ஐஸ்க்ரீமும் ஜாஃப்ஃபியும்
-----------------------------------------
சிலநாட்களுக்கு
முன் ஒரு பின்னூட்டத்தில் நெல்லைத் தமிழன் பதிவில் ஏன் மாமரம் பற்றி எழுத வில்லை என்று கேட்டிருந்தார்
இந்த ஆண்டு எங்கள்
வீட்டு மாவின் கொடை அதிகமாய் இருந்தது ஊறுகாயாக(கல்யாண
மாங்காய் , ஆவக்காய் ) போன்று பலவும் போட்டும் கொடுத்தும் காய் பறிப்பவரின் பங்கும்
பாதிக்கு மேல் போயிற்று தினமும்மாம்பழம்சாப்பிட்டு
அலுத்து விட்டது இது தவிர கச்சா மாங்கோ ஜூஸாகவும் மாம்பழ ஜூசாகவும் செய்து சாப்பிட்டோம் சரி ஒரு மாற்றாக ஏதாவது செய்யத் தோன்றியது ஏன் மாம்பழ ஐஸ் க்ரீம்செய்யக்கூடாது என்று தோன்றவே செயலில் இறங்கினேன்முதலில் எனக்கு
ஐஸ் க்ரீம் செய்யத்தெரியாது எல்லாம் செய்து பார்ப்போமே என்று தோன்றவே எனது ரெசிப்பி இதோ
பாலை நன்கு சுண்டவிட்டுக்
காய்ச்சவும்தேவையான அளவு சர்க்கரையும்சேர்க்கவும்மாம்பழத்தின் சதைப்பாகத்தை ஸ்கூப்
செய்து எடுத்து மிக்சியில் அரைக்கவும் நன்கு விழுதாகும்போதுசுண்ண்டக்காய்ச்சின பாலையும்சேர்த்து அரைக்கவும் விழுதை ரெஃப்ரெஜிரேட்டர் ஃப்ரீசரில் வைக்கவும் சிறிது நேரம்கழித்து
எடுத்தால் ஐஸ்க்ரீம் ரெடி இதில் பாலைகாய்ச்சுவதும்
சர்க்கரை சேர்ப்பதும் அவரவர் சுவைக்கு ஏற்ப
இருக்கும் நான்செய்தது ஐஸ்க்ரீம்டேஸ்ட்
இருந்தது !!!!!
கீதா சாம்பசிவத்தின் மொழியில் இன்னொரு திப்பிசம்
காஃபி தெரியும் ஜாஃபீ தெரியுமா மாம்பழம் கொடுத்த வீட்டில் இருந்து பலாப்பழம்கொடுத்தார்கள் என் திப்பிசம் பலாக்கொட்டையில் இருந்து உருவாயிற்று பலாக்கொட்டையை
மேல் தோல் எடுத்து பிறகு சிறிது சிறிதாய்
நறுக்கி எடுக்கவும் அதை நன்கு வறுக்கவும்
எண்ணை ஏதும்வேண்டாம்(காஃபிக் கொட்டையை வறுப்பதுபோல்) வறுத்தெடுத்ததை காஃபிப்பொடிபோல்
பாவித்து மிக்சியில் அரைக்கவும் காஃபி செய்வதைபோல் செய்யவும்
என் வீட்டில் நாங்கள்பெர்கொலேட்டர் உபயோகிப்போம் பின் காஃபி போல் செய்தால் ஜாஃபி ரெடி ஆனால் இதுகாஃபி சுவைதராது ஒரு மாற்றத்துக்கு செய்தது சிக்க மகளூரில் யாரோ செய்தார்களாம் நானும்
செய்தேன் காஃபியால் உண்டாகும் கஃபைன் போன்றவை இல்லாத ஒரு பானம்செய்து பார்க்கலாமே
என் வீட்டின் பக்கவாட்டில் சுமார் 15 மீட்டர் நீள
பாதை இருக்கிறது நான் இப்போதெல்லாம் அங்குதான்
நடை பயில்கிறேன் சுமார் முக்கால் மணியிலிருந்து ஒரு மணிநேரம்வரை அப்போது தினமும் ஒருபூனைக் குட்டி எங்கள் தோட்டத்துக்குவந்து எதையோ பிடிக்கமுயலும்அதைப்
பார்ப்பதிலும் நான் நேரம் கழிப்பதுண்டு என்னவோ
தெரியவில்லை அது தினம்வரும் சுமார் பத்து பதினைந்து
நிமிடம் இருக்கும் பின் மாமரம்
ஏறி எங்கோ போய்விடும் சின்னக்குட்டிதானே
பயம் தெரியாதது அதைப் படமெடுத்தேன் அதுவே இங்கு கீழே பூனைகள் இடங்களின் விசுவாசி நாயைபோல் எஜமானர்களின்
விசுவாசி அல்ல என்றுகேள்விப்பட்டிருக்கிறேன்அதிராவும் துளசி டீச்சரும் சொல்லலாம் சரியா என்று
vaazkkai paatam
![]() |
| tதொட்டி அருகே பூனை தெரிகிறதா |
![]() |
| எதையோ நோட்டம்விடுகிறது வாழ்க்கை பாடம் ஒரு காணொளியில் |

