செவ்வாய், 11 ஜூன், 2019

தொடர்பில்லா நினைவுகள்




                                 தொடர்பில்லா  நினைவுகள்
                                  ------------------------------------------
  என்ன எழுதலாம் எப்படி எழுதலாம்  என்னும் யோசனையின் முடிவில் தோன்றியதே இந்த தொடர்பற்ற  நினைவுகள் /எண்ணங்கள் எப்போதும்   தொடர்புடன் தான்வருகிறதா ?
அப்போது நான்  பி எச் இ எல்லில்  இருந்தேன்  அசிஸ்டண்ட் எஞ்சிநீர் பெங்களூர்  வர பஸ் ஸ்டாண்ட் டுக்கு வந்தேன்  அங்கு ஒரு முகம் பார்த்ததுபோல் இருந்தது  அம்பர்நாத்த்தில் எனக்கு ஜூனியர்  அவருக்கு என்னை அடையாளம் தெரிந்தது ஆனாலும் பார்வையிலும்  தோரணையிலும்   ஒரு அலட்சியம் நான் நீங்கள் இன்னார்தானே  என்று விசாரித்தேன்  ஆம் என்றார் நான் பிஎச் இ எல் லில்  வால்வ் டிவிஷனில்  தரக்கட்டுப் பாட்டு துறையில் இருப்பதாகக் கூறினேன் பிறகு அவர் என்னைக் கேட்டதுதான்   என்னை திடுக்கிடச் செய்தது  அவர் மைகோவில் வேலையில் இருப்பதாகவும்  நான்  வால்வ் ஏதாவது விற்க விரும்பினால் அவர்  உதவி செய்வார் என்றும்   கூறினார்எனக்கு சே என்றாகி விட்டது  அவர் ஏதோ உச்சாணிக்கொம்பில் இருப்பதுபோலவும்  நான் அவர் உதவிக்கு ஏங்குவது போலவும்  அதன் பின் நான் பேசவில்லை
இதே போல் இன்னொரு முறை நான்படித்த பள்ளி மாணவன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது நான் பி எச்  எல் லில்  எஞ்சிநீராகப் பணியில் இருக்கிறேன் என்று சொன்னதும் அவன்சிரிப்பை அடக்க முடியாமல்  பத்தாங்கிளாஸ் படித்து ( பள்ளி இறுதிபதினொன்று ஆண்டானாலும் பத்தாங்கிளாஸ என்றே கூறுவார்கள்)  எஞ்சிநீராஎன்று சொல்லிச் சொல்லி  சிரித்தான்
 ஒரு முறை நான் தெருவில் போய்க் கொண்டிருந்தபோது  ஒருவர் என்னை நிறுத்தி  விசாரித்தார்  அவரைப்பற்றிய ஞாபகம் எனக்கு வரவில்லை  பொத்தாம்பொதுவாக பதில் சொல்லி வந்தேன் அவர் விடைபெற்றுப்போகும்போது  தாங்க முடியாமல் அவர் யார் என்று நினைவுக்கு வரவில்லை என்றேன் மனிதனுக்கு  வந்ததே ஒரு கோபம்  நீங்களெல்லாம் இப்படித்தான்,  வேலையானால் போதும்   வேறு  ஒன்றுமே தெரியாது என்று புலம்பினார்  நான்மன்னிக்கக் கோரி அவரிடம் அவர் யார் என்று கேட்டேன் நான் எச் ஏ எல்லில்  பயிற்சியின்போது  பல துறைகளுக்கும்   செல்ல வேண்டி இருந்தது  பலரிடம் அதிக பட்சமாகஒரு வார காலம் பயிற்சியிலிருந்திருப்பேன்  அது நடந்து முடிந்து ஆண்டுகள் ஓடிவிட்டனஅப்படி நான் பயிற்சியில் இவரிடமும்   இருந்திருப்பேன் சுத்தமாக நினைவில் இருக்கவில்லைஅவர் போனபின்  என் ஞாபக மறதியை  வைது கொண்டு வருந்தினேன் இதனால் தானோ  என்னவோ  பயிற்சியின்  போதுபலரும்  எதையும் சொல்லித்தருவதில்லை பின் ஒரு நாள் நாம் அவர்களுக்கே அதிகாரியாய்  வரலாம் என்னும் பயம்தான் 
 இனி எழுதுவது தொடர்பற்றதாக இல்லை எப்படி இருந்த நான்  இப்படியாகி விட்டேனே என்று நினைக்கும் போது எப்படி இருந்தேன் என்னும் நினைவும் வருகிறது/ சிறு வயதுகளில் நான் தடகளப் போட்டிகளில் ஓரளவு வல்லுனன்  அம்பர்நாதில் பயிற்சியின் போது நடந்த தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று உயரம் தாண்டுதலில் முதல்  பரிசு பெற்றேன்   என் அளவு உயரம்தாண்டினேன்   அதாவது ஐந்தடி நான்கு அங்குலம்  நினைவு அதல்ல. பங்கு பெற்றவர்களில் போட்டி  அதிகம் இருந்தது  இருவர் சாம்பியன்ஷிப் பரிசு பெற இருந்தனர் அவர்களில் ஒருவர் உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்றால்  சாம்பியன் என அறியப்படுவார்  ஆனல் எதிர்பாராத வகையில்நான்  வெற்றி பெற்றேன் தனக்கு ஒருகண்போனாலும்  பரவாயில்லை என்பது போல் அவர்களில் ஒரு கூட்டத்தினர் என்னைத் தோள் மீது அமர்த்தி மைதானத்தை சுற்றிவந்தனர்அப்படி இருந்தநான் இப்போது சரியாக நடக்கவே கஷ்டப்படும்போது அந்தநாள் நினைவு வந்தது                                      

                             


   

38 கருத்துகள்:

  1. மனத்தளர்ச்சி அடையாதீர்கள் ஜி எம் பி ஸார்... வயதின் அல்லல்களை விட அனுபவங்கள் பெரிது. உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனத்தளர்ச்சி ஏதும் இல்லை இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ...........

      நீக்கு
  2. நீங்கள் சொல்லி இருப்பது போல அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். எனக்கும். ஒன்றிரண்டை பதிவாக்கி இருக்கிறேன். நியாயமா என்ற தலைப்பில் என்றுநினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயமா பதிவின் சுட்டி கொடுத்திருக்கலாம்

      நீக்கு
  3. சில வருடங்களுக்கு முன் பள்ளிக்கால நினைவுகளுடன் பேசிக்கொண்டிருந்த என்னை என் நண்பன் முகத்தில் அடித்ததுபோலப் பேசி நிறுத்தினான். 'நிகழ்காலத்துக்கு வா' என்றான். நிகழில் நான் எங்கோ... அவன் எங்கோ.. பள்ளி வயதில் இணைபிரியாதிருந்த நாங்கள் இப்போது ஒரே ஊரில்... ஆனால் சந்தித்துக்கொள்வதே இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்களில் ஒருவர் தாழ்வதும் இன்னொருவர் உயர்வதும் (உலக அளவீட்டில்) சாதாரணம்தான். ஆனால் நட்பில் அவை குறுக்க வருமா? ஆச்சர்யம்தான்.

      ஆனால் மகாபாரதக் கதையிலேயே வருகிறது... நட்பு இரு சரி சமமான நிலையில் இருப்பவர்களிடத்தில்தான் வரும் என்று (துரோணர் தன் நண்பனான, அரசனிடத்தில் போய் உதவி கேட்கப்போகும்போது). 'பொருள் ஊடாட' நட்பு கெடும், ஆனால் அந்தப் பிரச்சனையே இல்லாதபோது, தாங்கள் தற்போது இருக்கும் நிலையினால் ஏற்ற தாழ்வு வருமா?

      நீக்கு
    2. @ஸ்ரீ ராம் யார் எங்கு என்று சொல்ல வில்லையே

      நீக்கு
    3. @நெத நட்பு என்பதை ஒவ்வொருவர் புரிந்து கொள்ளாஉம்விதமே அலாதி

      நீக்கு
  4. இப்படியான அனுபவங்கள் எனக்கும்/எங்களுக்கும். அதிலும் சமீபத்தில் வந்து விட்டுப் போன உறவினர்கள்! நாங்க அரசு ஓய்வூதியத்தில் வாழ்க்கையைக் கழிப்பதே அவங்களுக்குப் பிடிக்கலை! இங்கே வீடு, தண்ணீர் எல்லாம் நன்றாக அமைந்திருப்பதும் பிடிக்கலை! எங்களோடு ஒரே சண்டை, வாக்குவாதம்! எப்படி நீங்க ஓய்வூதியம் வாங்கலாம் என? நாங்க கொடுக்கும் வரியைத் தான் உங்களுக்கு ஓய்வூதியமாய்க் கொடுக்கிறாங்க! எத்தனை வருஷம் கொடுப்பது? போதும்னு நீங்க சொல்ல வேண்டாமா? என்றெல்லாம் கேட்டு விடாப்பிடியாய் நாங்க பேசாமல் இருந்தாலும் பதில் சொல்லச் சொல்லிக் கட்டாயப் படுத்தி! :( இத்தனைக்கும் வந்தவரின் வயதான 93 வயது அம்மாவுக்குக் குடும்ப ஓய்வூதியமாக மாசம் 20000 ரூபாய் வருகிறது. அதை இங்கே தமிழ்நாட்டுக் கருவூலத்தின் மூலமே பெற முடியும் என்பதால் அதற்காகவே இங்கே தமிழ்நாட்டில் இருக்கின்றனர். இல்லை என்றால் "பெண்"களூரில் பிள்ளை கட்டி இருக்கும் வீட்டிற்குப் போயிடுவோம் என்றார்கள்! இவங்க இந்த ஓய்வூதியத்தை வேண்டாம்னு சோல்லிட்டுப் போய் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாய் இருக்கக் கூடாதோ என எனக்குத் தோன்றியது! ஆனால் எப்போவோ வந்திருக்கும் உறவினரிடம் இதை எல்லாம் கேட்க வேண்டாம்னு இருந்துட்டேன்! :((( என்றாலும் இன்னமும் மனம் சமாதானம் ஆகவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாங்க கொடுக்கும் வரியைத் தான் உங்களுக்கு ஓய்வூதியமாய்க் கொடுக்கிறாங்க! எத்தனை வருஷம் கொடுப்பது?// - அடப்பாவீ..இப்படியெல்லாம் பேச ஆட்கள் இருக்கா?

      நீக்கு
    2. @கீதா சாம்பசிவம் பதிவு உங்களையும் தொடர்பில்லா நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டது

      நீக்கு
    3. @நெத இப்படியும்யோசிக்கவும்பலர் இருக்கிறார்களே

      நீக்கு
  5. எண்ணங்கள் பலவிதம் பதிவின் மூலம்
    மனிதர்கள் பலவிதம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
    முதுமையில் சில உடல் தொந்திரவுகளை எதிர் கொள்ள வேண்டிதான் இருக்கிறது.

    நல்ல நண்பர்களுடன் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசுங்கள்.
    உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை , அனுபவங்களை முடிந்தபோது எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் எழுத்துகளே பெரும்பாலும் அனுபவக் கோர்வையே

      நீக்கு
  6. தங்களின் அனுபவங்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்பதிவுகள்பெரும்பாலும் அனுபவப் பதிவுகளே

      நீக்கு
  7. மனதால் நீங்கள் இளைஞர்தான் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. 'தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போது" என்று பிரபந்த வரிகள் வரும். முதுமை இயல்பானது எனத் தோன்றுது. ஆனால் பத்து வருடம் முன்னால் நான் செய்யமுடிந்தது இப்போது முடியலை என நினைக்கும்போது மனவருத்தம் வரும். இது இயல்புதான்.

    நான் என் பையன் கொஞ்சம் சின்னவனாக இருந்தபோது, இருவரும் பூங்காவில் ஓடி (அப்போது நான் 5 வருடங்கள் வெயிட் குறைத்து என்னை ஓரளவு ஃபிட் ஆக வைத்துக்கொண்டிருந்தேன்) அவனை ஜெயித்து காணொளி எடுத்துவைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போ அவன் வேகத்துக்கு நடக்க முடியலை..ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்பதிவு ஒரு தந்தையின் மனம் எழுதி இருக்கிறேன் வாசித்துப் பாருங்கள்மகனிடம் வேண்டுமென்றே ஓட்டப்பந்தயத்தில் தோற்று மகனுக்கு வாழ்வியல் கற்றுக் கொடுத்த பதிவு

      நீக்கு
  9. //இப்போது சரியாக நடக்கவே கஷ்டப்படும்போது அந்தநாள் நினைவு வந்தது//

    நடக்க இயலவில்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை. உட்கார்ந்த நிலையிலேயே சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

    மூச்சிப் பயிற்சி மிகவும் பயனுள்ளது. வெய்யிலில் அரை மணி நேரம்போல அமர்ந்திருப்பதால் பல நன்மைகள் உண்டு என்கிறார்கள்.

    இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாதவை அல்ல.

    கடந்தகாலக் கசப்பான நினைவுகளோ உவப்பான நினைவுகளோ இவையெல்லாம் ஞாபக மறதி நோயைத் தடுக்கின்றனவே. தொடர்பற்றவை எனினும் பழைய நினைவுகளில் மூழ்குவது நல்லதே.

    உடல் நலத்துடனும் மன நலத்துடனும் நீண்ட காலம் வாழ்வீர்கள். என் போன்றவர்களுக்கு நீங்கள் முன்னோடியாக இருப்பீர்கள்.

    எழுதுவதை நிறுத்தாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனைகை கொடுக்கும் வரை எழுதுவேன் வருகைக்கு நன்றி [பசி பரமசிவம் சார்தானே

      நீக்கு
  10. பழைய ஏடுகளைப் புரட்டும் போது பல சமயம் மனதில் வலிதான் மிஞ்சுகிறது. நம்மோடு நன்கு பழகிய நண்பர்களைத் தேடிப்பிடித்து பேசினால் அவ்ர்கள் அதே ஆர்வத்தைக் காண்பிப்பது இல்லை. ஏனோ தானோவென்று பேசுகிறார்கள். இதற்கா ஆசைப்பட்டோம் என்று தலையில் கொட்டிக்கொள்ளணும் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறை நண்பர்கள் சண்டிப்பின் போது என்னுடையடேபிள் டென்னிஸ் டபிள்ஸ் பார்ட்னரை சந்தித்தேன் அறிமுகம்செய்துகொண்டபோது அவருக்குஎதுவுமே நினைவில் இருக்கவில்லை அல்ஜிமர் பாதிப்பு என்று பிற்பாடுஅறிந்தேன்

      நீக்கு
  11. தற்செயலாக தமிழ்மணப் பக்கம் வந்தேன். இன்னும் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாது. மீண்டும் இணைந்து கொள்ள முயன்றேன். அட .. போடா என்று சொல்லி விட்டது. இணைய முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தில் திரட்டப்படுகிறதே?!

      நீக்கு
  12. பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இணைவதில் சிரமம் இருந்தது

    பதிலளிநீக்கு
  13. **அவன்சிரிப்பை அடக்க முடியாமல் பத்தாங்கிளாஸ் படித்து ( பள்ளி இறுதிபதினொன்று ஆண்டானாலும் பத்தாங்கிளாஸ என்றே கூறுவார்கள்) எஞ்சிநீராஎன்று சொல்லிச் சொல்லி சிரித்தான்**

    பொதுவாக நமக்குப் பின்னால் போய் நம்மைப் பற்றீ இதுபோல் விமர்சிப்பார்கள். உங்க நண்பர் நேரிடியாகவே செய்திருக்கிறார். அறீயாமையால் அநாகரிகமாக நடப்பது அவருக்குப் புரியவில்லை. பின்னாளீல் தன் தவற உணர்ந்து வருந்தி இருப்பார்னு நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. ***இப்போது சரியாக நடக்கவே கஷ்டப்படும்போது அந்தநாள் நினைவு வந்தது***

    நேற்றூ என் பி ஆர் ரேடியோவில் ஒருவர் சொன்னார்.. Never say, I KNOW HOW IT FEELS to others. Because that does not help the person you are trying to console.னு சொன்னார்.

    பதிலளிநீக்கு
  15. மனிதர்கள் பலவிதம் அவர்களுக்கு இடையில்தான் வாழவேண்டியிருக்கிறது .

    பதிலளிநீக்கு
  16. உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறோம் ஐயா. இருந்தாலும் உங்களின் ஒவ்வொரு எழுத்தும் எங்களுக்கு பல பாடங்களைப் பயிற்றுவிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  17. சமீபத்தில்தான் எனது மேற்படிப்பு மாணவர்கள் சந்திக்க நேர்ந்து குழுவும் வாட்சப்பில் போட்டிருக்கிறார்கள்.


    வயதானால் வரும் சில தொந்தரவுகள் சார். அதைத் தவிர்க்க முடியாதே. நாம் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தால் போதும். முடிந்த அளவு உங்கள் நினைவுகளைப் பகிருங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. அக்கருத்துடன் எனக்கு என் பள்ளித் தோழிகள் வாட்சப் குழு வைத்திருக்கிறார்கள். நான் அதில் சேரவில்லை. அவர்களில் எல்லோருமே மிக மிக மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எங்கேயோ போயிருப்பேன் அதாவது பல உயரங்களைத் தொட்டிருப்பேன் என்று நினைத்திருக்கிறார்கள். அப்படி இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் வியப்பின் எல்லைக்கே போனார்கள் என்று என் கஸின் சொன்னாள். (நான் கஸின் எல்லோரும் ஒரே வகுப்புதான்) ஏனோ அதில் சேர மனம் விரும்பைல்லை.

    வேறு ஒரு தோழி என்னைத் தேடிக் கண்டுபிடித்தாள். அவளும் நான் உயரத்தி இருப்பேன் என்று நினைத்தாள். எங்கள் வீட்டிற்கு வந்தவள் வீட்டைப் பார்த்ததும் அதன் பின் தொடர்பில் இல்லை. அப்படியான நட்புகளை நான் வைத்துக் கொள்வதிலும் விரும்பவில்லை.

    என்னை எனக்காக நட்பு கொள்பவர்களுடன் மட்டுமே நட்பு பாராட்டுகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு