பிரதமர் சொல்ல வேண்டிய விளக்கங்கள் கேட்டு
-------------------------------------------------------------------------------------
அன்புமிகு பிரதமர் மோடிக்கு ஒரு சாதாரணனின் கருத்துகள் செவிக்கு எட்டாது என்றாலும் தெரிவிக்க வேண்டிய ஒரு
நப்பாசையால் எழுதுவது. முதலில் என் வாழ்த்துகள் யார்
எப்படிப் போனாலும் என்ன நடந்தாலும் நினைத்ததை
முடிக்கும் பெரும்பான்மை இருப்பதால் நீங்கள் செய்திருக்கும்
இமாலய சாதனை பாராட்டப்பட வேண்டியதே 56 அங்குல மார்பு என்று பெருமைப்படும் நீங்கள் அதைத் தட்டிக்கொள்ளலாம் யார் கேட்கமுடியும் ஒருவரைப் பற்றிய ஒரு பெர்செப்ஷனைச் சார்ந்தே கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிசெய்தவர்கள் செய்யாத எல்லாவற்றையும்
செய்து முடித்து விட்டதாக 56 அங்குல மார்பை தட்டிக்கொள்கிறீர்கள் அப்படி நீங்கள்செய்து முடித்ததுதான் என்ன குஜராத்தில் ஒர் பிரம்மாண்ட சிலை 800 கோடி ரூபாய்க்கும் மேல் செலவுசெய்து நிறுவி
இருக்கிறீர்கள் அதை ஒரு ஸ்டாட்யூ ஆஃப் யுனிடி என்கிறீர்கள் எனக்கென்ன வோ மக்களைப் பிரிக்க என்றே எழுப்பப்பட்டது
என்று தோன்றுகிறது
வாழ்க்கைதரம் உயர்த்த் நவீனகோவில்களாக
தொழிற்சாலைகளையும் அணைக்கட்டுகளையும் நிறுவி இருக்காவிட்டால் நாமின்னும் மதங்களிலும்
வேற்றுமைகளிலும் குதிரை ஓட்டிக் கொண்டிருப்போம்அவற்றின் பட்டியல் சில இதோ
சிந்திரி ( உரத்தொழிற்சாலை.)
பிம்ப்ரி (பெனிசிலின்).
சித்தரஞ்சன் ( லோகோமோடிவ் )
பெரம்பூர் ( கோச் ஃபாக்டரி )
பிலாய் ( ஸ்டீல் )
அங்க்லேஷ்வர் ( பெட்ரோலியம் )
நரோரா ( ஹெவி வாட்டர் )
தாராப்போர் ( அணு நிலையம் )
பல்வேறு உபயோகத்துக்கான அணைக்கட்டுகள்
பக்ரா நங்கல், ஹீராகுத் , DVC அணைகள்,கோசி, துங்கபத்ரா,
கேயல்கரோ, சர்தார் சரோவர்
தவிர நிலத்தடி கனிமங்களுக்காக
ஜரியா ( கரி ),ஹஜாரிபாக் (மைக்கா ),சிங்பும், பைலாடிலா,
கட்சிரொலி ( இரும்பு கனிமம் ) நெய்வேலி ( பழுப்பு நிலக்கரி ), கியோஞ்சார் (
மாங்கனீஸ் ) கோரபுட் ,கந்தமர்தன் ( பாக்சைட் )
ஏன் நவரத்ட்னா கம்பனி என்று புகழப்படும் பி எச் இ எல் நிறுவனமுஎன்னை போன்றபலருக்கு வேலை வாய்ப்பையும் திருப்தியையும் தந்திருக்கிறது நவீனசிற்பி ஜவஹர்லால் மத நம்பிக்கை இல்லாதவரென்றாலும் ,மத துவேஷி அல்ல அணு ஆராய்ச்சிக்கு வித்திட்டதும் அறுபதுஆண்டு கால ஆட்சியின் பயனே
நீங்கள் செய்ததைக் கூறுவதை விட்டு எதிர்க் கட்சிகள்செய்தது என்ன என்று கேகிற்ர்களே அவர்கள் கட்டிய அஸ்திவாரத்தின் மேல் எழுந்ததுதானே நீங்கள் இப்போது உரிமை கொண்டாடும்செயல்கள் எல்லாம் சாதாரண மனிதனின் தேவைகள் உணரப்பட்டன அப்போது இப்போதோ பண்க்காரர்களின் தேவைக்கே முன்னுரிமை
நீங்கள் செய்ததைக் கூறுவதை விட்டு எதிர்க் கட்சிகள்செய்தது என்ன என்று கேகிற்ர்களே அவர்கள் கட்டிய அஸ்திவாரத்தின் மேல் எழுந்ததுதானே நீங்கள் இப்போது உரிமை கொண்டாடும்செயல்கள் எல்லாம் சாதாரண மனிதனின் தேவைகள் உணரப்பட்டன அப்போது இப்போதோ பண்க்காரர்களின் தேவைக்கே முன்னுரிமை
மோடி ஜி அவர்களே ஹிட்லரின் ஆட்சியில் கோயபல்ஸ் என்பவரிருந்தாராம் அவர் சொல்லும்
பொய்களை அவரே நம்பத் தொடங்கியதாகவும்
படித்திருக்கிறேன் நீங்களும் அவர் போல்
ஆகக் கூடாது என்பதே என்போன்றோரின் கவலை.
நீங்கள் செய்தவற்றைப் பட்டியலிடுங்கள் நீங்கள்தான் மக்களிடம் மன்கி பாத்
என்றுஒரு வழிப் பேச்சாளராயிற்றே பத்திரிககையாளர்களை பார்த்து பேச மாட்டீர்கள் சில
ஊடகங்களை ஆதரித்து நீங்கள்சொல்வதையே அனு
கணமும்ஒலி பரப்பி மக்களை திசை திருப்பிவிடுகிறீர்களே ஊடகங்கள்பெரும்பாலும்
பணக்கார்களதாகவே இருக்கிறது நான் முன்பெல்லாம்நமக்கு ஒரு பெனெவொலெண்ட்
சர்வாதிகாரி தேவை என்று எழுதி இருக்கிறேன்
நீங்கள் ஒரு சர்வாதிகாரி போலவே செயல் படுகிறீர்கள் ஆனால் பெனெவொலென் சி கிஞ்சித்தும் இல்லை எங்கெங்கே திருப்தி இல்லாத எதிர் கட்சி அரசியல் வாதிகள் இருக்கிறர்களோ அவர்களை ஆப்பரேஷன் லோட்டஸ்
என்று சேர்த்துக் கொள்கிறீர்கள் சுதந்திரத்துக்குப் பின் பிறந்தவர் நீங்கள்உங்கள் பெர்செப்ஷனே வேறு. எப்படியாவது பதவியில் இருக்கவேண்டும்
என்பதே உங்கள குறி உங்களுக்கு
ஆதரவு தருபவர்கள் பரப்பி விடும் ஃபேக் நியூஸ்
அப்பப்பா ஊடகங்களைக் கைக்குள்போட்டுக் கொள்வதில் கில்லாடிதான் நீங்கள் ஒருவரைப்பற்றிய கணிப்பு சில
பெர்செப்ஷ்ன்களால் உருவாகிறது பாவம் நம்
மக்கள் ஏதோ நல்லது விளைகிறது என்று
நம்புகிறார்கள்ஏன் என்றால் எல்லா
விவரங்களும்
தெரியாதவர்கள் என்று சொல்வதைவிடசொல்வதை மறந்துவிடுகிறார்கள் என்பதே சரி இந்த மறதிதான் நமக்கான சாபம்
நான் இன்னதுசெய்கிறேன் என்றுசொல்வது வேறு நான் தான் செய்கிறேன்
என்றுசொல்வது வேறு இப்போது வழக்கத்திலிருக்கும் ஆதார் கார்ட் ஜீஎஸ்டி
போன்றவை முந்தைய அரசின் எண்ணங்களே
அப்போதுஅவற்றை எதிர்த்து குஜராத்தில்எதிர்ப்பு தெரிவித்தவரே நீங்கள்தான் இன்று அவற்றுக்கு ஓனர் ஷிப் கொண்டாடுவது சரியா ரைட் டு
இன்ஃபர்மேஷன் சரியாக இயக்கினால்
பல ஊழல் கள் காணமல் போகும் அல்லது
வெளிச்சத்துக்கு வரும்/ ஊழல் நம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது அதைமுற்றிலும்
ஒழிக்கமுடியாதுஎன்பது சாதாரணனின் எண்ணம்
ஊழல் மேல் மட்டத்தில் இருக்கக் கூடாது அதை ஒழிக்க என்றே 2014 லேயே ஏற்படுத்தப்பட்டு இருந்த லோக் பால் என்னும்
அமைப்பை நிறுவ ஐந்தாண்டுகளுக்கும் மேலாயிற்று
அரசின் அந்திம ஆயுளில் எதையும்
செய்ய இயலாது என்னும் தைரியம்தானே
இந்தியர்களை மத வாரியாகப் பிரித்து அதில் குளிர்காய்தல் சரியா மோடிஜி வோட்
பாங்க் என்று கருதப்படும் வட மாநிலங்களைத் தவிர மற்ற
பகுதிகளுக்குள்ளும் ஊடுருவ வழி தேடல்
தவறில்லை ஆனால் தெற்கு புயலாலும்
வெள்ளத்திலும் அவதிப்பட்ட போது ஆறுதலாக
அவர்களைக்சந்திக்க முயற்சியாவது செய்தீர்களா சின்னச் சின்ன செயல்கள் மக்களிடம்
உங்கள்செல்வாக்கை பலப்படுத்தும் மக்களை
பிரித்தாளுவதை விட அவர்களிடம் நல்லெண்ணம்
வளரச் செய்ய வேண்டும் எதிரிக்கும் உங்களை நேசிக்கக்கற்றுக் கொடுத்தல் அவசியம் 40
–பேருக்கும் மேல் உயிர் பலி கொண்ட புல்வாமா நிகழ்சியை தடுத்திருக்கலாமோ
நெடுஞ்சாலையில் போய் கொண்டிருந்த வாகனங்கள்
மீது எங்கிருந்து எப்படி தாக்குதல் நடத்த முடியும் என்று கேட்கக் கூடாது கேட்டால் நம் ஜவான்களை குறைகூறுவதாகும் என்று கூறலாகுமா முதல் முறை சர்ஜிகல் ஸ்டிரைக் குக்கு
நீங்களே நேரம் காலம் குறித்ததாகப் படித்தேன் அப்போது எனக்கு ஒரு சந்தேகம்
வந்தது நம் ப்ரைம் மினிஸ்டரே
எல்லாம் செய்கிறாரே நம் படையும் அவருக்குக் கட்டுப்பட்டதா என்று நாட்டின் முப்படைக்கு தலைவர் என்று ஜானாதிபதியே என்று இருந்தாலும் படைநடத்துவது நம் படைத்தளபதிகள்தானே இதுவரை மூன்று ஸ்டிரைக்குகள் நடந்தது என்கிறார்களே அது மக்களுக்குட்தெரியக்
கூடாத ரகசியமா நம் ஊடகங்களும் இது குறித்து கேட்டதாகத் தெரியவில்லை ஒரு வேளை இதெல்லாம் அரசாங்க ரகசியங்களா
கடைசியாகசாதாரண மனிதனுக்கு
யார் ஆண்டாலும் பெரிதாகப் பாதிப்பு இல்லை அவனுக்கு என்று ஒரு பெர்செப்ஷன் இல்லாமலா போகும் நிறைகளை எழுத முடியவில்லை ஏன் எனறால் அவை என்ன என்று தேட வேண்டும் குறைகளே மலைபோல் தெரிகிறதுஇன்னும் ஐந்தாண்டுகள் பதவியிலிருக்க வருவீர்கள் என்னும் நம்பிக்கையில் இருக்கிறீர்கள்நான் அதை குலைக்க வரவில்லை ஏன் என்றால் நாமெதற்கு தகுதியோ அதுவே நமக்கு வாய்க்கும் என்று நம்புபவன் நான் பெஸ்ட் ஆஃப் லக் மோடிஜிவாசகர்களுக்கு சொல்ல விரும்புவது
தேர்தல் வருகிறது நாம் நம்கடமை ஆற்ற வேண்டும் நமக்கு வாய்த்ததுதான் கிடைக்கும் என்றாலும் வாக்கு அளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது எவ்வளவுதான் நம்மால் கணிக்க முடிந்தாலும் தனி மனிதர் பற்றி நமக்கு தெரிவது மிகச் சொற்பமே ஆனால் கட்சிகளின் கருத்து பற்றி நம்மால் ஓரளவு சொல்ல முடியும் நமக்கு தோதான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுக்கே வாக்களித்தால் நலமாயிருக்கும்
எழுத்துகள் பெரிதும் சிறிதுமாகவும், பத்தி பிரிக்காமல் படிக்கச் சிரமமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஇதுவல்லவோ சிரமம்...!
நீக்குஅற்புதமான கருத்துரை ஸ்ரீராம் சார்... வாழ்க நலம்...
நன்றி டிடி.
நீக்குஎழுத்துகள் பெரிதும் சிறிதுமாக இருக்கலாம் ஆனால் படிக்க கூடியவையே கருத்து சொல்வீர்கள் என்று பார்த்தால் எழுத்துருபற்றி பேசி இருக்கிறீர்கள் பத்தி பிரிப்பது என்றால் பார கிராஃப் பிரிப்பதா எனிவே வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்கு@ டிதனபாலன் ஸ்ரீ ராமின் கருத்துரையைப் பாராட்டியதில் நானும் சேர்கிறேன்
நீக்குநண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன் ஐயா
பதிலளிநீக்குஐயா, நீங்களுமா...?
நீக்குCtrl key - யை அழுத்திக் கொண்டு, +(plus) key - யை ஒருமுறையோ, இருமுறையோ தங்களுக்கு தெரியும் வரை அழுத்தவும்... நன்றி...
ஸ்ரீ ராம் உங்கள் சாமர்த்தியம் நன்று
நீக்கு@கரந்தை ஜெயக்குமார் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று சொன்னால் வருத்தப்பட மாட்டேன்
நீக்குஅருமையான கேள்விக்கணைகள் ஐயா.
பதிலளிநீக்குமோடிக்கு இதை குஜராத்தி மொழியில் அனுப்பினால் நல்லது என்று தோன்றுகிறது.
தங்களிடமிருந்து இப்படியொரு அரசியல் பதிவை நான் படிப்பது இதுவே முதல்முறை.
மிகவும் சரியான கோணத்தில் தாங்களும் மக்களில் ஒருவனாக இருந்து கேள்வி எழுப்பி இருக்கின்றீர்கள்.
சிறப்பான கட்டுரை பத்தி பிரித்து போட்டு இருந்தால் சிறப்பாக இருக்கும்.
வாழ்த்துகள் ஐயா.
சிலருக்கு எழுத்தின் நேர்மை பிடித்திருக்கலாம் வருகைக்கு நன்றிஜி
நீக்குஜி எம் பி சார்... உங்க பெர்சப்ஷன்ல எழுதியிருக்கீங்க. மத்தியில் திமுக, காங்கிரஸ் அரசு கொள்ளைகள் அடித்தபோது நீங்க இந்தியாவிலேயே இல்லையா இல்லை ரிடையர் ஆனதுனால நியூஸ் பார்க்கவே இல்லையா?
பதிலளிநீக்குநேரு காலம் 60களில் முடிந்துவிட்டது. கிடைத்த எல்லாவற்றிர்க்கும் இந்திரா, ராஜீவ், நேரு பெயர்கள் வைத்தபோது, நீங்கள், இந்தியாவை ஒற்றுமைப்படுத்தத்தான் இந்த மாதிரி பெயர்கள் வைக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தீர்கள் போலிருக்கு. இப்போ வல்லபாய் படேலுக்குச் சிலை வைத்தவுடன் இந்தியாவே பிரிந்துவிடும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது. உங்கள் சிந்தனையில் வந்த தவறுதான் அது.
என் பெர்செப்ஷனில் தானே நான் எழுத முடியும் மோடியின்
நீக்குசெயல் எனக்குப் பிடிக்க வில்லை என்றால் நேரு மற்றவர்கள் எப்படி என்றுகேட்கக் கூடாது கடந்த அறுபது ஆண்டுகாலத்து சாதனைகளில் சிலவற்றை குறிப்பிட்டு இருக்கிறேன் ஊழல் யார் செய்தாலும் குற்றமேபெயர் வைப்பதிலும் சிலை வைப்பதிலும் நோக்கம் சரியா என்பதைத்தான் பார்க்க வேண்டும்
//எல்லாம் சாதாரண மனிதனின் தேவைகள் உணரப்பட்டன அப்போது இப்போதோ பண்க்காரர்களின் தேவைக்கே முன்னுரிமை //
பதிலளிநீக்குஇந்த 'அப்போது' என்பது 1750களா இல்லை 2004-2015ஆ? கொஞ்சம் விளக்குங்கள்.
ஏனென்றால், உங்களுக்கு, காமன்வெல்த் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், தொலைக்காட்சி ஊழல், கேபிள் ஊழல், தமிழர்கள் எதிர்ப்பு/மாஸ் கொன்றுகுவிப்பு போன்ற மிகப் பெரிய ஊழல்கள்தாம் வளர்ச்சித் திட்டங்கள் என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது.
நான் படித்த வரையில் அம்பானி, ரிலையன்ஸ், 2014ல் பிறக்கவில்லை. அவர்கள் 2014லேயே உலகின் பெரும் பணக்காரர்களாக இருந்தனர். கொஞ்சம் நியூஸ் படித்து, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் சார்.
நம் இந்தியாவில் கையூட்டு இல்லாமல் எதையும்சாதிக்க முடியாதுஇது ஊரறிந்த ரகசியம் ஆனால் பெரிய இடத்தில் ஊழல் சாதாரணனை பாதிக்கும் அதை க்ளேரிங் காக செய்வது இன்று அதிகம் நடக்கிறது என்பதும்உங்களுக்கு தெரியும்ஊழல் ஊழல்தான்யார் செய்தாலும்
நீக்குஇல்லை ஜி.எம்.பி சார்... க்ளேரிங் ஆகச் செய்வது இன்று அதிகம் நடப்பதுபோல் தெரியவில்லை. உதாரணம் சொன்னால் புரிந்துகொள்ளமுடியும்.
நீக்குதெரிந்தும் தெரியாததுபோல் எழுதுகிறீர் எதையும் நிரூபிக்க முடிய வேண்டும் அல்லவா ரஃபேல் டீலை தம் அமைச்சகம்மூலம் நடத்தியவர் நம் பிரதமர்
நீக்குபாதுகாப்பு சம்பந்தமான எதிலும் பிரதமர் அலுவலகம் தலையிடுவதற்கு உரிமை உள்ளது. நீங்கள் பாஜக தொண்டரோ, அமைச்சரோ இல்லை முக்கியஸ்தர்களோ செய்யும் செயலுக்கு நேரடியாக மோடி அவர்களைக் குற்றம் சாட்டுகிறீர்கள் இல்லையா? அப்படி இருக்கும்போது அமைச்சரவையின் தலைவரான பிரதமர் அலுவலகம் தலையிட்டால் அதில் என்ன தவறு? 5 வருடங்களில் இது ஒன்று மட்டுமே சொல்லுகிறீர்கள். உங்க பெர்சப்ஷன் இது. எனக்கு இந்த டீல், பிரதமர் அலுவலகம் தலையிட்டதன் காரணம், 30+ விமானங்களே முதலில் வாங்குவதன் காரணம் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் ஆக்டிவ் ஆக இருந்தபோதுதான், போபர்ஸ் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் எல்லாம் நடந்தது, ஆனால் உங்களுக்கு அவையெல்லாம் மக்கள் சேவை என்று தோன்றுகிறது போலிருக்கு.
நீக்குஅப்போ, காங்கிரஸ் அரசு, திமுக அரசு, அமைச்சர்கள் செய்த லட்சம் கோடி ஊழல்கள் மட்டும், கிடையவே கிடையாது என்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன ஜி.எம்.பி. சார்? அரசியல் பதிவுகளில், உங்கள் பெர்சப்ஷன், ஆசை மட்டும்தான் வெளிவருமே தவிர, உண்மைத் தன்மை வரவே வராது.
அதனால், கட்டுரை உங்கள் கருத்து. அதைச் சிறிதும் நான் ஏற்கவில்லை என்பதோடு முடித்துக்கொள்கிறேன்.
எழுதுவது எனுரிமை யாரும் உடன்பட வேண்டும் என்றில்லை மோடி அரசு பற்றி எழுதும்போது காங்கிரஸ் அரசு பற்றி பேசுவது ஏட்டிக்கு போட்டி எல்லவற்றையும் நிரூபிக்க முடியாத போதுதான் பெர்செப்ஷன் வருகிறது இத்துடன் முடிப்பதற்கு நன்றி சார்
நீக்கு"மோடி அரசு பற்றி எழுதும்போது காங்கிரஸ் அரசு பற்றி பேசுவது ஏட்டிக்கு போட்டி" ... ஓ அப்படியா ... அப்படியெனில் காங்கிரஸ் அரசு பற்றிய அவலங்களையும் தனியாக ஒரு கட்டுரையில் புட்டு புட்டு வைக்கலாமே... நாங்கள் படிக்கமாட்டோம் என்றா சொல்வோம்? >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
நீக்குநான் கான்கிரஸ் பற்றியும் எழுதி இருக்கிறேன் என்பெர்செப்ஷனக இன்றைய இந்தியாவின் மேம்பாட்டுக்கு அடிக்கோல் நாட்டப்பட்ட தே காங்கிரஸ் ஆட்சியில்
நீக்குஹாஹ .... நீங்கள் காங்கிரசை விட்டுக்கொடுக்காமலேயே பேசுகிறீர்கள் ... சபாஷ் ... மிக பெரிய காந்தீயவாதி என நினைக்கிறேன் .... என் தாத்தாவும் மிகப்பெரிய காந்தீயவாதிதான். எந்த அளவு எனில் கதர் துணியை தவிர வேறு எந்த துணியையும் கையால் தொட மாட்டார் ... சொன்னால் நம்பமாட்டீர்கள் அது கோவணமாக இருந்தாலும் கூட ... எனவேதான் என் தாத்தாவின் இடத்தில் உங்களை வைத்துள்ளேன் ... அதே வேளையில் நான் மிக பெரிய மோடி பக்தனாக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் மோடி வெறியன்... ஹஹா !!! ..
நீக்கு
பதிலளிநீக்குஊழல்கள் எல்லா ஆட்சி காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன அதை எல்லோரும் விமர்சித்து கொண்டுதான் இருக்கிறார்கள் நாம்மும் இது வரை பாஜகவீற்கு முன்பு இந்தியாவை ஆண்டவர்களை விமர்சித்து கொண்டுதான் இருந்தோம்.. நானும் விமர்சித்து கொண்டுதான் இருந்தேன்.... ஆனால் இப்போது உள்ள அளவிற்கு மத துவேஷம் எந்த ஆட்சிகாலத்திலும் இப்படி இருந்தது இல்லை மோடி ஆட்சியில் மிகவும் அப்பட்டமாக இருக்கிறது அப்படி இல்லை என்பவர்கள் பூனைக் கண்ணை முடிக் கொண்டு உலகம் இருண்டு இருக்கிறது என்று சொல்வதைப் போலத்தான் இருக்கிறது அப்பப்பா எவ்வளவு பேக் அரசு தகவல்கள் மற்றும் நீயூஸ்கள் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்''
எனக்கு ஒரு ஆசை மோடியை நான் எவ்வளவு திட்டி எழுதினாலும் அவர் மீண்டும் ஒரு முறை பிரமராக வர வேண்டும் என்பதுதான் அப்போதுதான் நாடு இன்னும் மிகவும் சிரழியும் அப்போது நிச்சயம் நாட்டில் புரட்சி வெடிக்கும் அந்த புரட்சியின் போது ஒரு சில நல்ல தலைவர்கள் உருவாகுவார்கள் அதைவிட்டு விட்டு மோடிக்கு எதிரானவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் பழைய கிழவி கதவைதிறடி என்பது போல ஆகிவிடும்
சிந்தனை வித்தியாசமாகத்தான் இருக்கிறது... இதற்காக தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் பலிகடா ஆவது, எந்த விதத்தில் சரி...?
நீக்குதமிழ் நாட்டில் மோடி வருவது நன்றாயிருக்கும் என்பதே இப்போதைய அரசின் நிலைப்பாடு ஆனால் சாதாரணன் என்ன நினைக்கிறான் என்பதை காலம்சொல்லும்
நீக்கு//எதிர்க் கட்சிகள்செய்தது என்ன என்று கேகிற்ர்களே அவர்கள் கட்டிய அஸ்திவாரத்தின் மேல் எழுந்ததுதானே // - இதையே இப்படி நினையுங்கள். ஆங்கிலேயர்கள் இல்லையென்றான் இந்தியாவில் ஒன்றுமே இருந்திருக்காது. வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் வந்திருக்கமுடியாது. அவங்கள் கொடுத்த அஸ்திவாரத்தின்மீதுதானே இந்தியாவே உருவாகியது. இரயில், பெரிய பெரிய தொழிற்சாலைகள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பாலங்கள் கட்டியது ஆங்கிலேயர்கள்தானே.... அதனால் அவர்களது ஆட்சிதானே பொற்காலமாக உங்களுக்குத் தோன்றியிருக்கவேண்டும்....
பதிலளிநீக்குபுரிந்து கொண்டும் வாதத்துக்காக எழுதியது போல் இருக்கிறதுநான் நினைப்பதை எழுதுகிறேன்ஆதிகாலத்தில் சக்கரம் கண்டு பிடித்தவரே சிறந்தவர் என்று நான் கூறினால் போல் இருக்கிறதே உங்கள்கூற்று
நீக்குசாதாரண மக்களுக்கு தன்னாட்சி ஆணையங்கள் மீது நம்பிக்கை இருந்தது... அவைகள் இந்த ஐந்து வருட காலத்தில் சிறிது சிறிதாக அடிமையாக்கப்பட்டு விட்டது... அந்த துறை வல்லுநர்களே செயலற்று போய் உள்ளார்கள் என்று சொல்வதை விட தகர்க்கப்பட்டுள்ளார்கள்... அவற்றில் சில :-
பதிலளிநீக்கு1.சி.பி.ஐ.
2. சுப்ரீம் கோர்ட்
3. ரிசர்வ் வங்கி
4. தேர்தல் ஆணையம்
கான்ஸ்டிட்யூஷனல் இன்ஸ்டி ட்யூஷன்கள் மேலேநம்பிக்கையை போக்கி விடுவார்கள் போல் இருக்கிறது
நீக்குகாவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
பதிலளிநீக்குகண் முன்னே தோணுவது சாத்தியமே...
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே...
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்...
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க...
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க...
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை...
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
நீக்குசாதாரணமாக நீங்கள் அரசியல் கட்டுரைகள் இவ்வளவு காரசாரமாக எழுத மாட்டீர்கள். பொறுக்கமுடியாமல் தான் இதை எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குஇந்தியா ஏதோ ஒரு புரட்சியை நோக்கி செல்கிறது என்று மட்டும் கூறலாம். தெற்கு, வடக்கு, காஷ்மீர், வடகிழக்கு என்று தேர்தல் முடிவுகளிலேயே ஒரு மாற்றம் அல்லது வித்யாசம் என்று கடந்த சில தேர்தல்களின் மூலம் தெரிய வருகின்றது. தற்போதைய பிரதமர் ஒரு மிகப்பெரிய பிரிவினைக்கு வித்திடுகிறாரோ என்றும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இடுபவர்களும் எரிந்த கட்சி எரியாத கட்சி என்று பிரிந்து முடிவில்லாத வாதங்கள் செய்வார்கள்.
என்றாலும் நடப்பவை நல்லவையே என்று நம்புவோமாக.
ஜெயக்குமார்
பதிவுலக்ல் பெரும்பாலும் என்கருத்துகளுக்கு எதிர்ப்பு உண்டு ஏற்கனவே பிரிவினைக்கு வித்திட்டு விட்டார் நம்பிரதமர்
நீக்குபுரட்சிக்கு பதிலாக ஒற்றுமையாக நல்லாட்சி செய்வோர் வந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குநல்லாட்சி மலர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது தான் நல்ல வழி.
யாரை நம்புவது என்று இருக்கிறது தினம் வரும் செய்திகள், மேடை பேச்சுக்கள், வாக்கு கொடுப்பது எல்லாம் கேட்க கஷ்டமாய் இருக்கிறது.
மக்களுக்கு அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்பவர்களுக்கு வாக்கு அளிப்பார்கள் மக்கள் அந்த அளவு பாதிக்க பட்டு இருக்கிறார்கள்.
தண்ணீர் வசதி, விவாசய கடன், கல்வி கடன் ரத்து, என்று வந்தால் மக்கள் மகிழ்வார்கள், செயற்கை கோள், நாடு வல்லரசு என்று கூவிக் கொண்டு இருந்தால் மக்களுக்கு என்ன லாபம்.
ஊடகங்கள் பத்திரிக்கைகள் எல்லாவற்றிலும் புகுண்டு விளையாடுகிறார் நம்பிரதமர் எது உண்மை எது ஃபேக் என்பதே புரியாமல் இருக்கிறது அனால் நம் மக்களில் பெரும்பாலோர் ராம நாண்டால் என ராவணன் ஆண்டால் என்ன என்னும் மன நிலையிலேயே இருகிக்றார்கள் மக்களி அடிப்படைத் தேவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கின்றனர் மோடி தலைமையில் உள்ள அரசு
நீக்கு
பதிலளிநீக்குஅன்று தொலைக்காட்சியில் பேச போகிறேன் என்ன பேச போகிறார் என்று எல்லோரையும் கலங்க வைத்தவர்.
அவரை கேள்விகணைகளால் நீங்கள் துளைத்து இருப்பது மகிழ்ச்சி.
மோடி எப்போதுமே ஒன் வே பேச்சாளர் அவரிடம் யாரும்கேள்விகேட்க முடியாது அவர் அரசு தலைமை ஏற்றபின் ஒரு முறை கூட பத்திரிகை யாளருடன் உரை யாடியதில்லை ஐ மீன் ப்ரெஸ் கான்ஃபெரென்ஸ்
நீக்குபேச போகிறார் என்றவுடன் என்ன பேச போகிறார் என்று மக்களை கலங்க வைத்தவர்.
பதிலளிநீக்குநாடு தேர்தல் நேரத்தில் இருக்கும் போது சாதனைகளை சொல்லக் கூடாது என்பது விதி ஆனால் அதை அட்டகாசமாய் மீறிஅதில் தவறில்லை என்றுதேர்தல் கமிஷனையே சொல்ல வைத்தவர் நம்பிரதமர்
பதிலளிநீக்குசார்! உங்கள் கேள்விகள் உங்களுக்கு நியாயமாகப் படலாம். அதே மாதிரி மற்றவர்களுக்கு நியாயமாகப் படுவதைத் தானே மற்றவர்கள் சொல்ல முடியும்? அதனால் இந்த மாதிரியான லாவணிக் கச்சேரிகளுக்கு முடிவே இல்லை.
பதிலளிநீக்குநீங்கள் பெங்களூரில் வசிக்கிறீர்கள். உங்கள் மாநில தேர்தல் கால அபிப்ராயங்கள், கோரிக்கைகள், கட்சி நிலவரங்கள் இவற்றையெல்லாம் நீங்கள் சொன்னால் வாசிக்க அது புது அனுபவமாக எங்களுக்கு இருக்கும்.
உதாரணமா, நீட் தேர்வுக்கு விலக்களிக்க முயற்சிப்போம் என்று இங்கு எல்லாக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்றனர். மருத்துவக் கல்வி என்பதே பெரும் பணக்காரர்களுக்கானது என்று வந்து விட்ட காலத்தில் இந்தக் கோரிக்கை என்னவோ சகல ஏழை எளியவர்களாய் பாதிக்கும் பிரச்னை மாதிரி எப்படியோ பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
உங்கள் மாநிலத்தில் இந்த மாதிரி விஷயங்கள் பேசப்படுகின்றனவா போன்ற மாறுபட்ட தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
நன்றி : நண்பர் பழனியாண்டி நாகரத்தினம்
நீக்குபாஜகவின் இணைய ஆர்மியை சமாளிப்பது எப்படி?
பாஜக இணைய ஆர்மியா? அவர்கள் கோமாளிகள் தானே என்று நண்பர்கள் நினைக்கலாம். ஆனால், பாஜகவின் நிஜ பலம் அவர்களின் இணைய ஆர்மி தான். வெறும் போட்டோஷாப்பையும், ஊதிப்பெருத்த 54” மோடி மார்பையும் பரப்பியே ஆட்சியை பிடித்தவர்கள் அவர்கள். என்ன தான் நாம் “தாமரை மலர்வதை” கேலிச்செய்துக்கொண்டிருந்தாலும், அவர்கள் நிதானமாக ”தொலைநோக்கு பார்வையோடு” தங்கள் பணியை செய்யக்கூடியவர்கள். ஒரு வதந்தியை வெகு சீக்கிரத்தில் டிரெண்ட் செய்யக்கூடியவர்கள். தன் எதிரிகள் மீது வெறும் குற்றச்சாட்டுகளாக அடுக்கிக்கொண்டே நம்மை எதிர்வினை மட்டுமே செய்ய வைத்து அயற்சிக்கு உள்ளாக்குபவர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு ஏதோ ஒரு தரவைத்தந்து இது தான் பதில் என்று சொல்லுபவர்கள்.
பொதுவாக, சங்கிகளிடன் விவாதம் நடத்துவது மிக அயற்சியைத்தரும் விசயம் தான். ஏனென்றால், அவர்கள் சுத்தித் சுத்தி ஒரே விசயத்தை தான் பேசிக்கொண்டு இருப்பார்கள். அடப்பாவிகளா, இன்னமும் நீங்க அங்கேயே தான் நின்னுக்கிட்டு இருக்கீங்களா என்று தான் நமக்கு இருக்கும் பாதி நேரத்தில்... உதாரணத்திற்கு: இந்தி படிக்க விடாமல் தடுத்து விட்டது திமுக. இதற்கு பதில் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால், தெரியாமல் இருப்பவர்கள் அதிகம் என்பது தான் நிதர்சனம்!
நிற்க!
இப்போது, இந்த இணைய வாட்சாப் வசந்திகளை சமாளிப்பது எப்படி? ஏன் சமாளிக்க வேண்டும்?
1) முதலில் நாம் எதிர்வினை ஆற்ற தொடங்க வேண்டும். நாம் அவர்களின் பார்வேர்ட் மெசேஜ்களை பொய் என்று தெரிந்தும் பேசாமல் இருந்தால்.. நாம் இருக்கும் குரூப்பில் அதை உண்மை என்று நம்பி பேசாமல் இருப்பவர்கள் அந்த வதந்திகளுக்கு பலியாவார்கள்!
2) கேள்விகள் கேட்க வேண்டும். ஆதாரங்களை கேட்க வேண்டும். அவை புத்தகங்களாகவோ, ஆவணங்களாகவோ இல்லாத போது, அவை உண்மை இல்லை. வதந்திகள் என்று அந்த குரூப்பிலேயே அவர்களை அம்பலப்படுத்த வேண்டும்.
3) வதந்திகளுக்கு எதிரான தரவுகளை தர வேண்டும். நம் வரலாறே வதந்திகளால் நிரம்பப்பட்டது என்பதால், எது உண்மை? எது புரட்டு? என்ற கேள்வி நமக்குள் இருந்துக்
கொண்டே இருக்கும். ஆனால், சங்கிகளின் 90 சதவிகித வதந்திகளுக்கு பதில் தரும் தரவுகள் இணையத்தில் உண்டு. தேடினால் கிடைக்கும். அப்படி தேடிக் கிடைக்காத போது... நீங்கள் முந்தைய பாயிண்டில் சொன்னது போல... அவர்களிடமே ஆதாரங்களை கேளுங்கள்.
continue...
ஜீவி / உலக அரசியலில் மோடியின் பங்கு வியக்கத்தக்கதாயும் துணிச்சலாயும் நம் தேசத்திற்குபெருமை தேடித்தருவதாயும் இருக்கிறது/ என்று எடுத்துக் கொடுத்து மோடி பற்றி எழுதச் சொன்னீர்கள் நானும் எழுதினேன் ஆனல் புகழ்பாடி அல்ல சாதாரண மக்கள் இந்த மீடியாக்களை நம்ப மறுக்கிறார்கள் எதையாவது எழுத வேண்டும் என்றால் நம்முடைய பெர்செப்ஷன் பேரிலேயே இருக்கும் உண்மை பொய் என்றுஒதுக்கிப் பார்க்கும் ஜனங்கள் இன்னும் இருக்கிறர்கள் அதன் வாயிலாகவே பெர்செப்ஷனே எழுத்தாக என்று பதிவு எழுதி இருந்தேன் எழுதச்சொன்னநீங்கள் படித்தீர்களோ தெரியாது எந்த பின்னூட்டமும் இருக்கவில்லை உங்களிடமிருந்து எனக்கு சரி எனப்ப்[அடுவதைதான் நான் எழுத முடியும் உங்களிடமொன்று கேட்கிறேன் என்னை விட எழுதுமாற்றல் உங்களுக்கு இருக்கிறது நீங்களே ஏன் எழுதக் கூடாதுஎந்தச் செய்தி எங்கு இருக்கிறது என்று தெரிந்தவர் நீங்கள் உங்கள் பெர்செப்ஷனை எழுதலாமே வாசகர்களும் தெரிந்துகொள்வார்கள் லாவணிக்கச்சேரி என்று கருதும் நீங்கள்ஏன் ஒரு சுதமான கச்சேரி செய்யக் கூடாது
நீக்கு@தி தனபாலன் நானென்மனதுக்கு சரி எனப்பட்டதை எழுதுகிறேன்எந்த அரசியல் நோக்கமும் இல்லை ஆனால் பொய்யும்புளுகையும் சகட்டுமேனிக்கு பரப்பும்போது என்னைஅறியாமல் சிலவிஷயங்கள் எழுதுகிறேன் கேரளத்டில்பா ஜகவினருக்கு மவுசு கிடையாது ஆனால் ஹிந்துக்கள் நிறையவே இருக்கும் இடம் சந்து பொந்தில் கேரள அரசியலில் நுழைய சபரிமலை யாத்திரை பேரைச்சொல்லி இடம்பிடிக்கப்பார்க்கிறார்கள்நம் வலைத்தள வாசகர்களில் பலரும் சபரிமலை யாத்திரைபோனவர்களே அவர்கள் மனதில் இடம்பிடிக்கும் ஒரு யுத்திதானே இது
நீக்குநன்றி. ஜிஎம்பீ சார்! நீங்கள் குறிப்பிடும் பதிவை நான் பார்க்கவில்லை. மன்னிக்கவும். வாசித்து விடுகிறேன்.
நீக்குபொதுவுடமை சிந்தனைகளைப் போற்றுபவன் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள். பொதுவுடமைத் தத்துவம் தேசத்தை நேசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. தேசத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவர்களை போற்ற நினைக்கிறது.
அவ்வலவு தான்.
பொதுமைச் சிந்தனை கொண்டோர் தனி நபர் வழிபாடுகளை என்றுமே ஏற்றுக் கொள்ளார். தனிநபர் வழிபாடுகள் எதேச்சிகாரத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை அறிவர்.
அதனால் தனி நபர்களைக் குறித்தோ பாராட்டியோ நான் எதுவுமே எழுதுவதில்லை. பண்டித நேரு, பெருமைமிகு இந்திரா, இன்றைய மோடி என்று நபர்களின் அரிய செயல்களைக் குறிப்பிடும் பொழுது அவர்களை அடையாளம் காட்டும் கட்சித் தளையிலிருந்து விலகியிருந்து அவர்களின் அரிய செயல்களைப் பாராட்ட முடிகிறது. அதனால் தனிநபர்களின் பெயர்கள் குறிப்படும் பொழுதெல்லாம் பாராட்ட வேண்டிய அவர்களின் செயல்கள் தாம் பாராட்டப்பட்டிருக்கின்றன என்று கொள்ள வேண்டுகிறேன்.
நீங்கள் எழுட அல்லது சொல்ல நினைப்படைஉங்கள்பதிவுக்சளில் சொல்லலாமே என்றுதான் நினைத்தேன்
நீக்குஇந்திரா காந்தி எனக்கு மிகவும் பிடித்த இந்திய அரசியல்வாதி. இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க். அவர் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன்.
நீக்குநீட் தேர்வு பற்றி நாம் ஏதாவது சொல்ல நினைத்தாலே அந்த 'நீட்' பற்றி முழு விவரங்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமகிறது.. இன்றைய இணைய தள தேடலில் சகல விவரங்களும் உள்ளங்கைக்கு அருகாமையில் இருக்கின்றன.
பதிலளிநீக்குதேர்தல் கால கூட்டங்களில் 'நாம் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு சதியை முறியடிப்போம்' என்று மேடையில் பேசும் தலைவர் குரல் கொடுத்தால் 'ஓ' என்று ஆதரவு கோஷம் கொடுக்கக் கூடிய மாஸ் கூட்டம் அல்ல நாம் என்பதிலாவது உடன்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதே மாதிரி தான் ரஃபேல் விவகாரமும்.
அதனால் எது பற்றி சொல்ல நினைத்தாலும் அது பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்ட பிறகு சாதக, பாதக விஷயங்களை அலசுவது நல்லது என்ற அடிப்படை அபிப்ராயம் பல நேரங்களில் நமக்கு கைகொடுக்கும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு4) Offensive mode: மேற்சொன்னவை எல்லாமே Defensive shots. ஆனால், பாஜகவை ஏறி வெளுக்க வேண்டிய நேரமிது. கருணை எல்லாம் பார்க்காமல் கொசுவை கொல்லாவிட்டால் அது நோயை ஊரெங்கும் பரப்பிவிடும் அபாயம் இருக்கிறது. ஆகவே, பாஜகவின் கடந்து ஐந்து ஆண்டு காட்டாட்சியை விமர்சித்து வந்த பதிவுகள், காணொளிகள், கட்டுரைகள், மீம்களை தயங்காமல் உங்கள் குரூப்களில் தொடர்ந்து போட ஆரம்பியுங்கள். யார் யார் உங்கள் குரூப்பில் ஒளிந்திருக்கும் சங்கிகள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் முதல் மூன்று பாயிண்டில் சொன்னதை செய்யுங்கள். கேள்விகளை கேட்டு அவர்களை மாற்ற முயலுங்கள். முடியாவிட்டால், அம்பலப்படுத்துங்கள்.
நீக்கு5) நேச வட்டத்தை உருவாக்குங்கள்: இது மிக முக்கியமானது. காவிகள் டிரைனிங் குரூப்கள் வைத்து எப்படி பேச வேண்டும், எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். மதவாதிகளான அவர்களே இதை செய்யும் போது... நாம் ஏன் இதை செய்யக்கூடாது? உங்களுக்கு தெரிந்த மதசார்பற்ற அறிவாளர்களை ஒன்று சேர்த்து ஒரு குழுவை ஆரம்பியுங்கள். உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் விவாதத்தில் உதவி தேவைப்பட்டால் அந்த குழுவில் கேட்டு பதிலளியுங்கள்!
6) சங்கிகளிடமும், அவர்கள் தம்பிகளான சாதியவாதிகளிடமும் பேசும் போது நம்மை வெறுப்படைய செய்ய அவர்கள் உபயோகிக்கும் தந்திரம் “கெட்ட வார்த்தை” பிரயோகம். நாம் சார்ந்திருக்கும் கொள்கை சார்பான தலைவர்களை கீழ்தரமாக கிண்டல் செய்வது என நம் பொறுமையை சோதிப்பார்கள். இது நம்மை கோபம் கொள்ள வைத்து நம்மை பேசவிடாமல் குரூப்பை விட்டு வெளியேற்றவோ, இல்லை நாம் அவர்களை ச்சீ என்று கடந்து போகவோ வைக்கத்தான். ஆனால், நாம் பொறுமையாக.. இப்படித்தான் உங்களுக்கு பேசக்கற்றுக்
கொடுத்து இருக்கிறார்களா? நாகரீகமாக பேசமாட்டீர்களா? என்று குரூப்பிலேயே கேட்க வேண்டும். நீங்கள் கேட்க ஆரம்பித்தால் மற்றவர்களும் கேட்க ஆரம்பிப்பார்கள்!
இதையெல்லாம் ஏன் நாம் செய்ய வேண்டும்?
காவிகளின் ஊடுருவல் நம் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு ஆழமாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளாக நம் முப்பாட்டன்கள் செய்யாத ஒரு விசயத்தை நூறு ஆண்டுகளாக நம் தாத்தன்கள் செய்தார்கள். அது தான் இன்று என்னை இந்த பதிவை எழுத வைத்தது. உங்களை இந்த பதிவை படிக்க வைத்தது.
அது ஒன்றுமில்லை, பகுத்தறிவோடு, ஏன்? எதற்கு? எப்படி? என்று நம் தாத்தன்கள் கேள்வி கேட்டார்கள். நம்மை கேள்வி கேட்க சொல்லிக்கொடுத்தார்கள். அந்தக்கேள்விகள் தான் சங்கிகள் இன்றுவரை தமிழகத்தில் கால்பதிக்க விடாமல் செய்பவை. அதை நாம் செய்தாலே, சங்கிகள் கூட்டம் தெறித்து ஓடிவிடும். நாம் பேச ஆரம்பித்தால் தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். உரக்க பேசுவோம். பாசிச பாஜகவை ஒழித்துக்கட்டுவோம்!
நன்றி!
ஜீவி நம்நாட்டு அரசியல் பற்றி எழுதும்நான் எங்கள் மாநில அரசியல் பற்றி எழுத வேண்டுமென்று நினைப்பதுஇல்லை எங்கள் மாநிலமுமிந்திய அரசின் ஒரு பகுதியேநீட் டெர்வு பற்றி நீங்கள் ஏன் எழுதக் கூடாது உங்களுக்குத்தான் எந்தசெய்தி எங்கு கிடைக்குமென்று தெரியுமே நான் எழுத்து நாகரிகம் கருதிகூடியவரையாரையும் புண்படுத்த விரும்பாமல் எனக்குப் பட்ட உண்மை செய்திகளையே எழுதுகிறேன்
நீக்குவாசகர்களில் நேச வட்டமென்று இருக்கிறதா கருத்துகளுக்கு பதில் சொல்வதைவிட்டு எழுதுபவனை எதிரியாகப்பார்ப்பவரே அதிகம் எழுதுவதுபிறர்படிக்க வேண்டும் என்னும் எண்ணத்தாலேயேபிற நாடுகளை பாருங்கள் என்று சொல்பவர்கள் அங்கே பெரும்பாலான நாடுகளில் அனெம்ப்பிளாய் மெண்ட் அலவன்ஸ் கொடுக்கப்படுவது தெர்யாமாலா இருப்பார்கள் அதையே எதிர்க்கட்சி வித்தியாசமாகச் சொன்னால் தாங்க மாட்டார்கள் எழுதிக் கொண்டே போகலாம் ஆனால் எல்லா எழுத்துக்கு நிரூபணம்கிடைக்குமா பா ஜ க நல்ல அரசு இல்லை என்றால் எதிர்க்கட்சி மட்டும் ஒழுங்கா என்பதே பதிலாக இருக்கும் தாங்கள் செய்ஹதை பட்டியலிடலாம்தானே பிறரை குறை கூறியே தம் தவறைமறைக்கிறார்கள்
நீக்குநீட் பொதுத்தேர்வு பற்றி மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொறியியல் படிப்பு படிக்க நினைப்போர் JEE (Joint Entrance Exam) பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். JEE-யில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் பொறியியல் தேர்வில் அகில இந்திய ரீதியில் நல்ல பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி கிடைக்கிறது. வாசிப்புக்கால கட்டண சலுகைகளும் உண்டு.
நீக்குமருத்துவக் கல்வியில் அகில இந்திய அளவில் இடம் கிடைக்கவும் பணக்கொடையை அறவே ஒழித்து விடக்கூடிய
சக்தி படைத்ததாக நீட் கருதப்படுகிறது. இப்பொழுது தான் ஆரம்ப நிலையில் இருப்பதால் செயல்பாடுகளைப் பற்றி சரிவரத் தெரியவில்லை. ஆந்திர மாநிலத்தவரை கவர்ந்த தேர்வாகத் தெரிகிறது. கணினி மென்பொருள் கல்வியில் அந்திர மாநிலத்தவரின் கற்கும் ஆர்வம் பிரசித்தி பெற்றது.
அமெரிக்க கணினி வேலை வாய்ப்புகளில் ஆந்திர மாநிலத்தினரை அதிகம் காணலாம். அதனால் தான் நீட் பற்றி கர்னாடக மானிலத்தில் எப்படி ஆர்வம் இருக்கிறது என்று உங்கள் மூலம் தெரிந்து கொள்ளா விழைந்தேன்.
மாநில செய்திகளை உங்களைப்போல் நானும் ஊடக வாயிலாகதான் தெரிந்து கொள்கிறேன் ஆனால் எதையும் அப்பட்டமாக நம்புவதில்லை
நீக்குநீட் தேர்வு என்று கூகுளில் தேடிப் பாருங்கள். ஆதார பூர்வமான செய்திகள் கிடைக்கும். சில நடவடிக்கைகளின் வீச்சு சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கும் பொழுது நெஞ்சில் பதியும். இதெல்லாம் பற்றி வீணாக நாம் அலட்டிக் கொள்வானேன்?
பதிலளிநீக்குஊடகம்ன்னா எதைச் சொல்கிறீர்கள்?..
பதிலளிநீக்குநான் கூகுள் தேடுதலைச் சொல்கிறேன். ஆர்வம் இருந்தால் நீட் தேர்தல் என்றால் என்ன?-- என்பதிலிருந்து ஆரம்பித்து தேடி படித்துப் பாருங்கள். நீட் தேர்வின் முழு உருவம் கிடைக்கும்.
அன்பின் ஜீவி சார் என்பதிவு இப்போதைய அரசின் நிலை குறித்து அதற்குதலைமை தாங்கும் மோடியிட கேள்வி கேய்பது போல் எழுதப்பட்டதுநீட் தேர்வு பற்றி நான்கூகிளில்தேடித்தெரிந்து கொள்கிறேன் ஊடகமென்பதை நான் புரிந்து கொண்ட அளவில் தொலைக்காட்சி செய்திதாள்கள் போன்ற மீடியாக்கள் என்ப்தை மனதில் கொண்டே படிவுக்கு நேரடியாக பதில் தந்தால் நலமாயிருக்கும் நீட்போன்ற தலைப்புகள் பதிவைவிட்டு விலகியது
பதிலளிநீக்கு