தவிர்க்க முடியாததை அனுபவிக்க வேண்டும்
-----------------------------------------------------------------------
என் உடல்நலம்பற்றி
அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன் உபாதைகள்
என்னும் தலைப்பில் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் முக்கிய காரணம் என்னவென்றால்பல
உபாதைகளை பெற்று நலம் அடைந்தவன்நான் என் எழுத்துகள்
உண்மையின் பிரதி பலிப்பாயிருந்து வாசகர்களும் அவை குறித்த அனுபவங்களைத்தெரிந்து கொள்ள
வேண்டும் என்னும் ஆசைதான் பலரும்பின்னூட்டங்களில் உடல் நலம் பேணும் படி எழுதி
இருக்கிறார்கள் எனக்கு சிலசமயம் உடல் நலம்
பேணுவது என்றால் என்ன என்பதே சந்தேகமாக இருக்கும் வாழ்க்கையை ஒரு கட்டுப்பாட்டுக்குள்
வைத்து உணவு பயிற்சி போன்றவைகளைக் கடை பிடிப்பதே உடல்நலம்
பேணுதல் என்பதேஎன் அறிவு இளவயதில் நானொரு ஸ்போர்ட்ஸ்மன் கிரிக்கட் விளையாடுவேன் தடகளப் போட்டிகளில் பங்கு
பெற்று பரிசும்வாங்கி இருக்கிறேன் பயிற்சியில் அம்பர்நாத்திலிருநபோது உயரம் தாண்டுவதிலுல்
டேபிள் டென்னிசிலும் பரிசு பெற்றவன் போல் வால்டில் பங்கு பெற்றவன் இருந்தும் அவ்வப்போதுவரும் உபாதைகளில் இருந்து தப்பியதில்லைநிறையஎழுதி
இருக்கிறேன் கடந்தசில மாதங்களாக நடப்பதே பிரச்சனை
யாகி இருக்கிறது மகாத்மா காந்தி நடப்பதே சிறந்தபயிற்சி என்று இருந்தவர் நானும்வேறு பயிற்சிகளில் ஈடுபட முடியாத போது நடையில்
கவனம்செலுத்தி தினம் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறேன்இப்போதெல்லாம் என்னால் தனியெ
எங்கும் போக முடிவதில்லை அனுமதியுமில்லை
என் வீட்டருகே
ஒரு பார்க் இருக்கிறது அதில் தினமும் முடிந்ததோ இல்லையோ நடைப்பயிற்சியில் இருப்பேன் நடையின் தூரமும் வேகமும் குறைந்துகொண்டே வந்தது
ராஜ நடைஎன்று பீற்றிக் கொள்ளும் நான் தள்ளாடி தள்ளாடி நடக்க் வேண்டியதாய்ப் போய்விட்டது
இந்தக் குறையுடன் மருத்துவரை அணுகியபோது எம் ஆர் ஐ டெஸ்டுக்கு உட்படச் சொன்னார் அதுபற்றியும் எழுதி இருக்கிறேன் பலனேதும் கிடைக்கவில்லை
எந்தபயணமும் மேற்கொள்ள முடிவதில்லை
சில நாட்களுக்கு முன் பார்க்கில் நடந்து வந்து கொண்டிருந்த நான் என்கட்டுப்பாட்டையும் மீறி வேகமாகத் தடுமாறியே வேகமாக
நடக்கத்துவங்கினேன் மனதில் இது சரி இல்லை என்று
தோன்றவே ஒருஇடத்தில் அமரப்போகும்போது நிலை
தடுமாறி சாய்ந்து விட்டேன் சில நல்ல மனிதர்கள்
என்னை வீட்டில் கொண்டு விட்டார்கள் அதிலிருந்து வெளியே நடக்கப்போவதில்லை மீண்டும் மருத்துவரிடம்
எல்ல நிகழ்வுகளையும் விவரித்தேன் என்னை c t scan க்கு உட்படுத்தினார்கள் gait
assessment என்னும் சோதனை நடத்தினார்கள்
வயதாவதன் பிரச்சனை என்கிறார்கள் சில பயிற்சிகளைச் சொல்லிக்
கொடுத்திருக்கிறார்கள் நானும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் அனுசரிக்கிறேன்
பார்க்கலாம் எந்த வேலையும் செய்யாமல் நான் இருக்க என்மனைவி அதிகம்
சிரமம் எடுக்கிறாள் கணினி முன்பு எழுதுவதே என் பொழுது போக்கு அதிக நேரம்வாசிப்பில் கவனம் செலுத்தமுடிய வில்லை
பரிசோதனைகளில்
பெரிதாக ஏதும்கண்டு பிடிக்கவில்லைஎன்னை ஒரு காமிரா முன் நடக்கச் சொன்னார்கள் அதில் என்
இடப்பாகம்சற்றே தொய்ந்து இருப்பதாக atrophy என்று சொன்ன நினைவு அட்ராஃபி என்றால் சுருங்குதல் என்று அர்த்தம்மூளையின் ஒரு
பாகம் சுருங்கி விட்டதாம் வயதானதன் கோளாறு
என்று சொன்னார்கள் இன்னும் மோசமாகாமல் இருக்க சில பயிற்சிகள் சொன்னார்கள் ஒவ்வொரு
முறையும் எனக்கு நான் எழுதி இருந்த செய்யாதகுற்றமென்னும்
பதிவே நினைவுக்கு வரும் தவிர்க்க முடியாததைஅனுபவித்து தான் தீரவேண்டும்/ என்மக்களுக்குக்
கூறும் அறிவுரைகள் எனக்கும் பொருந்தும் தானே
பார்ப்போம் இன்னும் எத்தனை நாள் என்றுஅது தெரியும்போது கணக்கிடநானும் இருக்கமாட்டேன்
உலகமே நீ வாழவந்தவன் என்று
கற்பனையில் எழுதியவன் எல்லாமே பொய்யாகி புனை சுருட்டாகும்போது........................!
படிக்கும்போது வருத்தமாய் இருக்கிறது. வயதாவதால் வரும் பிரச்னைகளை யாரால் தவிர்க்க முடியும்? ஆனாலும் உங்கள் மனபலம் இவற்றை எதிர்த்து நிற்க உங்களை ஊக்குவிக்கிறது.
பதிலளிநீக்குஎன் பதிவின் தலைப்பே உங்களுக்கு மறு மொழி யாய் கருதுகிறேன் மனபலம் மட்டும் போதாது உடல் பலமும் வேண்டும்
நீக்குஉங்கள் மனோபலம் உங்களுக்குத் துணை நிற்கும். வீட்டிற்குள் நடந்தால் போதுமே. கவனமாக இருங்கள். பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குமனபலம் வேண்டிய அளவு இருக்கிறது அது மட்டும்போதாதே என்னால் பிறர் வருந்துவதை எப்படி குறைக்க இயலும்
நீக்குபிறர் வருந்துகின்றனர் என ஏன் நினைக்கிறீர்கள்? உங்கள் மேல் கொண்ட கரிசனம், அக்கறை தானே காரணம். பகவன் நாமாவைச் சொல்லிக் கொண்டே இருங்கள். வாய்விட்டுச் சொல்ல வேண்டாம். உள்ளூர ஓடிக் கொண்டிருக்கட்டும்.
நீக்குmமனம் ஒவ்வாததை வெறுமே வாயால் சொல்வது எனக்கு இயலாதது
நீக்கு:))))))வாய்விட்டுச் சொல்ல வேண்டாம். உள்ளூர ஓடிக் கொண்டிருக்கட்டும்.
நீக்குஅதற்கும் மனமொப்ப வேண்டுமே
நீக்குதெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
பதிலளிநீக்குதென்மெய்வருத்தக் கூலி தரும்
என்பார் வள்ளுவர்.
முயற்சி செய்யுங்கள், மேலும் மேலும் முயற்சி செய்யுங்கள்
தங்களின் மன வலிமையை நான் அறிவேன்
தங்களால் முடியும்
தங்களால் நிச்சயம் முடியும்
என் மருத்துவர் ஒரு முறை கூறினார் முடிந்த அளவு மனசுக்கு வேலை கொடுங்கள் அவை உடலைப் பற்றி மட்டும்வேண்டாம் அதுவெ நான் ஓவியம்பயிலவும்சிறு கைவினைப் பொருட்கள் செய்யவும் ம்ம் காரணமாய் இருந்தது அனால் அதற்கும் இப்போது முடிவதில்லை பதிவுகள் எழுதுவதுதான் இப்போது என்னால் முடிந்த ஒன்று
நீக்குவயதாகும் போது சில பல உடல் உபாதைகள் ...என்ன செய்வது .. பார்த்துக் கொள்ளுங்கள்
பதிலளிநீக்குஅனுபவிப்போம்
நீக்குஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை... வருத்தமாக இருக்கிறது ஐயா...
பதிலளிநீக்குஇதில் வருந்த ஒன்றுமில்லை
நீக்குபோஸ்ட் படிக்க கஸ்டமாகவும் வருங்காலத்தை நினைத்துப் பயமாகவும் இருக்கிறது.
பதிலளிநீக்குஎதையும் சிந்திக்காமல் மகிழ்ச்சியாக பொழுதைக் கழியுங்கோ. ஏன் எனக்கு இப்படி வருகிறது என சிந்தித்தாலே உடம்பு இன்னும் பலவீனமாகிவிடும். நெடுகவும் ஒரே மாதிரி இருக்க முடியாதுதானே... கொஞ்சம் மாற்றங்கள் வரத்தான் செய்யும், அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்போல...
எதையும் செய்யாமல் இருக்க முடியும் சிந்திக்காமலிருக்க முடியுமா
நீக்குமுடிந்தவரை மருத்துவர் சொன்ன பயிற்சிகளை செய்யுங்கள்.
பதிலளிநீக்குமனபலம் நடத்தி செல்லும். மனதுக்கு விருப்பமானவற்றை செய்யுங்கள் மற்றதை இறைவன் கையில் விட்டு விடுங்கள்.
மருத்துவரி பயிற்சிகள் எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை இதுவரை
நீக்குமன பலத்தை கைவிடவேண்டாம் ஐயா விடமாட்டீர்கள் என்பது நாங்கள் அறிந்ததே... இறைவன் துணை செய்யட்டும்.
பதிலளிநீக்குஅதில் குறை இல்லை ஜி
நீக்குஎதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். பதிவுகள் எழுதுவதை மட்டும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால் புறவுலகை மறந்து மனம் போன போக்கில் சிந்தனைகளில் நம்மை ஆட்படுத்திக் கொள்வதில் என்ன உடல் நலப் பயிற்சி கிடைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் அது மனதுக்கும் உடல் அசெளகரியங்களுக்கும் மருந்து என்பது என் அபிப்ராயம். கணினி முன்னால் ஒரேடியாக உட்காருவதைத் தவிர்த்து அரைமணிக்கொருதரம் எழுந்து ஜன்னல் பக்கம் நின்று உடல் பூராவுக்குமான இரத்த ஓட்டத்தை சரிப்படுத்திக் கொண்டு
பதிலளிநீக்குமீண்டும் கணினி முன்பு வரலாம். தனியாக உட்கார்ந்து கொண்டு சிந்தனை வயப்படுவதை இன்னொருவரிடம் நம் நினைப்பதை பகிர்வது உடல் உற்சாகத்தைக் கூட்டுகிறது என்பது சுலபமாக சொல்லி விளக்கத் தெரியாத எனது கண்டுபிடிப்பு.
தனிமை கண்டதுண்டு; அதில் சாரமிருக்குதம்மா..' என்று பாரதி சொன்னது கூட இது தானோ என்னவோ?..
தனியாக உட்கார்ந்து கொண்டு சிந்தனை வயப்படுவதை இன்னொருவரிடம் நம் நினைப்பதை பகிர்வது உடல் உற்சாகத்தைக் கூட்டுகிறது என்பது சுலபமாக சொல்லி விளக்கத் தெரியாத எனது கண்டுபிடிப்பு.பகிர்ந்து கொள்கிறேன் சார் /
நீக்குசிந்தனை வயப்படுவதை விட -- என்று திருத்திப் படிக்கவும்.
பதிலளிநீக்குநானப்படித்தான் பொருள்கொண்டேன்
நீக்குஉங்களைப் போன்ற மனதால் இளையவர்களுக்கும் வயது தன் வேலையை காட்டாமல் விடாதா? மருத்துவர்கள் கூறிய பயிற்சிகளை கொண்டிருங்கள். இறையருளும், உங்கள் மன திடமும் துணையிருக்கும்.
பதிலளிநீக்குஎன்னிலும்மூத்தவர்கள் இருக்கிறார்கள்நல்ல ஆரோக்கியத்துடன் உங்களுக்கும் தெரியும்
பதிலளிநீக்குஎன்ன செய்யலாம்? என் மாமனாருக்கோ, மாமியாருக்கோ சர்க்கரை நோயே கிடையாது. கடைசி வரையிலும் காஃபிக்குச் சர்க்கரை கரண்டியால் தான் போட்டுப்பாங்க! நம்பினால் நம்புங்க! அவங்களுக்குச் சர்க்கரையே இல்லை. எல்லா உறுப்புக்களும் முறையாகச் செயல்பட்டு வந்ததை மருத்துவர்களே கண்டு வியந்திருக்காங்க. மாமியார் கீழே உட்கார்ந்து சாப்பிடுவார். 90 வயசிலும் கொழுக்கட்டைக்குச் சொப்புச் செய்து தருவார். வேலைகளை நிறுத்தியதே இல்லை. ஆனால் அவரை விட 30 வயசுக்கும் மேல் குறைந்த வயசுள்ள எனக்கும் என் ஓரகத்தி முதலானோர்க்கும் இப்போதே முடியவில்லை. தன் அப்பா இருந்த உடல் பலத்துடன் தான் இல்லையே என என் கணவருக்கும் வருத்தம் தான்! ஆனால் அவங்கல்லாம் ஒரே இடத்தில் ஒரே முறையான வாழ்க்கை நடத்தியவங்க. நாமெல்லாம் காலமென்னும் அலையில் மொத்துண்டு மோதுண்டு பின் கரையில் ஒதுங்கி இருக்கோம். இந்த அளவுக்கானும் முடியுதேனு நான் நினைப்பேன்/நினைக்கிறேன். ஆகவே உங்களை விட வயதானவங்களைப் பார்த்து நீங்கள் மனம் வருந்த வேண்டாம். இப்போது இருக்கும் உடல் தெம்பே போதும் என நினையுங்கள்.
நீக்குஎன்னிலும் மூத்தவர்களைப் பார்து வஎருத்தம் என்றா சொன்னேன் மகிழ்ச்சிதான் கேரள முதல்வர் கருணாகரன் ஒருகுழந்தைபோல் குருவாயூர் கோவிலில்வலம்வருவதுகண்டு மகிழ்ந்திருக்கிறேன்
நீக்குவருத்தமாக இருக்கிறது . முதுமை காரணமாகப் பற்பல தொந்தரவுகள் நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலுவதில்லை .
பதிலளிநீக்குஅவற்றில் சிலவற்றை அனுபவப்பதிவாக்கி இருக்கிறேன்
நீக்குமுதுமை..
பதிலளிநீக்குஇப்பவே பயமா இருக்குப்பா..
உங்க காலத்து சாப்பாடு, தண்ணி, சுற்றுச்சூழல்லாம் இப்ப இல்ல. உங்களவுக்கு நாங்க ஆக்டிவா இருப்போமான்னு தெரில. அப்படியே இருந்தாலும் மாத்திரை, ஊசியுடந்தான் கடத்தனும்.
என் முதுமை ஒரு வரமென்னும்பதிவைப்படியுங்கள்சுட்டி இதோ
நீக்கு/http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_29.html
ஜிஎம்பி சார்... இந்த இடுகை என்னைக் கவர்ந்த இடுகை (இன்றைக்கு).
பதிலளிநீக்குஎதையுமே அனுபவிக்கும்போதுதான் நாம புரிந்துகொள்ள முடியும்.
பொதுவா நல்ல ஆரோக்கியத்துடனும், ரெகுலராஜ ஜிம், டயட் என்று இருக்கும் எனக்கு, இந்த ஆறு மாதத்தில் என்னால் கண்ட்ரோல் செய்யமுடியாத அளவு திடீர் பிரச்சனைகள் வந்தது. எனக்கு அதிர்ச்சி கொடுக்கிறது. ஆனாலும் இது 'என்னுடைய கிரக நிலை' என்று எண்ணி எண்ணி கொஞ்சம் மனசளவுள தேற்றிக்கொள்கிறேன்.
பஜகோவிந்தத்தில் சொல்வதுபோல,
மாகுரு தன ஜன யவ்வன கர்வம்
ஹரதிநிமேஷ கால சர்வம்
மாயா மயமிதம் அகிலம் ஹித்வா
என்பதைத்தான் உங்கள் நினைவு எனக்கு நினைவுபடுத்துகிறது.
சில நம்பிக்கைகள் சிலருக்கு உறுதுணைபோல் தெரிகிறது
நீக்குகவர்ந்த-இதற்கு அர்த்தம், உள்ளதை நீங்கள் எழுதிய விதம். இதுதான் எல்லோருக்கும் 'Eye Opener'. எனக்கு எப்போதுமே முன்னோடிகளுடன் அவர்கள் அனுபவம், சந்தோஷம் துக்கம் எல்லாவற்றையும் கேட்பதில் மிக விருப்பம். அப்போதான் நமக்கு எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம், to be prepared என்பதும் (அப்படி தயார் செய்துகொள்வது இயலாது என்றபோதும்) சாத்தியம் என்பதனால்.
பதிலளிநீக்குஎனக்கு கற்பனையாய் எழுதுவதைவிட உண்மையாயெழுதுவது பிடிக்கும் அதையே முயற்சிக்கிறேன்
நீக்குசார் பதிவை வாசித்த போது வருத்தத்தைத் தவிர்க்க இயலவில்லைதான்.
பதிலளிநீக்குசார் உடல் பலவீனம் அடைந்தாலும் மன பலம் தான் மிக மிக முக்கியம் என்பதே மருத்துவர்கள் உட்படச் சொல்லுவது. கண்டிப்பாக உங்கள் மனோ பலமும் மனதில் இளையவரைப் போல் நினைத்திருப்பதும் வழி நடத்தும். எழுதுங்கள்.
இங்கு பலரும் எல்லா கருத்துகளும் நாங்கள் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டனர்தான்.
உங்கள் பதிலையும் பார்த்தாச்சு. வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை சார்
மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.
கீதா
அதுஎப்படி என்பதுதான் எனக்குப் புரிவதில்லை அநேகமாக நீங்கள் சொல்ல வந்த கருத்துகளை பிறர் சொல்லிச் சென் று விடுகின்றனர் இதை ஒரு அனுபவப்பகிர்வாகவே பாருங்கள்
நீக்குபதிவையும் பின் வந்த ஊட்டங்களையும் படித்தேன்.
பதிலளிநீக்குகீழே கொடுக்கப்பட்டிருப்பதை (-நான் சொல்லவில்லை, யார் சொன்னது என்பதைப் பிறகு பார்க்கலாம்) கொஞ்சம் ஆழமாகப் படியுங்கள். பிறகு, சொல்ல முயலுங்கள் - ஏதாவது இப்படி ஏற்கனவே மனதில் தோன்றியிருக்கிறதா, அல்லது இப்போது ஏதும் புரிவதுபோல் தோன்றுகிறதா - என? Please don't jump to the conclusion ’these are all mere abstracts..'
The Quote is below :
''.. If you are in the normal state of mind, even though you may be eighty-years old, you never feel that you have become old. To others, you may look very old, but deep inside you, you never feel that you are old, because .. there is ’something’ in you, that never ages.''
I am not hazarding any guess என் பழைய பதிவு ஒனறையும் படியுங்கள் என்மனநிலை புரியும் Idefinitely think that I am in normal state of mind முதுமை ஒரு பரிசு / http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_29.html
நீக்குஇதுவும் கடந்து போகும்.....
பதிலளிநீக்குவேறென்ன சொல்ல.
இதுவும் கடந்து போவதை என்னால் பார்க்க முடியுமா
நீக்குவருவது வந்தே தீரும் போவது போய்த்தீரும். இப்பொழுது ஏன் வந்தது என்ற நினைப்பை மறந்து மீண்டு வாருங்கள் அய்யா...
பதிலளிநீக்கு80 வருட வாழ்வுஇதை கூட எனக்குக் கற்றுத்தரவில்லையா சந்தேகம்வேண்டாம் சார்
நீக்குஉங்க மனதுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்யுங்க ஸார் .மனசு ஹாப்பியா இருந்தா எல்லாம் சரியாகிடும்
பதிலளிநீக்குமனசு பொறுத்தவரை நானெப்பவும் ஹாப்பிதானிது ஒரு அனுபவப் பகிர்வு அவ்வளவுதான்
நீக்குநீண்ட நாட்களுக்குப் பின் தங்களது வலைப்பக்கம் வந்திருக்கிறேன். தங்களின் பதிவு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் முதுமை அடையும் எவரும் இது போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தந்திருக்கிறது. தங்களின் மனவலிமை தங்களுக்கு உறுதுணையாயிருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
பதிலளிநீக்குவருகை அதிக மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா
பதிலளிநீக்கு