ஒரு கதம்பம்
--------------------
அண்மையில் நண்பர்
நெல்லைத்தமிழன் என் பதிவு ஒன்றுக்கு கீழ்கண்டவாறு
பின்னூட்டம் எழுதி இருந்தார்
”நான் என் பையன் கொஞ்சம் சின்னவனாக இருந்தபோது, இருவரும் பூங்காவில் ஓடி (அப்போது நான் 5 வருடங்கள் வெயிட் குறைத்து என்னை ஓரளவு ஃபிட் ஆக வைத்துக்கொண்டிருந்தேன்) அவனை ஜெயித்து காணொளி எடுத்துவைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போ அவன் வேகத்துக்கு நடக்க முடியலை..ஹாஹா”
நானும் ஒரு தந்தை மகனுடன் ஓடி தோற்றதை அவனுக்கு பாடம் சொல்லிக்
கொடுக்கும் வாய்ப்பாக நினைத்து
இருந்ததை ஒரு பதிவாக்கி இருந்தது நினைவுக்கு வந்தது மேலும்நாம்குழந்தைகளிடம் பாடம்கற்பதையும் சித்தரிக்கும்
விதத்தில் ஒரு காணொளியையு ம் பகிர்கிறேன்
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு
ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும்
கவனம் கவனம் என்றே பதறினாள்
ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த தாய்.
இன்று நான் பள்ளியில் பந்தயத்தில்
வென்ற நாள் நானே முதல்வன், நானே முதல்வன்
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பா, உன்னையும் நான் வெல்வேன்
பந்தயத்தில் என்னோடு ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்
ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன்
உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன்
என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு
என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு
என்றே அப்பனும் மழுப்பிட
ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.
மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.
ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை.
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன்.
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில்
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை.
என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது,
நானே முதல்வன், நானே முதல்வன் என்றே
முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை
தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான்.
இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில்
விரிகிறது ஒரு முறுவல்,
வீழ்வது எழுவதற்கே
காணொளி
வாசகப் பெருமக்களில் பக்த கோடிகள் இதை ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்
28 2 2005 மறக்க முடியாதநாள் என் இரண்டாம்பேரன்
பிறந்ததினம் மாலை அப்போல்லோ மருத்துவமனை
சென்னை பிரசவத்துக்கு தயாராக என் மருமகள்
எல்லாம் சரியாக இருக்கிறது என்று
சொன்ன டாக்டர்கள் திடீரென குழந்தைகொடி
சுற்றி மூச்சு திணறல் இருப்பதால்
சிசெரியன் ஆப்பரேஷன்செய்ய
வேண்டுமென்றார்கள் நல்லபடியாய் நடக்க வேண்டி சரி என்றோம் சற்று நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு மகிழ்ந்தோம் அந்நேரத்தில் எல்லாம் சரியாகநடந்தால்
கர்ப்ப ரக்க்ஷகாம்பிகை கோவிலில் தங்கத்தொட்டிலில்
கோவில் சுற்றி வருகிறோமென்னும் பிராத்தனையும் இருந்தது அந்தபிரார்த்தனை நிறை வேறிய போது எடுத்த படங்கள் பழைய நினைவுகளுக்கு இழுத்துச்சென்றது
இரண்டாவது காணொளி பல முறை பார்த்துவிட்டேன். இரண்டு வருடங்களாகச் சுற்றிக் கொண்டு வருகிறது போலும்! முதல் காணொளியும் நன்று. உங்கள் பேரக்குழந்தையுடன் திருக்கருகாவூரில் தொட்டிலில் சுற்றி வந்தது கண்டு மகிழ்ச்சி. உங்கள் மனைவிக்குப் பிரார்த்தனைகளில் ஈடுபாடு அதிகம் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநம்மால் ஏதும்செய்ய முடியாது என்று டோன்றும்போது பிரார்த்தனை தைரியம் தரலாம்
நீக்குகாணொலி கண்டு மகிழ்ந்தேன் ஐயா
பதிலளிநீக்குமகிழ்ச்சி சார்
நீக்குஇரண்டு காணொளிகளுமே இப்போதுதான் பார்க்கிறேன். கவிதை நன்று.
பதிலளிநீக்குஒரு காணொளி நான் எடுத்தது மற்றது இரண்டு வருடமாகச் சுற்று கிறதாமே நான் இப்போதுதான்பார்த்தேன்
நீக்குபதிவு மிக அருமை.
பதிலளிநீக்குகவிதை அருமை.
இரண்டு காணொளிகளும் மிக நன்றாக இருக்கிறது.
திருக்கருகாவூர் பாடங்களும் நன்றாக இருக்கிறது.
கவிதை ஒரு தந்தையி மன பிரதிபலிப்பு வருகைக்கு நன்ரை மேம்
நீக்குபழைய புகைப்படம்பழைய நினைவு மேடம்
நீக்குகவிதை வழியில் வாழ்க்கைப்பாடம் அருமை ஐயா.
பதிலளிநீக்குகாணொளிகள் கண்டேன்.
நன்றி ஜி
நீக்குகவிதை நன்று. சிறப்பாக உள்ளது. வீழ்வது எழுவதற்கே என்பது தேர்தலில் வீழ்ந்த யாரையோ குறிப்பிடுவது போன்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குJayakumar
வீவது எழுவதற்கேயை மாற்றி முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று வாசித்தால் ஒரு வேளை தேர்தல் நினைவு வராதிருக்கலாம்
நீக்குகாகொளிகளைக் கண்டேன் அருமை.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குகாணொளிகளை..என்று வாசிக்கவும் ஐயா.
பதிலளிநீக்குவாசித்துவிட்டேன்
பதிலளிநீக்குகவிதையையும் கருத்தையும் மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநான் ரொம்ப எடையுடன் இருந்த காலம். முதல் நாள் யோகா மாஸ்டர், என்னை படுத்துக்கொண்டு ஒரு காலைத் தூக்கச் சொன்னபோது அரை அடிக்குமேல் தூக்கமுடியவில்லை. திடுமெனெ உடல் பயிற்சி, எடை குறைப்பு இவற்றில் ஈடுபாடு வந்து ஓரளவு ஃபிட் ஆக வைத்துகொண்டேன் (4-5 வருடங்களில்). அந்தக் காலங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன (சில வருடங்களுக்கு முன்புதான்).
நான் இந்தக் 'காணொளியை' ரசிக்கும் பக்தகோடிகளில் ஒருவனில்லை. ஆனாலும் இது முன்பே எனக்கு வந்திருக்கிறது.
உங்கள் பின்னூட்டம் ஒரு தந்தையர் தினக் கவிதையை தந்துவிட்டது நானே காணொளியை உங்களுக்கு அனுப்பி இருந்த நினைவு
நீக்குவீழ்வதெல்லாம் எழுவதில்லை.
பதிலளிநீக்குதங்கத் தொட்டிலா? பிரார்த்தனை சரி.. தொட்டில் யார் தரப்பிலிருந்து?
வீழ்வது எழுவதற்கே என்பது ஒரு ஊக்கத்துக்குத்தான் பணம் கொடுத்தால் தொட்டில் கோவில் தரப்பிலிருந்து ஏற்பாடு செய்வார்கள்
நீக்குமிகவும் அருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றுஇ சார்
நீக்குகவிதை மிக நன்றாக இருக்கிறது சார்.
பதிலளிநீக்குஉங்கள் பேரனின் காணொளி மற்றும் படங்கள் அருமை சார். இனிய நினைவுகள்.
துளசிதரன், கீதா
அந்த வயதிலேயெ பேரன் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்து விட்டான் வருகைக்கு நன்றி
நீக்குஇன்னும் திருக்கருகாவூர் போகலை. தங்கத்தொட்டில் அருமை !
பதிலளிநீக்குஅடுத்தமுறை போகலாம்
நீக்கு