Friday, June 7, 2019

லஞ்சம் சில எண்ணங்கள்


                             லஞ்சம்  சில எண்ணங்கள்
                             ------------------------------------------

 ஊழல்  லஞ்சம்
ஊழல் லஞ்சம்  குறித்து எழுத வேண்டும் என்றுநெடுநாளாக யோசனை இருந்தது ஆனால் எழுதி [பிரயோசனம் இல்லை என்றே தோன்றியது ஊழல் லஞ்சம் என்றால் உயர் மட்டத்தில்தான்  இருக்க வேண்டுமா  நம்மிடையே இருக்கும் பொதுவான குணம்தானே லஞ்சம் என்பது  நம்கலாச்சாரத்திலேயே ஊறிய ஒன்றுதானே கையூட்டு என்பது கடவுளுக்கு கொடுத்தால் அது வேண்டுதல்  மனிதனுக்குக் கொடுத்தால்அது லஞ்சம்  நம்மில்   யார்தான்லஞ்சம் கொடுக்காதவர் எந்த அரசு அலுவலகத்தில்எந்த வேலையாக  வேண்டுமானால் லஞ்சம்கொடுத்துதான் ஆகவேண்டும் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லைநான்கொடுக்க மாட்டேன்  என்று அடம் பிடித்தால் நம் வேலை நடைபெறாது வெறுமனே அலைகழிக்கப்படுவோம்   இதற்கு பதில்  கொஞ்சம் தண்டம் அழவெ நாம் தயாராய் இருக்கிறோம் பைக் அல்லது கார் ஓட்ட உரிமம் பெறுபவர்கள்  எல்லோருக்கும் தெரிந்தது தான்
 என்பேரனின்   திருமணம்நடந்தது அதற்கு மேரேஜ் சர்டிஃபிகேட் பெற  கட்டணம் ரூ 300 / ஆனால் அது கிடைக்கப்பெற கையுட்டு ரூ 500/  எனக்கு காவேரி தண்ணீர் வர கனெக்‌ஷன்பெற  பலஅண்டுகளுக்கு முன் ரூ 8000/கொடுக்கவேண்டும் என்றனர்  நானும்  அந்தப்பணத்தோடு  அது சார்ந்த அலுவலகத்துக்கு இரண்டு மூன்று முறை அலைந்தேன்   ஒரு வழியாக பணம் பெற ஒப்புக்கொண்டனர்  கையூட்டு வாங்க ஒரு நூதன வழி அறிந்தேன் கைபேசியில் எவ்வளவு பணம் தரர வேண்டும் என்று குற்ப்பிடுகின்றனர் ரூ 8000 உடன்  அவர்களுக்கான பண்மும் சேர்த்து   கைபேசியில் காட்டுகின்றனர் அதை செலுத்த நான் ஒப்புக்கொண்டபிறகே நமக்கு ரசீதுக்கான வழிகள்பிறக்கின்றன
 2011 ம் ஆண்டு அன்னா ஹசாரே ஒரு மாபெரும் உண்ணா விரதப் போராட்டம்நடத்தினார் லோக் ஆயுக்த  மற்றும் லோக்பால்  போன்ற அமைப்புகள் கோரி யது  அந்தப் போராட்டம் அந்தப் போராட்டம்குறித்து அறிந்த பலரும்   அதற்கு ஆதரவு தெரிவித்தனர் உயர்மட்டத்து ல்ஞ்ச லாவண்யங்கள் மட்டுமே முன்   நிறுத்தப்பட்டன ஆனால் தினசரி கண்முன்னே நடந்தேறும் கைய்யூட்டுகளை  விசாரிக்க யாராவது  புகார் கொடுக்க வேண்டுமாம்   கடவுளுக்கே லஞ்சம்கொடுக்கும் நாம்  இம்மாதிரி சிறிய குற்றங்களுக்கா புகார்கொடுப்போம்நம்காரியம் நடக்க  நாம்கொடுத்துதான்  தீரவேண்டும் வாழ்கையில் இதெல்லாம் சகஜம் என்று ஏற்றுக் கொள்வோம்
பெரிய அளவில் பணம் பெறுபவர்களையே நாம் குறி வைக்கிறோம்   அதுதான்  நம்கண்களுக்கு  குற்றமாகத் தெரிந்தது  
நாம் தினப்படி காணும்லஞ்சங்கள் பெரிதாய்  தெரிவதில்லை உயர் அதிகாரிகளே  ஊழல் செய்கிறார்களென்று சமாதானமடைவோம் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ  நடந்தாலும் திருட்டு என்பது திருட்டுதான் அதேபோல் எந்த அளவில்  ஆனாலும்லஞ்சம் லஞ்சமே எனக்கு இது தெரியாமல் ஒரு பதிவு எழுதி இருந்தேன்  இது லஞ்சமா என்றுகேட்டு  நான் சில மாதங்கள் படிப்பை நிறுத்தியதால் தடைபட்ட என் படிப்பை தொடொர நிகழ்ந்த சம்பவஙகள்  எனக்குள் சிலசந்தேகங்களைக் கிளப்பியது  அதுவே பதிவு படிக்க இங்கே சொடுக்கவும்   

32 comments:

  1. உலகின் முதல் லஞ்சம் கடவுளுக்கு நாம் உடைத்த சிதறு தேங்காய்தான் ஐயா.

    மக்கள் நல்ல பிள்ளைகளை வளர்க்க உறுதிமொழி எடுத்தால் மட்டுமே லஞ்சம் ஒழியும். இன்று எடுத்தால் அடுத்த இருபது வருடத்தில் ஒழித்து விடலாம்.

    இணைப்புக்கு செல்கிறேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. /மக்கள் நல்ல பிள்ளைகளை வளர்க்க உறுதிமொழி எடுத்தால் மட்டுமே லஞ்சம் ஒழியும். இன்று எடுத்தால் அடுத்த இருபது வருடத்தில் ஒழித்து விடலாம்\நம்பிக்கை இருக்கிறதா ஜி

      Delete
    2. தேங்காயைச் சிதறு காயாக உடைப்பதின் தாத்பரியமே வேறே! நம் தலையாகத் தேங்காயை நினைத்துக் கொண்டு நம் மனதின் ஆணவம், அகங்காரம் அனைத்தும் சிதறிப் போகவேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டு அதற்காக உடைப்பதே சிதறு காய்! அதை லஞ்சம் எனச் சொல்வது சரி இல்லை என நினைக்கிறேன். அதோடு எந்தக் கடவுளும் நீ எனக்கு இதைக் கொடு எனக் கேட்பதில்லை/கேட்டதும் இல்லை/ கேட்கப் போவதும் இல்லை. மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு வழிக்குக் கடவுளை ஏன் குற்றம் சொல்லணும்?

      Delete
    3. இதிலிருந்து புரிவது என்ன சிலசெய்கைகளை எத்தனை வித்தியாசமாய் புரிந்து கொள்கிறார்கள்உங்களிடம் எல்லாவற்றுக்கும் ஒரு தாத்பரியம் இருக்கும் கடவுள் கேட்ப்தில்லை நாம்தான் கொடுக்கிறோம் அதைத்தான் கோவிலில் கொடுத்தால் வேண்டுதல் வெளியே அதுவே லஞ்சமாகிறது

      Delete
    4. ஒன்றுமே கொடுக்க முடியாதவர்கள்/இயலாதவர்கள்/மனம் இல்லாதவர்களுக்கும் இறைவன் அருள் தந்து கொண்டு தான் இருக்கிறான். கடவுளுக்கு நாமாகத் தான் எல்லாம் செய்கிறோம்/கொடுக்கிறோம்.

      Delete
    5. என்னவெல்லாம் நம்பிக்கை

      Delete
  2. அனைவரும் "இந்தியன்" பட தாத்தாவாக மாற முடியுமா என்னா...?

    ReplyDelete
    Replies
    1. திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் இந்தியன் தாத்தா

      Delete
  3. 'நீ சமத்தா சாப்பிட்டயானா, அப்பா உனக்கு சாக்லேட் வாங்கித்தருவேன்' என்பதுபோல சொல்லி, குழந்தைகளிடம் 'லஞ்சம்' உணர்வைத் தூண்டுவதே நம் இந்தியத் தனம்தான். 'லஞ்சம்' நம் உள்ளத்தில் ஊறியது.

    சொந்தக் குழந்தைகிட்டயே லஞ்சம் கொடுக்க நினைக்கும் நாம், கடவுளுக்கும் லஞ்சம் கொடுப்பது அதிசயமா?

    ReplyDelete
    Replies
    1. லஞ்சம் நம் ரத்தத்தில் ஊறி இருக்கிறடு என்று தான் நானும்சொல்லி இருக்கிறேன்

      Delete
    2. "ஆச்சியோட இரும், அம்மா கடைக்குப் போட்டு வரேக்க அருண் ஐஸ்கிறீம் கொண்டு வாறேன்" என்றும் குழந்தைகளிடம் 'லஞ்சம்' ஊட்டுவதும் நம் அம்மாக்களே! ஆதலால், 'லஞ்சம்' தாராளம்.

      Delete
    3. லஞ்சம் வீட்டில் உருவாவது அல்ல என்றே தோன்றுகிறது கடவுள் பெயரைச் சொல்லி ஒன்றைக் கொடுத்தால் ஒன்று கிடைக்கும் என்னும் நம்பிக்கையில்தான் உருவாகிறதோ

      Delete
  4. சிறிய அளவிலும் பெரிய அளவிலும் லஞ்சம் இருந்துகொண்டுதான் இருக்கும். சாணக்ய நீதியிலேயே லஞ்சத்துக்கு தண்டனை எல்லாம் குறிப்பிட்டிருப்பார்! லஞ்சம் பற்றி நான் கூட ஒரு பதிவு எழுதி இருந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை நிலை அதுதானேநமக்கு பழக்கப்பட்டு விட்டது

      Delete
  5. ***என்பேரனின் திருமணம்நடந்தது அதற்கு மேரேஜ் சர்டிஃபிகேட் பெற கட்டணம் ரூ 300 / ஆனால் அது கிடைக்கப்பெற கையுட்டு ரூ 500/ எனக்கு காவேரி தண்ணீர் வர கனெக்‌ஷன்பெற பலஅண்டுகளுக்கு முன் ரூ 8000/கொடுக்கவேண்டும் என்றனர் நானும் அந்தப்பணத்தோடு அது சார்ந்த அலுவலகத்துக்கு இரண்டு மூன்று முறை அலைந்தேன் ஒரு வழியாக பணம் பெற ஒப்புக்கொண்டனர் கையூட்டு வாங்க ஒரு நூதன வழி அறிந்தேன் கைபேசியில் எவ்வளவு பணம் தரர வேண்டும் என்று குற்ப்பிடுகின்றனர் ரூ 8000 உடன் அவர்களுக்கான பண்மும் சேர்த்து கைபேசியில் காட்டுகின்றனர் அதை செலுத்த நான் ஒப்புக்கொண்டபிறகே நமக்கு ரசீதுக்கான வழிகள்பிறக்கின்றன***

    நாம் செய்கிற "பாவத்தை" வெளீயே சொல்ல ரொம்ப தைரியமும் பக்குவமும் வேணூம், சார். அது உங்களூக்கு இருக்கு.

    அமெரிக்காவிலெல்லாம் இதுபோல் இல்லை சார். லைசென்ஸ் வாங்குறாதுக்கு, சான்றீதழ் வாங்க, கனெக்சன் கொடுக்க னு எதுக்கெடுத்தாலும் லஞ்சம்னு. அதுக்காக அமெரிக்கா யோக்கியமான நாடு அங்கே வாழ்பவர்கள் எல்லாம் யோக்கியம்னு சொல்ல வரவில்லை. டெய்லி வாழ்க்கையில் இதுபோல் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. சட்டம் கொஞ்சம் டேஞெரசாக செயல்படுத்தப் படும். யாரையும் பிடிச்சு உள்ள போட தயங்க மாட்டாங்க. ட்ரம்ப் மட்டும் ப்ரசிடென்ட் ஆக இல்லைனா அவரையும் தூக்கி உள்ள வச்சிருவாங்க.

    நானும் இந்தியாவில் வாழ்ந்தால் நீங்க செய்ததைத்தான் செய்யனும். என் உடன் பிறந்த்வங்க, அம்மா, அப்பா எல்லோருமே உங்களப் போல்தான் கொடுக்க வேண்டியதுக்கு கொடுத்து வாழ்றாங்க. நம்ம என்ன சிஸ்அத்தில் இருக்கோம் என்பதைப் பொருத்துதான் நான் சுத்தமாக வாழ முடியும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் நோ லன்ச் இஸ் ஃப்ரீ என்பது வழக்கத்தில் வந்து விட்டது

      Delete
  6. இப்போ எலக்சன் சமயத்தில் வேலூரில் எத்தனையோ கோடிகள் பிடிபட்டதுனு சொல்றாங்க. இதே பணம் மக்களூக்கு கொடுக்கப் படுது. இந்தளவுக்கு கருப்புப் பணம் இருக்கு. மக்கள் ஆளூக்கு 500னு வாங்கி வச்சுக்கிறாங்க.

    இதுபோல் கொடுக்கப் படும் பருப்பு பணத்தை ஒரு உண்டியலில் போட்டா 1000 கோடி க்கு மேல் தேரும்- ஒரு தமிழ்நாட்டு எலக்சனில். அதை வைத்து நதி இனைப்பு போல் பெரிய ப்ராஜெக்ட் செய்து இதே மக்களூக்கு உதவலாம். இதுபோல் கருப்பு பணத்தை மக்களூக்கு பிச்சை போடாமல் தண்ணீர் பிரச்சினையை சமாளீப்பதுப்ல்ல் ஏதாவது நல்ல காரியம்கூட செய்யலாம் னு நான் "பைத்தியம்' போல் யோசிப்பதுண்டு.

    ReplyDelete
  7. நல்லது செய்ய மாத்தி யோசிக்கணுமே

    ReplyDelete
  8. சார் இந்த லஞ்சம் என்பது நம் வீட்டிலேயே தொடங்குகிறது. குழந்தைகளிடம்...சாப்பாடு, தேர்வு என்று...அதை ஊக்கப்படுத்தல் என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறோம் அதே போலத்தான் நீங்கள் சொல்லியிருக்கும் இறைவனுக்குக் கொடுப்பதும்.

    நான் என் மகனுக்கு எந்த விதத்திலும் அது வாங்கித் தருகிறேன் இதைச் செய் அதைச் செய் என்று சொன்னதில்லை. அவன் ஃபெயிலே ஆனாலும் கவலைப்பட்டதில்லை சார். அது போல கோயிலிலும் நான் இது வரை எந்தத் தட்டிலும் பைசா போட்டதில்லை. ஒன்லி ப்ரேயர் என்று மட்டுமே.

    உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் கோயில் வாசலில் இருக்கும் யாசகர்களில் மிகவும் நலிந்தவர் யாரேனும் இருந்தால் சரி அவர்கள் கேட்பதை ரூபாயாகப் போடுவதை விட சாப்பாடு நாமே வாங்கிக் கொடுக்கலாம் என்று சொன்னால் இல்லை சாப்பாடு வேண்டாம் பைசா/ரூபாயாகப் போடுங்க என்று சொல்கிறார்கள் பலர். காரணம் அங்கு நலிந்தவர்கள் பலர் கூட்டமாக அவர்கள் பின்னால் ஒரு தலைவன்/தாதா அவனுக்கு அல்லது அவளுக்கு கையூட்டு கொடுக்க வேண்டும். இதைத்தான் நான் கடவுள் படத்தில் பாலா சொல்லியிருப்பார்.

    என் மகனுக்கு வீட்டில் கூடப் பழக்கப்படுத்தாத நான், யாரேனும் பைசா அல்லது ரூபாய் அவனுக்குக் கொடுத்தால் கூட வாங்கக் கூடாது என்று சொல்லி வீட்டில் கடைபிடித்த நாங்கள் அவனுக்கு லைசென்ஸ் வாங்கும் போது லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல். நேரடியாக நாம் ஆர் டி ஓ ஆஃபீஸ் சென்று வாங்க முடியாது.

    அது போலத்தான் பல அரசு அலுவகங்களில். மகன் என்னிடம் பல கேள்விகள் கேட்டான். என்னிடம் பதில் இல்லை.

    இன்று என் மிக மிக மிக நெருங்கிய உறவினர் ஒரு நல்ல அக்காடமி தொடங்கி அதில் ஃபெய்யிலாகும் மாணவர்களுக்கும் படிக்க ஆர்வம் இல்லாதவர்களுக்கும் நல்ல தொழில் கற்றுக் கொடுக்கலாம் என்று தொடங்கிட அதுக்கு அரசின் ரெஜிஸ்ற்றேஷன் வேண்டும் என்பதால் முனைய அதற்குப் பல லட்சங்கள் லஞ்சம் கேட்க இவர் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல பல பிரச்சனைகள் எழுந்து இன்று அவர் தவித்துக் கொண்டிருக்கிறார் குடும்பமும் கூட.

    இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை. லஞ்சம் ஒழிக்க முடியுமா என்றால் கஷ்டம் என்றே தோன்றுகிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான கலாச்சாரத்தில் இது சத்தியமென்றே தோன்றுகிறது அயல் நாடுகளில் இல்லை என்கிறர்கள் நம் வாசகர்கள் சிலர்

      Delete
  9. பிள்ளைகள் படிக்கவேண்டும், சொன்ன பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காகக்கூட நாம் அவர்கள் கேட்பதை வாங்கித் தருகிறோமே ஐயா. இதுவும் இந்தப் பட்டியலில் சேர்கின்றதே.

    ReplyDelete
    Replies
    1. இதற்கு அது என்றாகி விட்டால் அது லஞ்சமே

      Delete
  10. நாம் என்னதான் செய்தாலும் இதனை விட்டொழிக்கமுடியுமா என்பது சந்தேகமே ஐயா. அந்த அளவிற்கு புறையோடியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அத்சைத்தான்லஞ்சம்நம்கலாச்ச்சாரத்திலேயே இருக்கிறதுஎன்கிறேன்

      Delete
  11. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமே

    ReplyDelete
  12. இந்த லஞ்சம் என்பது அதிகமாக மேலோங்கி நிற்பது இந்தியாவிலதான் என நினைக்கிறேன்ன்.. இதை ஆர்தான் ஆரம்பித்து வைத்தார்களோ..

    ReplyDelete
  13. நன்கு யோசித்துப்பாருங்கள்கலாச்சாரக் கேடு என்பது தெரியும்

    ReplyDelete
  14. அடிமட்டத்திலேயே ஆட்டம் கண்டு விட்ட லஞ்சம் நிறைந்த இடங்கள் எங்கெங்கும். ஒவ்வொருத்தரும் ஒரு முறை கூட தனக்கென சின்ன சாதகத்திற்கு சின்ன சலுகைகளை வழங்காமல் இருக்க முனைப்புடன் செயல்பட்டால் சின்ன மாற்றம் வரும்.

    ReplyDelete
    Replies
    1. லஞ்சம் ஒழிப்பது க்டினம் அது நம்ரத்தத்தில் ஊறிய ஒன்று திரு ஞானசம்பந்தத்தின்பின்னூட்டம்பாருங்கள்

      Delete
  15. நீங்கள் சொல்வதுபோல் லஞ்சம் நம் ரத்தத்தில் ஊறியிருக்கிறது . நான்கு உபாயங்களுள் ஒன்று தானம் ( லஞ்சம் ) எனப் பழங் காலத்திலேயே கண்டுபிடித்திருக்கிறார்கள் . கடவுளுக்குக் காணிக்கை தருவதாக வேண்டிக்கொள்வது பக்தரின் குற்றம் .

    ReplyDelete
  16. சாம பேத தான தண்டத்தில் தானம் லஞ்ச்த்தை குறிக்கிறது என்று நினைத்துப்பார்க்கவில்லை ஐயா நன்றி சார்

    ReplyDelete