நன்றி சொல்
’ எதற்கெல்லாம்
நன்றி தெரிவிப்பது ?”
”இன்றைக்கு உண்ண உணவும் ,உடுக்க உடையும் இருக்க இடமும்
இருந்தால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்,
உலகில் இருக்கும் மக்களில் 75% மக்களை விட நீ நல்ல நிலையில்
இருக்கிறாய். அதற்கு நன்றி சொல். இன்று காலை உறக்கம் விழித்து ஆரோக்கியத்துடன்
இருந்தால் அதற்கு நன்றி சொல். யுத்த பயம் இன்றி, சித்திரவதைக் கொடுமை இன்றி,
சிறைச்சாலையில் இல்லாமல் சுதந்திர மாக இருந்தால் அதற்கு நன்றி சொல். நீ நினைத்த
கடவுளை வணங்கவோ பயமின்றி நினைத்ததைப் பேசவோ முடிந்தால் அதற்கு நன்றி சொல். உன்
தாய் தந்தையர் உயிருடன் இருந்து இன்னும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்றால்
அதற்கு நன்றி சொல். கைகால்கள் நன்றாக இருந்து எல்லாப் புலன்களும் உன் கட்டுக்குள்
இருந்தால் அதற்கு நன்றி சொல் .உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடிந்தால்
அதற்கு நன்றி சொல். ஏனென்றால் இதையெல்லாம் இல்லாதவர்கள் மத்தியில் நீ மிகவும்
ஆசிர்வதிக்கப்பட்டவன். அதற்கு நன்றி சொல் இதையெல்லாம் படித்து அறிந்து கொள்ளக்
கூடிய நீ படிக்கும் வாய்ப்பே இல்லாதவரை விட நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு
நன்றி சொல்”
”அதெல்லாம்
சரி. நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.?”
”இந்தப்
பேரண்டத்தில் நீ துகளினும் சிறியவன் உன் பிறப்போ இறப்போ உன்னால் நிர்ணயிக்கப்
படுவதில்லை.இருப்பும் முடிவும் உன் கையில் இல்லாதவரை நான் எனும் அகந்தை தேவை
இல்லாதது. சொல்லப் போனால் எல்லாவற்றுக்கும் நீ நன்றி சொல்ல வேண்டும். அது கடவுளுக்காக இருக்கலாம், இயற்கைக்காக இருக்கலாம். ஆனால் உன்னை மீறிய சக்திக்கு என்று புரிந்தால் சரி”
இதையெல்லாம் படித்ததில் தலைவலி வந்தால் அதை எந்த மருந்தும்
இல்லாமலேயே குணப் படுத்த முடியுமாம். எங்கோ படித்தேன். வழக்கம்போல்
பகிர்கிறேன். மூக்கில் இரண்டு நாசித்
துவாரங்கள் வழியே நாம் சுவாசிக்கிறோம். தலைவலி வந்தால் வலது நாசித் துவாரத்தைமூடி
இடது துவாரத்தால் சுவாசித்தால் தலைவலி போய் விடுமாம்
அதேபோல் சோர்வுற்றிருக்கும்போது இடது துவாரத்தை மூடி வலது
நாசித் துவாரத்தால் சுவாசித்தால் சோர்வு போய் விடுமாம். இதுவரை நான் சோதித்துப்
பார்க்கவில்லை. எனக்குத் தலைவலியும் வரவில்லை. சோர்வும் வரவில்லை. சோதிப்பவர்கள்
பலன் குறித்து தெரியப் படுத்தலாமே
ஒரு வம்பர் கேட்டார் மூக்கின்
இரு துவாரங்களையும் அடைத்துவிட்டால் ,,,,
நன்றி மறப்பது நன்றன்று. உணர்த்திய விதம் அருமை ஐயா.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்
நீக்கு//இரு துவாரங்களையும் அடைத்துவிட்டால்//
பதிலளிநீக்குஎல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை!
முடிகிறதா என்று பார்க்கவும்
நீக்குசார்... நம்மை மீறிய ஒரு சக்திதான் நம் உடலில் இருக்கிறது. அதன் ஒரே நோக்கம் சர்வைவல். முடிந்த வரை உயிர் பிழைக்க முயற்சிக்கும். எப்படியாவது மூச்சை இழுத்து உயிர் வாழ எண்ணும். தற்கொலை செய்துகொள்பவனும்கூட, அந்தக் கடைசி நொடியில் மீள முடியுமா என்றுதான் நினைப்பான் என்பது என் எண்ணம்.
நீக்குஅதைத்தான்முடிகிறதா என்று மறு மொழியில் கூறி இருந்த்தேன்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநன்றி சொல்லுதல் நல்ல செயல். நான்றி பாராட்டுவதையே பெருமளவு மறந்து விட்ட உலகம் இது!
பதிலளிநீக்குஉலகை மறந்து நம்மைப் பார்ப்போம்
நீக்கு//நீ நினைத்த கடவுளை வணங்கவோ பயமின்றி நினைத்ததைப் பேசவோ முடிந்தால் அதற்கு நன்றி சொல்.//
பதிலளிநீக்குமுடியவில்லையே... சிரமமான காரியமாய் அல்லவா இருக்கிறது!
// மூக்கின் இரு துவாரங்களையும் அடைத்துவிட்டால் ,,,// வாய் வழியே மற்றும் தோல் வாழியே சுவாசிக்கலாம்.
பதிலளிநீக்குஇறைவன் என்றும் எப்போதும் எதையும் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பதில்லை. பொருளும் அவனே, இயக்குபவனும் அவனே. ஆகையால் நன்றி சொல்வது நமக்கு நாமே திருப்தி பட்டுக் கொள்வது.
Jayakumar
அல்லது சக மனிதர்களிடம் நன்றி பாராட்டும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள உதவுவது!
நீக்குஜெயக்குமார் / // மூக்கின் இரு துவாரங்களையும் அடைத்துவிட்டால் ,,,// வாய் வழியே மற்றும் தோல் வாழியே சுவாசிக்கலாம்.
நீக்குமுயன்று பார்த்த துண்டா? இறைவன் எதைத்தான் நம்மிடம் எதிர்பார்க்கிறான் எல்லாம் நம் நினைப்பே
வெறுமே சகமனிதரிடம் நன்றிபாராட்ட முடியுமா
நீக்குநன்றி மறப்பது நன்றன்று!
பதிலளிநீக்குகண்டிப்பாக சார் நம்மை மீறிய சக்திக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த நன்றி நம் அகந்தையை நீக்க உதவும்.
நான் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் இந்த நன்றி சொல்வது பற்றி நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். மதியம் உணவுக்கு பெல் அடித்ததும் எல்லாரையும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்து உணவிற்கு நன்றி சொல்லிவிட்டுச் செல்லச் சொல்லுவார்கள்.
காலையில் எழுந்ததும் நன்றி அது போன்று இரவு படுக்கும் முன் அன்றைய நிகழ்வுகளை நினைத்து நன்றி சொல்லுதல் என்று.
எல்லோருக்கும் நன்றி சொல்லுவது அதாவது யாரேனும் நமக்குச் சங்கடம் விளைவித்தாலும் கூட அதுவும் நமக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்கிறது என்று நன்றி சொல்லுதல்.
கீதா
ரெஜிமெண்டேஷனில் எனக்கு நம்பிக்கை இல்லை நன்றி எனப்படுவது ஆத்மார்த்த மாக இரூக்க வேண்டும்
நீக்குஎவையெல்லாம் நன்மையோ அதற்கெல்லாம் நன்றி...
பதிலளிநீக்குதிருக்குறளில் நன்றி என்பதற்கு நன்மை என பொருளும் உண்டு...
நல்லது
நீக்கு// மூக்கின் இரு துவாரங்களையும் அடைத்துவிட்டால் ,,,,//
பதிலளிநீக்குநிம்மதிதான். என்ன சொல்றீங்க?
எப்போதும் யாருக்கும் இருக்கும் நிலையைப் பற்றி நிம்மதி வராது. இல்லாத ஒன்றைப் பற்றித்தான் கவலை வரும்.
அடைப்பது இயலாத என்றே நினக்கிறேன்
நீக்குஇதுல நினைக்க என்ன இருக்கு. முடியாது. கடுமையான மூக்கடைப்பு இருக்கும்போது ஆட்டமேட்டிக்கா நாம வாயினால சுவாசிப்போம். (மூக்கு வழியா தேவையான அளவு காற்று இழுக்க முடியலைனா).
நீக்குஎந்த உயிரும் வாழணும் என்று மட்டும்தான் நினைக்கும். ஒரு பூச்சி கூட நம்மிடமிருந்து தப்பிக்கத்தான் நினைக்கும்
நன்றி மறப்பது நன்றன்று
பதிலளிநீக்கு