாக்காளார்களில் அறுநூறு எழுநூறு பேரின்வாக்குகள் வெற்றி பெற்றவருக்கு
இல்லை இது எப்படி பெரும்பான்மை வெற்றி
யாகும் இதுவே தேர்தல் முறையின் நம்பகத்
தன்மைக்கு சவால் எது எப்படியோ போகட்டும்
இந்தமுறையில் தேந்தெடுக்கப்படுபவர்
பெரும்பானமை என்னும்பெயரில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள்
அவர்களது வார்த்தை சாதுர்யத்தினால்கழுதை குதிரையாகலாம்
நமக்கு கிடைப்பது இதுதான் என்று திருப்தி அடைவதே சரி பாஜகவின் தலைவர்களில் நல்லவர் என்று வாஜ்பாயே ஐச்
சொல்லலாம் அவர் அன்பை விளைக்க முயன்றார் கோத்ரா கலவரம் போது மோடி குஜராதின் முதலமைச்சர்
வாஜ்பாயே இந்தியப்பிரதமர் ஒரு முதலமைச்சராக
மோடி ராஜ தர்மத்தைக்கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்ஆனால் மோடி செவி
சாய்க்கவில்லை வாஜ்பாயேயும் ஒரு ஆர் எஸ்
எஸ் பிரசாரக் காகவே துவங்கினார் ஆனால் அவருக்கு முஸ்லிம்கள் மேல் காழ்ப்புணர்ச்சி
இருக்கவில்லை லாஹோர் பேருந்து செர்வீசைத்
துவக்கி அதில் பயணமும்செய்தார்
வாஜ்பாயேக்கு இண்டெலிஜெண்ட் தகவல் இருந்தது கோத்ரா
ரயில் எரிப்பில் இறந்தவர் சடலங்களை
அஹமதாபாத் வீதிகளில் எடுத்து
ஊர்வலம் செல்லமோடியின் ஆணை இருந்தது ஆர்
எஸ் எஸும் வி எச் பியும் ஒரு கலவரம் நடத்த
திட்டமிட்டு முஸ்லிம்களைப் பலிவாங்க
திட்டம் இருந்தது அதைஅடக்காமல் வன்முறைக்கு துணைபோன மோடிக்கு ராஜதர்மம் பற்றி
போதனை செய்தது செவிடன் காது சங்காயிற்று
தன்னை நிலை நாட்டிக் கொள்ள மோடி எந்தஎல்லைக்கும் போவார்
சர்ஜிகல் ஸ்ட்ரைக் கினை தான்தான்நாள்குறித்து
நடத்தியதாக கூறியதுபடித்ததுநினைவுக்கு வருகிறதுகாலையில் போய் மாலைக்குள்
திரும்பவேண்டும் என்று திட்டமிட்டதாகக் கூறி இருந்தார் சர்ஜிகல் நடத்திய ராணுவத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யவேண்டும் எபடிசெய்ய வேண்டு என்று கூறும் தகுதியை தனதாக்கிக்கொண்டாரா மோடி ? நாட்டு மக்கள் அறியாத சர்ஜிகல் ஸ்ட்ரைக் இருந்ததாகவும் தகவல்
அவரது பல திட்டங்கள் பலவும் கடன்
வாங்கியதே பல முந்தைய அரசின்
திட்டங்களை டிங்கெரிங் செய்து தனதாகக்காண்பிப்பார்
இப்போதைய எதிர்கட்சியினர் திட்டம் மாதம் ரூ 6000
ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்பதை கேலி
செய்கின்றனர் ஆனால் பலநாடுகளில் வேலை
இல்லாதவருக்கு அரசாங்க dole இருப்பதாக அறியாதவர்களா
மேலை நாடுகளில் செயல் படுத்த முடியும்போது இந்தியாவில் ஏன் முடியாது என்பதே என் கேள்வி நானொரு பொருளாதார வல்லுனன் அல்ல இருந்தாலும் ஆனல் பொருளாதார வல்லுனர்கள் சொல்படி இந்தச் செலவுக்கு இருப்போரிடம் இருந்து பணம்பெறமுடியும் என்றே
தோன்றுகிறது .
ஒரு சாதாரணக் குடிமகனுக்கு யார்
ஆண்டாலும் பெரிதாக எந்த மாற்றமும்தெரிவதில்லை
ராமனாண்டால் என்ன ராவணன் ஆண்டால்
என்ன ?
பதிவுலகில் பலரும் தங்கள் கருத்துகளைத்தவிர்க்கிறார்கள் அதனால் பலன்
இல்லை என்னும் எண்ணமாயிருக்கலாம்
எல்லாவற்றையும் நகைச்சுவையாகப் பார்க்கும் பலருக்கும்மாகவேநான் இடும் இந்தக் காணொளி