வாசிப்பின் பலன்பெற
--------------------------------
அண்மையில்
சென்னையில் திரு செல்லப்பாவை சந்தித்தேன் அவர் ஸ்ரீமந் நாராயணீயம் என்னும் நூலை எழுதி இருக்கிறார் அவர் சம்ஸ்கிருதம் கற்றவர் மூல சம்ஸ்கிருத நூலை
தமிழ் படுத்தி இருக்கிறார் அப்புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது
நராயணீயத்தை அடாப்ட் செய்து நான் கேசாதி பாதம்
எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது
அதே தசகத்தை நான் பார்த்தபோது
எனக்குப் புரிந்தது நான் எழுதி இருந்த கேசாதி பாதம் ஒன்றும் குறைந்திருக்கவில்லை நான் எழுதியது
மொழி பெயர்ப்பல்ல கூடியவரையில் செய்த தமிழாக்கம்தான் அதனை இப்போது நினைவு கூறல் தவறில்லை என்று தோன்றுகிறது
அதையே base செய்து கண்ணனை வர்ணிப்பதுபோல்
காதலியையும் வர்ணித்து எழுதி இருக்கிறேன் வழக்கம் போல் பாராட்டு எதுவும்
அதிகமில்லை நம் எழுத்தைப் பாராட்டாமல் இருப்பது வாசகர்களின் வழக்கம்தானே
இருந்தாலும் சில salient பகுதிகள்கண்டுகொள்ளாமல் போவது சிறிதுவருத்தம் தான் நான் தான் விடாக்கண்டனாயிற்றே மீண்டும் எடுத்துக்காட்டி வாசிப்பதின் பலன் பெற வேண்டி மீண்டும் அவற்றைப் பதிவிடுகிறேன் சிறிய சுய தம்பட்டம் என்பது தெரிகிறது இருந்தாலும்பரவயில்லை
இருந்தாலும் சில salient பகுதிகள்கண்டுகொள்ளாமல் போவது சிறிதுவருத்தம் தான் நான் தான் விடாக்கண்டனாயிற்றே மீண்டும் எடுத்துக்காட்டி வாசிப்பதின் பலன் பெற வேண்டி மீண்டும் அவற்றைப் பதிவிடுகிறேன் சிறிய சுய தம்பட்டம் என்பது தெரிகிறது இருந்தாலும்பரவயில்லை
கேசாதி பாதம் (கண்ணன்)
கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )
விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள் அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )
இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )
சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீ(லவண்ணக் கண்ணா என்னை மறந்து
(கண்டேன் நான் கண்ணனை )
அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )
குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)
கேசாதி பாதம் காதலி
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட
எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.
வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குவாழ்த்துகளோடு கருத்துகளுமிருந்திருந்தால் மகிழ்ச்சி இன்னும் அதிகமாய் இருக்கும் நன்றிசார்
நீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குவர்ணனை அழகோவியம் வாழ்த்துகள்.
கண்ணன் வர்ணனையா காதலி வர்ணனையா நன்றி ஜி
நீக்கு//நான் தான் விடாக்கண்டனாயிற்றே//
பதிலளிநீக்குநாங்கள் அதற்கு மேலே. என்ன எழுதினாலும் வாசித்து விடுவோம்.
வசித்துக் கருத்தும்சொல்லி விடுவோமென்று இருக்க வேண்டுமல்லவா
நீக்குநல்ல வர்ணிப்பு ஐயா...
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஜிஎம்பி சார்..ஏற்கனவே நான் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇத்தகைய பாடல்களில் சந்தம் இருக்கவேணும். அப்போதான் அது இன்னும் ரசனைக்குரியதாகும்.
நான் என் எழுத்துகளில் கருத்துக்கு முக்கியத்துவம்தருகிறேன் சந்தம் தேடி வார்த்தைகளைப் போடுவதில்லை நாராயணீயத்தில் ஒருதசகமே கேசாதிப்பாதம் எனப்படும் வர்ணனை அதை ஒடீ எழுதியது வருகைக்கு நன்றி
நீக்குமுன்பே படித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குமீண்டும் படித்தேன்.
எத்தனை முறை வாசித்தாலும் கண்ணனின் தோற்றத்தை கொண்டு வர முயற்சியில்வெற்றி பெற்றேனா என்பதைக்கூறி இருக்கலாம்
நீக்குகண்ணனை உங்கள் பாணியில் அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். காதலியை நீங்கள் உணர்ந்த மாதிரியில் வர்ணித்திருக்கிறீர்கள். முன்னரே படித்திருக்கேன் என்றாலும் இப்போவும் படிச்சேன்.
பதிலளிநீக்குகண்ணன் என்றதும் மனதில்தோன்றும் உருவத்தைபக்தி பாவத்தோடு கூறப்பட்டிருக்கும் நாராயணீயத்தில் அடிலிருந்து எடுத்தாண்டது கண்ணனி உருவத்தைக் கண்மு நிறுத்துகிறதா என்பதே தெரியவேண்டும்கண்ணனைவர்ணித்தபோது காதலியும் நினைவுக்கு வந்தாள் கண்ணனும் காதலிதானே பாவனைதான்வெவ்வேறு வருகைக்கும்கருத்துக்கும் நன்றி மேம்
நீக்குகேசாதி பாதம் என்ற பொது நூலிழை இருந்தாலும் கண்ணன் வர்ணனை கந்த சஷ்டி கவசம் படிப்பது போன்று இருந்தது.
பதிலளிநீக்குகருநிறம் சுருட்டைமுடி என்று தொடங்கும் பொது ஐயோ கண்ணனை ஒரு நீக்ரோ ஆக்கிவிட்டீர்களோ என்று தோன்றியது உண்மை.
கண்ணன் என் காதலி என்று தொடர்ந்த காதலியின் வர்ணனை கொஞ்சம் மசாலா சேர்க்கின்றது.
மொத்தத்தில் அந்தக்கால குமுதம் படித்த மாதிரி இருந்தது.
ஜேகே சார்... 'நீல வண்ணக் கண்ணா', 'ஷ்யாமள வண்ணனே' - கண்ணன் கருமை நிறம்தான். அவன் கண்கள் செந்தழல் போன்ற சிவப்பு. இப்படித்தால் இலக்கியங்களில் வருணிக்கப்படுகிறான் (அவனைத் தரிசித்தவர்களும் இப்படித்தான் எழுதியிருக்கிறார்கள்).
நீக்குஉங்களுக்கு ஒன்று தெரியுமா? இராமனும் கருமை நிறம்தான்.
ஆனால் நம் மனத்தில் வெள்ளை நிறத்துக்கே மதிப்பு இருப்பதால் வெண்ணிறமாகச் சித்தரிக்கிறோம். வெளிர் நீல நிறமாகச் சித்தரிக்கிறோம்.
அதற்காக கரி நிறம் இல்லை. 'கரி' நிறம்.
//அதற்காக கரி நிறம் இல்லை. 'கரி' நிறம்.// இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? புரியலை! அதோடு வெள்ளை நிறமாகவெல்லாம் யாரும் சித்திரித்து நான் பார்க்கவில்லை. கருமைநிறக்கண்ணனையே பார்த்திருக்கேன். அவனுக்குத் தான் மதிப்பும் அதிகம். என் அம்மாவின் அப்பா வீட்டிலும் அம்மாவின் அம்மாவும் எல்லோருமே நல்ல கருப்பு நிறம்! அதிலும் என் தாத்தா நல்ல உயரமாகக் கட்டுக்குடுமியுடன் பஞ்சகச்சத்துடன் சாட்சாத் அந்தக் கருப்பண்ண சாமி போலவே இருப்பார்!
நீக்கு@ஜேக்கே கண்ணனை பலராலும் யூக்கிக முடிந்தவகையில் எழுதி இருக்கிறேன் கண்ணனை வர்ணிக்கும்போது காதலியும் நினைவுக்கு வந்தாள் அவளுக்கும் சேர்ந்து எழுதி ஜஸ்டிஃபை செய்தேன்
நீக்கு@ஜேகே கண்ணனென்றதும் தோன்றும் உருவமே எழுத்தில் வந்தது காதலியும் அப்படியே கந்தர் சஷ்டிகவசம்போல் இருப்பதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது
நீக்கு@ நெத ஜெகேவுக்கு தெரியாததா சும்மா சீண்டிப்பார்த்து இருக்கிறார் கரி நிறம்யானையின் நிறமென்பது எழுதும் போது தோன்றவில்லை
நீக்குகீதா சாம்பசிவம் ///அதற்காக கரி நிறம் இல்லை. 'கரி' நிறம்.// இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? புரியலை! கரி நிறம் என்பது ஒரு வேளை யானையின் நிறமென்கிறாரோ
நீக்குஐயா. என்னுடைய ஐயம் சுருட்டை முடி என்பது பற்றியே. நிறம் பற்றி ஐயம் இல்லை.
நீக்குஐயம் சுருட்டை முடி மேல் மட்டும்போதாது கண்ணனைக் கண்டவர் யார் உளார் எல்லாமே பரம்பரைபரம்பரையாக ஊல்லா ஏஏல்வி ஞானம்தான் இருண்ட்க்ஹாலும் நான் அப்படி எழுதப் போனது அது நாராயணீயத்தை தழுவியது என்பதால்தான் கடவுளர்களின் அடையாளங்கள்பற்றி ஒருபதிவு எழுதி இருக்கிறேன் அது சரி நான் எழுதியதை எல்லாம்யார் நினைவில் வைத்துள்ளார்கள் நிறம்பற்றி ஐயம் இல்லை என்று கூறி இருக்கிறீர்கள் பாராட்டுகிறேன்
நீக்குமாயக்கண்ணனை வர்ணித்தவிதம் நல்லா இருக்குப்பா
பதிலளிநீக்குநானெழுதியது நாராயணீயத்தில் இருந்து எடுத்தாண்டதுகாதலி சொந்தசரக்கு
நீக்குமீண்டும் படித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குபக்தர்களுக்கு கண்ணனைப்பற்றிஎத்தனை முறை படித்தாலும் அலுக்காதுஅல்லவா
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகண்ணனின் கேசாதி பாத வர்ணனையில் காணப்படும் அழகும், காதலியின் கேசாதி பாத வர்ணனையில் தென்படும் காதலும், இளமைத் துள்ளலும் ரசிக்கும்படி உள்ளன.
பதிலளிநீக்குகண்ணனைப்பற்றி எழுதியது ஒரு மொழியாக்கமே காதலி பற்றிஎழுதியது உணர்வுபூர்வமானது வருகைக்கும்கருத்துக்கும்நன்றி மேம்
நீக்குஅது ஏன் கிருஷ்ணா வை கிருஷ்ணன் னாக்கி, பிறகு கண்ணனாக்கி, பிறகு கிட்டுனு ஆக்கிவிட்டனர் தமிழர்கள்?
பதிலளிநீக்குஉச்சரிப்பு பிரச்சினையா சார்?:) இல்லை சமஸ்கிரத்தை ஓரங்கட்டவா?
உங்களுக்குத் தெரியுமா மலையாளிகள் வசந்தாவை வசந்தெயாகவும் சீதாவை சீதெயாகவும் கீதாவை கீதெயாகவும் ஆக்குவார்கள் பெயரில் என் சார் இருக்கிறதுமற்றபடி சம்ஸ்கிருதத்தை ஓரங்கட்டவுமல்ல சம்ஸ்கிருதம்நம் ரத்தத்தில் கலந்திருக்கிறது என்றே தோன்றுகிறது அர்த்தம் புரிகிறதோஇல்லையோ
நீக்குபாடல் அருமை
பதிலளிநீக்குபாராட்டுகள் ஐயா!
எப்பவாவது வந்து பாராட்டுகிறீர்கள் நன்றி சார்
நீக்குஐயா இது சுய தம்பட்டம் அல்ல. உங்களின் அனுபவத்தைப் பகிர்கின்றீர்கள். அதனைக் கேட்க, படிக்க நாங்கள் கொடுத்துவைத்துள்ளோம்.
பதிலளிநீக்குஎழுத்துகள் சரியாகப் படிக்காமல் போவத ஆதங்கமே சுய தம்பட்டமாயிற்று
நீக்கு