உடலும் நலமும்
---------------------------------
திருச்சியில் இருந்து விஜயவாடா சேர்ந்தகதை எழுதி யாகி விட்டது மறுபடியும் திருச்சி வந்ததும்சொன்னால்தான் வட்டம் முடிவடையும்விஜயவாடாவில் என்னைசுழலும்மெஷின்களை நிர்மாணிக்கவும் ஸ்டோர்சாமான்களை பொறுப்பேற்கவும் பணித்தார்கள் வேலை மிகவும் அதிகம் உடல் பாதிக்கும்பணியாகவும் இருந்தது நேரம்காலம் இல்லாததாய் இருந்தது இதற்கிடையே ஸ்லிப் டிஸ்க் ஆகி விட்டது மருத்துவர் என்னை கம்ப்ளீட் ரெஸ்டில் இருக்கக் கூறினார் அப்போதைய நிலையில் அது சாத்தியமில்லாமல் போனதுஎன்னை குண்டூரில் இருந்த எலும்பு சிகிச்சை நிபுணரிடம் ரெஃபெர் செய்தார்கள் அவர் நான் உட்கார்ந்த நிலையில் வேண்டுமானால் முடிந்தால் பணிசெய்யலாம் என்றார் ஒரு நாளும் விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலைஒரு நாளைக்கு 12 மணிநேரத்துக்கும் அதிகபணி திருச்சிக்கே மீண்டும்போகலாமென்று விண்ணப்பித்தேன் திருச்சிக்கே சென்றும் கேட்டேன் அப்போது திருச்சியில் நிர்வாக இயக்குனராக இருந்தவர் ரிப்லேஸ்மென்ட் கேட்காவிட்டால் ஓக்கே என்றார் அது அப்போதுஇயலாத சூழ்நிலை அவரிடம என் நிலை கண்டு உதவக் கேட்டேன் அவருக்கு என்ன்னைப்பற்றி நன்கு தெரியும் பார்க்கலாமென்றார் நன் விஜயாவாடா வரும்முன்னே அவர் ஆக்ஷன் எடுத்திருந்தார் நான் விஜயவாடா வந்த ஓரிரு நாளில் எனக்கு திருச்சிக்கு மாற்றல் ஆர்டரிருந்தது திருச்சியில் என்னை வால்வ் டிவிஷன் தரக்கட்டுப்பாட்டு பொறுப்பை ஏற்கக் கூறினார்கள்
இதன் நடுவே என்மனைவி என்னை குண்டூரில் இருந்த அக்குபங்க்சர் மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்றார் அப்போது அங்கு இருந்தசிகிச்சை பெறுபவரைப் பார்த்து இது வேண்டாமென முடிவுக்கு வந்தார் உடலில்பல பாகங்களில் ஊசி குத்தி அசையாமல்பலர் இருப்பதைப் பார்த்து பயந்து விட்டாள் அப்போது ஒரு சிட்டிங்க்கு ரூ 400 என்றனர் எத்தனை முறை வேண்டுமோ தெரியவில்லை மேலும்பலரெஸ்ட்ரிக்ஷன்களைம் கூற்னார்கள் என்மனைவி திருப்பதி உண்டியலில் ரூ 1000 செலுத்துவதாக வேண்டிக் கொண்டார் அக்குபங்க்சர் மருத்துவம் எடுக்கவில்லை ஸ்ல்ப் டிஸ்க் தொந்தரவு தொடர்ந்தது கூடவே செர்விகல் ஸ்பாண்டிலைடிஸும் சேர்ந்துகொள்ள தினமும் ஃபிசியோதெரபி எடுத்து கொண்டிருந்தேன் இவைபற்றி எல்லாம் உபாதைகள் பலவிதம் என்றுபதிவு கள் எழுதி இருக்கிறேன் பெங்களூர் வந்தும் தொடர்ந்த உபாதைகளால் ஒருமுறை விழுந்து விட்டேன்அதுவே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்னும் பதிவானது
நன் பல உபாதைகளுக்கு ஆளாகி இருக்கிறேன் நம் உடலின் எந்த உறுப்பும் தன் இருப்பை தெரிவிக்கா விட்டால் உடல் நலம்என்று அறியலாம் என்பதே என் கண்டுபிடிப்பு இனி டி எம் எஸ் குரலில் ஒரு பக்தி இசை
கடவுள் பிரத்தியட்சமாவார்
அலை பாயும் மனம்