திங்கள், 17 ஜூன், 2019

பகிர்வுகள் சில



                                            பகிர்வுகள் சில
                                          --------------------------


கம்பனி சேர்மன்  வாராந்திர மீட்டிங் ஒன்றில் பங்கு பெறும்போது  ஒரு தொழிலாளி  முக்கியமான ஒரு பிரச்சனையைக் கிளப்பினார்  சுத்தம் சுகாதாரம்  என்று பேசும் போது அதிகாரிகளின் கழிப்பிடங்கள் சுத்தமாகவும் தொழிலாளிகளின்   கழிப்பிடங்கள்நன்றாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்  சேர்மன் ஒரு உயர் அதிகாரியிடம் சரிசெய்ய எத்தனை நாள் பிடிக்கும் என்று கேட்டார் உயர் அதிகாரி ஒரு மாதத்தில் சரிசெய்யலாமென்றுகூறினார்
 சேர்மன்  ஒரு நாள்போதும் என்று சொல்லி என்னிடம் ஒரு கார்பெண்டரை அனுப்புங்கள என்றார் அடுத்தநாள் வந்த கார்பெண்டரிடம் கழிப்பிட போர்டுகளை இடம்மாற்றச் சொன்னார்  தொழிலாளிகள் கழிப்பிடத்தில் அதிகாரிகள் என்னும் போர்டும் அதிகாரிகள் கழிப்பிடத்தில் தொழிலாளிகள் என்னும் போர்டும் இடம் மாறின வாராவாரம் போர்டுகளை மாற்றச்சொல்லி உத்தரவும்பிறப்பிக்கப்பட்டத்து
மூன்று நாட்களில்  இரண்டு கழிபிடங்களும் ஒருபோல மின்னின  லீடர்ஷிப் என்பது அதிகாரியாய் இருப்பதை விட முக்கியமானது
 இதில் இருக்கும் படிப்பினை
- _Problem identification requires critical thinking_
*But*
- _Problem solution requires creative thinking_


உலகத்திலேயே சிறந்த ஜோடி
செருப்புதான்
ஒன்றை பிரிந்தால் மற்றொன்று
வாழவே வாழாது

மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!

எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!!

இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்..

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்.

 டெல்லியில்  எந்தக்  காரை எடுத்துப்போவதுஎன்று தெரியாதவர்  அதிகம்
 துபாயில் எந்தமனைவியை  கூட்டிப் போவது என்பது தெரியாதவர் அதிகம் 
லா வெகாசில்  யாருடைய மனைவியை  அழைத்துபோவது என்பதே சங்கடம்   இடத்துக்கு ஏற்ற மாதிரிபிரச்சனைகள்
 பெங்களூரில்  எந்த சாலையில் போவது என்பதே  கேள்விக்குறி 





மைசூரில் இந்த சுவாமிஜிகளின் ஆசிரமத்துக்குச்சென்றிருக்கிறேன் ஆனால் அப்போது இது பற்றி தெரிந்திருக்கவில்லை  ஒரு வித்தியாசமான சாமியார் ஆர்நிதாலஜ்ஸ்ட்  கோமதி அரசு இதை ரசிப்பார் என்று நம்புகிறேன்  
கீழே காணும்   வீடியோ ஒரு பாட்டு பாடுபவரால் ஈர்க்கப்பட்டேன் பாடறியேன் ராகமறியேன்  தாளம் அறியேன் இருந்தும் பாட்டுஈர்த்தது நீங்களும்  ரசிப்பீர்கள் 


  
தந்தையர் தின நினைவாக எந்தந்தை +சிற்றன்னை  சேர்ந்தெடுத்தபுகைப்படம் 1943 ல் எடுத்தது  பதிவிடுகிறேன்

தந்தை தின நினைனவாக 



               




18 கருத்துகள்:

  1. முதல் சம்பவத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிரச்னைக்குத் தீர்வு சம்பவம் கவர்ந்தது. மற்ற பகிர்வுகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு வித்தியாசமான சாமியார் ஆர்நிதாலஜ்ஸ்ட் கோமதி அரசு இதை ரசிப்பார் என்று நம்புகிறேன் //

    ரசித்தேன்.

    அவர் இசையின் மூலம் நோய்களை தீர்ப்பதை அறிந்து இருக்கிறேன். இப்போது பறவைகளை வளர்ப்பதை அவைகள் அவரை நேசிப்பதை இப்போது அறிந்து கொண்டேன்.

    தந்தை தின நினைவு படம் அருமை.

    சிறுவன் மிக இனிமையாக பாடுகிறான்.

    பதிலளிநீக்கு

  3. முதல் சம்பவம் அருமை இதுவரை படித்திராதது

    பதிலளிநீக்கு
  4. கழிப்பறை தீர்வு அருமை ஐயா.
    இரண்டு காணொளிகளும் ரசிக்க வைத்தன...
    தந்தையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் /- _Problem identification requires critical thinking_
    *But*
    - _Problem solution requires creative thinking_/ வருகைக்கு நன்றி ஜீ

    பதிலளிநீக்கு
  6. மாமா பொண்ணு உப்புமா...அதிகமாக ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. கழிப்பறை தீர்வு அருமை.. புத்தி நுட்பம்!..

    மற்றபடி கதம்பமான செய்திகள் அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  8. முதல் நிகழ்ச்சியை ரசித்தேன்.

    என் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. கம்பெனிக்கு 'தேச அரசியல்' காரணமாக ஒரு பிரச்சனை வந்தது. 'வரவு' மிகவும் குறைந்ததால் ஒவ்வொரு டிவிஷனிலும் 40 பேரை ஆட்குறைப்பு செய்வது என்ற முடிவு. அதற்காக கூட்டப்பட்ட டிவிஷனல் ஜி.எம். மீட்டிங்கில், ஒவ்வொருவரும் 'ஏன் ஆட்களைக் குறைக்க முடியாது' என்பதற்கு காரணங்கள் சொன்னார்கள். உடனே கம்பெனி சி.இ.ஓ., இதுதான் உங்கள் ஒவ்வொரு டிவிஷன் ஆட்கள் லிஸ்ட். எடுத்துக்கொண்டு சென்று அதில் நாற்பது பேரைக் குறித்து இன்றைக்கே கொடுங்கள். அது கஷ்டம் என்று யார் யார் நினைக்கிறீர்களோ அவர்கள் இப்போ சொன்னால், நானே 40 பேரை இப்போதே குறித்துக்கொடுத்துவிடுவேன் என்று சொன்னார். விதவிதமான மேனேஜ்மெண்ட் தீர்வுகளை அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு இருந்தது.

    //துபாயில் எந்தமனைவியை கூட்டிப் போவது என்பது தெரியாதவர் அதிகம் // - இதெல்லாம் அரபு நாடுகளைப் பற்றி அறியாதவர்கள் எழுதுவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //துபாயில் எந்தமனைவியை கூட்டிப் போவது என்பது தெரியாதவர் அதிகம் // - இதெல்லாம் அரபு நாடுகளைப் பற்றி அறியாதவர்கள் எழுதுவது./தயவு செய்து தலைப்பைப் பார்க்கவும்

      R

      நீக்கு
  9. தலைமை பண்பு என்பதைப் பற்றிய செய்தி அருமை. காணொளி இன்னும் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  10. முதல் சம்பவம்.... தீர்வு சூப்பர்!

    பதிலளிநீக்கு
  11. சூப்பர்தான் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு