ஐஸ்க்ரீமும் ஜாஃப்ஃபியும்
-----------------------------------------
சிலநாட்களுக்கு
முன் ஒரு பின்னூட்டத்தில் நெல்லைத் தமிழன் பதிவில் ஏன் மாமரம் பற்றி எழுத வில்லை என்று கேட்டிருந்தார்
இந்த ஆண்டு எங்கள்
வீட்டு மாவின் கொடை அதிகமாய் இருந்தது ஊறுகாயாக(கல்யாண
மாங்காய் , ஆவக்காய் ) போன்று பலவும் போட்டும் கொடுத்தும் காய் பறிப்பவரின் பங்கும்
பாதிக்கு மேல் போயிற்று தினமும்மாம்பழம்சாப்பிட்டு
அலுத்து விட்டது இது தவிர கச்சா மாங்கோ ஜூஸாகவும் மாம்பழ ஜூசாகவும் செய்து சாப்பிட்டோம் சரி ஒரு மாற்றாக ஏதாவது செய்யத் தோன்றியது ஏன் மாம்பழ ஐஸ் க்ரீம்செய்யக்கூடாது என்று தோன்றவே செயலில் இறங்கினேன்முதலில் எனக்கு
ஐஸ் க்ரீம் செய்யத்தெரியாது எல்லாம் செய்து பார்ப்போமே என்று தோன்றவே எனது ரெசிப்பி இதோ
பாலை நன்கு சுண்டவிட்டுக்
காய்ச்சவும்தேவையான அளவு சர்க்கரையும்சேர்க்கவும்மாம்பழத்தின் சதைப்பாகத்தை ஸ்கூப்
செய்து எடுத்து மிக்சியில் அரைக்கவும் நன்கு விழுதாகும்போதுசுண்ண்டக்காய்ச்சின பாலையும்சேர்த்து அரைக்கவும் விழுதை ரெஃப்ரெஜிரேட்டர் ஃப்ரீசரில் வைக்கவும் சிறிது நேரம்கழித்து
எடுத்தால் ஐஸ்க்ரீம் ரெடி இதில் பாலைகாய்ச்சுவதும்
சர்க்கரை சேர்ப்பதும் அவரவர் சுவைக்கு ஏற்ப
இருக்கும் நான்செய்தது ஐஸ்க்ரீம்டேஸ்ட்
இருந்தது !!!!!
கீதா சாம்பசிவத்தின் மொழியில் இன்னொரு திப்பிசம்
காஃபி தெரியும் ஜாஃபீ தெரியுமா மாம்பழம் கொடுத்த வீட்டில் இருந்து பலாப்பழம்கொடுத்தார்கள் என் திப்பிசம் பலாக்கொட்டையில் இருந்து உருவாயிற்று பலாக்கொட்டையை
மேல் தோல் எடுத்து பிறகு சிறிது சிறிதாய்
நறுக்கி எடுக்கவும் அதை நன்கு வறுக்கவும்
எண்ணை ஏதும்வேண்டாம்(காஃபிக் கொட்டையை வறுப்பதுபோல்) வறுத்தெடுத்ததை காஃபிப்பொடிபோல்
பாவித்து மிக்சியில் அரைக்கவும் காஃபி செய்வதைபோல் செய்யவும்
என் வீட்டில் நாங்கள்பெர்கொலேட்டர் உபயோகிப்போம் பின் காஃபி போல் செய்தால் ஜாஃபி ரெடி ஆனால் இதுகாஃபி சுவைதராது ஒரு மாற்றத்துக்கு செய்தது சிக்க மகளூரில் யாரோ செய்தார்களாம் நானும்
செய்தேன் காஃபியால் உண்டாகும் கஃபைன் போன்றவை இல்லாத ஒரு பானம்செய்து பார்க்கலாமே
என் வீட்டின் பக்கவாட்டில் சுமார் 15 மீட்டர் நீள
பாதை இருக்கிறது நான் இப்போதெல்லாம் அங்குதான்
நடை பயில்கிறேன் சுமார் முக்கால் மணியிலிருந்து ஒரு மணிநேரம்வரை அப்போது தினமும் ஒருபூனைக் குட்டி எங்கள் தோட்டத்துக்குவந்து எதையோ பிடிக்கமுயலும்அதைப்
பார்ப்பதிலும் நான் நேரம் கழிப்பதுண்டு என்னவோ
தெரியவில்லை அது தினம்வரும் சுமார் பத்து பதினைந்து
நிமிடம் இருக்கும் பின் மாமரம்
ஏறி எங்கோ போய்விடும் சின்னக்குட்டிதானே
பயம் தெரியாதது அதைப் படமெடுத்தேன் அதுவே இங்கு கீழே பூனைகள் இடங்களின் விசுவாசி நாயைபோல் எஜமானர்களின்
விசுவாசி அல்ல என்றுகேள்விப்பட்டிருக்கிறேன்அதிராவும் துளசி டீச்சரும் சொல்லலாம் சரியா என்று
vaazkkai paatam
tதொட்டி அருகே பூனை தெரிகிறதா |
எதையோ நோட்டம்விடுகிறது வாழ்க்கை பாடம் ஒரு காணொளியில் |
செய்முறை சுலபமாக தெரிகிறது ஐஸ்கிரீம் புகைப்படத்தை காணவில்லையே...
பதிலளிநீக்குபுகைப்படத்துடன் வெளியிடும் எண்ணமிருக்கவில்லை வருகைக்கு நன்றி ஜி
நீக்குதிப்பிசம் வித்தியாசம்தான். ஆனால் என்ன சுவையில் / வாசனையில் வந்தது என்று நீங்கள் சொல்லவில்லையே...
பதிலளிநீக்குகாஃபி போலோ சாய் போலோ சுவை இல்லை எந்தஎதிர்பார்ப்புமில்லாவிட்டால் ருசித்துக் குடிக்கலாம் ஒரு மாற்றத்துக்குதானே
நீக்குநாயளவு நன்றியில் சிறந்தது இல்லை பூனைகள் ... ஆயினும் அன்பானவை. ரசிக்கலாம் அதன் குறும்புகளை! அந்தப் பூனைக்குட்டி மிக அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குதினமும் என் தோட்டத்துக்கு வந்து வருகை பதிவு செய்யும் அது சோ க்யூட்
நீக்குபூனைகள் இடங்களின் விசுவாசி. நானும் கவனித்துள்ளேன் ஐயா.
பதிலளிநீக்குஆனால், ஆட்களின் விசுவாசி அல்ல, நாய்களைப்போல். இதையும் கவனித்திருக்கிறீர்களா?
நீக்கு@முனைவர் பெண்பூனையாயிருந்தால் இனவிருத்திக்கும்நம் இடம் தானாகும்
நீக்கு@நெ த, நனுமப்படித்தான் நினைக்கிறேன்
நீக்குகாணொளி நல்ல பாடம். ஜாஃபீ பெயர்க்காரணம்?? ஏன் லாஃபி என்று இருக்கக்கூடாது? சுவை பற்றி ஒன்றும் கூறவில்லை. அது கூழ் மாதிரி இருந்தது அல்லவா?
பதிலளிநீக்குJayakumar
ஜக் ஃப்ரூட் கொட்டையிலிருந்து செய்ததால் ஜாஃபி என்று பெயர்அது சேர்க்கும் பொடியின் அளவைப் பொறுத்தது ஒருட்ரிங் அவ்வளவுதான் சிக்க மகளூரில் செய்து வியாபாரமாக்குகிறார்களாம்
நீக்குசார்... மாம்பழ ஐஸ்கிரீம் அருமை. ஆனால் ஐஸ்கிரீமுக்குள்ள வழுவழுப்பு வருமா?
பதிலளிநீக்குபெங்களூரில் பலாப்பழம், வித விதமான மாம்பழங்கள்னு நல்லாவே நான் இப்போ எஞ்சாய் பண்ணுகிறேன். சென்னைல, 5 சுளை பாக்கெட் 50 ரூபாய்னு கொள்ளையடிக்கறாங்க. மாம்பழமும் கிலோ 80-100 ரூபாய்னு கூசாமச் சொல்றாங்க. இங்க வந்து மல்கோவா, அல்ஃபோன்ஸா, இன்னும் இரண்டு மூன்று வெரைட்டி வாங்கினேன்.
மம்பழ ஐஸ் க்ரீம் நன்றாகவே இருந்தது வழுவழுப்புமிருந்தது பால் இல்லாவிட்டால் அல்லது குறுக்க சோம்பல்பட்டால் மில்க் மெய்ட் உபயோகிக்கலாம் என்விட்டு மாம்பழம் நாட்டு வரைட்டி
நீக்குகாஃபி, டீ எனக்கு எப்போவுமே பிடிக்காது. அத்னால் ஜேக்ஃப்ரூட் கொட்டையில் செய்த டீயும் எனக்கு விருப்பமில்லை.
பதிலளிநீக்குஅது சரி...மாமரம் காய்களோடு படங்கள் எங்க? இல்லை மாம்பழம், ஊறுகாய் படங்களும் எங்க?
நடப்பதேப்ரசனை இந்தகதியில்படம் எல்லாம் எடுத்து எங்கே போடுவதுமேலும் இது ஜஸ்ட் ஃபர் இன்ஃபர்மேஷன்
நீக்குசார் கலக்கறீங்க!!! அதான் ஐஸ்க்ரீம், ஜாஃபி என்று இது கலக்கல்தானே!!!
பதிலளிநீக்குமாம்பழ ஐஸ்க்ரீம்...குல்ஃபியும் செய்யலாம் சார். இதனுடன் கொஞ்சம் பாதாம், முந்திரி எல்லாம் அரைத்து போட்டுச் செய்தா குல்ஃபி!!
ஜாஃபி மணம் எப்படி இருந்தது சார்? டிக்காக்ஷன் எப்படி திக்கா வருமா? வீட்டில் பலாக் கொட்டை இருக்கிறது அதான் முயற்சி செய்யலாமே என்று.
கீதா
ஜாஃபிக்கு மணமேது மில்லை டிகாக்ஷன் நான்பெர்கொலேட்டரில் இட்டபோது திக்காகவே வந்தது
நீக்குபூனை ரொம்ப அழகாக இருக்கிறது. நன்றாகப் பழகிய பூனை என்றால் நம்மிடம் நன்றாகவே ஒட்டிக் கொள்ளும். பைரவர் அளவு இல்லை என்றாலும் அன்பாக இருக்கும் சார். ஆனால் வெளியில் உலாத்தும் வேலை உண்டு. பைரவர்கள் வீட்டில் வளர்க்கப்படுபவை என்றால் வெளியில் போவது வெரி ரேர். நம்மை விட்டுச் சென்றுவிட மாட்டார்கள். எனக்குப் பூனைகளும் ரொம்பப் பிடிக்கும். செம விளையாட்டுக் காட்டும்..
பதிலளிநீக்குகீதா
ஒரு முறை பக்கத்டு வீட்டில் வளர்த்தபூனை எங்கள் வீட்டில் மேலே ஒரு இடுக்கில் குட்டிகலபோட்டு விட்டது அதைத் தேடிஅவர்கள் வந்தது எல்லாம் ஒரே தமாஷ்
நீக்குஅருமையான காணொளி சார். நல்லதொரு பாடம் வெரி பாசிட்டிவ் லெசன்...அதில் வரும் கடைசி வரி போல் எவ்ரி டே இஸ் எ கிஃப்ட்!!!! மிக மிக உண்மை ரசித்தேன் சார்.
பதிலளிநீக்குகீதா
பார்த்து பார்த்து காணொளிகள் தேர்வு செகிறேன் ரசித்ததற்கு நன்றி
நீக்குஐஸ்கிறீம் கலக்கல்.
பதிலளிநீக்குசெய்து பாருங்களேன்
நீக்குஐயாவிற்கு வணக்கம். பதிவில் இணைத்திருந்த காணொளி மிகவும் அருமை. வாழ்வில் முக்கியத்துவம் அளிக்க வேண்டுப்பட வேண்டிய விடயங்களை விளக்குகிறது..ஊறுகாய் படத்தைக் காணவில்லையே :(
பதிலளிநீக்குசமையல் குறிப்புகாஇ நான் பொதுவாகபடம் எடுத்துப் போடுவதில்லை காணொள் ரசித்ததற்கு நன்றி
பதிலளிநீக்குமாம்பழம் சாப்பிட்டும் அலுக்குமோ? எங்கள் வீட்டிலும் கறுத்தக்கொழும்பு மாமரம் நின்றது... சுவையோ கற்கண்டு... இறைய சாப்பிட்டாலும் அலுக்கவில்லை.
பதிலளிநீக்குபூஸ் குட்டி அழகு... வீட்டுக்குத் தூக்கி வாங்கோ.
பூனைக்குட்டிகள் அழகு...
பதிலளிநீக்குகாணொளி அருமை...
குட்டியாய் இருக்கும்போது கழுதையும் அழகுதான்
நீக்குகாணொலி அருமை
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குமிகச் சுவையான வாழ்க்கைப் பாடம் ; பகிர்ந்தமைக்கு நன்றி .
பதிலளிநீக்குபல பகிரப்படும் விஷயங்கள் கண்டு கொள்ளாமல் போவதும் உண்டு சார் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு