Sunday, February 7, 2021

என் வழி தனி வழி


சில விஷயங்களை பற்றி கூற வரும்போது என்ன தலைப்பு வைக்காலாம்என்பதில் சிக்கல் இருக்கிறது சில தலைப்புகள் காப்புரிமை பெற்றவையோ எனும்சந்தேகம்  எழுகிறதுஇப்பதிவுக்கு கற்றதும் பெற்றதும் என வைக்க இருந்தேன்  தலைப்பை பார்த்ததும்  பலருக்கும்   சுஜாதா நினைவு வரலாம் சுஜாதாவுக்கும்  இதற்கும் எந்த சம்பந்தமும்  இல்லை என்   வழி  தனி வழி   கேள்வி கேட்டு பதிலும் சொல்வேன்

   இப்பதிவு எனக்கு என்ன தெரியும் என்பதை கேள்வி பதிலாக எழுதி நான் கற்றதும் பெற்றதும் என்ன என்று தெரிவிக்கிறேன் இந்தக் கேள்விகளும் பதில்களும் சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம்..ஆனால் என்ன செய்ய. ? இது என் வழி... தனி வழி...!

 

கேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். ?

பதில்:-   எனக்கு எல்லாக் கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.

கேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.?

பதில்:-   கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும்  பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயு, தங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும்  நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.

கேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.?

பதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின் வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையே manifestation, establishment and withdrawal  ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்

கேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே .உதாரணமாக ஏதும் கூற முடியுமா. ?

பதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக் கூறுகிறேன் இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் தோன்ற” ஆரம்பித்து விடுகின்றனஉருவாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் தோன்றி எண்ணங்கள் நம் மனதில் நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்துwithdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்ததுஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது

கேள்வி:- நாம் கேள்விப்படும் ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.?

பதில் :- பொய் என்று ஏன் எண்ண வேண்டும்.?இந்தமாதிரி அவதாரக் கதைகள் மூலம் மக்கள் நல் வழிப்படுவார்களானால் அந்த நம்பிக்கைகள். இருந்து விட்டுப் போகட்டுமே. நான் கற்றதும் பெற்றதும் இதனால் என்னவென்றால் வாழ்க்கை முறை என்று எண்ணப்படும் நமது சனாதன மதத்தின் அடி நாதமாக இருக்கும் வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.?

 பதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்

கேள்வி. :- வேதங்களில் இந்திரன் ,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் , கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.?

பதில்.:- நான் வேதம் படித்ததில்லை. மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என் கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா.? நான் இவை எல்லாம் சரியில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன

கேள்வி:- பட்டும் படாமலும் பதில் சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையா.?

பதில்:-  நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷயங்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத் தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம் கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப் பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. . செய்யும் தொழில்முறைக்கேற்ப  பிரிக்கப்பட்ட நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம் என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.

எந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால் உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.?

கேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம். உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.?

பதில்:- தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home  என்பார்கள். நாம் நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

     

      

 

 

 

 

 

19 comments:

 1. Replies
  1. வம்புக்கு எழுதவில்லை ஸ்ரீராம். ஆனால் நீங்கள் எழுதியுள்ள இரு வார்த்தைகளை, நாம் சொல்லும் முறை மூலம் வேறு அர்த்தம் உள்ளதாகக் கொண்டுவந்துவிடலாம். ஆனால் எழுத்தில் அப்படித் தெரியாது. நீங்கள் எப்போதும் பாஸிடிவ் ஆக எழுதுவதால், அப்படியான அர்த்தத்தில் நான் எடுத்துக்கொள்கிறேன்.

   Delete
  2. ஹா...  ஹா...  ஹா...   உண்மை.   இது மாதிரி சமயங்களில்தான் இமோஜியை பயன்படுத்துவார்கள்.  

   Delete
  3. ச்ஸ்ரீராம் நா பாசிடிவாக்தான் எடுத்துக்கொஏஏண்

   Delete
  4. நெல்லை இது குசும்பு போல் தெரிகிறதே

   Delete
  5. ம்னதில்பட்டதை சொல்ல இமோஜி எதற்கு

   Delete
 2. //வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.// - பெயர் கொடுத்து வழிபாடு இருந்தது. அதில் சூர்யன், விஷ்ணு, சிவன், லக்‌ஷ்மி, இந்திரன், வருணன், அக்னி போன்ற பலரும் உண்டு, விஷ்ணு முழுமுதற் கடவுளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பல்வேறு பெயர்களாக நாராயண, புருஷோத்தம என்ற பெயர்களும் உண்டு. மற்றபடி, ஐயப்பன் போன்ற தெய்வங்களின் பெயர் வேத உபநிஷத்துகளில் இல்லை.

  //எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை// - உண்மைதான். அதில் பெரிய தவறை நான் காணவில்லை.

  //என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன்// - சிந்திப்பது வேறு. செயல்படுத்துவது வேறு. சிந்திப்பவர்கள் எல்லோரும் செயல்படுத்துவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. சிந்திப்பதேசெயலி முதல்படி

   Delete
  2. வேதங்களும் உபனிஷத் களும் சொல்வதை நான் கற்றதில்லை பதிவிலேயே கூறி இருக்கிறேன்இறசிவனுக்கு பெயர்கள் சூட்டி இருப்பது சௌகரியம் வேண்டியும் அடையாளதுக்கும் தான் எதையு சொல்லும்முன் ஆதாரம் வேண்டும் அதில் பெரிய தவறை நான் காணவில்லை.அதில்தான் தவறேஏற்ற தாழ்வுகளின் அடிநாதம்

   Delete
 3. //எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை// - உண்மைதான். அதில் பெரிய தவறை நான் காணவில்லை.// எல்லோரும் கற்றிருக்கிறார்கள் நெல்லை. க்ஷத்திரியர்களில் இருந்து அனைவரும் கற்றிருக்கிறார்கள். அவரவருக்கு என உட்பட்ட பகுதிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல! ஜாபாலியின் புத்திரியான வாடிகாவே இதற்கு உதாரணம். அதர்வ வேதத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றவள். என்னுடைய "கண்ணன் வந்தான்" தொடரில் இதைக் குறித்த குறிப்புக்களைப் பார்க்கலாம்/படிக்கலாம்.இங்கே எழுதினால் பெரிதாக ஆகிவிடும்.

  ReplyDelete
  Replies
  1. கீசா மேடம்... ஜி.எம்.பி. சார் சொன்னது, சென்ற பல நூற்றாண்டுகளின் நிலை என்று புரிந்துகொண்டு அப்படி எழுதினேன். உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். பெண்கள், கோவில்களில் திவ்யப்ப்ரபந்தம் சேவிப்பது (சொல்வது) இன்னும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை, அதுவும் ஆண்களோடு சேர்ந்து சொல்வதும் வெகு சில இடங்களில்தான்.

   Delete
  2. சென்ற பல நூற்றாண்டுகள் என்பது சரியில்லை நெல்லை. அநேகமாக ஆங்கில ஆட்சிக்குப் பின் என்று சொல்லுங்கள். பெண்கள் அப்போது தான் கல்வி, சுதந்திரம் ஆகியவை மறுக்கப்பட்டனர். அதற்கும் காரணம் உண்டு. மத மாற்றத்திற்குப் பயந்தனர் பெற்றோர். பிரபலமான பந்துலு குடும்பத்தின் ஒரே மகள் மதம் மாறியதும் அதற்கு
   அடிப்படை! கல்வி மறுக்கப்பட்டு வீட்டிலும் பூட்டி வைக்கப்பட்டனர் உங்களுக்கு நான் திரு தரம்பால் அவர்களின் "The Beautiful Tree" புத்தகத்தைச் சிபாரிசு செய்கிறேன். தமிழில் "அழகிய மரம்" என்னும் பெயரில் மொழி மாற்றம்/மொழி ஆக்கம் செய்யப்பட்டு வெளிவந்து மூன்றாண்டுகளுக்கும் மேல் ஆகின்றன.

   Delete
  3. விஷயங்கள் இருந்தால் பகிரலாம் துறசி போகியவரென்றுஅறியப்படுபவரும் உபநிஷ்த்களிலும் வேஹங்களிலும் அதார்ம் காட்டலாம் அடை விட்டு நநான் எழுதி இருப்பஹைக்படியுங்கள் எபது சரியா நான்ந் கற் றதையும் குறிப்பிட்டு இருக்கிறேன் அதுவே சரி என்று சொல்லவில்லை

   Delete
  4. ஆங்கில ஆட்சி மனிதரின் எண்ணங்களைக் விரிவு படுத்தியது இல்லாவிட்டாழ்ல் வேத பாராயணம் சிலர்மட்டும் அத்தியனம் செய்து கொண்டிருப்பர்

   Delete
 4. உங்கள் வழி தனியாக இருப்பினும், இந்த உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடமாக உள்ளது ஐயா. பலவற்றை நாங்கள் உங்கள் மூலமாக அறிகிறோம், கற்றுக்கொள்கிறோம்.

  ReplyDelete
 5. பலரையும் சிந்திக்க வைக்கவே என் பதிவுகள்

  ReplyDelete
 6. வேதம் உபநிஷதம் பற்றி எனக்கொன்றும் தெரியாதாகையால் நான் எக்கருத்தும் சொல்லவில்லை .

  ReplyDelete