Friday, February 19, 2021

கதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

 யாராவது எப்பொழுதாவது ‘சும்மா; இருக்கிறார்களா.? சும்மா இருப்பது என்பதே இல்லை. ஏதும் செய்யாதபோதும் சிந்தனைகளின் ஓட்டம் இருந்து கொண்டுதானிருக்கிறது.
 SCOUTS  பயிற்சியின் போது ஒரு விளையாட்டு

( அது விளையாட்டா. ?) நடக்கும். சுமார் இருபது முப்பது பேர் வரிசையாகவோ  வட்டமாகவோ , ஒருவர் பேசுவது மற்றவர் கேட்காத தூரத்தில் அமர்த்தப் படுவார்கள். முதலில் இருப்பவரிடம் ஒரு செய்தி சொல்லப் படும். அதை அவர் அடுத்தவருக்குச் சொல்ல வேண்டும். இப்படி சொல்லப் பட்ட செய்தி கடைசியாக கேட்பவரிடமிருந்து முதலில் ஆரம்பித்தவருக்கு வரும்போது செய்தி மாறி இருக்கும். செவி மூலம் பரவும் செய்திகளுக்குக் காதும் கண்ணும் சேர்க்கப் பட்டிருக்கும். இதை யோசிக்கும்போது, எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. முன் காலத்தில் எழுதும் முறையும் அதைப் பாதுகாக்கும் முறையும் இல்லாதிருந்த காலத்தில் செவி வழியாகவே செய்திகள் சொல்லப் பட்டிருக்க வேண்டும். ஏன், நம்முடைய வேதங்களும் இம்முறையில்தான் தலைமுறை தலைமுறையாக சொல்லப் பட்டு வந்திருக்க வேண்டும். அவை ஆதியில் சொல்லியபடியே நமக்குக் கிடைத்திருக்கிறதா.. அவற்றின் நம்பகத் தன்மை எவ்வளவு. இதனால் தானோ என்னவோ வடக்கில் கார்த்திகேயன் எனப் படும் முருகன், பிரம்மசாரி.... விநாயகருக்கு இரண்டு மனைவிகள். . தெற்கே நேர் எதிரான கதை. ..!, சாஸ்திரம் என்கிறார்களே , அது குறித்த புத்தகங்கள் ஏதாவது உண்டா, .மனு சாஸ்திரமும் அர்த்த சாஸ்திரமும் கேள்விப்பட்டது. படித்ததில்லை. அவையும் செவி வழிச் செய்திகள்தானா. ? இன்று நிலவும் பேதங்களுக்கு அந்த மனுநீதிதான் முக்கிய காரணமோ என்று தோன்றுகிறது.  

ஆனால் இப்போதெல்லாம் எந்த செய்தியானாலும் உம்.. என்பதற்குள் சொல்லியபடியே எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் போய்ச் சேரும். தவறான செய்திகள் போய்ச் சேருவதால் மக்கள் பயந்து கூட்டங் கூட்டமாக அடித்துப் பிடித்து வெளியேறுகிறார்கள்.

 வலையில் எழுதுவது பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. எழுதுபவனின் எண்ணங்களைக் கடத்த எழுதும்போது, எண்ணங்கள் கடத்தப் படுகிறதோ இல்லையோ, எழுதுவது சரியென்று எண்ணாதவர் யாருமில்லை. மாற்றுக் கருத்துக்களை சொல்பவர் , முதலில் ஏதோ தவறு செய்வதுபோல்  எண்ண வேண்டுமா. “ நீங்கள் அப்படி நினைத்தால் நான் இப்படி நினைக்கிறேன் என்று சொல்வதில் என்ன தயக்கம். இருந்தால்தானே எந்தவிதமான எண்ணங்கள் நிலவுகின்றன என்பது தெரியும். புகழாரம் இல்லாவிட்டால் இகழாமல் கருத்து சொல்லப் பட வேண்டும் என்பது என் எண்ணம். நூறு பேர் படித்தால் மூன்றோ நான்கோபேர் கருத்திடுகிறார்கள். புகழ்ந்துதான் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களே அதிகம். செய்தியில் உடன்பாடு இல்லை என்றால் ஏதும் கூறாமல் இருப்பது உத்தமம் என்று நினைக்கிறார்கள் போலும். அப்படிப் பார்க்கும்போது எழுதுவதில் உடன்பாடு அடுத்தவருக்கு இல்லை என்றே கொள்ள வேண்டுமா. ?

 

சில விஷயங்கள் விவாதிக்கப் படும்போது கருத்துக்கள் வெளிப்பட்டால்தான் விவாதம் முற்றுப் பெறும். அதாவது எழுதுவது முகம்நோக்காத க்ரூப் ஸ்டடி. !பங்கேற்றல் அவசியம். 

                      சரணாகதி- ஒரு கதை.
                      -----------------------                        

உங்களுக்கு பூனைக்குட்டி, குரங்குக்குட்டி கதை தெரியுமா. ? பூனைக்குட்டி எல்லாப் பொறுப்பும் தன் தாய்ப் பூனையிடம் விட்டு விடும். குட்டி வளர்ந்து பெரிதாகும்வரை பூனை தன் குட்டியை வாயினால் கவ்விக்கொண்டு பாதுகாக்கும். ஆனால் குரங்குக் குட்டி தன் தாயை அழுத்திப் பிடித்துக் கொண்டு அதன் அரவணைப்பிலேயே வளரும் பூனைக் குட்டியைப் போல் மனிதனும் தன்னை ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்து விட வேண்டும் என்பார்கள். ஆனால் மனிதனுக்கு கண்காண முடியாத தெய்வத்திடம் தன்னை அர்ப்பணிப்பதில் அநேக சங்கடங்கள் உண்டு, அவன் தன்னை  தன் தாய் காப்பாற்றும் என்று நம்பி இறுகிப் பற்றிக் கொள்ளும் குரங்குக் குட்டி போல் ஆண்டவன் நம்பிக்கையைப் பற்றிக் கொள்கிறான். , இதையே சற்று வேறு விதமாகக் கூறினால். ---தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு போகும் சிறுவன் கீழே விழக் கூடும். ஆனால் தந்தையே அவன் கையை பற்றிக்கொண்டு போனால் அவன் விழமாட்டான். தன்னம்பிக்கைக்கும் ஆண்டவனைச் சார்ந்திருப்பதற்கும்  உள்ள வித்தியாசம் இதுதான். 

  பாட்டியும் முட்டைத் தலையும்

.” பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடு” என்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ ப்ரஜாவாணி “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி ” என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்களையா “ என்று கேட்டேன்.

 ” படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே

நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.” என்றேன்.

” சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். 

“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம் என்கிறார்கள். 

மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.” பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.

” பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?

 சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.

எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். 

 இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...

“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி...

. அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே.

  பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லது என்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே உனக்கு...!

  “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை நீங்கள் மேலே படித்தது.) .

   


  

                      
                   

  
                              


                              


 


 

“  

“ 

 

(   

 

 


11 comments:

 1. SCOUTS  பயிற்சி சுவாரஸ்யம்.  நடைமுறையில் நாமும் முயற்சிக்கலாம் என்று தோன்றியது.

  ReplyDelete
  Replies
  1. நெருப்பு சுடும் என்பதை முயற்சி செய்து பார்ப்பதுபொல் இருக்கும்

   Delete
 2. +2 ஹாஸ்டலில் ஒரு விழாவில் (ஹாஸ்டல் பசங்களுக்கு மட்டும்) மேடையில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். ஹாஸ்டல் வார்டன், எங்களிடம், நான் இப்போது யானையைக் குளிப்பாட்டுவதைச் செய்து காண்பிக்கிறேன் என்று நடித்துக் காண்பித்தார். ஒவ்வொரு பகுதியைச் சுத்தம் செய்து குளிப்பாட்டுவதை. இதில் பங்கெடுத்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தனி அறையில் வெளியே இருந்தார்கள். அதில் ஒருவனைக் கூப்பிட்டு இவர் என்ன என்று சொல்லிச் செய்து காண்பித்தார். அவன், அடுத்து வருபவனிடம் என்ன என்று சொல்லாமல் சொல்லித்தரணும். பிறகு அந்த இன்னொருவன் அடுத்தவனைக் கூப்பிட்டு செய்துகாண்பிக்கணும். ஒவ்வொருவரும் செய்தது விநோதமாக இருந்தது. கடைசியில் பத்தாவதாக வந்தவனிடம், நீ என்ன செய்தாய் எனக் கேட்டால் அவன் என்னவோ சொல்றான். How messages are distarted என்பதற்கான பாடம் அது.

  வேதம், ப்ரபந்தங்களில் பாட பேதம் உண்டு. ஆனால் ஓராண்வழியில் சொல்லித்தரப்பட்டுச் சரிபார்க்கப்படுவதால் தவறுகள் மிக்க் குறைவு என்பது என் எண்ணம்.

  மனுதர்மம் அந்தக் காலத்தைய சட்டம். அதில் இப்போது விமர்சிக்க எதுவுமில்லை. நாம் தமிழர்கள் செய்த பானையில் வயதானவரை எங்கேயோ கண்காணாத இடத்தில் முதுமக்கள் தாழி என்று செய்த நடைமுறை தவறு என்று இப்போ சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. இன்றைக்கும் அவை கோட் செய்யப்படுகின்றனவெ வேதம், ப்ரபந்தங்களில் பாட பேதம் உண்டு. ஆனால் ஓராண்வழியில் சொல்லித்தரப்பட்டுச் சரிபார்க்கப்படுவதால் தவறுகள் மிக்க் குறைவு என்பது என் எண்ணம்.ஓராண்வழியில் புரியவில்லை

   Delete
  2. குரு, அவருடைய சிஷ்யன் என்று சொல்லித்தரப்படுவது. எல்லோருக்கும் சொல்லித்தரப்படுவது இல்லை. இது பிற்காலத்தில் (ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு) நிறைய சிஷ்யர்களைச் சேர்த்துக்கொண்டு கற்றுக்கொடுத்தார்கள். ஓலைச்சுவடியில் உள்ள சிறு தவறுகளும் பாடபேதங்களுக்கு வழிவகுக்கும்.

   Delete
 3. புகழாரம் இல்லாவிட்டால் இகழாமல் கருத்து சொல்லப் பட வேண்டும் என்பது சரியான எண்ணம்தான் ஐயா

  ReplyDelete
  Replies
  1. பகிர்வுக்கு நன்றி சார்

   Delete
 4. மநுநீதி - கேவலமான சிலருக்காக மட்டும் சொன்னது...!

  ReplyDelete
 5. அந்த சிலர் யார் என்று தெரியவில்லையே

  ReplyDelete
 6. ஒரு நல்ல கருவை வைத்து கதை அமைக்கப்பட்ட விதம் சிறப்பு ஐயா.

  ReplyDelete
 7. பூனைக் கதை நல்ல உதாரணம். உங்களிடம் ஒரு கேள்வி. மக்கள் தொகை வெகுவாக அதிகரித்துக் கொண்டே போகிறது. புதிதாகப் பிறப்பவர்கள் யாருடைய, ஏற்கனவே வாழ்ந்தவர்களின் மறுபிறப்பு
  என்று எப்படிச் சொல்ல முடியும்.

  ReplyDelete