Tuesday, April 30, 2019

ஒன்றிலிருந்து ஒன்றாக

                   

                                       ஒன்றிலிருந்து ஒன்றாக
                                      ---------------------------------------

சென்ற ஒருபதிவில்  ஜகதலப்பிரதாபன்  கதையைப் படிக்கத்தூண்டிய விவரங்கள் குறித்து எழுதி இருந்தேன் அதுவே என்னை பழையபடமான காத்தவராயன்  ஆர்யமாலா கதையை தேடத்தூண்டியதுஆனால் இத்தேடல் என் நினைவுகளை  ஒன்றிலிருந்து ஒன்றாகபல செய்திகளை நினைவுக்கு கொண்டு வந்தது காத்தவராயன் கதை நாட்டார் கதைகளில்பேசப்படுபவை  காத்தவராயன் ஒருகாவல் தெய்வமாகவே வழிபடப்படுகிறானாம்
பொதுவாகவே சிறு தெய்வங்கள்  எல்லாமே நிஜமனிதர்களே ஆனால் சாதாரணமனிதர்களைவிட சிறந்தவர்கள் நாளாவட்டத்தில் கடவுளின் நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் கடவுளராகவே மதிக்கப்பட்டார்கள்
  காத்தவராயன்  சிவ பெருமானின்  மகனாகக் கருதப்படுகிறார்
கிராமியக் கதைப்படி  சிவபெருமானுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் காத்தவரயன்  வேடுவர்களால்  வளர்க்கப்படுகிறார் இளங்கன்னி என்னு
ம் தேவ கன்னியைக் காதலிக்கிறார் காதலைச்  சொன்னதும்  அவர் நீரில் மூழ்கி விடுகிறர் மறுபிறவி எடுத்து ஆர்யமாலா என்னும்ராஜகுமாரியாகிறார் ஆர்யமாலாவைக் காத்த வராயன்  காதலிக்கிறார் உருவ மாறுதல் செய்யும்  கலையில் வல்லவனாகிறார் கிளி உருவில் ராஜகுமாரியின் இடத்துக்குச் செல்கிறார் ஆர்யமாலாவுக்கு  கிளிமேல் ஆசை வருகிறது ஆர்யமாலா உறங்கும் போது காத்தவராயன்  அவருக்குத் தாலி  கட்டிவிடுகிறார் இதை அறிந்து அவர் மீண்டும்நீரில் மூழ்கப் போகிறார் மஹாவிஷ்ணு  அவளைக்கல்லாக்குகிறார் ஒரு சமயம் காத்தவராயன் அந்தக் கல்லை தீண்டியபோது  மீண்டு பழைய உரு பெறுகிறார்  அரசன் காத்தவராயனை சிறை வைக்கிறார் மஹாவிஷ்ணு தடுத்து சமரசம் செய்விக்கிறார்  காத்தவராயனும்   ஆர்யமாலாவும்  மண முடித்துஇனிதே வாழ்கிறார்கள்; ஒரு கதை இப்படி இருக்க  இன்னொன்று
 சிவபெருமானும்பார்வதியும் கங்கை நதிக் கரையில் தோட்டம் அமைக்கின்றனர். அந்தத் தோட்டத்திற்குப் பாதுகாவலுக்காக ஒருவரை சிவபெருமான்படைக்கிறார். ஒரு நாள் சப்த கன்னியர்கள் தோட்டத்திலுள்ள மலர்களைப் பறித்துச் சென்றதைக் காவலாளி அறிந்து கொண்டான். மறுநாள் அவர்கள் தோட்டத்திற்கு வந்து நீராடுகையில் ஒருத்தியின் ஆடையை மறைத்து வைத்தான்.
ஆடையைக் காணாது தவித்த பெண் நீரிலேயே இருக்க, பிறர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர் காவலாளியை மனிதனாகப் பிறந்து, கழுவேற்றம் தண்டனையைப் பெருமாறு சாபமிட்டார்.
 ஆடையைத் தொலைத்த பெண் ஆரியமாலாவாக சோமாசி ஐயர் எனும் பிராமணர் வீட்டிலும், பிற ஆறு பேர் வெவ்வேறு இடங்களிலும் பிறக்கின்றார்கள். வைரசெட்டி பாளையத்தில் மயிரழகியிடம் ஓந்தாயி, களத்தூர் சலுப்பர்-சலுப்பச்சியிடம் சவுதாயி, ஆட்பாடி இடையர் குலத்தில் கருப்பாயி, பாச்சூரில் பூவாயி, மாவாடி மங்களத்தில் நல்லதங்காள், புத்தூர் கிராமத்தில் வண்ணார நல்லி ஆகியோர் பிறந்தனர்.
காத்தவராயன் வளர்ந்ததும் சப்த கன்னியர்கள் ஒவ்வொருவருடனும் காதல் கொண்டு தொடர்பு கொள்கிறான். வைரசெட்டி பாளையத்தில் ஓந்தாயியைக் கண்டு அவளை, முதலைப்பாரில் சிறைவக்கிறான். களத்தூர் சவுதாயிடம் கோழி கொல்கிறான். ஆட்பாடி கருப்பாயி வீட்டில் தயிர்மோர் குடித்தான். புத்தூர் வண்ணாரநல்லிக்கு பால் வாங்கி கொடுத்தான். பாச்சூர் பூவாயின் வீட்டில் மதுகுடித்தான். இறுதியாக ஆரியமாலாவுடன் உடன்போக்காக வேறிடம் சென்றான்.
ஆரியமாலாவை காத்தவராயன் கவர்ந்து சென்றானென பிராமணர்கள் அரசனிடம் முறையிட்டனர். அரசன் நாட்டு காவலதிகாரி சேப்பிளையானை அழைத்து ஒரு வாரத்திற்குள் காத்தவராயனை கொண்டுவர சொல்கிறார். ஒருவாரம் சேப்பிளையான் தேடியும் காத்தவராயன் இருக்குமிடம் அறியமுடியவில்லை.
தன் தந்தையே தன்னை தேடுவதை அறிந்த காத்தவராயன் ஆரியமாலையிடம் தானே அகப்பட்டு கழுவேறி திரும்புவதாய் உரைக்கிறான். மதுவருந்தி மயங்கி கிடக்கையில் காவலர்கள் பிடிக்கின்றனர்.
அரசன் முன்பு தன் முன்ஜென்ம கதையையும் சிவபெருமான் சாபத்தையும் எடுத்துரைக்கிறான் காத்தவராயன். அத்துடன் தான் பறையன் இல்லை, பிராமணன் என்கிறான்.
உயர்சாதி பிராமணப் பெண்ணை தாழ்சாதி ஆண் உடன்போக்கு செய்ததை காரணமாக்கிக் காத்தவராயனைக் கழுவில் ஏற்ற எண்ணியவர்கள் மனம் மாறுகிறார்கள். ஆனால் கழுவேறினால்தான் தன்சாபம் நீங்குமென காத்தவராயன் கழுவேறுகிறான்.
சிவபெருமான் அருளால் காத்தவராயன் காக்கப்பட்டு, ஆரியமாலாவுடன் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
நாட்டார் வரலாற்று ஆய்வாளரான நா. வானமாமலை அவர்கள் காத்தவராயன் கதைபாடலின் பிற்சேர்க்கையை களைந்துள்ளார்[2] அவருடைய கூற்றின் படி காத்தவராயன் பறையர் சமூகத்தை சேர்ந்தவன். அவன் ஆரியமாலா என்ற பிராமண பெண்ணை காதலித்தான். இருவரும் உடன்போக்காக சென்றனர்[3] பிராமணர்கள் சோழ அரசனிடம் இச்செய்தியை கூறினர். சோழ அரசன் சேப்பிளையான் என்ற காவல் அதிகாரியிடம் அவனை கண்டுபிடித்து அழைத்துவர செய்கிறான். பின்பு காத்தவராயனை கழுவேற்றம் தண்டனை தந்து கொல்கிறான்[4]
பிராமணர் மற்றும் அரச குலத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரானதாக இக்கதை இருந்தமையால் பிற்சேர்க்கையாக கையிலை வாசம் மற்றும் வரம் குறித்த பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
இதைஎல்லாம் எழுதும்போதுஎனக்கு ஒரு சில முடிச்சுகள்  நினைவுக்கு வருகிறது  இது ஏதோ ஆணவக் கொலைபோல் இருக்கிறதா  ஆணவக் கொலைகள் என்றும் இருந்தன பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் என்றுமிருந்திருக்கின்றன  இந்தமாதிரி ஏற்றதாழ்வுகளை கட்டிக்காக்கவே வருணாசிரம தர்மமும்   அதை கட்டிக்காக்கவே என ஜாதிப் பிரஷ்டம்   போன்ற நடவடிக்கைகளும் இருந்தன  இததயே தெய்வத்தி குரலில்
 ”ஆண்டளிக்க முடியாத சமுதாயத்தை யார்எப்படிக் கட்டுப் பாட்டில் வைத்துநிர்வகிப்பதுஇதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்யப் பரம்பரையாகஒரு ஜாதி என்று பிரித்து தனித் தனிக் கட்டுகளாக வைத்தார்கள்இதிலிருக்கிறகட்டுக் கோப்பை யாரும் புரிந்து கொள்ளலாம்ஒவ்வொரு வர்ணத்தினரும் சிறுகட்டுகளாக - ஜாதிகளாக - பிரிந்தார்கள்அவரவருக்கும் "ஜாதி நாட்டாண்மை"என்று ஒன்று இருந்ததுஅந்தந்த நாட்டாண்மைக்காரக்கள் தங்கள் தங்கள்சமூகத்தினர் ஒழுங்கு தப்பினால் அவர்களைத் தண்டித்தார்கள்இப்போதுசர்க்கார்கூடத்தான் ஜெயிலில் போட்டு சிக்ஷிக்கிறதுஆனால் இது ஒன்றும்குற்றவாளிகள் நெஞ்சில் உறைப்பதில்லைஅதனால் குற்றங்கள் பாட்டுக்குவளர்ந்துகொண்டேத்தான் இருக்கின்றனநாட்டாண்மையில் கொடுத்ததண்டனையோ சுரீலென்று உறைத்ததால் ஜனங்கள் தப்புத் தண்டாவில்இறங்காமல்இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும்யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள்அதுவரை போலீசுக்கும்,மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கும் வேலை ரொம்பக் குறைச்சலாகவே இருந்தது.
 
அதென்ன அப்படிப்பட்ட தண்டனையை நாட்டாண்மைக்காரர்கள்கொடுத்தார்கள் என்றால்ஜாதி ப்ரஷ்டம் என்பதுதான் அதுஒரு சக்கிலியாகஇருக்கட்டும்பரியாரி (நாவிதன்)யாக இருக்கட்டும் - எவராகத்தான் இருக்கட்டும்இப்போது பிற்பட்ட (Backward) தாழ்த்தப்பட்ட (depressed) என்றெல்லாம்சொல்கிற எந்த ஜாதியினவராக இருந்தாலும் கூடத்தான் அவரவருக்கும் தன்ஜாதியை விட்டுத் தள்ளிவிடுவார்கள் என்றால்அதுவே சுரீலென்று மனதில்தைத்ததுஅது தாங்க முடியாத பெரிய தண்டனைமகத்தான அவமானம் என்றுதோன்றியதுஇதிலிருந்து என்ன தெரிகிறதுஎந்த ஜாதியாரும் எந்தஜாதியினரையும் மட்டம் தட்டி வைக்கவில்லைஅந்தந்த ஜாதியாரும் தங்கள்விவகாரங்களைப் பொருத்த மட்டில் தாங்களே ராஜா என்கிற பூரணதிருப்தியோடு இருந்திருக்கிறார்கள் என்றுதானே தெரிகிறதுஉசத்தி தாழ்த்திஅபிப்ராயங்கள் இருந்திருந்தால்தானாகவே பலவிதமான தாழ்வுமனப்பான்மைகள் (inferiority complex) உண்டாகித்தான் இருக்கும்”

ஜாதிப்ப்ரஷ்டத்தின் எக்ஸ்டென்ஷன் கொலைதானோ  அதுதான் சாதிகளைக் கட்டுக் கோப்பு குலையாமல் வைத்திருந்ததோ
எதையோ எழுத வந்துஎங்கோ முடிகிறது என்ன செய்ய காத்தவராயன்கதை ஏற்ற தாழ்வின்  கதையாகி விட்டது இதையே நான்  ஒன்ற்லிருந்துஒன்று என்று சொல்ல வந்தேன் 
 காதவராயன்  மதுரை வீரன்   போன்றோர்  நம்மக்களிடையே  காவல் தெய்வமாகக் கொண்டாடப்படுகின்றனர்  திருச்சியில்முக்கொம்பு அருகே வாத்தலை கிராமத்தில் காத்தவ்ராயனுக்காக  கோவில் உண்டு நான்சென்றதில்லை வானமங்கலம்   திருமங்கலம்  சிடம்பரம்போன்ற ஊர்களிலும் காத்தவராயனுக்காக  கோவில்கள் இருக்கிற்தாம் தகவல்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது     
   
16 comments:

 1. காத்தவராயன் படம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா என்று டி எம் எஸ் ஒருபாடல் வரும். அதுவும் கேட்டிருக்கிறேன். ஆனால் படம் பார்த்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. நான் சிறு வயதில் பார்த்தது ஆர்யமாலா கதையிலும் காத்தவராயன் வருவார்

   Delete
 2. நாகேஷும், மனோரமாவும் ஒரு படத்தில் பாடிய டூயட் பாடலில் மனோரமா பாடுவது போல், "காத்தவராயனை ஆரியமாலா காதலித்த மாதிரியா!" என்று வரும். அது தவிர்த்து இந்தக் கதையை நான் அதிகம் படித்ததில்லை. பகிர்வுக்கு நன்றி. படங்களும் பார்த்தது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. முத்துக் குளிக்க வாரீயளா பாடலைச்சொல்கிறீர்கள்

   Delete
 3. காத்தவராயன் அறிந்தேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. எனக்கு கதைகளின் பின்புலம் தெரிந்துகொள்வதில் நாட்டம்

   Delete
 4. எத்தனை எத்தனை கதைகள்...

  ReplyDelete
  Replies
  1. கற்பனைக ளும் பலதரப்பட்டவை

   Delete
 5. காத்தவராயன் சிவாஜி நடித்த படம். சேலம் ஓரியண்டல் தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்த நினைவு மறக்கவில்லை. அந்த தியேட்டரின் முன் பகுதியில் கிட்டத்தட்ட 60 அடி உயரத்தில் காத்தவராயன் வேடத்தில் சிவாஜியின் கட் அவுட் வைத்திருந்தார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொருவருக்கு இவ்வொரு நினைவு எனக்கு வேறுவிதமாக தெரிந்தது

   Delete
 6. கதைகளுக்கு பஞ்சமில்லை.

  ReplyDelete
  Replies
  1. கதைகளால் ஊட்டப்பட்டு வளர்ந்தவர்கள் நாம் ஆனால் வேறு வேறான தாக்கங்கள்

   Delete
 7. புராண இதிகாச கதைகளை நாம் கேள்வி கேட்காமல் கேட்டோம். ஆனால் தற்போது இந்தச் சூழல் மாறியுள்ளது. அறிவியல் கலந்த கேள்விகளின் மூலம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றார்கள்.

  ReplyDelete
 8. தற்போது உள்ள சூழலிலும் புராண இதிகாச கதைகள் குறித்து கேள்வி கேட்பதை பலரும் ரசிப்பதில்லை

  ReplyDelete
 9. கதைகள் இதுவரை அறிந்ததில்லை. காத்தவராயன் படமும் பார்த்ததில்லை. கதைகளுக்குப் பஞ்சமே இல்லையே. உலகம் முழுக்க இப்படியான கதைகள் அந்தந்த ஊருக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வருகிறதுதான்.

  பகிர்விற்கு மிக்க நன்றி சார்.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. காத்தவராயன் ஒரு சிறு தெய்வமாக வழிபடப்படுகிறான் என்றும் சொல்லி இருக்கிறேன்

   Delete