ஞாயிறு, 30 ஜூன், 2019

காலைக் காட்சிகள் அன்றும் இன்றும்

                           
                                        காலைக்காட்சிகள்  அன்றும் இன்றும்
                                     ----------------------------------------------------------------

முன்பு ஒரு முறை  காலைக் காட்சிகள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்  இன்றும் அதே தலைப்பில் ஆனால்  மாற்றங்கள்பலவுடன்
  பொழுது புலரும்  வேளை. சேவல் கூவும்  நேரம் நகரத்தில் சேவல் எங்கே கூவ    பறவைகள் இரைதேடக் கிளம்பும்  நேரம் அதிகாலைத் தூக்கம்  சுகமானது  இருந்தாலும்  சுகத்தை அனுபவிக்க உடல் நலமாயிருக்க வேண்டாமா.
. உடம்பு ஒரு கடிகாரம் மாதிரி. பழக்கப் பட்ட காரியங்களுக்குக் கட்டுப் படும்
பொதுவாக விழிப்பு வந்தாலேயே பொழுது விடிந்து விட்டது என்று அர்த்தம். சாலையில் நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கும். ஐடி கம்பனிகளில் வேலை பார்ப்போரைக் கூட்டிப் போக வரும் கார்களின் சத்தம் கேட்கத் துவங்கும். அடுத்து இருக்கும் பால் வினியோகக் கடைக்குப் பால் வண்டி வந்த சப்தம் கேட்கும். பக்கத்துவீட்டு நாய் தன் எஜமானைக் கூப்பிடக் குரைக்கும்வித்தியாசமான சப்தம் கேட்கும் இப்போது பக்கத்து வீட்டுக்குடித்தனக்காரர்  குடிபெயர்ந்து விட்டார் சொந்த வீடு கட்டிப்போய் விட்டார்
 நிச்சயம்   விடிந்து விட்டது என்பது மனைவி குளிக்கப் போகும் முன் ஆன் செய்யும் ஸ்தோத்திரப் பெட்டியின் பாட்டுகளைக் கேட்டால் தெரிந்து விடும்கௌசல்யா சுப்ரஜா ராமா eytc etc சுமார் ஒரு மணிநேரம் ஓடும் அது  
குளிப்பதுடன் கூடவே தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது
அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹனோபம்
பைரவாய நமஸ்துப்யம் அனுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு
இப்போது அதுவும் இல்லை
    
நான்  எழுந்து காலைக்கடன்களை முடித்து நடக்கப் போகும்  முன் மனைவி எனக்கு முதலில் மூன்று நான்கு மாரி பிஸ்கட்களை தருவாள் வெறும்  வயிற்றில் காப்பி குடிக்கக் கூடாதாம்   காஃபி குடித்து நான் நடக்கத் தயாராவேன்
இப்போது அந்த நாளும் வந்திடதா என்னு ஏக்கம்தான்
  மருத்துவர்களின் ஆலோசனையா உத்தரவா ஏதோ ஒன்று நான்  தினமும் சிறிது தூரம்  நடக்க வேண்டும் நல்ல வேளை வீட்டின்  அருகிலேயே ஒரு பூங்கா போன்றதொன்று இருக்கிறது  நடை பயில ஏற்ற இடம்  நீளவாக்கில் இருக்கும் அகல வாக்கில் இரு பாதைகள் சுமார் எட்டு அடி அகலத்தில்.  ஒரு முறை சென்று வந்தால் ஒரு கிலோமீட்டர்தூரம் வரும்  தினமும் நான் இரண்டு முறை சென்று வருவேன் அதாவதுஇரண்டு கிலோ மீட்டர்தூரம்  நடப்பேன்  இதே தூரத்தை முன்பெல்லாம் அரை மணிக்கும் குறைவான நேரத்தில் கடப்பேன்  
நடக்க வருபவர்களைக் கவனிப்பதில் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வேன் நடக்கும் போது பதிவு எழுத சில ஐடியாக்கள் வரும்  முன்பொரு முறை இப்படி சிந்தித்தபோதுபிறந்ததே செய்யாத குற்றம் எனும் பதிவு (பார்க்க)போய்ச்சேர் வீடு நோக்கி என்னும் இடுகையும் இப்படிப் பிறந்ததே  என்ன நான் நடப்பது காலை வேளையில் அதையே மாலையில் நடப்பதாகப் பாவித்து எழுதியதுதான் அந்த  இடுகை
இப்போதெல்லாம் நடையை நினைத்தால் வருவது ஒரு பெரு மூச்சு மட்டுமே
நடக்கும்  பாதையில் நாய்களின் ராச்சியம் நடக்கும்  ஒருவர் நடக்க வந்தால் அவர் பின்னே இரண்டு மூன்று நாய்களும் நடக்கும்  அவர் அவ்வப்போது போடும் பிஸ்கட்களுக்கு  நன்றி மறக்காதவை காலையில் நடக்கப் போகும்போது பார்க்கில் இருக்கும் பெஞ்சுகளில்  வயதான பெண்களின்  குழுக்களும்  இருக்கும் அவர்கள் நடக்க வந்தவர்களா மருமகள்களிடம் இருந்து தப்பிக்க வந்தவர்களா என்னும்  சந்தேகமும் எழும் நடக்க வருபவர்களில் சிலர் ஓடுவதும்  உண்டு. இப்படி ஓடும் சில பெண்கள் என்னைக் கவர்ந்தவர்கள் அதில் ஒருத்தி சானியா மிர்சாவை நினைவு படுத்துவாள். இன்னொருத்தி பந்தையக் குதிரை போல் இருப்பாள் செருகிய கொண்டையில் முடியின் நுனி ஆடி அசைந்து கவரும்  ஒருமுறை என்னைக்கடக்கும் போது ஒரு புன்னகை  உதிர்த்தாள் பின்  அவள் என்னைக்கடக்கும்போதெல்லாம் புன்னகைக்கிறாளா என்று கவனிப்பேன்  அவளது அந்தப் புன்னகை என்னை ஈர்த்தது
 வருபவர்களில்தான் எத்தனை வகை  சிலர் நேரம் தவறாமல் வருவார்கள் சிலர் குழுக்களாக மூன்று நான்கு பேராக வருவார்கள்.  சிலவயதானவர்களுக்கு நடைபாதைப் பெஞ்சுகள் கூடிப்பேசும் இடமாகிறது எனக்குத்தான்  யாரும் நண்பர்கள் இங்கு இல்லை.  1994-ம் வருட வாக்கில் என்  வீட்டில் குடி இருந்தவரோடு அதிகாலையில் வாக்கிங்கும் ஜாகிங்கும் செல்வேன்சுமார் நன்கு முதல் ஐந்து கிலோமீட்டர் தூரம்வரை   அவர் என்னைவிட மிகவும்  இளையவர் அவர் சொந்த வீடு கட்டிப் போனபின் முன்புபோல் ஜாகிங் செய்வதில்லை ஆண்டுகள் கழியக் கழிய உடலில் தெம்பும்  குறைகிறது இந்த நடை ஒன்றுதான் எனக்கிருக்கும்  ஒரே தேகப்பயிற்சி
 இப்போதெல்லம் வருவது ஒரு பெரு மூச்சுமட்டும்தான்   என்றேன் நடப்பதே முடிவதில்லை  இருந்தும் நடக்கும் பாவனையை நான் கைவிட வில்லை நடக்க முடிய வில்லை என்றால் பலனில்லை முடிகிறவரை நடஎன்பதே என் தாரகமந்திரம் ஒரு முறைபசி பரமசிவம்நட நட என்று எழுதிப் பின்னூட்டமிட்டிருந்தார்  நான் பார்க்குக்குப் போய்  நடப்பதில்லை   ஒரு முறை நடந்து கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி விழப்போனேன் கூட பார்த்திருந்தவர்கள் துணைகொண்டு வீடு வந்து விட்டேன்  என் சிறியவீட்டின்பக்க வாட்டில்  சுமார் 15 மீட்டர் நீள பாதை இருக்கிறதுஇப்போது அதுதான் என் நடைக்களம்வெளியில் எங்கும்போவதில்லை மாதம் ஒரு முறை மருந்து வாங்க பிஎச் இ எல் மருந்தகத்துக்கு என்மனைவி துணையுடன்  ஆட்டோவிலோ டாக்சியிலோ செல்வேன்வீட்டின் பக்க வாட்டில் இருக்கும் இடத்தில் நடக்கிறேன் கைத்தடியுடன் சுமார் அறுபது முதல் எழுபது வரை அங்கும் இங்கும் கணக்கில் நடக்கிறேன்   சுமார் முக்கால்மணிநேரம்நடந்தால்  ஒரு கிலோ மீட்டர்தூரம் என்றுகணக்கு
முடியவில்லை என்று படுத்துக் கிடக்காமல்  நடக்க முயற்சிக்கிறேன் முடிவதில்லை என்று சொன்னால் உடல் நலம்பேணுங்கள்  என்றுபின்னூட்டங்கள் வரும் அவ்வப்பொதுஎனக்கு நாமே நம் epitaph எழுதினால் என்ன என்று தோன்றும் அது என்னை நானே நம்பாமல் இருப்பதைக் காட்டுமென்று தோன்றும்  நான் என்னதான் தைரிய சாலியகைருந்தாலும்  என்னால் பிறாஅர் கஷ்டப்படக் கூடாது எறு நினைக்கிறேன்  பார்ப்போம்             






28 கருத்துகள்:

  1. தைரியமாக நடங்கள். உங்கள் மனோ தைரியமே உங்கள் பலம். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. புரிந்துகொண்டேன் உங்கள் இன்றைய உடல்/ மனநிலையை.

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கையோடு இருங்கள் ஐயா.
    தங்களது நிலைப்பாட்டை எழுதியதை படிக்கும்போது எனது நிலைப்பாட்டை நினைத்து கலக்கமாக இருக்கிறது.

    சம்சாரம் போனால் சகலமும் போகும் என்பதை பலரும் கேட்டு, படித்து இருக்கலாம். அதை அனுபவமாய் உணரும்போதுதான் அதன் வலி'மை புரிகிறது.

    என்னால் பிறருக்கு கஷ்டம் வரக்கூடாது இதுவே எனது இப்போதைய பிரார்த்தனைகள்.

    இருப்பினும் நம்பிக்கையே துணை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்கருத்துப்பதிவுக்கும் நன்றி ஜி

      நீக்கு
  4. நம்பிக்கை நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும்
    மனம் தளராமல் நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டு வருகிறீர்கள்,
    தொடருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ம்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பிறர் உதவி (மனைவி ) தேவைப் படுகிறது

      நீக்கு
  5. பிறருக்குத் தொந்திரவாகி விடக் கூடாதென்பதே வீட்டுப் பெரியவர்கள் அடிக்கடி சொல்வது. எல்லோருக்குமே அது பொருந்தும். நடைப் பயிற்சியை வீட்டுக்குள்ளே முடிந்த வரை தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  6. இந்த இடுகையைப் படிக்கும்போது, இப்போதே தினமும் நடக்கும் என் வழக்கத்தை விட்டுவிட்டேனே என்று கலக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடை என்பது எளிதான முக்கியமான தேகப்பயிற்சி பெட்டர் லேட் தான் நெவெர்

      நீக்கு
  7. தைரியம் மனபலம் அய்யா...
    முடியும் வரை நடங்கள்...
    அதுதான் உங்களை இளமையோடு அரசாக்கியமை வைத்துக் கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  8. வீட்டின் பக்க வாட்டில் இருக்கும் இடத்தில் நடக்கிறேன் //கைத்தடியுடன் சுமார் அறுபது முதல் எழுபது வரை அங்கும் இங்கும் கணக்கில் நடக்கிறேன் சுமார் முக்கால்மணிநேரம்நடந்தால் ஒரு கிலோ மீட்டர்தூரம் என்றுகணக்கு//

    இப்போதைக்கு இது போதும்.

    நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, 15 அல்லது 20 நிமிடங்களுக்குக் குறையாமல், வெய்யிலில் அமர்ந்து நிதானமாக மூச்சை இழுத்துவிடுதல்[இதற்கு யோகா பயிற்சி எல்லாம் கட்டாயம் அல்ல] நல்ல பலன் தரும்.

    வாசிக்கும்போதும் தட்டச்சு செய்யும்போதும்கூட மூச்சை இழுத்துவிடுவதைப்[சிரமப்படாமல்] பழக்கப்படுத்திக்கொள்ளலாம்.

    இந்தப் பழக்கத்தின் மூலம்[ரத்த ஓட்டம் சீராதல் போன்ற பல நன்மைகள் உண்டு] பலன் பெற்றவன் நான் என்ற முறையில் உறுதிபடச் சொல்கிறேன்.

    மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நீங்களாவது குடும்பத்தோட இருக்கிறீர்கள் இங்கே பலர் தனிமையில் வசித்தாலும் வயதான பின் அவர்கள் நடப்பதையோ சைக்களிங்க் செய்வைதையோ விடுவதில்லை... முடியாது என்று நினைத்தால் முடியாதுதான் அதனால் முடியும் என்று நினைத்து நடங்கள் எனக்கு நடப்பது அதுவும் தனிமையில் என்றால் மிகவும் பிடிக்கும்.... இப்போது நடைக்கு என்று தனி நேரம் ஒதுக்குவதில்லை... நாயை கூப்பிட்டு இரண்டு முறை வாக்கிங்க் செல்வதும் உண்டு... வேலை நேரத்தில் செய்யும் வேலை காரணமாக நடப்பது ஒரு நாளைக்கு 5 ல் இருந்து 6 மைல்கள் இதனால் சுகர் மிகவும் குறைந்து இருக்கிறது,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்ய முடியும்போது செய்யாமல் இருக்கக்கூடாது எனக்கு சர்க்கரை பிபி கொழுப்பு போன்றவை இல்லை நடக்க சிரமம் தவிர எல்லாம்செய்ய முடிகிறதுநடக்கும்போது பாலன்சு இல்லாமல் போகிறது அதுவே பிரச்சனை

      நீக்கு
  10. பரமசிவம் சார் சொன்னது போல் செய்து பாருங்கள் நானும் அதை கடைபிடிக்க முயல்கிறேன்.

    நானும் நடை பயிற்சி, உடற்பயிற்சி, தியானம் , மெளன விரதம் எல்லாம் விட்டு விட்டேன். அலுப்பும், சலிப்பும் காரணம்.

    அதனால் கொஞ்சம் நடந்தாலும் கால்வலி வருகிறது.

    பதிலளிநீக்கு
  11. முன்பே நாம்சந்தித்டபோது உங்கள் கால்வலி பற்றி சொன்ன நினைவு

    பதிலளிநீக்கு
  12. எனக்கு முப்பது வயதிருக்கும் பொழுது படியேறவும், நடக்கவும் சிரமப்படும் வயதானவர்களை அதாவது 55+ல் இருப்பவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த வயதை நெருங்கும் பொழுது நாமும் இப்படி கஷ்டப்படுவோமோ? என்று நினைத்து பயந்து வேக வேகமாக படி ஏறுவேன்,இறங்குவேன். இன்றைக்கு நடக்க சோம்பலாக இருந்தது, டிமிக்கி கொடுத்து விடலாமா என்று நினைத்த பொழுது உங்களின் இந்த பதிவை படித்தேன். பயமாகி விட்டது, நடக்க கிளம்பி விட்டேன். அந்த வகையில் மோட்டிவேஷனல் பதிவுதான். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் மனவலிமையைப் பாராட்டுகிறேன் .சுப்ரபாதம் தமிழில் இருக்கிறதே ! மறைமலைநகரில் வாழ்ந்த பேராசிரியர் ஜெ.பார்த்தசாரதி மொழிபெயர்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன வலிமை எல்லாம் இல்லை சார் தவிர்க்க முடியாதவை அனுபவித்தே ஆக வேண்டும் என்னும் அறிவுதான் என்று நினைக்கிறேன்

      நீக்கு
  14. உங்களால் முடிந்த அளவில் தொடர்ந்து நடந்துவாருங்கள் அதுவே மனதுக்கு புத்துணர்சியை தரும்.

    பதிலளிநீக்கு
  15. சார் வீட்டைச் சுற்றி நடக்கின்றீர்களே அதுவே க்ரேட் சார். அதைத் தொடருங்கள். நடை என்பது புத்துணர்ச்சி சார். அதுவும் உங்கள் வீட்டில் தோட்டம் உண்டே சிறிதாக இருந்தாலும்...உங்களின் தன்னம்பிக்கை, மனோதைரியம் உங்களை வழி நடத்தும் சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. முன்பெல்லம் அரை மணியில் கடண்டதூரத்தை இப்போது ஒரு மணிநேரமெடுக்கிறது நடைஇப்போதெல்லாமொரு சவாலாக இருக்கிறது

    பதிலளிநீக்கு