Friday, November 20, 2020

லிங்காஷ்டகம் தமிழில்




ஓம்
நமச்சிவாயா


ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோள் லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்


லிங்காஷ்டக இதை தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்




9 comments:

  1. காலையில் மனதிற்கு நிறைவினைத் தந்த பாடல் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ச்ல துதிக்ள் மனசுக்கு இதம் தரும் காரண்ம் இல்லாமலேயே

      Delete
  2. நன்று.  சிறுவயதில் இதெல்லாம் (தமிழில் அல்ல) மனப்பாடமாய் இருந்தது.  இப்போது கொஞ்சம் டச் விட்டுப்போச்சு!  எஸ் பி பி குரலில் நான் ரசிக்கும் ஸ்லோகங்கள் லிங்காஷ்டகம், பில்வாஷ்டகம், விஸ்வநாதாஷ்டகம், இன்னும் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. பல துதிகளின் வரிகள் மிக்ஸாகி தொந்த்ரவு தரும் மொழி புரிய வேண்டும் என்பதால் தமிழில் தேடி எடுத்து பதிவிடுகிறேன்

      Delete
  3. அடேடே...! கேரளா விஷ்ணு கோபித்துக் கொள்ளப் போகிறார் ஐயா...!

    முருகா...!

    ReplyDelete
    Replies
    1. விஷ்ணு ஏன் கோபிக்க வேண்டும்

      Delete
  4. லிங்காஷ்டகம் எஸ்பிபி பாடியதை ரசித்துக் கேட்பதுண்டு.

    தமிழில் இருப்பதும் கேட்டிருக்கிறேன் சார்.

    கீதா

    ReplyDelete
  5. தெரிந்தமொழி என்பதால் பதிவிடுகிறேன்

    ReplyDelete
  6. எனது குறும்படம் ஒன்றில் இதே லிங்காஷ்டகம் தமிழ் பாடலுக்கு எங்கள் நட்பில் இருக்கும் நடன ஆசிரியை நடனம் ஆடுவது போன்ற ஒரு காட்சி வைத்திருக்கிறேன்.

    அதுவரை எனக்குத் தமிழ் வெர்ஷன் அறிந்திருக்கவில்லை.

    துளசிதரன்

    ReplyDelete