சனி, 30 ஜனவரி, 2021

மொழியின் அ ழுகை




 

மொழி எப்படி எல்லாம்  மாறி இருக்கிறது  அந்தக்காலத்தியதமிழே புரிவதில்லைதமிழும்  த ன்னுள் பிற மொழிகளையும்   உள்வாங்கிக் கொண்டிருக்கிறது தவறில்லை  ஆங்கிலம்  உலக மொழியாக அற்யப்பட்டு இருக்கிற்தென்றால் அது பிற மொழிகளை  வெறுத்து ஒதுக்கவ்ல்லை அப்படியே உள் வாங்கி கொள்கிற்து அதற்கு மட்டும்  வாய் இருந்தால்  இப்போது அது சிதைக்க படுவதைகாணும்போது  அது கதறி  அழலாம் உள்வாங்குவது வேறு  சிதைப்பது  வேறு

  கைபேசிகள்( செல் ஃபோன்கள் )புழக்கத்தில் இருப்பதும் ,
அவற்றின் உபயோகங்களும் பாதிப்புகளும் ஆராய்ந்து
அவை சாபமா வரமா என்று கேள்வி கேட்கப்பட்டு ஒரு
பதிவில் எழுதப்பட்டு இருந்தது.கணினியின் சில சேவை
களை கற்றுக்கொண்டு உபயோகிக்க முயலும்போது இந்த
கேள்வி நினைவுக்கு வந்தது. கைபேசியில் குறுஞ் செய்தி
அனுப்ப இக்கால இளைஞர்கள் உபயோகிக்கும் ஆங்கிலம்
என் போன்றோருக்கு படித்து அறிய முடியாததாய் உள்ளது.
குறுஞ் செய்தி ஏதோ அவசரத்துக்கு அனுப்பப்படுகிறது
என்பது சரியல்ல. கணினியில் சாட்டிங் போல கைபேசியில்
குறுஞ் செய்தி உபயோகப்படுத்தப் படுகிறது. நவ இந்தியப்
பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று
இருக்கும்போல் தோன்றுகிறது.

 யாரோ எதையோ எழுதட்டும் ,நமக்கென்ன என்று இருந்து
விடலாம்.ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு ஒரு மொழிக்கே
உண்டாகிறது காணும்போது திகைப்பாய் இருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வியிலும், கான்வெண்டிலும் படிக்கும்
சிறுவர் சிறுமிகள் ,எந்த மொழியிலும் குறைந்த பட்ச
தேர்ச்சியாவது பெறுவதில்லை. தாய் மொழியும் ,பிராந்திய
மொழியும் இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்
போது, முன்னிலையில் பயிற்றுவிக்கப்படும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்று இருப்பது எதிர்பார்க்கப்படுவது. ஆனால்
நாம் இப்போது பார்ப்பது ஆங்கிலமே அல்ல. இவர்களாக
ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து, இவர்கள் உச்சரிப்
பிற்கு ஏற்றார்போல் ஏதேதோ எழுதுகிறார்கள். குறுஞ்
செய்தியாம்..!எதையாவது சொல்லப்போனால் தலைமுறை
இடைவெளி என்கிறார்கள்,நான் என் முந்தைய பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, உண்மை நிலையை
முதலில் அறிந்து கொண்டு பிறகு அதை நம் இஷ்டப்படி
திரிக்கலாம்.மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்.

 


" al of a sden u strt 2 lyk sm 1 dat  u wanna c dem evriday"

இது ஒரு சின்ன மாதிரிதான்.ஆங்கில மொழிக்கு அழ
முடிந்தால் கைபேசியிலும் கணினியிலும் குறுஞ் செய்தி
களாலும் மற்ற பிரயோகங்களாலும் அனுபவிக்கும்
சித்திர வதைகளினால் ரத்தக் கண்ணீரே சிந்தும்

 

 

 

 

.
----------------------------------------------------------------------

16 கருத்துகள்:

  1. //நவ இந்தியப் பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று இருக்கும்போல் தோன்றுகிறது.//

    ஹா..  ஹா...  ஹா...   ஆனால் இதில் இந்திய என்று மட்டும் வரையறுத்துப் பயனில்லை!  உலகளாவிய விஷயம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் மொழி சிதைக்கப்படுகிறதே

      நீக்கு
    2. இது எப்போது தொடங்கியது என்று பார்த்தோமானால், முன்பு வாட்சாப் காலத்துக்குமுன் சாதாரண செல்லில் எஸ் எம் எஸ் காலம் ஒன்று இருந்தது.  மாதத்துக்கு இத்தனை எஸ் எம் எஸ் இலவசம், அதற்கு மேலே போனால் காசு என்றெல்லாம் காசு பார்த்த காலம்.  சுதந்திர தினம், தீபாவளி பொங்கலுக்கு இலவச எம் எஸ் எஸ் கிடையாது என்று அறிவித்த நெட்வொர்க்குகள்..   அந்த எஸ் எம் எஸ்ஸில் ஒரு கட்டுப்பாடு உண்டு.  140 எழுத்துகளுக்கு மேலே போனால் இரண்டு எஸ் எம் எஸ் கணக்கு ஆகிவிடும்.  எனவே அப்போது தோன்றியதுதான் இந்த சுருக்கெழுத்து முறைகள்!

      நீக்கு
  2. நீங்கள் காட்டி இருக்கும் உதாரணத்தை என்னால் உடனே வேகமாகப் படிக்க முடிந்தது.  எனக்கும் அதுமாதிரி நிறைய வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. படிக்க வேண்டும் என்றுதானே எழுதப்படுகிறது இருப்பதைத்தானே கூறி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. இவ்வாறாகத்தான் மொழியை சிதைப்பதைக் காணும்போது வேதனையாக உள்ளது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன வேதனைப்பட்டு என்னபயன் நடப்பது தொடர்கிறது

      நீக்கு
  5. மொழி சிதைக்கப்படுகிறது என்பது உண்மைதான். அதுவே இரண்டு எழுத்து தட்டச்சு பண்ணினால் உடனே நிறைய வார்த்தைகளைக் காண்பிக்கிறது. அதையும் தேர்ந்தெடுக்காமல் குறுகிய வார்த்தைகளாக அனுப்புவது மதியீனம்தான். அந்தக் காலத்தில் தந்தியில் காசு செலவழியும் என்று எழுத்தைக் குறுக்குவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் தந்தியில் காசு செலவழியும் என்று எழுத்தைக் குறுக்குவார்கள் குரைப்பார்கள் என்று இருந்திருக்கவேண்டுமோ
      ReplyDelete

      நீக்கு
  6. பதில்கள்
    1. மொழியைச் சிதைப்பது தவறுதான் ; ஆனால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை .

      நீக்கு
    2. தவறை நாமாவதுசெய்யாமல் இருக்கலாம்

      நீக்கு
  7. தற்போது ஊடகங்களில் பேச்சு எழுத்து என தமிழ் மிகவும் கொடுமைப்படுகிறது....

    அதனினும் கொடுமை அதை ரசித்துக் கொண்டிருப்பது...

    பதிலளிநீக்கு