செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

நாட்டு நடப்பு

 


நாட்டு நடப்பு

அரசியல் என்றால் என்ன என்று சிறுவன் கேட்டான்.

அப்பாவும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார்.

நான் செலவுக்குப் பணம் ஈட்டி வருகிறேன் ஆகவே முதலாளி.

ஈட்டிய பணத்தை செலவு செய்யும் உன் தாய் அரசு

தாத்தா எல்லாவற்றையும் கவனிக்கிறார் யூனியன் எனலாம்

வீட்டு வேலைக்காரி தொழிலாளி என்று சொல்லலாம்

எல்லோரும் பாடுபடுவது உனக்காக, ஆக நீ பொதுஜனம்

உனக்கு அடுத்துப் பிறந்த குட்டிப் பாப்பா எதிர்காலம்

 

மகனே-இங்கு நடப்பதைப் புரிந்து கொண்டால் அரசியல்

என்ன என்று விளங்கும் ஓரளவு தெரிந்து கொள்வாய்.

புரிந்ததைக் கொஞ்சம் எனக்குக் கூறு என்று கேட்டார் தந்தை.

ஒரு இரவு அசைபோட அவகாசம் கேட்டான் தனையன்.

 

உறங்கச் சென்ற சிறுவன் தம்பியின் அழுகுரல் கேட்டு விழித்தான்.

ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் முடை நாற்றத்தில் மிதந்தான் தம்பி

செய்வதறியாது பெற்றோரின் படுக்கையற்க்குச் சென்றான் இவன்.

ஆழ்ந்த உறக்கத்தில் தாய், அருகே தந்தை இல்லை.

தாயை எழுப்ப முயன்று தோற்ற தனையன் வேலைக்காரி

இருக்குமிடம் சென்று பார்த்தால் தந்தையின் பிடிப்பில்

கட்டுண்டு கிடப்பவளை பலகணி வழியே ரசிக்கும் தாத்தா.

இவன் வந்ததே தெரியாமல் அவரவர் பணியில் அவரவர்.

ஏதும் செய்ய இயலாமல் இவனும் மீண்டும் உறங்கப் போனான்.

 

மறுநாள் மகனிடம் தந்தை கேட்டார். அரசியல் பற்றி அறிந்தது கூற.

அறிந்தது புரிந்தது என்று மகனும் விளக்க முற்பட்டான்.

“முதலாளி தொழிலாளியைக் கசக்குகிறான். யூனியன் கண்டும்

காணாமல் இருக்கிறது அரசு உறக்கத்தில் இருக்கிறது.

பொதுஜனம் புறக்கணிக்கப் படுகிறது. எதிர்காலமோ

முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

 




 

                  

  

 

 




 

                  

 

 




 

 

    

  .

 

  

 

 

 

 

 

 

    

  .

 

  

 

 

 


13 கருத்துகள்:

  1. அட்டகாசம்! பின்னி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரிபின்னூட்டம் இப்போதெல்லாம் வருவதில்லை மகிழ்ச்சி

      நீக்கு
  2. பொருத்தமான இணைப்பு ஐயா ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. தாத்தாவுக்கு ஜாலி! ரொம்ப சுத்தமான விளக்கம் !

    பதிலளிநீக்கு