செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

பொய் சொல்லாதே



 பொய்  சொன்னால் கண்டுபிடிக்கும் ஒரு ரோபோவை அப்பா வாங்கி வந்தார். அது பொய் சொன்னால் கன்னத்தில் அடிக்கும். அதை சோதனை செய்ய அன்றிரவு உணவு மேசையில் தன் மகனிடம் அவன் என்ன செய்தான் என்று கேட்டார். மகன் தன் வீட்டுப் பாடங்களைச் செய்ததாகக் கூறினான். ரோபோ அவன் கன்னத்தில் அடித்தது. மகன்சரி, சரி என் நண்பனுடன் அவன் வீட்டில் படம் பார்த்தேன்” : என்றான். அப்பாஎன்ன படம் பார்த்தாய்.?

மகன்,” கார்ட்டூன் படம் பார்த்தேன்”  ரோபோ அவன் கன்னத்தில் அடித்தது.

மகன்,” சரி, சரி, நாங்கள் பலான படம் பார்த்தோம்” என்றான்.

அப்பா, “ உன் வயதில் எனக்கு பலான படங்கள் இருப்பதே தெரியாதுஎன்றார். ரோபோ அவர் கன்னத்தில் அடித்தது.

அம்மா, சிரித்துக் கொண்டேஎன்னதான் இருந்தாலும் அவன் உங்கள் மகன்தானேஎன்றாள்.

ரோபோ அவள் கன்னத்தில் அடித்தது. ! 

ஒருடிவி தொடரில்  கேட்டது 

பாம்பு என்று வ்ரும் இடத்தில் எல்லாம்  பாம்பு என்பத ற்கு பதில் பம்பு  என்று எழுதி இருக்கிற்தே  ஓஒ அதுவா பாம்புக்கு கால் இல்லை அல்லவா அதனால்தான்    


 

11 கருத்துகள்:

  1. இப்போதுதான் முதல்முறையாகப் படிக்கிறேன் என்று சொல்லி ரோபோவிடம் அடிவாங்க விருப்பமில்லை!!  மறுபடியும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இதைத்தான் (ரோபோ வாங்கியது) சொந்தக்காசில் சூன்யம் வைப்பது என்று சொன்னார்களோ? 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. இந்தக்கதையைப் படித்தவுடன் வேலைக்காரனுக்கு பிரசவ வலி வந்த கதை நினைவுக்கு வந்தது. கதை சுருக்கம். 

    பிரசவ வலி என்பது பெண்களுக்கு மட்டும் போதாது. அப்பெண்களின் கணவன்களுக்கும் உண்டாக வேண்டும், அப்போதுதான் அவர்கள் மனைவி படும் துன்பத்தை அறிவார்கள் என்று பெண்கள் கடவுளிடம் வேண்டினர். கடவுளும் ஆகட்டும் என்று அருளினார். 

    ஒரு பணக்காரன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பணக்காரன் வேலைக்காரனை வண்டி கட்ட சொன்னான். வண்டி பாதி வழி சென்றபோது வேலைக்காரன் வலியால் துடித்தான். 

    அதைப் பார்த்த மனைவி கடவுளிடம் கொடுத்த வரத்தை திரும்பப் பெற வேண்டினாள். கடவுளும் அப்படியே ஆகட்டும் என்று அருளினார்.  

    பதிலளிநீக்கு
  4. இது சிறிது காலம் காணொளியாக வாட்சப்பில் உலாவியது ஐயா நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு