எங்கிட்ட
மோதாதே
1959ம் வருடம் பயிற்சி முடிந்து பெங்களு ர்வந்திருந்த சமயம் ஒரு ஹோட்டலில்மூவரில் ஒருவனாக தங்கி யிருந்தசமயம் ரூம் மேட்சில் ஒருவருக்கு ஹோட்டலில் பணம் கட்ட முடியாமல் சில நாள் அவகாசம் கேட்டிருந்தார் அந்த இடைவெளியில் அவருக்கு சொந்தமான பெட்டி போன்ற சில பொருட்களை என்பொறுப்பில் விட்டுச்சென்றார் இந்த சமயம் அவர்து உடைமைகளை கான் ஃபிஸ்டிகேட்செய்ய ஹோட்டல் உரிமையாளர் என்னிடம் இருந்தநண்பனின் பொருட்களை கேட்டார் நான் கொடுக்க மறுத்தேன்அதன் பின் அவர் எனக்கு வென்னீர் தரவோ குடிக்க தண்ணீர் தரவோ மறுத்தார் நான் அருகே இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் இரு காவலர்களை அனுப்பி ஹோட்டல் உரிமையாள்ரை வரவழைத்தார் எனக்கு நீர் கொடுக்காவிட்டால் அவருக்கு லாக் அப்பில் நீர் கொடுக்க போவ்தாக எச்சரித்தார் ஹோட்டல் உரிமையாளர் தவறை திருத்துவதாக ஒப்புக்கொண்டார்அந்தக்காலத்தில் உடனே நீதிவழங்கும் காவலர்கள் இருந்தனர்
------------------------------------------------------------------------------------
என்னிடம்
ஒரு சைக்கிள் இருந்தது வேலைக்கு போகவர உபயோகிப்பேன்அப்பொழுதெல்லாம் இரவில் சைக்கிளில் பயண்க்கும்போது அதில் விளக்கு
பொறுத்தப்பட்டு அது எரிய வேண்டும் என்சைக்கிளில்
டைனமோ இல்லை அதற்குபதில்கெரொசின்
விளக்குதான் இருந்தது ஒரு நாள் பணிக்கு சென்று வரும்போது செகண்ட் ஷிஃப்ட்
11மணி வரை விளக்குஅணைந்திருந்தது
காவல்காரரிடம் மாட்டினேன் அவர் பார்க்கும்வரை விளக்கு எரிந்து கொண்டிருந்தது என்று வாதாடினேன் ஒரு கட்டத்துக்குமேல் பொறுமை
இழந்து அவர் கையை விளக்கின் மேல்அவர் கையை அழுத்தினேன்பாவம் கை
சுட்டு விட்டது அவர் கோபம் அதிகரித்தது ஸ்டேஷ்னுக்கு கூட்டிச் சென்றார்
அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம்நடந்ததைக் கூறினேன் காவலர்கை சுட்டதையும் காண்பித்தேன் எல்லவற்றையும் ம் கவனித்த இன்ஸ்பெக்டர் சிரித்து கொண்டே என்னை போகச் சொன்னார்விட்டு விட்டார்
சூடு பட்டும் புரியவில்லையே...
பதிலளிநீக்குபுரிந்திருக்கும்
நீக்குஅந்தக் காலத்தில் பல நல்ல காவலர்கள். இந்தக் காலத்திலும் சில நல்லவர்கள் உண்டு
பதிலளிநீக்குஇவை என் அனுபவங்களே
நீக்குஇரண்டுமே துணிச்சலான நடவடிக்கைகள். நான் 'அவர்களிடம்' வம்பே வைத்துக் கொள்வதில்லை!
பதிலளிநீக்குஇளங்கன்று பயமறியாதுவம்பென்ன வம்பு செய்தேன்
பதிலளிநீக்குசமயோசிதம்
பதிலளிநீக்குநனறி சார்
நீக்குசின்ன வயசில் உங்கள் முகம் குழந்தை முகமாக இருந்திருக்கும். மீசை இருந்திருக்காது. அதனால் தான் காவலர்களும் பரிவுடன் விட்டு விட்டனர். இல்லாவிட்டால் வாதி பிரதிவாதி ஆகும் கதை தான். எனக்கும் இது போன்று அனுபவம் உண்டு. முக்கியமாக சைக்கிளில் டபிள்ஸ் செல்லும்போது.
பதிலளிநீக்குJayakumar
நல்ல அனுமானங்கள்
நீக்குஅந்தநாள் நினைவுகள் அழகு.. இருப்பினும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபின், அந்தக் ஹோட்டலில் கிடைக்கும் தண்ணியையோ உணவையோ எப்படிச் சாப்பிட்டீங்கள் நம்பி?...
பதிலளிநீக்குஅந்த ஹோட்டலில் இருந்து மாறி விட்டேன்
பதிலளிநீக்குசூடுவைத்தது, வித்தியாசமான அனுபவம்.
பதிலளிநீக்குspurt of the moment செயல்
பதிலளிநீக்கு