வெள்ளி, 27 நவம்பர், 2020

ஆசிர்வதிக்க பட்டவர்கள்

 ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்


               பேரூந்து ஒன்றில் பயணம் செய்தேன்
               பேரழகி ஒருத்தியைப் பக்கத்தில் பார்த்தேன்.
               என்ன  அழகு இவள்,நானேன் இல்லை அவள் போல்
               எண்ணி மருகிய என் கவனம் சிதறியது.
               நிறுத்தத்தில் அவள் இறங்க எழுந்தவள்
               தடுமாறி கீழே விழப் போனவளைக் 
               கை தூக்கிப்பிடித்து நிறுத்தினேன்.
               புன்னகைத்து நன்றி சொன்னவள் செல்கையில் 
               கவனித்தேன் அவளுக்குக் கால் ஒன்று கட்டை என்று.
ஆண்டவனே, நான் குறைப் படுகையில் 
என்னை மன்னித்து விடு
எனக்கிருக்கிறது நல்ல இரு கால்கள்

              மென்று சுவைக்க மிட்டாய் வாங்க 
              பெட்டிக்கடைப் பக்கம் சென்றேன்.
              மலர்ந்து சிரித்த சிறுவனுடன் சிறிது நேரம்,
              பேசிச்செல்ல மனம் மிக  விழைந்தது.
              தாமதமானாலும் பாதகமில்லை, பேச்சுக்கொடுத்தேன்.
              காசு கொடுத்துப் போகையிலே, அதனைத் 
              தடவிப் பார்த்த பையன் நன்றி சொன்னான்
              கண்ணில்லா அவனிடம் அன்பாய்ப் பேசியதற்கு.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்து விடு
எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.

             தெரு ஓரத்தில் ஆடிக்கொண்டிருந்த
             சிறுவர்கள் மத்தியில் ,பார்த்துப் பரவசமாகி
             நிற்கும் நானறிந்த சிறுவனிடம்  அவன் ஏன் 
            ஆடப் போகவில்லை என்றே கேட்டேன்
            மலங்க விழித்த அவனுக்கு, காதிரண்டும்
            கேளாது என்பதனை  மறந்து விட்ட நான்
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்துவிடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கேட்கும் காதுகள்



           
ங்கும்  என்னை நடத்திச் செல்ல நல்ல 
            இரு கால்களும்,
           அழகான அஸ்தமனத்தில் ஆதவனை ரசிக்க
            இரு கண்களும்,
            என்னைச் சுற்றி நடப்பதைக் கிரகிக்க நல்ல 
            இரு காதுகளும்
            இருக்கையிலே குறைப்படுதல் தவறன்றோ...
            இந்த உலகையே ரசிக்க வைக்க
           எல்லாப் புலன்களும் எனக்கிருக்க 
            இந்தப் பூவுலகே எனக்கன்றோ.!
============================================

 


18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. எங்கோ தவறு சரிசெய்துவிட்டேன் இப்போது பாருங்கள்

      நீக்கு
    2. ரொம்ப சுலபமா சொல்லிட்டீங்க. ஆனால் கடைபிடிப்பது சுலபமா?

      நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்தேன்

      நீக்கு
    3. நல்லவை என்றால் கடைபிடிக்கமுயற்சிக்கலாமே

      நீக்கு
  2. பதில்கள்
    1. பதிவில் தவறு நேர்ந்துவிட்ட்து இப்போது யார் என்று தெரியும்

      நீக்கு
  3. நற்கருணை வீரர்கள்.

    தம்மில் மெலியாரைக் கண்டு தான் பரவாயில்லை எனும் நீதி நெறி!

    பதிலளிநீக்கு
  4. இதுதான் இல்லாததை நினைத்து ஏங்காதே, இருப்பதை நினைத்து சந்தோசப்படு  என்பதோ.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைவிட இல்லாதவ்ர்களை விட நாம் எவ்வளவோமெல் ஆசிர்வதிக்கப் பட்டவ்ர்கள் ,

      நீக்கு
  5. பிறருடைய நற்குணங்கள் , உயர்கல்வி முதலியவை நம்மிடம் இல்லையே என்றெண்ணீ அவற்றைப் பெற முயலுதல் வேண்டும் .உல்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் .

    பதிலளிநீக்கு
  6. இதுதான் இப்பதிவு முலம் அறியப்படுவதா

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. "அவரவர்கள் இருக்குமிடம் அவன் போட்ட பிச்சை//
    அறியாத மனிதருக்கோ அக்கரையில் இச்சை" - கண்ணதாசன்

    பதிலளிநீக்கு
  9. தெரிந்துதெளிதல்... திருக்குறள் அதிகார விளக்கம் அறிக...

    பதிலளிநீக்கு
  10. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
    அதனினும் .....

    பதிலளிநீக்கு