வெள்ளி, 1 மார்ச், 2019

ஏதேதோ நினைவுகள்



                                      ஏதேதோ நினைவுகள்
                                    --------------------------------------
ஓஅது அந்தக்காலம்  என்பது எல்லோரும் பொதுவாக நினைப்பதுதானே நானும் விதி விலக்கல்லவே நினைவுகளுக்கு ஒரு ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை இருந்தாலும் ஓரளவு ஒழுங்கு படுத்தி சொல்கிறேன் எதை முதலில் சொல்வது? 73 ஆண்டுகள் நீண்டகாலம்தானே  எத்தனையோ நிகழ்வுகள்இந்த 73 ஆண்டுகளில் பெற்றோருடன் இருந்தது  வெறும் 18 ஆண்டுகளே இருந்தாலும் நினைவுகளை ஆக்ரமிப்பது அந்தவருடங்களே என் கணவருடன் வாழும் நாட்கள் அதிகமானாலும்  நினைவு என்னவோ அதற்கு  முந்தைய காலம்தான் பசுமையாக இருக்கிறது  எனக்கும்  என் தமக்கைக்கும்  இரண்டே  வயதுதான் வித்தியாசம் ஒன்றாகவே வளர்ந்தோம் எல்லா நிகழ்வுகளும் அவளுக்கும் தெரியும் ஆனால் ஒரு வித்தியாசம் எனக்கு நினைவில் இருப்பது அவளுக்கு இருக்காதுஅவளுக்கு நினைவிலிருப்பது எனக்கு இருக்காதுஆனால் இருவருக்கும் நினைவிருப்பது பள்ளிக்குச் சென்ற நாட்களே  ஒரு முறை நானும் அவளும் படித்தபள்ளிக்குச் சென்று பார்க்க விரும்பினோம் புகைப்படங்கள் சில எடுத்தோம் அவற்றில் சில






இப்போதைய ஒரு பள்ளிச் சிறுமியுடன்










கடைசியாக புடவைக்கடை 


நான்படித்து முடித்தபின்  வேலை பார்க்க விரும்பினேன்  அப்போதைய வாட்ச் ஃபாக்டரியில் ட்ரெயினி  ஆகச் சேர்ந்தேன் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டேன் இப்பொதும் அந்த வழியே செல்லும்போது  அந்த நினைவுகள்  முட்டு மோதும்   என் கணவர் கனரக கொதிகலன் தொழிற்சாலையில் தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தார்  நானும் எனக்கும் அந்தவிஷயங்கள் சில தெரியுமென்று சொன்னேன்  அந்தக் காலத்தில் ஜப்பானியர்கள் சொல்லிக்கொடுத்து எழுதி வைத்திருந்த  நோட் புத்தகத்தில் ஸ்டாடிஸ்டிகல்  அனாலிசிஸ்  பற்றி எழுதி வைத்திருந்ததைக்  காண்பித்தேன்   அதில் சில வார்த்தைகள் இப்போது ஏதோ ஜார்கன் மாதிரி இருக்கிறது
நானும் அக்காவும்  1962ல்


எச் எம் டி  வாட்ச் ஃபாச்டரியில்  1964 ல் இடது ஓரத்தில்  அமர்ந்திருப்பது நான்


பயிற்சியில்  இருந்தபோது திருமணம் ஆயிற்று  சில நாட்களில் அவருக்கு வேறு வேலையாகி சென்னை சென்றோம் வில்லிவாக்கத்தில் இருந்தோம் எனக்கு அங்கு மறக்க முடியாதது நாங்க இருந்தஸ்டோர் குடியிருப்புக்கு வரும்பட்டாணியரைத்தான் சுமார் ஏழு அடி உயரம் தலையில் தலைப்பாகையுடன்   பார்த்தாலே பயமாய் இருக்கும்  அவனிடம் கடன்  வாங்கியவரிடம் வட்டி வசூலிக்க வருவான்  நமக்கு ஏதும் தொந்தரவு  இல்லை என்றாலும்  ஊர் விட்டு ஊர் வந்து கடன்கொடுத்து வட்டி வசூலிக்கும்  அவர்கள் 
வித்தியாசமானவர்கள்தான் ஆச்சரியப்பட வைக்கும்       

23 கருத்துகள்:

  1. ஆச்சர்யம். அம்மா எழுத்தா? அவர் எழுதி இருப்பது ஆச்சர்யமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. வரவேற்கத்தக்க மாறுதல் உங்கள் தளத்தில். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முக்கிய விளக்கம் பதிவு என்மனைவி சொல்ல நான் எழுதியதுஅவள் எழுதியதுபோல் இருந்தால் சுவாரசியமாக இருக்கும் என்று நம்பினேன் ஆனால் தவறான கருத்ட்க்ஹுக்கு இடமளித்து விட்டது முதலில் மன்னிக்க வேண்டுகிறேன்

      நீக்கு
    2. ஸார்... அவர்கள் அமர்ந்து டைப் செய்தால்தானா?

      இது அம்மாவின் அனுபவங்கள். அதை நீங்கள் எழுதுகிறீர்கள் அவ்வளவுதானே...

      ஆவலுடனே காத்திருக்கிறோம், தொடர்கிறோம்.

      நீக்கு
    3. எனக்கு வாசகர்களை ஏமாற்றிவிடதாக நினைப்பு தொடர்வேன் அவ்வப்போது

      நீக்கு
  2. அருமையான நினைவலைகள். உங்கள் மனைவியும் அவர் அக்காவும் இருக்கும் படங்கள், படித்த பள்ளி என நினைவுகள் அலை மோதிக்கொண்டு வருகின்றன. தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள். சுவாரசியமான பதிவு. அவங்களுக்கும் என் நமஸ்காரத்தையும் , வாழ்த்தையும் சொல்லிடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவலைகள் அவளுடையது எழுத்துமட்டும் எனது வாழ்த்துகள் சொல்லப்பட்டு விட்டன

      நீக்கு
  3. நினைவுகளை அருமையாக சொல்லி உள்ளார்கள்...

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்து எழுதச் செய்யுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. பிரியட் பிலிம் போல உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அது அந்தக்காலம் என்பதே ஒரு பீரியட் பதிவுதானே

      நீக்கு
  6. அம்மா அவர்களின் எண்ணங்கள், நினைவலைகள் ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் அதைத் தட்டச்சு செய்திருப்பது எல்லாம் உங்கள் இருவரின் அன்பையும் சொல்லுகிறது.

    இப்படி அம்மாவை அவரது நினைவுகள் மற்றும் அனுபவங்களைப் பகிரச் சொல்லுங்கள் சார். இன்னும் சுவாரஸ்யமான பதிவுகள் கிடைக்குமே.

    அம்மாவும் அவர் அக்காவும் இருக்கும் படங்கள் அனைத்தும் ரொம்ப அழகாக இருக்கிறது.

    அம்மாவுக்கு எங்கள் வணக்கங்களைச் சொல்லுங்கள்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வரவேற்கப்படுமா என்னும் சந்தேகமிருந்தது

      நீக்கு
  7. உங்கள் மனைவி சொன்னதை நீங்கள் உள்வாங்கி சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. தொடர்க!

    பதிலளிநீக்கு
  8. அவர்களின் நினைவுகள் அருமை ஐயா. அதனை நீங்கள் பதிவிட்ட விதம் அதைவிட அருமை. இவ்வாறான பதிவுகள் என்றென்றும் நினைவில் நிற்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆக இவ்வாறான பதிவுகள் தொடரலாம் என்கிறீர்கள்

      நீக்கு
  9. சார் .ரியலி சூப்பர்ப் ..உங்க மனைவி சொன்னதை அழகா பதிவாக்கியிருக்கிங்க .அவங்க தான் எழுதியிருக்காங்கன்னு நினைச்சிட்டேன் .அவர்களின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி ..
    எத்தனை சந்தோசம் சகோதரிகள் முகத்தில் !!
    இந்த மாதிரி அவர்களின் நினைவுகளையும் எங்களுடன் பகிர்ந்துக்கோங்க சார்

    பதிலளிநீக்கு
  10. தங்கள் துணைவியார் சொல்லி நீங்கள் எழுதியது அவர்கள் எழுதியதுபோல் உள்ளது. நினைவலைகள் அருமையாக உள்ளது. இதைத் தொடருங்கள். இன்றைக்கு பெரிய வி.ஐ.பி கள் எழுதும் தொடர்கள் அவர்கள் சொல்லி பிறர் எழுதுவதுதான். எனவே இதில் ஏமாற்றுவது ஒன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள்சொல்ல நான் எழுதுவதைத் தொடரலாம் என்றுஇருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு