வெள்ளி, 1 ஜனவரி, 2021

புத்தாண்டு வாழ்த்துகள் வித்தியாசமாய்

 


சம்பிரதாய புத்தாண்டு வாழ்த்துகள்

       நாளும்தான் இரவுக்குப் பின் பகல் விடிகிறது.

இன்று மட்டும் இது என்ன புதிதா.?

பல்லெல்லாம் தெரியக் காட்டி முகமெல்லாம்

புன்னகை கூட்டி கைகுலுக்கி வரும் ஆண்டு

பிரகாசிக்க வாழ்த்துக்கள் கூறுகிறோம்

சற்றே சிந்தித்துப்  பார்க்கிறோமா.

சம்பிரதாய முகமன்கள் ஒரு புறம் இருக்கட்டும்

இந்தபுத்தாண்டு எந்த விதத்தில் வித்தியாசம்

ஒரே போல் நேற்றையது போல்தானே

அதே இரவும் பகலும் ஏதோ

 நம்பிக்கை எல்லாம் புதிது போல்

 நம்பிக்கைகள் வாழ்வின் கட்டாய ஊன்றுகோல்

ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது.

அனுபவங்களும் கூடத்தானே வேண்டும்

அனுபவங்கள் தரும் படிப்பினைகள் சிந்திக்கிறோமா,

வினாடி நிமிடம் மணி நாள் வாரம் மாதம் வருடம்

எல்லாம் காலத்தின் குறியீடுகள் இவற்றின்

ஒவ்வொரு நொடியும் புதிதாய்ப் பிறப்பதே-அதேபோல்

நாளும் நொடியும் நாமும் புதிதாய்ப் பிறக்கிறோம்

இந்நொடியில் நிகழ்வதே நிதரிசனம் . அடுத்து நிகழப்

போவது யாரே அறிவார். யாரும் யாரையும்

காணவோ முகமன் கூறவோ உறுதி சொல்ல முடியுமா

புத்தாண்டை எப்படி வரவேற்கிறோம்--முன் இரவு

கூடிக்களித்து சோமபானம் அருந்தி சீயர்ஸ் சொல்லி

வாழ்த்துதல் ஒரு சம்பிரதாயமாகே மாறுகிறது......

பிரதிக்ஞைகள் பல பலரும் எடுக்கிறார்கள்-( இருமுடி

எடுக்கும் ஐயப்ப பகதர்கள் பலரும் விரதம் இருத்தல்போல்

விரதகாலம் முடிந்ததும் தொடரும் பழைய பலவீனங்கள் ).

பிரதிக்ஞைகள் பெயரளவில்மட்டும் இருந்தால் போதுமா.?.

கடந்து வந்தபாதை கற்பித்தது என்ன, பட்டியல் வேண்டாமா.?.

இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன அடுத்தத் நொடி

காண்பதே நிச்சயமில்லை....காணும்போதும் பழகும்போதும்

அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம், தோள்கொடுப்போம்

ஆக என்றும் நல்லவராக வாழ பிரதிக்ஞை எடுப்போம்

இன்றுபோல் என்றும் மனித நேயம் பழக  அன்பர்களே

அனைவருக்கும் சம்பிரதாய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

 

 

 


18 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜி எம் பி ஐயா... நலமே இருக்க பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தி பூத்தாற்போல் வந்த அதிராவுக்கு என்வாழ்த்துகள்

      நீக்கு
  2. பதில்கள்
    1. நமக்குத்தான் நிறைய புத்தாண்டுகள் இருக்கின்றனவே தினமும்புதிய தருணம் பொல

      நீக்கு
  3. எல்லா தினங்களும் ஒன்றே போல்தான். இருந்தாலும் பிறந்த நாள், கேக், திருமண நாள் என்று ஏதேனும் ஒரு சாக்கில் நாம் நம்மை உற்சாகமாக்கிக்கொள்ள முயல்கிறோம். எல்லா தினங்களும் சம்பிரதாய தினங்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெறும் சம்பிரதாய முக்மன்கள் போல மனமுவந்து வாழ்த்துவது மிக குறைவு

      நீக்கு
  4. எங்கும் மகிழ்ச்சியே நிறைவதற்கு வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
  5. புத்தாண்டு வரும்போதாவது வாயைத் திறந்து வாழ்த்து சொல்லாத கஞ்சப்பயல் என்ற சொல் வராதிருக்க சம்பிரதாயமாக வாழ்த்து சொல்ல வேண்டியிருக்கிறது என்றாலும் நம்மைப் போன்ற  முதிய இளைஞர்கள் வருடங்களை எண்ணி விடை பெரும் வருடம் எதுவோ என்று அச்சத்துடன் ஒவ்வொரு புத்தாண்டையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. 

    வாழ்த்துக்கள்  கூறுவதால் நஷ்டம் ஒன்றும் இல்லை. கூறுவதற்கு கஷ்டமும் இல்லை. புத்தாண்டு நிறைவான ஆண்டாக மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கட்டும் என்று வேண்டுவோம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைப் போன்ற முதிய இளைஞர்கள் வருடங்களை எண்ணி விடை பெரும் வருடம் எதுவோ என்று அச்சத்துடன் ஒவ்வொரு புத்தாண்டையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. நான் அப்படியில்லை முகமூடிஅணிந்து போலியாக வாழ்த்து கூறுகிறோம் அவ்வளவுதான்

      நீக்கு
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. நாளெல்லாம் நல்ல நாளே..    நேற்றைப்போலவேதான் இன்றும்.   இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. தெளிந்து இருக்கவே இப்பதிவு

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான். நாட்களில் வித்தியாசமில்லை. ஆனாலும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ள, நேர்மறையான அதிர்வலைகள் அகிலத்தில் பரவ வாய்ப்பளிக்கும் நாளாக எடுத்துக் கொள்வோம். இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் sir.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துவதும் முகமூடி இல்லாமல்இருக்கலாமே

    பதிலளிநீக்கு