ஓம் நமச்சிவாயா
ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவரின் உருவின் பூஜைக்கோள் லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
லிங்காஷ்டக இதை தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்
காலையில் மனதிற்கு நிறைவினைத் தந்த பாடல் ஐயா.
பதிலளிநீக்குச்ல துதிக்ள் மனசுக்கு இதம் தரும் காரண்ம் இல்லாமலேயே
நீக்குநன்று. சிறுவயதில் இதெல்லாம் (தமிழில் அல்ல) மனப்பாடமாய் இருந்தது. இப்போது கொஞ்சம் டச் விட்டுப்போச்சு! எஸ் பி பி குரலில் நான் ரசிக்கும் ஸ்லோகங்கள் லிங்காஷ்டகம், பில்வாஷ்டகம், விஸ்வநாதாஷ்டகம், இன்னும் ஒன்று.
பதிலளிநீக்குபல துதிகளின் வரிகள் மிக்ஸாகி தொந்த்ரவு தரும் மொழி புரிய வேண்டும் என்பதால் தமிழில் தேடி எடுத்து பதிவிடுகிறேன்
நீக்குஅடேடே...! கேரளா விஷ்ணு கோபித்துக் கொள்ளப் போகிறார் ஐயா...!
பதிலளிநீக்குமுருகா...!
விஷ்ணு ஏன் கோபிக்க வேண்டும்
நீக்குலிங்காஷ்டகம் எஸ்பிபி பாடியதை ரசித்துக் கேட்பதுண்டு.
பதிலளிநீக்குதமிழில் இருப்பதும் கேட்டிருக்கிறேன் சார்.
கீதா
தெரிந்தமொழி என்பதால் பதிவிடுகிறேன்
பதிலளிநீக்குஎனது குறும்படம் ஒன்றில் இதே லிங்காஷ்டகம் தமிழ் பாடலுக்கு எங்கள் நட்பில் இருக்கும் நடன ஆசிரியை நடனம் ஆடுவது போன்ற ஒரு காட்சி வைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅதுவரை எனக்குத் தமிழ் வெர்ஷன் அறிந்திருக்கவில்லை.
துளசிதரன்