புதன், 31 ஜூலை, 2019

ஒரு சோதனை



                                                 ஒரு சோதனை
                                                ------------------------

நான் என்பதிவு ஒன்றுக்கு எழுதிய ஆரம்பவரிகள் இவை  என்ன பதிவு என்று யூகிக்க முடிகிறதா முடிந்தால் பதிவுகளை  ஊன்றிப் படிப்பவர் நீங்கள்ஷொட்டு கொடுத்துக் கொள்ளலாம்
                                   ...
  என் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது
பூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்
போகும்போது அழுக்கடைந்த கார் காண 
அதை முதலில் கழுவலாம் என்று தோன்ற 
அருகில் செல்லும் போது தென் படுகிறது
வீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.
காரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்  
ஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து
ஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து
ஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து
கடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை 
குப்பைத் கூடையில் போக வேண்டியது என்று 
அதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க அதைக் 
காலி செய்து குப்பைத் தொட்டியில் போட 
வெளியே போக வேண்டும் போகிறபோதே 
அருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்
செலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்
அட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத் 
தாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை 
எடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த
இடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும் 
காரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர 
அங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும் 
என் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்
எண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் ச்சே!
எந்தவேலையும் திட்டமிட்டபடி நடப்பதில்லையே 
என நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது

பல்வேறு genre களில் எழுதியாகி விட்டது எது பற்றி  எழுத நினைத்தாலும் எங்கோ எப்போதோ  எழுதி இருப்பது தெரியவருகிறது இருந்தாலும்  என்ன எழுதியது எல்லாமே உள்வாங்கப் படுகிறதா  சோதிக்கவே இப்பதிவு  















32 கருத்துகள்:

  1. சோதனைமேல் சோதனை..
    போதுமடா சாமி !
    -என்று யாராவது எழுதிக் கதையை முடித்துவிடப்போகிறார்கள்..!

    பதிலளிநீக்கு
  2. அலையாயும் மனசு
    நினைவுகளை மீட்டெடுக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை படிக்கவே இல்லை என்று சொல்ல வில்லயே

      நீக்கு
  3. //எழுதியது எல்லாமே உள்வாங்கப் படுகிறதா // - இது சாத்தியமே இல்லை ஜி.எம்.பி சார்....

    பல இடுகைகளின் கருத்து அல்லது கண்டண்ட் பிடிக்காவிட்டாலும், நட்புக்காக பின்னூட்டங்கள் வரும்.

    எது நமது ரசனையை உயர்த்துமோ இல்லை ஆர்வத்துடன் படிக்கக்கூடிய செய்தியைக் கொண்டிருக்குமோ, அவைகளைத்தான் பொதுவாக மனம் உள்வாங்கும். மற்றவையெல்லாம் படித்தோம், பின்னூட்டமிட்டோம், மறந்தோம் வகையைச் சேர்ந்ததுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல மீள்பதிவுகளுக்கு இதை படித்திருகிறேன் எனப் பின்னூட்டம் கண்டதுண்டு அப்படி ஏதாவது நினைவு வந்தாலும் பரவவாயில்லை இந்தப்பதிவு ரசனயை உயர்த்துமோ தெரியாது ஆனால் ஒரு விஷயம்சொல்லிப் போகும் தெரிந்து கொள்ளலாம்

      நீக்கு
    2. பல இடுகைகளின் கருத்து அல்லது கண்டண்ட் பிடிக்காவிட்டாலும், நட்புக்காக பின்னூட்டங்கள் வரும்.

      அருமை நண்பரே. இதன் காரணமாகவே பல இடங்களில் எழுத முடிவதில்லை.

      நீக்கு
  4. அப்படி ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்பதுஉண்மை. சமீபத்தில் கீதா ரெங்கன் எபியில் கேவாபோவுக்கு எழுதிய கதையை அவர் தளத்தில் அவர் மறுபதிவு செய்திருந்தார். முழுக்கதையும் வெளியிட்டும் கூட ஒன்றிரண்டு பேர்கள் அதைமுன்னர் வாசித்தநினைவு இல்லை என்றே சொன்னார்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் வாசித்திருக்க வாய்ப்பில்லைஅப்படியே வாசித்து இருந்தாலும் மீள்வாஇப்பால் நஷ்டம் ஏதுமில்லை

      நீக்கு
  5. நீங்கள் எழுதிய பல பதிவுகளை தேடி படித்துப் பார்த்தேன். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை எங்களை சோதிக்கவே இதை புதிதாக எழுதியுள்ளீர்களோ :)))

    பதிலளிநீக்கு
  6. எங்களை சோதிக்க இப்படி ஒரு உத்தி? நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு நினைவிற்கு வரவில்லை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் படித்திருக்க வில்லை என்று நினைப்பு

      நீக்கு
  7. நீங்கள் எழுதிய வரிகளை முன்பே படித்திருக்கிறேன். ஆனால் அது தமிழில் தானா அல்லது தெலுங்கு, கன்னடத்திலா என்பது நினைவுக்கு வரவில்லை.விடுங்கள். நாயகன் பட்த்தில் பாலகுமாரன் சொன்னதுபோல், நான்கு பேருக்கு நல்லது என்றால் அதைச் செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

    இரா ய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயூஜெர்சிக்குப் போனால் குசும்பும் வருமோ

      நீக்கு
  8. சில வரிகள் படித்த நினைவு இருக்கு. ஆனால் எந்தப் பதிவுனு எல்லாம் தெரியலை! விஷயம் ஏற்கெனவே படித்து அறிந்தது தான்! தொடர்வினைகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் பலரும் அறியாட விஷயங்களென்று சொல்லவில்லையே

      நீக்கு
  9. FRIDAY, DECEMBER 29, 2017
    மறதியா நோயா

    எனக்கு எப்படி Search பண்ணுவது என்று தெரிந்திருக்கிறது. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  10. ஐம்பது வருட இடைவெளியில் வந்து நிற்கும் எனக்கே நீங்க சொன்னது உண்மை தான் எனத் தோன்றுகின்றது. உங்கள் வயது வரைக்கும் இது போல எழுதுவேனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்வயட்ல் உடல்தான் ஒத்துழைக்க மறுக்கிறதே தவிர மீதி எல்லா ஃபேகல்டிகளும் நன்றாகவே இருக்கிற்துநான்பொழுதுபோக எழுதுவதில்லை நான் நினக்கும்சில விஷயங்கள் பிறருக்கு பகிரவே எழுதுகிறேன்

      நீக்கு
  11. மறுபடியும் இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை...!

    பதிலளிநீக்கு
  12. பார்க்காத மாதிரியே இருந்துடுறது கிட்னிக்கு நல்லது

    பதிலளிநீக்கு
  13. சில நேரங்களில் மீள் பதிவு இடுகிறேன் மீண்டும் தெட்ரியப்படுத்துவதில் தவறில்லை என்பதே நோக்கம் நான்பதிவைப் படித்த நினைவில் எதுபற்றியது பதிவு என்பது நினைவுக்கு வருகிறதா என்பதை அறியவே அப்படிக்கேட்டேன் ஆனால்தொழில் நுடபம்தெரிந்தவர் தேடிக் கணாடுபிடிப்பார்கள் என்று நினைக்க வில்லை jeyakumar 22384 சரியாகக் கண்டுபிடித்து விட்டார் பதிவில் கண்டசில விஷயங்களைக் கொண்டு அவருக்கு AAADD என்னும் நோய் இருக்கலாம் என்பதே என் நோக்கம் இதை நான் 2013 ல் மே மாதம் எழுதிகன்ஃப்யூஸ் ஆகக் கூடாது என்று சிலவிஷயங்களாஐச் ச்டேர்த்து2017 டிசெம்பரில் மீண்டும்பதிவிட்டிருந்தேன் AAADD என்றால்
    AGE ACTIVATED ATTENTION DEFICIENT DISORDER என்பதாகும்வருகை டந்த அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  14. அடடா.... என்ன இது உமக்கு வந்த சோதனை!

    பதிலளிநீக்கு
  15. சில விஷயங்கள் வாசகர்களுக்குத் தெரிய வேண்டும்என்பதாலேயே எனக்கு சோதனை என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு