வியாழன், 21 பிப்ரவரி, 2019

போதிமரம்



                                  போதி மரம்
                                  -----------------
  வயது ஆகும்போது இறப்பைப் பற்றிய எண்ணங்கள் கூடுகின்றன இந்த எண்ணங்களையே  பதிவாக்கினால் என்ன என்று தோன்றியது தோன்றியது செயல் படுத்தினால்,,,,,,,,,,,,,,
அரச குமாரன்  சித்தார்த்தன் வீதியில் போய்க் கொண்டிருந்தாராம்  ஒரு வீட்டின் வாசலில் ஒரெ அழுகைக்குரல் வரக்கேட்டது  என்ன என்று விசாரிக்க அவ்வீட்டில் ஒரு இழப்பு என்று கேள்விப்பட்டாராம் ( சில செய்திகள்  அடியேன்  இட்டுக் கட்டியதாகும் இல்லையென்றால் கதை அப்படி அல்ல என்பார்கள் )  அவர் உள்ளே போய் சமாதானப்படுத்த முயன்றார்  யாருடைய அழுகையையும் நிறுத்த முடியவில்லை  "சாகும்வயசா இவருக்கு குழந்தைகள் இருக்கின்றனவே அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டுமே" என்று என்னவெல்லாமோ சொல்லி மனைவி அழுது கொண்டிருந்தாளாம் அவரைப் பார்த்ததும் அழுகைக்குரல் கூடியது  என்ன செய்வது என்று  யோசித்தவருக்கு  ஒரு ஐடியா தோன்றிற்றாம்
அவரை நான்பிழைக்க வைக்கிறேன்  என்றாராம் ஒரு டம்ளர் நீரை இறந்தவரின்  அருகே வைத்தாராம்    எல்லோரும் ஆவலோடு அவர்முகத்தையே  பார்த்துக் கொண்டிருந்தனராம் 
இவருக்குப் பதில் யாராவது தன்உயிரைத் தியாகம்செய்ய முன்வருபவர் இந்நீரைக் குடிக்க வேண்டும் இவர் பிழைத்து விடுவார் ஆனால் நீரைப்பருகியவர் இறந்துவிடுவார்  என்றாராம்  எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனராம் வீட்டின்  வயதான தந்தையிடம் மகனைப் பிழைக்க வைக்க அவர்  நீரைப் பருகுவாரா என்று கேட்டதற்கு நான்போனால் என்மனைவியை யார் பார்த்துக் கொள்வது என்று ஒதுங்கி விட்டாராம்இறந்தவரின் அம்மாவுக்கு தன்மகள் நிறை மாசக் கர்ப்பிணி அவளைக் கவனித்துக் கொள்ளும் பணி தனக்கு இருப்பதால்  தன்னால் முடியாது என்றாராம் இறந்தவரின் மனைவிக்கு மீதி இருக்கும்  குழந்தைகளை  வளர்த்து  ஆளாக்கும்  கடமை இருந்தது இப்படியெ ஒவ்வொருத்தரும்  ஒதுங்கி விட்டனராம்
சித்தார்த்தருக்கு  ஒரு உண்மை புரிந்தது இறப்பவரின் இழப்பு ஏற்படுத்தும் கஷ்டங்களே  அழுகைக்குக் காரணம் அன்பு மட்டும் அல்ல காலப்போக்கில்  எல்லாம் மறந்துவிடும்இழப்பு என்பது டெம்பொரரியே  அப்போது மட்டும் அழுகையும் அஞ்சலிகளும்   இருக்கும் யாரும்மறுக்க முடியாத உண்மை  போதிமரம் ஏதும்தேவை இல்லைஉண்மை நிலை உணர 




20 கருத்துகள்:

  1. அருமையான நடப்பு உண்மை ஐயா.
    உங்களது இணைப்பும் சேர்த்தது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம்மகிழ்விக்கிறது

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாழ்வியல் யதார்த்தங்களையும் நினைவு படுத்த வேண்டி உள்ளது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  3. மனிதன் அல்லது ஒரு உயிர், சுயநலம் உள்ளது. என்னதான் சொன்னாலும் கடைசியில், 'தான்' என்ற நினைப்பு மட்டும்தான் இருக்கும். இதுதான் வாழ்வியல் எதார்த்தம்.

    'நீ இல்லாமல் நான் இல்லை' என்று யார் சொன்னாலும் அது காதல் வசனம்தான். அதற்கு மதிப்பு கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நானும் வாழ்வியல் சித்தாந்தத்தைக் கூறி விட்டேன் நன்றி சார்

      நீக்கு
  4. பதில்கள்
    1. எனக்கு போதிமரச் சிந்தனை என்று தோன்றவில்லை வாழ்வியல் யதார்த்தம் நானுமெழுதி இருக்கிறேன்

      நீக்கு
  5. மகாபாரதத்தின் யயாதி கதை நினைவுக்கு வந்தது.
    Jayakumar​​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவும் மனஏ நினைவுக்கு வருகிறது

      நீக்கு
  6. இந்தக் கதை படித்திருக்கிறேன்.

    மரணித்த மகனை உயிர்ப்பிக்கச் சொல்லி ஒரு தாய் புத்தபகவானிடம் மண்றாடினாளாம்.

    புத்தர் சொன்னாராம் "சாவில்லா வீட்டில் பிடி சாம்பல் வாங்கி வா.. பிழைக்க வைக்கிறேன்" என்று.

    படித்ததில் / பார்த்ததில் இதுவும் எனக்கு நினைவுக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
  7. என்றோ எங்கோ படித்தது நினைவுக்கு வருவதுஆச்சரியமில்லை நான்படித்தது புத்தர் வீதியில் போய்க் கொண்டிருந்தபோதுஒரு இழவு வீட்டை கடந்துசென்றதும் பிற்காலத்தில் அவர்கோட்பாடுகளுருவாகக் காரணம் என்று நினைவுகதை எதுவாகைருந்தாலும் சொன்னதுவாழ்வின் யதார்த்த நிலையையே

    பதிலளிநீக்கு
  8. காயம் ஆறிடும். வலியும் குறைந்திடும். ஆனா, தழும்பு மாறாது. அழியாது. அதுமாதிரிதான் இழப்பும்..

    பணத்துக்கு எப்படி நாட்டுக்கு நாடு மதிப்பு மாறுதோ அப்படிதான் இறப்பும்.. அது இறந்தவரை பொறுத்தே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறந்தவர்களையோ இழந்தவர்களையோ நினைத்து வருந்துவ்து சொற்பகாலமே நமக்கு மறதி என்னு வரம் இருப்பது தெரியும்தானே

      நீக்கு
  9. 100% உண்மை ஐயா...

    பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்...
    தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்...
    பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்...
    உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்...
    புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்...

    ----- பட்டினத்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எல்லாம் அறிந்த பட்டினத்தார் தன் தாய் இறந்தபோது பாடியதாகசொல்லப்படும் வரிகள் அடிக்கடி மேற்கோள் காட்டபடுவது

      நீக்கு
  10. ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
    இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி...
    உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
    ஊறு சுரோணித மீது கலந்து...
    பனியிலோர் பாதி சிறு துளி மாது
    பண்டியில் வந்து புகுந்து திரண்டு...
    பதுமரரும்பு கமடம் இதென்று
    பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற...
    உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
    ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை...
    உதரமகன்று புவியில் விழுந்து
    யோகமும் வாரமும் நாளும் அறிந்து...

    ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்
    உவந்து முகந்திட வந்து தவழ்ந்து...
    மடியில் இருந்து மழலை மொழிந்து
    வா இரு போ என நாமம் விளம்ப...
    உடைமணி ஆடை அரைவடம் ஆட
    உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு..
    தெருவினிலிருந்து புழுதி அளைந்து
    தேடிய பாலரடோடி நடந்து...
    அஞ்சு வயதாகி விளையாடியே..

    உயர்தரு ஞான குரு உபதேசம்
    முத்தமிழின் கலையும் கரை கண்டு...
    வளர்பிறை என்று பலரும் விளம்ப
    வாழ் பதினாறு பிராயமும் வந்து...
    மதனசொரூபன் இவன் என மோக
    மங்கையர் கண்டு மருண்டு திரண்டு...
    வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
    மாமயில்போல் அவர் போவது கண்டு...
    மனது பொறாமல் அவர் பிறகோடி
    தேடிய மாமுதல் சேர வழங்கி...

    வளமையும் மாறி இளமையும் மாறி
    வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு...
    வயது முதிர்ந்து நரைதிரை வந்து
    வாதவிரோத குரோதமடைந்து...
    செங்கையில் ஓர் தடியும் ஆகியே...

    வருவது போவது ஒருமுதுகூனும்
    மந்தி எனும்படி குந்தி நடந்து...
    மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
    வாய் அறியாமல் விடாமல் மொழிந்து...
    கலகலவென்று மலசலம் வந்து
    கால்வழி மேல்வழி சார நடந்து...
    கடன்முறை பேசும் என உரைநாவும்
    உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து...
    கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
    பூதமும் நாலு சுவாசமும் நின்று...
    நெஞ்சு தடுமாறி வரும் நேரமே...

    வளைபிறை போல எயிரும் உரோமம்
    முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச...
    மனதும் இருண்ட வடிவும் இலங்க
    மாமலை போல் யமதூதர்கள் வந்து...
    வலைகொடு வீசி உயிர்கொடு போக
    மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து...
    மடியில் விழுந்து மனைவி புலம்ப
    மாழ்கினரே இவர் காலமறிந்து...

    வரிசை கெடாமல் எடும் எனஓடி
    வந்திள மைந்தர் குனிந்து சுமந்து...
    கடுகி நடந்து சுடலை அடைந்து
    மானிட வாழ்வென வாழ்வென நொந்து...
    விறகிடமூடி அழல் கொடுபோட
    வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்...
    உருகி எலும்பு கருகி அடங்கி
    ஓர்பிடி நீறும் இலாத உடம்பை...
    நம்பும் அடியேனை இனி ஆளுமே...


    பட்டினத்தார் - கிபி 11 ஆம் நூற்றாண்டில் எழுதியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பட்டினத்தார்கள் இருந்ததாகஅறிகிறேன் பட்டினத்தார் பற்றிநான் ஒரு பதிவு எழுதி இருந்தேன் “இது என் ஏரியா அல்ல “என்று

      நீக்கு
  11. //போதிமரம் ஏதும்தேவை இல்லைஉண்மை நிலை உணர //

    உண்மை.

    பதிலளிநீக்கு