காயத்திரி மந்திரம்
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."
யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்
நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.
சிலவற்றை தமிழ்படுத்தக் கூடாது அதில் காயத்ரியும் ஒன்று ஆதலால் புரிய
வைக்கும் முயற்சியே இது
பொதுவாக சுமார் எட்டு வயதில் உபநயனம் செய்விக்கிறார்கள் பால பருவத்தில் இருந்து
பிரம்மசரியபருவத்துக்கு வழி காட்டலே உபநயனம்
பாமரனையும் பிரம்மனையும் இனம்பிரித்துக்காட்ட
உதவும் நான் பிறப்பால் பிராமணன் பிறரிடம்
இருந்து இனம்பிரித்து பார்க்க விரும்பவில்லை உபநயனமும் செய்து கொள்ளவில்லை ஊர்
அறிந்த பாப்பானுக்கு பூணுல் எதற்கு? பிராம்மணனுக்கு என்று சில
அடையாளங்கள் உண்டு
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல் ), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ), அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல் )ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல் போன்றவை அவை
இக்காலதில் இந்த அடையாள்ங்கள்
இல்லை மாறி விட்டது யாரும்பிராம்மணனில்லை ஆகவேதான் அடையாளங்களை பகிஷ்கரித்து
விட்டேன் இங்கு சுய புராணம் அவசியமற்றது பரமனுக்கும்
பாமரனுக்கும் பாலமாய்
இருக்கவேண்டியவன் பிராமணன்
பெண்கள் காயத்திரி மந்திரம் சொல்லலாமா என்னும் சந்தேகம் பலருக்கு இருக்கிறதுஏன்கூடாது என்று விளக்கமாக எங்கும் சொல்லவில்லை ஒரு வேளை மாதவிடாய் காலங்களில் சொல்லக்கூடாது என்றிருக்கலாம் வாசகர்கள் தெளிவிக்கலாமே
அருகில் இருக்கும் பிள்ளையார் கோவில் பூசாரி(அர்ச்சகர் ) என்னிடம் ஒரு காயத்ரி ஓவியம்கேட்டிருந்தார் அவருக்காகஒரு கண்ணாடி ஓவியம்வரைந்து கொடுத்தேன் அது இன்னும் கோவில் பிரகாரத்தில் இருக்கிறது
.
வேதம், ப்ரணவம், வேத்த்தில் சொல்லப்பட்ட மந்திரங்கள் பெண்களுக்கு இல்லை.
பதிலளிநீக்குவேதம் ஓதும் பாங்கு மூச்சிழுத்தல், அடி வயிற்றிலிருந்து எழுப்பும் வலி போன்றவை பெண்களின் உடல் structureக்கு உகந்ததில்லை என்பதால் இப்படி விதி எனவும், காயத்ரி மந்திரமும் ரகசியமாக உபதேசிக்கப்படிவது என்பதால் உபதேசம் பெறாதவர்களுக்குக் கிடையாது எனவும் படித்திருக்கிறேன்.
பெண்கள் வேதம் ஓதக்கூடாது காயத்ரி சொல்லக் கூடாது என்று எங்காவது யாராவது சொல்லி இருக்கிறார்களா என்று இணையத்தில் தேடினேன் எக்கும் கிடைக்க வில்லை
நீக்குவேதம், காயத்ரி போன்றவை பிறரால் சொல்லித்தரப் படுபவை. அப்படிச் சொல்லித்தருபவர்கள் நிச்சயமாக பெண்களுக்குச் சொல்லித்தர மாட்டார்கள். வேதம், சூக்தம் சொல்லித்தரும் குழுமங்களில், முப்புரிநூல் அணிந்தவர்களுக்கு மட்டும்தான் என்று எழுதியிருப்பார்கள்.
நீக்குமுன்பெல்லாம்பல பாடங்களும் வாய் வழி கற்பிக்க பட்டவையே
நீக்குகாயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியது என்பதில் அணு அளவும் சந்தேகம் இல்லை. வேதத்தின் சாறாக உள்ளது காயத்ரி மந்த்ரம். வேதமாதாவாக காயத்ரி கருதப்படுவதாலும் அன்னை கலைவாணி சரஸ்வதி கையில் வேத சுவடிகளைக் கொண்டிருப்பதாலும் பெண்கள் காயத்த்ரி ஜபம் செய்யக்கூடாது என்பது தவறு
பதிலளிநீக்குசிவஸ்ரீ என்பவரின் கருத்து இது
knowledge is for all no one can snatch that right
நீக்குகாயத்ரி மந்திரத்தைக் குறித்து இடைக்காலத்தில் வந்துள்ள கொள்கை ஒன்று உண்டு. அதாவது இந்த மந்திரத்தைச் சூத்திரர்களும், பெண்பாலரும் உபயோகப் படுத்தக் கூடாது. இக்கொள்கையைத் தத்துவபூர்வமாக வியாக்கியானம் பண்ணுமிடத்து, காயத்ரி மந்திரத்தைச் சரியாக அறிந்து பிரயோஜனப் படுத்த முடியாதவர்கள் சூத்திரர்களாம். இதை அறிந்து உபயோகப் படுத்துகிறவர்கள் எல்லாரும் துவிஜர்கள் ஆகின்றனர். துவிஜன் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள். தாயின் வயிற்றினின்று பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத் திருத்தி அமைக்க ஆரம்பிக்கின்ற பொழுது மனிதன் ஆன்மிகத் துறையில் இன்னொரு பிறப்பெடுத்தவன் ஆகின்றான். ஆகையினால் அவன் துவிஜன் – இருபிறப்பாளன் என்று சொல்லப் படுகிறான். அதற்குத் தூண்டுதலாக வந்தமைந்திருப்பது தான் காயத்ரி மந்திரம்.
பதிலளிநீக்குபெண்பாலரைப் பற்றி இடைக்காலத்தில் வந்துள்ள இன்னொரு கொள்கை ஒன்றுண்டு. அவர்கள் காயத்ரி மந்திரத்தைச் சொல்லக் கூடாது; வேதம் கற்கக் கூடாது. இதுவும் பொருளற்ற கொள்கையாம். சமுதாயம் சீர்கேடு அடைந்துவர ஆரம்பித்தபொழுது இக்கொள்கை உருவெடுத்தது. இப்பொழுது சமுதாயம் புதிய வலிவு பெற்று வருகிறது. இக்காலத்தில் அவதரித்துள்ள ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சூத்திரர், பெண்பாலர் ஆகிய இருகூட்டத்தாரைப் பற்றிய கொள்கைகளை மாற்றியமைத்திருக்கிறார். வேதம் கற்பதற்குப் பெண்பாலர் தகுதியற்றவர் என்பதை மாற்றிப் பரஞான குருவாகச் சாரதா தேவியாரை ஸ்ரீராமகிருஷ்ணர் அமைத்துள்ளார். பெரிய பெரிய துறவியர்களுக்கே ஞானகுரு ஸ்தானம் வகிக்கின்ற பெரிய நிலையில் ஸ்ரீசாரதா தேவியாரை அவர் அமைத்து வைத்தார். அதன் மூலமாகப் பெண்பாலருடைய பாங்கைப் பழைய பெருநிலைக்குக் கொண்டுவருவதற்கு அவர் துவக்கம் செய்து வைத்தார்.
//வேதம் கற்பதற்குப் பெண்பாலர் தகுதியற்றவர் என்பதை மாற்றிப் பரஞான குருவாகச் சாரதா தேவியாரை ஸ்ரீராமகிருஷ்ணர் அமைத்துள்ளார்.// - மதுரைத் தமிழன்... அன்னை சாரதா தேவியாரை துறவிகள் வணங்குகின்றனர். ஆனால் சாரதா தேவியார் வேத மந்திரங்களை ஓதினார் என்பதற்கும் காயத்ரி மந்திரம் சொன்னார் என்பதற்கும் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?
நீக்குசங்கரர் பலருக்கு குரு. ஆனால் அவரைப் பெற்றது ஒரு பெண். அங்கு பெண் என்பவள் உயர்ந்த ஸ்தானம்.
முன்காலத்தில் பெண் என்பவள் பெரும் கல்வி கற்று அறிவிற் சிறந்தவராகத் திகழ்ந்தார்கள். அதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. இடைக்காலத்தில் பெண்கள் அடக்கப்பட்டனர் என்பது என் எண்ணம். மேலும் மேலும் அவளை அடக்கி வைப்பதற்காக புதிது புதிதான நடைமுறைகளை ஆண்கள் கொண்டுவந்தனர். சாஸ்திரங்களின் இடைச் செருகல்கள் பல, பெண்ணை அடக்கி ஆள்வதற்கானவை. பெண் அடிமைத் தனத்தைப் பேணினர்.
அதிலும் கேரள நம்பூதிரிகள் மேற்கொண்ட நடைமுறைகள் எழுத்தில் வடிக்க ஒண்ணாதவை.
பெண்களை அட்க்கி ஆளகீதை காலத்திகிலேயே துவங்கி விட்டது
நீக்குநெல்லைத்தமிழன் மேலே சொன்னது ஏது என் சொந்த கருத்துக்கள் அல்ல... இந்து மதங்களை மற்றும் கடவுள்களை பற்றி எழுதும் இணைய தளங்களில் நான் படித்தை பகிர்ந்து இருக்கிறேன்...அவ்வளவுதான்
நீக்குஎன்னுடைய கருத்துகள் என்று சொல்லவேண்டுமானல் அந்ததெந்த மதத்தில் அல்லது வேதங்களில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை அந்த மதத்தில் உண்மையான ஈடுபாடுயுடையவர்கள் அங்கு அறிந்து இருப்பார்கள் அவர்கள் சொல்லுவதுதான் சரியாக இருக்குமே தவிர என்னை போலவோ அல்லது மதத்த்தில் வேதங்களில் என்ன சொல்லி இருக்கிரது என்பதை சரியாக அறியாதவர்களோ அல்லது அதை படித்தும் சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் சொல்வதோ சரி அல்ல
இதுபற்றி காஞ்சி பெரியவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று தேடிபார்த்தால் நிச்சயம் விடை கிடைக்கலாம்.. இப்போது உள்ள பெரியவர் அல்ல முதன் முதலில் இருந்த பெரியவர்
நீக்குசிவன் பெரியதா சக்தி பெரியாதா என்று ஆரம்பித்தாக பேசும் போதே அங்கு ஆண் ஆதிக்கம் வந்துவிட்டது ஆனால் முடிவில் இறைவன் சக்தி பாதி சிவன் பாதி என்பதை உணர்த்தி இருந்தாலும் அதை புரிந்து வாழ இந்த மனித குலம் முயலவில்லையோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஜிஎம் சார்
ஆண் பெண் இருவருமே சமம் அனால் ஃபிசிகல் சக்தியால் ஆண்கள் பெண்களை தாழ்வாகநினைக்க ஆரம்பித்தார்கள் என்றே நான் நினைக்கிறேன்
நீக்குநானும் தெய்வத்தின்குரலில் தேடினேன்கிடைக்க வில்லை
நீக்குசொந்த கருத்துகளையும் பகிரவே வலைத்தளஎன்று நினைப்பவன் நான்
நீக்குத்விஜன் என்பதை பார்ப்பனன் என்றும் கூறலாம் பார்ப்பு என்றால் முட்டையிலிருந்து வரும் கோழி கோழிக்கு இருபிறப்புகள் முட்டையாக ஒன்று கோழியாக ஒன்று அதே பொல்பிரம்மணனுக்கும் இரு பிறப்பு என்று கூறப்படுகிறது பூனூல் அணியும் முன்பூணூல் அணிந்தபின் ஒஉ சாராரை அடக்கிஆள் நினைப்பவர்கள் கட்டிய கதைதான் பெண்கள் காயத்ரி சொல்லக் கூடாது என்பதும்வருகை தந்து கருத்துரை கொடுத்த மதுரை தமிழனுக்கு நன்றி
பதிலளிநீக்குநீங்கள் பூணூல் அணியாதது துணிச்சலான செயல்.
பதிலளிநீக்குசந்தர்ப்பமும் சூழ்நிலையும்கூட என் கொள்கைக்கு துணை நின்றன
நீக்குபூணல் அணியாததை துணிச்சல் என்று சொல்வதற்கு பதிலாக அவர் மனதிற்கு பட்டதை செய்யும் திறன் அவருக்கு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்
நீக்குமேலே காணும் மறு மொழியை பார்க்கௌம்
நீக்குகேவலமான தந்திரத்திற்கு ஒரு மந்திரம்...
பதிலளிநீக்குஅது விவாதிக்க ஒரு தலைப்பு
நீக்குஅருகில் இருக்கும் பிள்ளையார் கோவில் பூசாரி(அர்ச்சகர் ) என்னிடம் ஒரு காயத்ரி ஓவியம்கேட்டிருந்தார் அவருக்காகஒரு கண்ணாடி ஓவியம்வரைந்து கொடுத்தேன் அது இன்னும் கோவில் பிரகாரத்தில் இருக்கிறது //
பதிலளிநீக்குநீங்கள் நன்றாக வரைவீர்கள் என்பது தெரியும் இதையும் நன்றாக வரைந்திருப்பீர்கள் படம் புகைப்படம் எடுக்கவில்லையா? எடுத்திருந்தால் இங்கு பகிருங்களேன் சார்.
கீதா
என்சேமிப்பில் தேடுகிறேன் இதுவரை கிடக்க வில்லை
நீக்குஇந்தக் காலத்தில் பிராமணர்கள் என்று யாருமே இல்லை. எந்த சாதியினருமே அந்தந்த சாதிக்குரிய லட்சணங்களோடு இல்லை.
பதிலளிநீக்குசாதி என்னும் பாகுபாடே அர்த்தமற்றது இருந்தாலும் அதைக் கைகழுவ பலரும் தயாரில்லைசதியால் நிகழும் சச்சரவுள தினமும் பத்திரிக்கை செய்தி
பதிலளிநீக்கு