அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

நாட்டு நடப்பு

 


நாட்டு நடப்பு

அரசியல் என்றால் என்ன என்று சிறுவன் கேட்டான்.

அப்பாவும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார்.

நான் செலவுக்குப் பணம் ஈட்டி வருகிறேன் ஆகவே முதலாளி.

ஈட்டிய பணத்தை செலவு செய்யும் உன் தாய் அரசு

தாத்தா எல்லாவற்றையும் கவனிக்கிறார் யூனியன் எனலாம்

வீட்டு வேலைக்காரி தொழிலாளி என்று சொல்லலாம்

எல்லோரும் பாடுபடுவது உனக்காக, ஆக நீ பொதுஜனம்

உனக்கு அடுத்துப் பிறந்த குட்டிப் பாப்பா எதிர்காலம்

 

மகனே-இங்கு நடப்பதைப் புரிந்து கொண்டால் அரசியல்

என்ன என்று விளங்கும் ஓரளவு தெரிந்து கொள்வாய்.

புரிந்ததைக் கொஞ்சம் எனக்குக் கூறு என்று கேட்டார் தந்தை.

ஒரு இரவு அசைபோட அவகாசம் கேட்டான் தனையன்.

 

உறங்கச் சென்ற சிறுவன் தம்பியின் அழுகுரல் கேட்டு விழித்தான்.

ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் முடை நாற்றத்தில் மிதந்தான் தம்பி

செய்வதறியாது பெற்றோரின் படுக்கையற்க்குச் சென்றான் இவன்.

ஆழ்ந்த உறக்கத்தில் தாய், அருகே தந்தை இல்லை.

தாயை எழுப்ப முயன்று தோற்ற தனையன் வேலைக்காரி

இருக்குமிடம் சென்று பார்த்தால் தந்தையின் பிடிப்பில்

கட்டுண்டு கிடப்பவளை பலகணி வழியே ரசிக்கும் தாத்தா.

இவன் வந்ததே தெரியாமல் அவரவர் பணியில் அவரவர்.

ஏதும் செய்ய இயலாமல் இவனும் மீண்டும் உறங்கப் போனான்.

 

மறுநாள் மகனிடம் தந்தை கேட்டார். அரசியல் பற்றி அறிந்தது கூற.

அறிந்தது புரிந்தது என்று மகனும் விளக்க முற்பட்டான்.

“முதலாளி தொழிலாளியைக் கசக்குகிறான். யூனியன் கண்டும்

காணாமல் இருக்கிறது அரசு உறக்கத்தில் இருக்கிறது.

பொதுஜனம் புறக்கணிக்கப் படுகிறது. எதிர்காலமோ

முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

 




 

                  

  

 

 




 

                  

 

 




 

 

    

  .

 

  

 

 

 

 

 

 

    

  .

 

  

 

 

 


செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பிரதமர் சொல்ல வேண்டிய விளக்கங்கள் கேட்டு



                                      பிரதமர்    சொல்ல வேண்டிய விளக்கங்கள் கேட்டு
                                    -------------------------------------------------------------------------------------


 அன்புமிகு பிரதமர் மோடிக்கு ஒரு சாதாரணனின்  கருத்துகள் செவிக்கு எட்டாது என்றாலும் தெரிவிக்க வேண்டிய ஒரு நப்பாசையால் எழுதுவது. முதலில் என் வாழ்த்துகள் யார் எப்படிப் போனாலும் என்ன நடந்தாலும்   நினைத்ததை முடிக்கும்   பெரும்பான்மை இருப்பதால் நீங்கள் செய்திருக்கும் இமாலய சாதனை பாராட்டப்பட வேண்டியதே 56 அங்குல மார்பு என்று பெருமைப்படும்  நீங்கள் அதைத் தட்டிக்கொள்ளலாம் யார் கேட்கமுடியும்   ஒருவரைப் பற்றிய  ஒரு பெர்செப்ஷனைச் சார்ந்தே கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.   60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிசெய்தவர்கள் செய்யாத எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டதாக 56 அங்குல மார்பை தட்டிக்கொள்கிறீர்கள் அப்படி  நீங்கள்செய்து முடித்ததுதான்   என்ன குஜராத்தில் ஒர் பிரம்மாண்ட சிலை   800 கோடி ரூபாய்க்கும் மேல் செலவுசெய்து நிறுவி இருக்கிறீர்கள்  அதை ஒரு ஸ்டாட்யூ  ஆஃப் யுனிடி என்கிறீர்கள்  எனக்கென்ன வோ மக்களைப் பிரிக்க என்றே எழுப்பப்பட்டது என்று தோன்றுகிறது
 வாழ்க்கைதரம் உயர்த்த் நவீனகோவில்களாக தொழிற்சாலைகளையும்    அணைக்கட்டுகளையும்  நிறுவி இருக்காவிட்டால் நாமின்னும்  மதங்களிலும்  வேற்றுமைகளிலும் குதிரை ஓட்டிக் கொண்டிருப்போம்அவற்றின் பட்டியல் சில இதோ
  சிந்திரி ( உரத்தொழிற்சாலை.)
பிம்ப்ரி (பெனிசிலின்).
சித்தரஞ்சன் ( லோகோமோடிவ் )
பெரம்பூர் ( கோச் ஃபாக்டரி )
பிலாய்  ( ஸ்டீல் )
அங்க்லேஷ்வர் ( பெட்ரோலியம் )
நரோரா  ( ஹெவி வாட்டர் )
தாராப்போர் ( அணு நிலையம் )

பல்வேறு உபயோகத்துக்கான அணைக்கட்டுகள்

பக்ரா நங்கல், ஹீராகுத் , DVC அணைகள்,கோசி, துங்கபத்ரா, கேயல்கரோ, சர்தார் சரோவர்

தவிர நிலத்தடி கனிமங்களுக்காக

ஜரியா ( கரி ),ஹஜாரிபாக் (மைக்கா ),சிங்பும், பைலாடிலா, கட்சிரொலி ( இரும்பு கனிமம் ) நெய்வேலி ( பழுப்பு நிலக்கரி ), கியோஞ்சார் ( மாங்கனீஸ் ) கோரபுட் ,கந்தமர்தன் ( பாக்சைட் )
 ஏன்  நவரத்ட்னா கம்பனி என்று புகழப்படும்  பி எச் இ எல் நிறுவனமுஎன்னை போன்றபலருக்கு  வேலை வாய்ப்பையும்  திருப்தியையும் தந்திருக்கிறது   நவீனசிற்பி ஜவஹர்லால்  மத நம்பிக்கை இல்லாதவரென்றாலும் ,மத துவேஷி அல்ல  அணு ஆராய்ச்சிக்கு வித்திட்டதும்  அறுபதுஆண்டு கால ஆட்சியின் பயனே
நீங்கள் செய்ததைக் கூறுவதை விட்டு எதிர்க் கட்சிகள்செய்தது என்ன என்று கேகிற்ர்களே அவர்கள் கட்டிய அஸ்திவாரத்தின் மேல் எழுந்ததுதானே நீங்கள் இப்போது உரிமை கொண்டாடும்செயல்கள் எல்லாம் சாதாரண மனிதனின் தேவைகள் உணரப்பட்டன அப்போது இப்போதோ பண்க்காரர்களின்  தேவைக்கே முன்னுரிமை    

 மோடி ஜி அவர்களே ஹிட்லரின் ஆட்சியில் கோயபல்ஸ் என்பவரிருந்தாராம்  அவர் சொல்லும் பொய்களை  அவரே நம்பத் தொடங்கியதாகவும் படித்திருக்கிறேன்  நீங்களும் அவர் போல் ஆகக் கூடாது என்பதே என்போன்றோரின் கவலை.   நீங்கள் செய்தவற்றைப் பட்டியலிடுங்கள் நீங்கள்தான் மக்களிடம் மன்கி பாத் என்றுஒரு வழிப் பேச்சாளராயிற்றே பத்திரிககையாளர்களை பார்த்து பேச மாட்டீர்கள் சில ஊடகங்களை  ஆதரித்து நீங்கள்சொல்வதையே அனு கணமும்ஒலி பரப்பி மக்களை திசை  திருப்பிவிடுகிறீர்களே ஊடகங்கள்பெரும்பாலும் பணக்கார்களதாகவே  இருக்கிறது    நான் முன்பெல்லாம்நமக்கு ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரி தேவை என்று எழுதி இருக்கிறேன்   நீங்கள் ஒரு சர்வாதிகாரி போலவே செயல் படுகிறீர்கள்  ஆனால் பெனெவொலென் சி கிஞ்சித்தும்  இல்லை எங்கெங்கே  திருப்தி இல்லாத எதிர் கட்சி அரசியல் வாதிகள் இருக்கிறர்களோ  அவர்களை ஆப்பரேஷன்  லோட்டஸ்  என்று சேர்த்துக் கொள்கிறீர்கள் சுதந்திரத்துக்குப் பின்  பிறந்தவர் நீங்கள்உங்கள் பெர்செப்ஷனே வேறு.  எப்படியாவது பதவியில் இருக்கவேண்டும்  என்பதே உங்கள குறி  உங்களுக்கு ஆதரவு தருபவர்கள் பரப்பி விடும்  ஃபேக் நியூஸ்  அப்பப்பா ஊடகங்களைக் கைக்குள்போட்டுக் கொள்வதில் கில்லாடிதான்  நீங்கள்  ஒருவரைப்பற்றிய கணிப்பு சில பெர்செப்ஷ்ன்களால்  உருவாகிறது பாவம் நம் மக்கள்   ஏதோ நல்லது விளைகிறது என்று நம்புகிறார்கள்ஏன்  என்றால் எல்லா விவரங்களும்  தெரியாதவர்கள்  என்று  சொல்வதைவிடசொல்வதை   மறந்துவிடுகிறார்கள் என்பதே சரி  இந்த மறதிதான்   நமக்கான சாபம்  நான் இன்னதுசெய்கிறேன் என்றுசொல்வது வேறு நான் தான்  செய்கிறேன்  என்றுசொல்வது வேறு இப்போது வழக்கத்திலிருக்கும் ஆதார் கார்ட்   ஜீஎஸ்டி  போன்றவை முந்தைய அரசின் எண்ணங்களே  அப்போதுஅவற்றை  எதிர்த்து குஜராத்தில்எதிர்ப்பு தெரிவித்தவரே நீங்கள்தான்  இன்று அவற்றுக்கு ஓனர் ஷிப் கொண்டாடுவது  சரியா   ரைட் டு  இன்ஃபர்மேஷன் சரியாக  இயக்கினால் பல ஊழல் கள்   காணமல் போகும்  அல்லது வெளிச்சத்துக்கு வரும்/  ஊழல் நம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது அதைமுற்றிலும் ஒழிக்கமுடியாதுஎன்பது சாதாரணனின் எண்ணம்   ஊழல் மேல் மட்டத்தில் இருக்கக் கூடாது  அதை ஒழிக்க என்றே 2014 லேயே   ஏற்படுத்தப்பட்டு இருந்த லோக் பால் என்னும் அமைப்பை  நிறுவ ஐந்தாண்டுகளுக்கும் மேலாயிற்று  அரசின்  அந்திம ஆயுளில் எதையும் செய்ய இயலாது என்னும் தைரியம்தானே  இந்தியர்களை மத வாரியாகப் பிரித்து அதில் குளிர்காய்தல் சரியா மோடிஜி வோட் பாங்க்  என்று கருதப்படும்  வட மாநிலங்களைத் தவிர மற்ற பகுதிகளுக்குள்ளும்  ஊடுருவ வழி தேடல் தவறில்லை  ஆனால் தெற்கு புயலாலும் வெள்ளத்திலும்  அவதிப்பட்ட போது ஆறுதலாக அவர்களைக்சந்திக்க முயற்சியாவது செய்தீர்களா சின்னச் சின்ன செயல்கள் மக்களிடம் உங்கள்செல்வாக்கை பலப்படுத்தும்  மக்களை பிரித்தாளுவதை விட அவர்களிடம் நல்லெண்ணம்   வளரச்  செய்ய வேண்டும் எதிரிக்கும்  உங்களை நேசிக்கக்கற்றுக் கொடுத்தல் அவசியம் 40 –பேருக்கும் மேல் உயிர் பலி கொண்ட புல்வாமா நிகழ்சியை தடுத்திருக்கலாமோ நெடுஞ்சாலையில்  போய் கொண்டிருந்த வாகனங்கள் மீது எங்கிருந்து எப்படி தாக்குதல் நடத்த முடியும் என்று  கேட்கக் கூடாது கேட்டால் நம் ஜவான்களை குறைகூறுவதாகும்  என்று கூறலாகுமா முதல் முறை   சர்ஜிகல் ஸ்டிரைக்  குக்கு  நீங்களே நேரம் காலம் குறித்ததாகப் படித்தேன் அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது  நம் ப்ரைம்  மினிஸ்டரே  எல்லாம் செய்கிறாரே நம் படையும் அவருக்குக் கட்டுப்பட்டதா என்று      நாட்டின்  முப்படைக்கு தலைவர் என்று ஜானாதிபதியே என்று  இருந்தாலும் படைநடத்துவது நம்  படைத்தளபதிகள்தானே இதுவரை மூன்று ஸ்டிரைக்குகள்  நடந்தது என்கிறார்களே அது மக்களுக்குட்தெரியக் கூடாத ரகசியமா  நம் ஊடகங்களும்  இது குறித்து கேட்டதாகத் தெரியவில்லை ஒரு வேளை  இதெல்லாம் அரசாங்க  ரகசியங்களா 
கடைசியாகசாதாரண மனிதனுக்கு யார் ஆண்டாலும் பெரிதாகப் பாதிப்பு இல்லை அவனுக்கு என்று ஒரு பெர்செப்ஷன் இல்லாமலா போகும் நிறைகளை எழுத முடியவில்லை ஏன் எனறால்  அவை என்ன என்று தேட வேண்டும்  குறைகளே மலைபோல் தெரிகிறதுஇன்னும் ஐந்தாண்டுகள் பதவியிலிருக்க வருவீர்கள் என்னும் நம்பிக்கையில் இருக்கிறீர்கள்நான் அதை குலைக்க வரவில்லை  ஏன் என்றால் நாமெதற்கு தகுதியோ அதுவே நமக்கு வாய்க்கும் என்று நம்புபவன்  நான் பெஸ்ட் ஆஃப் லக் மோடிஜி

வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது 
தேர்தல் வருகிறது நாம் நம்கடமை ஆற்ற வேண்டும் நமக்கு வாய்த்ததுதான் கிடைக்கும் என்றாலும் வாக்கு அளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது எவ்வளவுதான் நம்மால் கணிக்க முடிந்தாலும் தனி மனிதர் பற்றி நமக்கு தெரிவது மிகச் சொற்பமே ஆனால் கட்சிகளின்  கருத்து பற்றி நம்மால் ஓரளவு சொல்ல முடியும்  நமக்கு தோதான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுக்கே வாக்களித்தால் நலமாயிருக்கும்