நன்றி சொல்
’ எதற்கெல்லாம்
நன்றி தெரிவிப்பது ?”
”இன்றைக்கு உண்ண உணவும் ,உடுக்க உடையும் இருக்க இடமும்
இருந்தால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்,
உலகில் இருக்கும் மக்களில் 75% மக்களை விட நீ நல்ல நிலையில்
இருக்கிறாய். அதற்கு நன்றி சொல். இன்று காலை உறக்கம் விழித்து ஆரோக்கியத்துடன்
இருந்தால் அதற்கு நன்றி சொல். யுத்த பயம் இன்றி, சித்திரவதைக் கொடுமை இன்றி,
சிறைச்சாலையில் இல்லாமல் சுதந்திர மாக இருந்தால் அதற்கு நன்றி சொல். நீ நினைத்த
கடவுளை வணங்கவோ பயமின்றி நினைத்ததைப் பேசவோ முடிந்தால் அதற்கு நன்றி சொல். உன்
தாய் தந்தையர் உயிருடன் இருந்து இன்னும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்றால்
அதற்கு நன்றி சொல். கைகால்கள் நன்றாக இருந்து எல்லாப் புலன்களும் உன் கட்டுக்குள்
இருந்தால் அதற்கு நன்றி சொல் .உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடிந்தால்
அதற்கு நன்றி சொல். ஏனென்றால் இதையெல்லாம் இல்லாதவர்கள் மத்தியில் நீ மிகவும்
ஆசிர்வதிக்கப்பட்டவன். அதற்கு நன்றி சொல் இதையெல்லாம் படித்து அறிந்து கொள்ளக்
கூடிய நீ படிக்கும் வாய்ப்பே இல்லாதவரை விட நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு
நன்றி சொல்”
”அதெல்லாம்
சரி. நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.?”
”இந்தப்
பேரண்டத்தில் நீ துகளினும் சிறியவன் உன் பிறப்போ இறப்போ உன்னால் நிர்ணயிக்கப்
படுவதில்லை.இருப்பும் முடிவும் உன் கையில் இல்லாதவரை நான் எனும் அகந்தை தேவை
இல்லாதது. சொல்லப் போனால் எல்லாவற்றுக்கும் நீ நன்றி சொல்ல வேண்டும். அது கடவுளுக்காக இருக்கலாம், இயற்கைக்காக இருக்கலாம். ஆனால் உன்னை மீறிய சக்திக்கு என்று புரிந்தால் சரி”
இதையெல்லாம் படித்ததில் தலைவலி வந்தால் அதை எந்த மருந்தும்
இல்லாமலேயே குணப் படுத்த முடியுமாம். எங்கோ படித்தேன். வழக்கம்போல்
பகிர்கிறேன். மூக்கில் இரண்டு நாசித்
துவாரங்கள் வழியே நாம் சுவாசிக்கிறோம். தலைவலி வந்தால் வலது நாசித் துவாரத்தைமூடி
இடது துவாரத்தால் சுவாசித்தால் தலைவலி போய் விடுமாம்
அதேபோல் சோர்வுற்றிருக்கும்போது இடது துவாரத்தை மூடி வலது
நாசித் துவாரத்தால் சுவாசித்தால் சோர்வு போய் விடுமாம். இதுவரை நான் சோதித்துப்
பார்க்கவில்லை. எனக்குத் தலைவலியும் வரவில்லை. சோர்வும் வரவில்லை. சோதிப்பவர்கள்
பலன் குறித்து தெரியப் படுத்தலாமே
ஒரு வம்பர் கேட்டார் மூக்கின்
இரு துவாரங்களையும் அடைத்துவிட்டால் ,,,,