புதன், 25 நவம்பர், 2020

கலிடாஸ்கோப்

 கலிடாஸ்கோப்


           சில பொன் மொழிகள்

          -------------------------------
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன.
ஆனால் அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து
கிடைக்கிறது. --------------(பில் கேட்ஸ்.)

நீ தனிமையாய் இருக்கும்போது உனக்கு என்ன என்ன
தோன்றுகிறதோ அதுவே உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
                                                   ( விவேகானந்தர் )

மிகவும் நேர்மையாய் இருக்காதீர்கள்.ஏனெனில் நேரான
மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன. நேர்மையானவரே
முதலில் பழி தூற்றப் படுகிறார்கள். கொஞ்சம் வளைந்து
கொடுங்கள். வாழ்க்கை லகுவாய் இருக்கும்.
                                                      (சாணக்கியர் )

தவறு செய்வது மனித குணம்;அதற்கு வருத்தப்படுவது
தெய்வ குணம். மேலும் மேலும் செய்வது அரக்கத்தனம்.
                                                       ( பெஞசமின் ஃப்ராங்க்லின்)

அந்தக் காலத்தில் அவன் புத்திசாலியாக இருந்தான்.
அப்போதெல்லாம் அவன் என் அறிவரைப்படிதான் நடப்பான்.
                                                        (வின்ஸ்டன் சர்ச்சில்)

சிக்கல்கள் என்பது ஒரு ரயிலில் இருந்து பார்க்கப்படும்
மரங்களைப் போன்றது. அருகில் போனால் அவை பெரிதாகத்
தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகி விடும்.
இதுதான் வாழ்க்கை.             (யாரோ)

வெற்றி என்பது நிரந்தரமானதல்ல.  தோல்வியானது இறுதி
யானதுமல்ல. ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
                                                        ( யாரோ)

எல்லா விஷயங்களிலும் உண்மை நிலையை அறிந்துகொள்.
பிறகு அவற்றை உன் இஷ்டப்படி திரித்துக்கொள்ளலாம்.
                                                         ( யாரோ)

ஏதாவது தவறு நடக்க வேண்டும் என்றால் அது நடந்தே தீரும்
நியூட்டனின் மேலே செல்வது கீழே வரும் எனும் நியதி போல.
                                                          (மர்ஃபி)

வாயைப்போல் எதுவுமே அடிக்கடி தவறாகத் திறக்கப்படுவது
இல்லை.                                        ( யாரோ )

மெழுகு வர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீக்குச்சி.
அதை நினைத்து நினைத்து உருகியது
மெழுகு வர்த்தி.

விட்டுக்கொடுங்கள் , விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக்
கொடுங்கள் தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்
அன்பு பெருகும்.

காலங்கடந்து அறியப்படும் தவற்றின் விதை  ஆரம்பத்திலேயே
விதைக்கப் பட்டது.

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல் இருக்கும்போது நீங்கள் மனசு
சொல்வது மட்டும் கேளுங்கள் .ஏனென்றால் அறிவு..........சரி.
விடுங்கள்,இல்லாததைப் பற்றி ஏன் பேச வேண்டும்.?

நவீன இந்தியாவில் முன்னேறிய மாணவர்கள் ( F C ) எல்லாக்
கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

கொஞ்சம் சிரிக்க.
------------------------
மேலாளர்:-உன் தகுதி என்ன.?
சர்தார்.:-நான் Ph. D.
மேலாளர் :--Ph. D. என்றால் என்ன.?
சர்தார்:- Passed high school with difficulty.

நண்பன் 1:-நான் எது செய்தாலும் என் மனைவி குறுக்கே
                      நிற்கிறாள்.

நண்பன் 2:- காரை ஓட்டிப் பாரேன்.

 


         


                                                      

 

 





15 கருத்துகள்:

  1. ஏற்கெனவே எஸ் எம் எஸ் காலத்தில் படித்தவை என்றாலும் மறுபடியும் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  2. //அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல் இருக்கும்போது நீங்கள் மனசு
    சொல்வது மட்டும் கேளுங்கள் .ஏனென்றால் அறிவு..........சரி.
    விடுங்கள்,இல்லாததைப் பற்றி ஏன் பேச வேண்டும்.?//

    கற்றது கைமண் அளவு. கற்றதும் மண்ணே. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே அற்புதமான பொன்மொழிகள் ஐயா. கடைசி நகைப்பு ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  4. இதில் வந்த நேர்மையை மேன்மை என்பவரைப் பற்றியும் இன்றைய எனது பதிவில் ஒரு வரி எழுதியுள்ளேன்...!

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமை. பிஎச்.டி.விளக்கம் அதிகம் சிந்திக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  6. வந் து ரசித்ததற்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு