புதன், 19 பிப்ரவரி, 2020

உடலும் நலமும்



                                                   உடலும் நலமும்
                                                  ---------------------------------


திருச்சியில் இருந்து விஜயவாடா சேர்ந்தகதை எழுதி யாகி விட்டது  மறுபடியும் திருச்சி வந்ததும்சொன்னால்தான் வட்டம் முடிவடையும்விஜயவாடாவில் என்னைசுழலும்மெஷின்களை  நிர்மாணிக்கவும் ஸ்டோர்சாமான்களை பொறுப்பேற்கவும் பணித்தார்கள்  வேலை மிகவும் அதிகம் உடல் பாதிக்கும்பணியாகவும்   இருந்தது  நேரம்காலம் இல்லாததாய் இருந்தது இதற்கிடையே ஸ்லிப் டிஸ்க்  ஆகி விட்டது  மருத்துவர் என்னை கம்ப்ளீட்  ரெஸ்டில் இருக்கக் கூறினார் அப்போதைய நிலையில் அது சாத்தியமில்லாமல் போனதுஎன்னை குண்டூரில் இருந்த எலும்பு சிகிச்சை நிபுணரிடம்   ரெஃபெர்  செய்தார்கள் அவர் நான் உட்கார்ந்த நிலையில் வேண்டுமானால்  முடிந்தால் பணிசெய்யலாம்  என்றார் ஒரு நாளும்  விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலைஒரு நாளைக்கு  12 மணிநேரத்துக்கும்   அதிகபணி  திருச்சிக்கே மீண்டும்போகலாமென்று  விண்ணப்பித்தேன்   திருச்சிக்கே சென்றும்  கேட்டேன்  அப்போது திருச்சியில் நிர்வாக  இயக்குனராக  இருந்தவர்  ரிப்லேஸ்மென்ட் கேட்காவிட்டால் ஓக்கே என்றார்  அது  அப்போதுஇயலாத சூழ்நிலை அவரிடம என் நிலை கண்டு உதவக் கேட்டேன்  அவருக்கு என்ன்னைப்பற்றி நன்கு தெரியும்  பார்க்கலாமென்றார்  நன் விஜயாவாடா வரும்முன்னே அவர் ஆக்‌ஷன் எடுத்திருந்தார்  நான் விஜயவாடா வந்த ஓரிரு  நாளில் எனக்கு திருச்சிக்கு மாற்றல்  ஆர்டரிருந்தது திருச்சியில் என்னை வால்வ் டிவிஷன் தரக்கட்டுப்பாட்டு பொறுப்பை ஏற்கக் கூறினார்கள்
இதன் நடுவே என்மனைவி என்னை குண்டூரில் இருந்த  அக்குபங்க்சர் மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்றார்  அப்போது அங்கு இருந்தசிகிச்சை பெறுபவரைப் பார்த்து இது வேண்டாமென முடிவுக்கு வந்தார்  உடலில்பல பாகங்களில் ஊசி குத்தி அசையாமல்பலர் இருப்பதைப் பார்த்து பயந்து விட்டாள் அப்போது ஒரு சிட்டிங்க்கு  ரூ 400  என்றனர்  எத்தனை முறை வேண்டுமோ தெரியவில்லை மேலும்பலரெஸ்ட்ரிக்‌ஷன்களைம்    கூற்னார்கள் என்மனைவி திருப்பதி உண்டியலில் ரூ 1000 செலுத்துவதாக வேண்டிக் கொண்டார்  அக்குபங்க்சர் மருத்துவம் எடுக்கவில்லை ஸ்ல்ப் டிஸ்க் தொந்தரவு தொடர்ந்தது கூடவே செர்விகல்  ஸ்பாண்டிலைடிஸும்  சேர்ந்துகொள்ள  தினமும் ஃபிசியோதெரபி  எடுத்து கொண்டிருந்தேன்   இவைபற்றி  எல்லாம்  உபாதைகள் பலவிதம் என்றுபதிவு கள் எழுதி இருக்கிறேன் பெங்களூர் வந்தும் தொடர்ந்த உபாதைகளால் ஒருமுறை விழுந்து விட்டேன்அதுவே நான் வீழ்வேனென்று  நினைத்தாயோ என்னும்  பதிவானது
 நன்  பல உபாதைகளுக்கு  ஆளாகி  இருக்கிறேன் நம் உடலின் எந்த  உறுப்பும்  தன் இருப்பை தெரிவிக்கா விட்டால்  உடல் நலம்என்று அறியலாம் என்பதே என்  கண்டுபிடிப்பு 

இனி டி எம் எஸ் குரலில் ஒரு பக்தி இசை 






கடவுள் பிரத்தியட்சமாவார் 









அலை பாயும் மனம் 










20 கருத்துகள்:

  1. அனுபவங்கள்...    அனுபவங்கள்...   அக்குபங்க்சர் முறை வந்த புதிதோ...

    நானே ஒரு வாரமாய் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த 'கற்பகவல்லினின்' பாடலை இன்று கேட்டுவிட்டேன்!  இரண்டாவது காணொளி ஓடவில்லை.  அலைபாயுதே பாடல் ஓகே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்குபங்க்சர்முறை மிகப்பழையது சீன மருத்துவம் என்கிறார்கள்

      நீக்கு
  2. அனுபவம் புதிது.

    உடல் உறுப்புகள் தம் இருப்பைத் தெரிவிக்காவிட்டால் உடல் நலமாக இருக்கு -ஹா ஹா ஹா... ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சும்மாவா சொன்னார்கள்? உடல் நலம் குன்றிவிட்டால் நம் பாடு திண்டாட்டம் தான்....

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது உடலும் நலமும் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கண்டுபிடிப்பு உண்மை....

    இரண்டாவது காணொளி வரவில்லை ஐயா... [This Video is private.]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது காணொளி இப்போதுவரும் அது நான் வெள்யிட்ட காணொளி

      நீக்கு
  5. நம் உடலின் எந்த உறுப்பும் தன் இருப்பை தெரிவிக்கா விட்டால் உடல் நலம்என்று அறியலாம் என்பதே என் கண்டுபிடிப்பு.

    உண்மை.

    பதிலளிநீக்கு
  6. அக்குபஞ்சர் முறையை கேட்டாலே களக்கமாகிறது ஐயா.

    இரண்டு காணொளிகள் கேட்டேன் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கு பங்சர் ஒரு சீன முறை மருந்தில்லா மருத்துவம் இந்தியாவிலிருந்து சென்றது என்று கூறுவோரும் உண்டுமுடியிலும்சன்ன ஊசிகளை குற்ப்பிட்ட இடங்களி செருகுவார்கள் நாடி நரம்புகளை குறி வைக்கிறார்கள் பல ரெஸ்ட்ரிக்‌ஷன்களும் இருந்ததால் எனக்கு ஒத்துவராது என்று ஒதுங்கி விட்டேன்

      நீக்கு
  7. இருப்பைத் தெரிவிக்காவிட்டால்....ரத்தினச்சுருக்கமாக..அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  8. ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்; சமாளித்தமைக்குப் பாராட்டு.

    பதிலளிநீக்கு
  9. தவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப்படவேண்டும்

    பதிலளிநீக்கு
  10. நம் உடலின் எந்த உறுப்பும் தன் இருப்பை தெரிவிக்கா விட்டால் உடல் நலம்என்று அறியலாம் என்பதே என் கண்டுபிடிப்பு.

    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  11. உடல் உபாதைகள் நீங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  12. உடல் நலமாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு