வெள்ளி, 5 ஏப்ரல், 2019

சில பகிர்வுகள்


                             சில பகிர்வுகள்
                              -----------------------

தமிழ்
எனக்கு ஒரு செய்தி வந்தது நான் அதனால் ஈர்க்கப்பட்டேன் முன்பொரு முறை யாழ்பாவாணன்   தமிழ் குறித்துஎழுதச் சொன்னபோதுஇது கிடைத்திருக்கவில்லை நான் ஓரிருபதிவர்களுடன் இதனைப்பகிர்ந்தேன்  இரண்டு வித்தியாசமான ஏற்புகள் இது குறித்து பதிவிடலாமே என்று தோன்றியதுஆங்கிலம் தன்னுள் பிற மொழிச்சொற்களை ஏற்று வளர்ந்திருக்கிறதுஅவற்றுள்  குறிப்பிட்டு  சொல்வதானால் கிரேக்கத்திலிருந்தும் லத்தீனிலிருந்தும் நிறைய சொற்களை  ஆங்கிலம்  எடுத்தாண்டிருக்கிறது தமிழிலிருந்தும் இருக்கலாம் ஆனால் தமிழ் மொழி சம்ஸ்கிருதத்திலிருந்து அநேக  சொற்களை உள்வாங்கி இருக்கலாம்என்றும்  பதில் இருந்தது  என்னைப் பொறுத்தவரை இதெல்லாமே கிரீக் அண்ட் லாட்டின்அந்தமொழிகள் தெரியாதுகீழ்காணும் சொற்களின்  மூலம் சம்ஸ்கிருதமாயிருக்குமானால் வாசகர்கள் தெரிவிக்கலாம் கிரிக்கும்  லத்தீனும் வழக்கு ஒழிந்து போய் விட்டது என்று தோன்றுகிறது சம்ஸ்கிருதமும் பேச்சு வழக்கில் இல்லைஎன்றே தெரிகிறது ஆக தொன்மையான தமிழ் பற்றி தெரிந்தவர்கள்  பகிரலாம் தெரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பு  ஒப்பிடவும்செய்யலாம் மொழியின் தொன்மை குறித்தும் தெரிந்து கொள்ள முடியும்

 கீழ்க்கண்ட ஆங்கில - தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்!

Mango -
மாங்காய்
Cash -
காசு
One - "
ஒன்"று
Eight - "
எட்"டு
Victory -
வெற்றி 
Win -
வெல்/வென்று
Wagon -
வாகனம்
Elachi -
ஏலக்காய் 
Coir -
கயிறு
Eve -
அவ்வை
Terra -
தரை
Metre -
மாத்திரை (unit representation in Tamil)
Name -
நாமம் (பெயர் - .கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit -
ஒமட்டு (குமட்டுதல்)

பின்வரும் வார்தையில S நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.

Script -
குறிப்பு
Speech-
பேச்சு
Speed -
பீடு/வேகம் (பீடு நடை - வேக நடை)
Sponge -
பஞ்சு
Snake -
நாகம்

A"ttack" -
தாக்கு
M"ake" - "
ஆக்க"ம் 
Round -
"ருண்டை"
Lemon - "
இளம"ஞ்சள்காய் (எலுமிச்சை)
Roll -
"ருள்"
Orate - "
உரை"யாற்று
"Know"ledge - "
ஞான"ம்
Ginger -
"ஞ்சி"

Molecule -
மூலக்கூறு
Kill -
கொல்
Prize -
பரிசு
Other -
இதர
Tele -
தொலை
Teak -
தேக்கு
Rice -
அரிசி
Aqua -
அக்கம்
Venom -
விடம் 
Fade -
வாடு
Poly-
பல
Mega -
மிக
Accept -
இசைப்படு
Mature -
முதிர்
Goat -
கடா
Pain -
பிணி

Yarn -
ஞாண் (அறிக- yarn=thread, 
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Culprit -
கள்ளன்(குற்றவாளி)
Torque -
திருகி
Level -
அளவு
Mad -
மடமை
Surround -
சுற்றம்
God -
கடவுள்
Birth -
பிறந்த
Capture -
கைப்பற்று
Want -
வேண்டி
Plough -
உழவு
Sudden -
உடன்
Adamant -
அடம்
Fault -
பழுது
Shrink -
சுருங்கு
Villa -
இல்லம்
Path -
பாதை
Via/Way -
வழியாக 
Bottle -
புட்டில்/புட்டி
Cot -
கட்டில்
Nerve -
நரம்பு
Betrothal -
பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Grain -
குருணை
button –
பொத்தான்

திரு அப்துல் காலாமின்அப்பாவின் கொள்கைகளாகச் சொல்லப்படுபவை    சில 

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1)
ஏழ்மையிலும் நேர்மை
2)
கோபத்திலும் பொறுமை
3)
தோல்வியிலும் விடாமுயற்சி-
4)
வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5)
துன்பத்திலும் துணிவு
6)
செல்வத்திலும் எளிமை
7)
பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1)
சிந்தித்து பேசவேண்டும்
2)
உண்மையே பேசவேண்டும்
3)
அன்பாக பேசவேண்டும்.
4)
மெதுவாக பேசவேண்டும்
5)
சமயம் அறிந்து பேசவேண்டும்
6)
இனிமையாக பேசவேண்டும்
7)
பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1)
மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2)
பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3)
பிறருக்கு உதவுங்கள்
4)
யாரையும் வெறுக்காதீர்கள்
5)
சுறுசுறுப்பாக இருங்கள்
6)
தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7)
மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1)
கவனி உன் வார்த்தைகளை
2)
கவனி உன் செயல்களை
3)
கவனி உன் எண்ணங்களை
4)
கவனி உன் நடத்தையை
5)
கவனி உன் இதயத்தை
6)
கவனி உன் முதுகை
7)
கவனி உன் வாழ்க்கையை.

சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக  நல்லது நடக்க்ச்  வாய்ப்புண்டு 
 ஒரு காணொளிபகிர்வு  அண்மையில் திருவாரூரின் ஆழித்தேர் வலம்வந்தது  எனக்கு ஒரு காணொளியும் வந்தது
 நான் திருச்சியில் இருந்த போது என்னை நண்பர் ஒருவர்  வரைந்தபடம்  
Add caption
திருச்சியில் பணி ஆற்றிய போதுநானெழுதி பரிசு பெற்ற  சுலோகன் 

தர சுலோகன்
என் வீட்டில் ஒருஓவியர் தயாராகிறார் அவரது ஓவியங்கள் ஆங்காங்கே 

33 கருத்துகள்:

  1. உங்கள் நண்பர் என் உங்கள் கையை வரையாமல் விட்டு இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  2. படங்கள் மற்றும் தகவல்கள் அருமை

    பதிலளிநீக்கு
  3. அருமை
    தமிழ் மிகவும் தொன்மையான மொழி ஐயா
    சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்பதெல்லாம் இன்றைய அரசியல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் தொன்மையான மொழி என்பதில் ஐயமில்லை பிற மொழிச் சொற்களை ஏற்பது தவறில்லை இப்போதுநாம் பேசும்பொது ஆங்கில சொற்கள் வருவதில்லையா

      நீக்கு
  4. அரிய விடயங்கள்தான் ஐயா
    ஓவியங்கள் அருமை காணொளி பிறகு காண்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி இயங்கியது கண்டேன்.

      நீக்கு
    2. கொடுத்திருக்கும்தமிழ்ச் சொற்களின் மூலம் தெரிய வேண்டுஇ எழுதியது

      நீக்கு
    3. திருவாரூர் தேர் பிரித்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் கண்டது ஒருங்கிணைத்த தேராகக் கண்டதும்பகிரத் தோன்றியது

      நீக்கு
  5. நண்பர் வரைந்த படம் நன்றாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் வரைந்து முடித்தபின் கொடுத்தார் அவர் நினைவாகப் பாதுகாத்து வருகிறேன்

      நீக்கு
  6. ஆங்கில, தமிழ் மொழி சொற்களின் அமைப்பில் ஒற்றுமை வியக்கவைத்தது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவற்றின் மூலம் எங்கிருந்து வந்தது என்பதை அறிய பகிர்ந்தேன்

      நீக்கு
  7. தமிழில் வடமொழிக் கலப்புச் சொற்கள் இருக்கலாம். (இலக்கியங்களில் பயன்படுத்தியிருக்கலாம்). ஆனால் அதற்கான தமிழ்ச்சொற்களும் உண்டு.

    வார நாட்களுக்கும் கிரகத்துக்கும் பல மொழிகளில் ஒற்றுமையைக் கண்டு வியந்திருக்கிறேன்

    ஆங்கிலச் சொல் 'கட்டுமரம்' காணோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடமொழிச் சொற்கள் இருந்திருந்தால் குறிப்பிட்டு இருக்கலாம் பதிவர்கள் தெரிந்து இருந்தால் பகிரலாம்

      நீக்கு
  8. பகிர்ந்து கொண்ட அனைத்தும் அருமை.
    நன்பர் வரைந்த ஓவியம், வீட்டில் ஒரு ஓவியர் வரைந்த ஓவியம் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. வாசிக்க வாசிக்க என்றும் இனிக்கும் தமிழ்...

    ஏழு விஷயங்கள் அனைத்தும் அருமை...

    குறிப்பிட்ட குறள் சொல்லும் தகவல்கள் பல உள்ளன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறளின் விலஅம் தந்திருக்கலாம் என் போன்றோர் பலனடைய

      நீக்கு
  10. நண்பர் உங்களை வரைந்திருக்கும் படம் நன்று.

    பதிலளிநீக்கு
  11. ஆங்கிலம் என்பது கடந்த 600 வருடத்திற்குள் வளர்ந்த தன்னை வளர்த்துக் கொண்ட மொழி. காரணம் நெகிழ்வுத்தன்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாத்ரு----- mother
      பித்ரு -----father
      ஆங்கில சம்ஸ்கிருத மொழிகள் நினைவிலிப்படி தெரிந்ததும் தெரியாததும் எத்தனையோ

      நீக்கு
  12. சார் இன்றைய பதிவு சூப்பர். கதம்பம்.

    படங்கள் மிக மிக அழகாக இருக்கிறது. நண்பர் உங்களை வரைந்த படமும்.

    7 விஷயங்கள் எல்லாமே சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியங்கள் என் இரண்டாம் மருமகளின் கை வண்ணம் மொழியும் முலமும்பற்றி எதாவது நினைவுக்கு வருகிறதா

      நீக்கு
  13. நல்ல தொகுப்பு.

    ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு. ஓவியருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மருமகள் இப்போது ஓவியம் தீட்டுகிறாள் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  14. வ்ருகைக்கு நன்றி சார் உடல் நலனில் கவனம் வையுங்கள்

    பதிலளிநீக்கு
  15. உலகின் பல மொழிச் சொல்களை
    தன் மொழிச் சொல்லாக ஏற்று
    ஆங்கிலம் வாழ்கிறது. - அதில்
    தமிழ் மொழிச் சொல்லும் உண்டு!

    வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) கூட
    தமிழ் மொழிச் சொல்லும் உண்டு!

    தங்கள் சொல் தேடல்
    மகிழ்வைத் தருகிறது.

    உண்மையில்
    சொல்வளம் பெருகின் மொழிவளம் சிறக்கும்
    இதனை
    ஆங்கிலம் பாவிக்கிறது
    தமிழ் சொல்கள் உலகளவு இருக்க
    நாம் பாவிப்பது குறைவே!

    பதிலளிநீக்கு
  16. /
    வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) கூட
    தமிழ் மொழிச் சொல்லும் உண்டு!/ இல்லை ஒரு வேளை நேர்மாறாகவும் இருக்கலாம் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  17. எல்லாப்படங்களும் அருமையாக இருக்கின்றன. சமஸ்கிருதம் காலப்போக்கில் செம்மையாக்கப் பட்ட மொழி! பேசுபவர்கள் உங்கள் கர்நாடகா மாநிலத்திலேயே நிறைய உள்ளனர். தமிழிலே மானம், மரியாதை என்பது வடமொழியிலும் அதே தான்! ஆகவே சில சொற்கள் தமிழுக்கே உரியது எனச் சொல்ல முடியாது! மேஜை, நாற்காலி எல்லாம் தமிழ்ச் சொற்களே அல்ல! ஆனால் தமிழ் என நினைத்துப் புழங்குகிறோம். சென்னைத் தமிழில் வரும் காலை உணவுக்குச் சொல்லப்படும், "நாஷ்டா" ஓர் வடமொழிச்சொல்லே. கஸ்மாலம் என்பது சமஸ்கிருதச் சொல்லான "கஸ்மலம்" என்பதில் இருந்து வந்தது. எந்த ஒரு மொழியும் சில, பல சொற்களை இன்னொரு மொழியிடம் இருந்து கடன் வாங்கித் தான் இருக்கும். இது தவிர்க்க இயலாது!

    பதிலளிநீக்கு
  18. தமிழும் பிற மொழிச் சொற்களை தன்னில் ஏற்கிறது எது மூலமென்பதே சந்தேகம் ஓவியங்களை பாராட்டியதற்கு நன்றிஅவை என் இரண்டாம் மருமகளின் கை வண்ணம்

    பதிலளிநீக்கு