Thursday, February 4, 2021

நடை எனும் பாவ்லாவின் போது

 

என்ன எழுதுவது என்று  யோசிக்கும்பொது சிலர்  வெகு சர்ளமாக  எழுதுவது ஆச்சரியமளிக்கிறது எங்கள்பிளாகில்வியாழனன்று எழுதும்  ஸ்ரீராம் என்னைக் கவர்ந்தவர்

   வெகு சாதாரணமாகப்படுவது அவர் கை  வண்ணத்தில்  பதிவாக பரிமளிக்கும்

நானும்தான்எழுதுகிறேனே  என்பதிவு ஒன்றுக்கு  பின்னூட்டம் எழுதிய பசி பரம  சிவம்  நட நட  என்பதே சிறந்ததுஎன்பதுபொல் எழுதி இருந்தார்  நானும்  அதை வேத வாக்காகஎண்ணி நடக்கிறேன் நடக்கிறேன்   என்பதைவிடநடப்பது போல் பாவ்லா செய்கிறேன் என்னால் முடிவதில்லை ஒவ்வொரு முறையும் தட்டுதடுமாறி குச்சியின் உதவியோடு  விழாமல் நடப்பதேபெரும்பாடு  ஒவ்வொரு நாளும் நான்  முன்பு எழுதி இருந்ததே நினைவுக்கு வரும்  செய்யாத குற்றதுக்கு  தண்டனை அனுபவிக்கிறேன்

காலையில்நடக்க  முயற்சிசெய்யும் போது விட்டின் எதிர் சாரியில் வேலைக்குபோக இருக்கும்  பெண்களை  நோட்டம் இடுவேன் எத்தனை எத்தனை விதமாகப்  பெண்கள்ஏன்   ஆண்களின் மேல்கவனம்செல்வதில்லைopposite poles atractஆக இருக்கலாம் அவர்களில்   பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்

பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்

.. தலை தூக்கிக் கண்டாலேபயம் இல்லை  நான்  என்  வீட்டின்  காம்பௌண்ட் உள்ளே தானே இருக்,கிறேன்

அவர்களில் என்னை கவர்வது என்ன  பெண்களுக்கு  அழகு சேர்ப்பது என்ன அழகு என்பது  புற அழகல்ல அறிவு சார்ந்ததே  என்று என்னை ஒரு பிடி ப்டிக்கவேண்டாம்எங்கள் ஊரில் பெண்கள்  என்றாலேயே அவர்களதுஅழகு மார்பிலும்   முலையிலும்தான்  என்பார்கள்எனக்கென்னவோ பெண்கள் அழகைக்காட்ட, கவர்ச்சியைக்காட்ட    உதவுவதுஅவர்கள் கூந்தல்தான்இருக்கும் முடியை எத்தனை விதமாக அணிகிறார்கள்பெரும்பாலும் முடியை வளர விட மாட்டார்கள் மெயின் டெயின் செய்வது சிரமமாம்  காலையில்நடை பயில பாவ்லா செய்யும்போது தினமும்  ஒரு பெண் தலைக்கான ஹெல்மெட் கையில் பிடித்து காத்திருப்பாள்ஒரு பெண் ஸ்கூட்டரில்  வருவாள்   அவள் வந்தவுடன்  வண்டியை இவளிடம்   கொடுத்து விட்டு அவள் பின்  சீட்டில் அமர இவள் வண்டி ஓட்டிச் செல்வாள் ஏன்  என்று அறிய முடியவில்லைஅவளிட ம்  சென்று  கேட்கவாமுடியும் பெண்களை பார்ப்பதில் என்  நடை சிரமம்  குறைகிறதோ என்னவோ ஆனால் இட்ட அடி நோக  எடுத்த அடி கொப்பளிக்க  விட்டில் சுமந்து மருங்கு அசைய  என்பதெல்லாம் இலக்கிய பாடல்களில் மட்டும்தான்  போல  இருக்கிறது

 

 

 

 


23 comments:

 1. ஆகா.. காலையிலேயே இலக்கியம்...

  ReplyDelete
  Replies
  1. இலக்கியம் வருவதில்லை சில வைரிகமட்டுமே நினைவில்

   Delete
 2. அன்பின் ஸ்ரீராம் அவர்களைப் பற்றி ஐயா சொல்லியிருப்பது மிகவும் சரி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணாச்சி...

   Delete
  2. துரை பாராட்டுவதை பராட்டத்தானே வேண்டும்

   Delete
  3. ஸ்ரீ நீங்கள்முந்திக்கொண்டு விட்டீர்கள்

   Delete
 3. //செய்யாத குற்றத்துக்குத் தண்டனை// - எல்லோரையும் பயமுறுத்துகிறீர்களே

  ஸ்ரீராம் நல்லா எழுதுவார். சிலருக்குத்தான் அது கைவந்த கலை.

  பெண்களைப் பற்றிய அவதானிப்பு அருமைதான்.

  ReplyDelete
  Replies
  1. நெல்லை வய தாகும்போது நன் கூறுவது உண்மை என்று புரியு ம்பெண்களின் குணாதிசய் அங்கள் பற்றி நிறையவே எழுதி இருக்கிறேன்

   Delete
 4. என்னைப்பற்றிச் சொல்லி இருப்பதுங்கால் பெருந்தன்மையைக் காட்டுகிறது.  நீங்கள் அழகாக கவி புனைகிறீர்கள்.  எல்லாவற்றையும் பற்றி யோசிக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. இருப்பதுங்கால்

   * இருப்பது உங்கள் 

   Delete
  2. ஸ்ரீராம் நன்றி சொல்வதிலும் நீங்கள் முந்தியா

   Delete
  3. உள்ளபடி கூறு வேன்கவி புனைவதில் ஒரு சிரமம் உள்ளது மனதில் ஸ்ட்ராங்காக தோன்றா விட்டால் கவிதை வராது

   Delete
 5. செய்யாத குற்றத்துக்கு என்று நான் நினைப்பதில்லை.  அறிந்தும் அறியாமலும் எவ்வளவோ செய்கிறோம்.  அதற்குதான் பெரும்பாலும் பதில் பலன் என்று நம்புபவன் நான்.

  ReplyDelete
  Replies
  1. என் எழுத்தில் நான் பெருமை கொள்வது அதில் இருக்கும் உண்மைதான் அர்த்தமுள்ள நம்பிக்கையா

   Delete
 6. நடப்பது போல பாவ்லா செய்தாலும் உடலின் அசைவுகளே பலமளிக்கும்.  முடிந்த அளவு சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

  ReplyDelete
 7. ஓ...! கண்ணுக்கு தெரியும் ஸ்ரீஜி வாழ்க நலம்...!

  ReplyDelete
 8. இந்த வயதில் ஆன்மிக எண்ணங்களே தோன்றும் . உங்கள் சிந்தனைகள் நீங்கள் மனத்தால் இளைஞர் என்பதைத் தெரிவிக்கின்றன. பாராட்டு .

  ReplyDelete
  Replies
  1. ஆன்மீக போர்வை எல்லாம் எனக்குக் கிடையாது மனசில் பட்டதை எழுதுவேன்

   Delete
 9. மனதில் பட்டதை எழுதும் துணிவு சிலருக்கே உண்டு ஐயா.

  எனக்கு கொஞ்சம் கஷ்டம்தான்...

  ReplyDelete
 10. அதுவே என் பலமும் பலவீனமும்

  ReplyDelete
 11. பட்ஜெட் என்பது வரவு செலவு திட்டம். இதில் மூன்று வருடத்திய கணக்கு காட்டப்படும்.
   
  முந்தைய வருடத்தின் actuals.

  நடப்பு வருடத்தின் Revised estimates 

  வரும் ஆண்டின் (April 1 முதல்) உத்தேச வருவாய் செலவினங்கள். 
  இது ஒரு வழிகாட்டி மட்டுமே. 

  சரியான செலவுகள் income and expenditure என்ற முறையில் செய்யப்படும். 

  இந்த செலவுகள் consolidated fund of India என்ற அக்கவுண்டில் இருந்து செய்யப்படும். 

  இதை தான் vote on account குறிப்பிடுவர். 

  இன்னும் நிறைய if but உண்டு. 

  தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் படஜெட் என்பது இவ்வ்ளவு வருவாயை எதிர்பார்க்கிறோம். அதை இன்ன வழிகளில் செலவு செய்வோம் என்ற அறிக்கை மட்டுமே. அவ்வாறு நடக்க கட்டாயமில்லை. 
  வருவாய் குறையும்போது எதற்கு முன்னுரிமை செலவு என்பது போன்ற விவரங்கள் ஆட்சியாளர்கள் கையில். உதாரணமாக மாணவர் படிப்பு உதவித்தொகைக்கு நிதி ஒதுக்கப்பட்டாலும் அந்த செலவை நிறுத்தி பாராளுமன்ற கட்டிடம் கட்ட செலவு செய்யலாம். இரண்டுமே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டவை தாம். 
  விவரமாக எழுதினால் படிப்பவர்களுக்கு மூளை குழம்பிவிடும். 
  Jayakumar

  ReplyDelete