நான் முன்னாலே போறேன் பின்னாலே வா நீ
--------------------------------------------------------------------------
.
விடிகாலையில் விழிப்பு வந்தது என்படுக்கை சன்னலை ஒட்டியே இருப்பது
வெளிச்சம் வேண்டி
சன்னல் ஸ்க்ரீனை ஒதுக்கி
வைப்பது வழக்கம் விழிப்பு வந்ததும் அருகில்
படுத்திருக்கும்மனைவியைப்பார்த்தேன் அவளுக்கென்ன
தூங்கு கிறாள் மனசில் அல்லாடுப்வன்
நானல்லவா வயது கூடக்கூட எண்ணங்கள் கட்டுப்பாட்டில்
இருப்பதில்லை சாலைஒரத்து
விளக்குக்கள்அறைக்குள்ளும் வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்தப்பாழும்
மனம் தினமும் அவள்
உயிர்ப்புடன் தான் இருக்கிறாள் என்று
உயிர்ப்புடன் தான் இருக்கிறாள் என்று
உறுதி செய்துகொள்ளும்
நான் அன்றெழுதிய கவிதை நினைவுக்கு வந்தது
நிலவைப் பழிக்கும் முகம்
அதில் நினைவைப் பதிக்கும் கண்கள்
(இப்போது உறக்கத்தில் கண்கள்மூடி இருகின்றன்)
படர்கொடி வெல்லும் துடியிடை
இடர் சேர்க்க இடையிடையாட
என்றெல்லாம் எழுதிக் குவித்தேன்
இன்றும் அவளெழில் குறைந்தாளில்லை
கூறப் போனால் அக அழகு
மாசற்ற மெருகு கூடியே உள்ளது
.
காதலுக்குக் கண் இல்லை என்பர். –நான்
ஓங்கி உரைப்பேன், காதலுக்கு வயதுமில்லை.
. அன்றோ
தளதளவென்று இருப்பாள் இன்று தளர்ந்திருக்கிறாள்
இருவருக்கும் வயதாகி விட்டது இருவரும் ஒருநாள் இல்லாமல் போக வேண்டியதுதான் யார்
முந்தி என்பது
தெரியாது ஆனால் என்னால் தனியே இருக்கமுடியாது என் சுபாவம் அப்படி
என்னால் எல்லா இடங்களிலும் என்னைப்
பொறுத்திக் கொள்ள முடியாது அப்படி ஒரு சுபாவம்
எங்கும் என் கை ஓங்கி இருந்து பழகி விட்டது மேலும் இப்போதெல்லாம்
என்னால் தனித்து
இயங்க முடிவதில்லை என்னை எல்லோராலும் ஏற்றுக் கொள்வது சிரமம் அவளில்லாமல்
நானில்லை என்னும் பாடலே நினைவுக்கு
வருகிறது சொல்லப் போனால் நான் வெர்சுவலி ஒரு
குழந்தை
என்னோடு 56 வருடங்கள் குப்பைகொட்டியவள்
நான்நினைப்பதை உடனே கூறுபவள்
அது போல் என்னால் முடிவதில்லை என் குறைகள் எனக்குத்தெரியும் எழுத எண்ணங்கள்
கோர்வையாய் வ்ருவதில்லை
வாழ்வின்
விடியல்,பகல்,மாலை
வரை
வந்து
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
என்னுயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
மூடிய கண்கள் விழித்து விட்டால்
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
என்னுயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
மூடிய கண்கள் விழித்து விட்டால்
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே
என்பதிவு ஒன்றுக்கு பின்னூட்டமாகஒருவர் சொல்கிறார் சொல்கிறார்,வாழ்க்கைதுணை தேடும் போது பெண் தன் முதல் குழந்தையை தேடுகிறாள், ஆண் தன் இரண்டாவது அன்னையை தேடுகிறான் என்று.சத்தியமான மொழி அது
நான் என் இளவயதில் என்னைப் பெற்றவளை இழந்தேன்பெற்ற அன்னையின் அன்பு அறியாதவன் என் மனைவியைத்
தாரமாகமட்டுமல்லாமல் தாயாகவும் காண்கிறேன்
”எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்”
சொல்லிப் போனான் பாரதி
அவனுக்கென்ன சொல்லிவிட்டான்
நல்லவே எண்ணல் வேண்டும்
ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லையோ
எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காதவை
எது எண்ணக் கூடாதோ அதுவே முன்னே சதிராடும்
மருந்து அருந்துகையில் குரங்கின் எண்ணம்
வரக்கூடாது என்றாலும் அதுதானே முன் நிற்கும்
நினைவுகள் அதுவும் சுகமான நினைவுகள் கொண்டு
வேண்டா எண்ணங்களைத் துரத்த முயல்கிறேன்
எத்தனையோ போராட்டங்கள் பார்த்தாயிற்று நான்
வெல்லவில்லையா.?நானில்லாவிடினும் ஏதும் மாறாது
எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்
.இருந்தாலும் எண்ணங்கள் கட்டுக்குள் இல்லை வேண்டலாம் நான் முன்னாலே
போறேன் பின்னலே வா நீ
எண்ணங்களின் பயணம். ஆண் போய் பெண் இருப்பது சுலபம். நாணலாய் வளைந்து நிற்கத் தெரியும் பெண்களுக்கு. ஆண்களுக்கு பலவகையில் சிரமம்.
பதிலளிநீக்குமேலை நாடுகளில் பெண்களுக்கு, ஆண்களுக்கென்று வித்தியாசம் இல்லாமல் கம்பானியன்கள் உண்டு, ஸ்ரீராம். சுற்றுலா தலங்களில் நிறைய பார்க்கலாம். எந்த விகல்பமும் இல்லாமல் துணை என்பது துணைக்காகவே என்ற கோட்பாட்டிலிருந்து இம்மியளவும் விலகாமல் வாழ்க்கையை ரசனையோடு வாழத் தெரிந்தவர்கள் அவர்கள்..
நீக்குஸ்ரீராம் --ஓரளவு பதிவை உள்வாங்கி இருக்கிறிர்கள் நன்றி
நீக்குஜீவி பெண் துணக்காக எக்கம் அல்ல இது வழக்கம்போல் வேறு தளாஆஈளீறூஈராது உங்கள் பின்னூட்டம் வருகைக்கு நன்றி
நீக்குபாரதி முப்பத்தியொன்பது வயதில் மறைந்து விட்டார். அவர் அறுபது, எழுபது தாண்டி இருந்திருந்தால் என்ன எழுதியிருப்பார்? அவரும் சிரமங்களை உணர்ந்திருப்பாரோ...
பதிலளிநீக்குபாரதிகொடுத்து வைத்தவன்
நீக்கு// எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும் //
பதிலளிநீக்குஉண்மை ஐயா...
கடக வேண்டியதை விருப்பம்போல் கடக்க வேண்டும் பதிவு இது
நீக்குநீங்கள் எழுதியிருப்பதை மற்றவர்கள் படிப்பது இருக்கட்டும். நீங்களே கொஞ்சம் நிதானமாகப் படித்துப் பாருங்கள்.. தனிமையில் இருந்து.
பதிலளிநீக்குBy the way, தனிமை என்றால் என்ன என்று உங்களுக்குப் புரியுமா?
இதுவரை தெரிந்ததில்லை அப்பை இருந்திருக்கிறாள் என் மனைவி
நீக்குஅனுபவம் சார்ந்த உங்கள் உணர்வுகள் புரிகிறது.
நீக்குநான் தனிமை என்று குறிப்பிட்டது, being alone என்பது பற்றியது அல்ல. A state of being aloof என்கிற அர்த்தத்தில் வருவது. அருகில் அன்புச் சுற்றம், நட்பெலாம் இருந்தும், ‘தனி’யாக உணர்வது, தன்னை அனுபவிப்பது .. அத்தகு ‘தனிமை’பற்றியே நான் குறிப்பிட்டேன்.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எத்தனையோ அனுபவங்களைத் தருகிறது; போகிறபோக்கில் எதையோ சொல்லியும் செல்கிறது. புரிந்துகொண்டோமா என்பதே கேள்வி..
என் எழுத்துகளெல்லோராலும் புரிந்து கொள்ளப் பௌவித்ஹ்டில்தான் இருக்கிறது சிலநெரக்களில் வித்தியாசமாகபுரிந்து கொள்ளப்படுவதும் உண்டு நானே என்னை வைது கொள்வதும் நேரும் நிங்கள் குறிப்பிடும் பொருளில் தனிமை என்னால் உணர முடியாது அது என் குறையாயும் இருக்கலாம்
நீக்குஓருயிர் ஈருடலாக வாழ்ந்துவிட்டால் பிரிந்துவாழ்வது எவ்வாறு? உங்கள் அன்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
https://newsigaram.blogspot.com/
பிரிவின் நினைப்பே அச்சம் தருகிறது
நீக்குநினைவோட்டங்களின் அலைகள்
பதிலளிநீக்குநன்றாகத்தான் இருக்கிறது ஆயினும்
மனம் சற்றே கனக்கிறது ஐயா.
நான் தற்காலம் கலக்கத்தில் இருக்கிறேன் முதுமையில் துணை அவசியம் வேண்டும்.
தங்களது பதிவு என்னை மனம் தளரவைக்கிறது என்பது உண்மையே...
முதுமையில் தாரம் தாய் போல என்று நினைக்கிறேன்
பதிலளிநீக்கு50 ஆகிவிட்டாலே தாரம் தாய் போலத்தான்.
பதிலளிநீக்குபெரும்பாலான ஆண்களால் துணையின்றித் தனியாக வாழ இயலாது. பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் வாழ முடிந்தவர்கள். அதற்கு நான் முக்கிய காரணமாக நினைப்பது ஆண்களின் ஈகோ மற்றும் கர்வம். பெண்கள் ரொம்ப அட்ஜஸ்டபிள் டைப்.
எனக்குத் தெரிந்த ஒருவர் 70 வயதில் மறைந்தார். அன்றோ அல்லது மறுநாளோ அவர் மனைவியும் மறைந்தார். நாங்கள் அதை பெரும் பேறு என எண்ணிக்கொண்டோம்.
நம் கையில் இல்லாத்து, நாம் எண்ணி என்ன பயன்?
மிக சரியான விமர்சனம். அருமை
நீக்குநெல்லைத் தமிழன் சர்யாகவே சொல்லீருக்கிறார்
நீக்குநான் எண்பதைக் கடந்து விட்டே மனைவி 74 லில் வந்துகொண்டிருக்கிறாள்
பதிலளிநீக்குநம் கையில் இல்லாத்து, நாம் எண்ணி என்ன பயன்இல்லை எனத்தெரிந்தும் எண்ணாமல் இருக்கத்தெரியவில்லையே
நானும் அந்த நிலையை எட்டிக் கொண்டிருப்பவன் என்பதால் கூடுதல் ஈடுபாட்டுடனும்..கூடுதல் அக்கறையுடனும் படித்தேன்.ஈடுபாட்டுடன் எழுதினால் எழுத்துஎவ்வளவு தூரம் வளைந்து இணைந்து வரும் என்பதற்கு இந்த கவித்துவமான படைப்பே அத்தாட்சி..
பதிலளிநீக்குஎன் மனைவி பற்றி நிறையவே எழுதிவிட்டேன் எண்ணங்களை வராமல் தடுக்க இயலவில்லையே
நீக்குஉங்கள் எண்ணங்கள் வயதானோருக்கு வருவது தான். எல்லாம் ஈசனின் கைகளில்!
பதிலளிநீக்குஎனக்கு தோன்றுவது புதிதல்லவா இருந்தும் ஒரு ஸ்திதப்பிரக்ஞனாக இருப்பது கடின்ம்தான்
நீக்குஉங்கள் பதிவு நெகிழ வைத்தது. மனம் கலங்க வைத்தது.
பதிலளிநீக்குவயதான பின்னும் அன்பு கூடிக்கொண்டே போவது ஒரு அழகான தாம்பத்யத்தின் அடையாளம். அது நிறைய பேருக்கு வாய்ப்பதில்லை. நீங்களும் உங்கள் மனைவியும் கொடுத்து வைத்தவர்கள். அன்பான துணை அடையப்பெறாதவர்களை நினைத்துப்பாருங்கள். நீங்கள் எந்த அளவு பாக்கியம் செய்திருக்கிறீர்கள் என்பது புரியும்.
வயது ஆக ஆக, மனதிலும் உடலிலும் தளர்வு புரியும்போதும், கூட இருந்த பல உறவுகள் மறையும்போதும் இந்த எண்ணங்கள் வருவது இயல்பு தான். தவிர்க்க முடியாததும்கூட. கூடியவரை உங்களை சுறுசுறுப்பாக, சிந்திக்கும் வாய்ப்புகளை அதிகம் தவிர்ப்பவராக மாற்றிக்கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு பிடித்தமான செயலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தால் சிந்தனைகளுக்கு தற்காலிகமாக விடுதலை கொடுக்கலாம். இப்போதெல்லாம் GATED COMMUNITY வீடுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. எனக்குத்தெரிந்த சிலர் கூட அங்கே வீடுகளை வாங்கி தங்கியிருக்கிறார்கள். பிடித்த விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். உற்சாகமாக பொழுதைக்கழிக்கிறார்கள்.
பிறந்தவர் ஒரு நாள்மறையத்தான் வேண்டும் என்னால் அவள் இல்லாமல்இருக்க முடியுமா எனும்போதுஎழுந்த சிந்தனையே இப்பதிவு
நீக்கு
பதிலளிநீக்குஅதிகாலையில் தூக்கம் கலைந்து மறுபடியும் தூங்க முடியாமல், வெளியே எந்திரித்து செல்ல முடியாமல் வயதான நிலையில் பலருக்கும் உருவாகும் சூழல் தான் இது போன்ற எண்ணங்களை மனதில் உருவாக்கும். அது போன்ற சூழலில் அருகில் படுத்திருக்கும் மனைவியைப் பார்க்கும் எண்ணங்கள் இன்னமும் வேறு விதமாக உருவாகும்.
மரணம் குறித்த எண்ணங்கள் வரும்.
எல்லாவற்றையும் விட்டு விட்டு செல்லப் போகின்றோம் என்ற எண்ணம் வினோதமான மனநிலையை உருவாக்கும்.
நிதானமாக வாழப் பழகியவர்களுக்கு ஒன்றும் பாதிப்பு உருவாகாது.
உங்கள் வரிகளை சற்று கோர்வைப்படுத்தி ஒழுங்குப் படுத்தி எழுதியிருந்தால் சிறப்பான ஆக்கமாக வந்து இருக்க வாய்ப்புண்டு.
எண்ணங்கள் என்கட்டுப்பாட்டில் இல்லை நான் செல்வதில்கவலை இல்லை யார் முந்துவது என்பதில்தான் தேவையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதிவிட்டேன்
நீக்கு//பிரிவின் நினைப்பே அச்சம் தருகிறது// ஆமாம். ஆனால் உங்கள் வயதை எட்டிப் பிடிக்கும் நான் இந்த நினைவுகளை முடிந்தவரை அப்புறப்படுத்தி விடுகிறேன். யார் முன்னால் யார் போவது? யார் யாருக்குப் பின்னால் போவது. நமக்கு தெரியாது. குருடன் போல் ஒரு அந்திம வாழ்வு. ஆனாலும் இதில் உள்ள பாசிட்டிவ் விஷயங்களைப் பார்ப்போம். நன்றாக இது வரை கடந்து விட்டோம். மீதியையும் அப்படியே கடப்போம், வருவது வரும் நேரத்தில் வரட்டும். அது வரை “ஓடுவோம்”!!!
பதிலளிநீக்குபாசிடிவ் விஷயங்கள் என்னை அவளும் அவளை நானும் சரியாகப்புரிந்து கொண்டதுதான் இப்போதெல்லம் நடக்கவே சிரமம் பின் அல்லவா ஒட
நீக்குபாசிடிவ் விஷயங்கள் எவ்வளவோ இருக்கே! நான் எங்கேயோ இருக்கிறேன். இருந்தும் நம்முள் தொடர்பு எறபட உதவும் இந்த ஊடகாங்கள் புதிதல்லவா? பார்க்காததைப் பார்த்து விட்டோம். விரைந்து ஓடும் உலகத்தைப் பார்க்க கொடுத்து வச்சிருக்கே. நம் இளைய காலத்திற்கும் இப்போதைக்கும் தான் உலகில் எத்தனை வித்தியாசம் .. வளர்ச்சி.. இதில் நாமும் ஒரு பங்கு தானே. அதை நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டு மெல்லிதாக அந்த வளர்ச்சிகளையும் தொட்டுக் கொண்டே வாழ்வோமே....
நீக்குஇந்த பதிவுகள்மூலம் என்னைநான் வெள்ப்படுத்தி கொள்கிறேன்
நீக்குஒளிவு மறைவு இல்லாமல்
இந்த வயதிலும் வாழ்க்கைத் துணைவியைப் பெற்றிருக்கிற நீங்கள் பாக்கியசாலி .
பதிலளிநீக்குஎன்26ம் பிறந்தநாள்லிருந்தே துணையாய் அவளைப்பெற்றிருக்கிறேன்
நீக்கு‘நான் முன்னாலே போறேன் பின்னலே வா நீ’ என்ற முத்தாய்ப்பான வரிகள் மனதை என்னவோ செய்தது.
பதிலளிநீக்குஎன்ன செய்வது மனம் எண்ணக் கூடாததை எண்ணுகிறதே
நீக்குஅன்பு ஜி.எம்.பி சார்.
பதிலளிநீக்குமனம் தளராமல் இருங்கள்.
இரண்டு நாட்களில் என் கணவருக்கு எண்பது வயது பூர்த்தியாகும்.
அவர் வயதையும் சேர்த்து நான் இருக்கப் போகிறோனோ தெரியாது.
துணையை இழப்பது கடினமே.ஆனால் மீளலாம்.
72 வயது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திடமாக இருப்பதையே குறிக்கோளாக
வாழ்கிறேன்.
நாமஸ்மரணம், மனைவி மற்றும் தங்களது ஆரோக்கியத்தை மந்தில் வைத்து நேர்மறையாக
சிந்திக்கலாம்.
யாரோ சொன்னார்கள்.
மரணம் வரும்போது நாம் இருக்க மாட்டோம் என்று.
மனைவியை இன்னும் காதலியுங்கள்.
அன்பு நீடிக்கும் ஆற்றல் தரும்.
என் நினைவுகளைப் பதிந்தேன்.
புத்திமதி என்று இல்லை.
மனோ அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்.
உங்கள் எண்ண்ங்களைப் பகிர்ந்துகொண்டடற்கு நன்றிம்மா
பதிலளிநீக்குஐயா கந்தசாமியின் பிரிவு உங்களை மிகவும் பாதித்திருக்கிறது. இணையத்தின் மூத்த பதிவர் தாங்கள் தாம். அந்த நினைப்பே " நான் முன்னாலே போறேன்." என்று சொல்ல வைக்கிறது.
பதிலளிநீக்கு60க்குப்பின் நமது பிள்ளைகள் எல்லோரும் பறந்து சென்றபிறகு நமது மனைவிகள் நம்மை பிள்ளைகள் ஆக்கி விடுகிறார்கள். நாமும் நம்தாயை இழந்திருப்போம். ஆகையால் நாமும் பிள்ளைகள் ஆகி மனைவியின் துணை இன்றி வாழ முடியாது என்ற நிலைக்கு ஆளாகிறோம். இந்த நிலையினை அவர்களும் அவ்வப்போது சுட்டிக் காட்டுவது உண்டு.
நானும் நீங்கள் குறிப்பிட்ட முறையில் தான். எங்கு சென்றாலும் மனைவியுடன் தான். அதே போன்று செலவுகள் செய்வது அவர்களிடம் ஆலோசித்த பின்தான்.
இந்தபதிவு கந்தசாமி சாரின் பிரிவின் விளைவு என்பதே சரி யில்லை பிறந்தவர் இறக்கத்தான்வேண்டும் என்னும் நியதி தெர்யாதவன் அல்ல நான் என் குணத்தை நன்கு அறிவேன் என்னால் வேறெங்கும் சென்று வாழ மியாது என் குணம் அப்படி என்னைஅனுசரித்து போபவள் எ மனைவி நாண்லாய் வளைந்து கொடுக்கும் சுபாவம் அவளுக்கு எனக்கு முடியாதது அதனால் தான் சொன்னேன் நான் முன்னாலே போறேன் பின்னாலே வா நீ
நீக்குஇந்த தலைப்பில் வை, கோபால்கிருஷ்ணன் அவர்கள் கதை எழுதி இருந்தார்கள் அதை படித்து மன்ம கனத்து போனது. அதே நிலைதான். இப்போதும்.
பதிலளிநீக்குஎன் மாமியார் மாமனாருக்கு அப்புறம் தான் தான் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் தன்னை போல் யாரும் தன் கணவரை பார்த்துக் கொள்ள முடியாது என்ற எண்ணம் . அது போல் தான் ஆச்சு.
எண்ணெய் முந்தியோ ! திரி முந்தியோ என்று சொல்லுவார்கள் பெரியவர்கள்.
அதை பற்றி எல்லாம் நினைக்காமல் உங்கள் வாழ்க்கை துணையோடும் குழந்தைகள், பேரன் பேத்திகளோடு பேசிக் கொண்டு இருங்கள்.
நீங்கள் என்று இல்லை பொதுவாக ஆண்களுக்கு அவர்கள் தேவைகளை பார்த்து பார்த்து செய்வார்கள் பெண்கள்.
அது போல் ஆணும் தன் மனைவிக்கு பார்த்து பார்த்து செய்வார்கள்.
மனைவியை பிரிந்து கணவனும், கணவனை பிரிந்து மனைவியும் இருப்பது கஷ்டம் தான்.
எனக்கு வைகோவின் பதிவு படித்த நினைவு இல்லை மேலும் எழுதி இருப்பது என் எண்ணங்களே தவிர்க்க முடியாவிட்டல் அனுபவித்தேஆக வேண்டும்
நீக்குமதுரையில் ஒரு மொழிபெயர்ப்பாளர். இதுவரை 41 நூல்களுக்கும் மேலாக மொழி பெயர்த்துள்ளார். நான் அவருக்கு monster என்று பெயர் வைத்திருக்கிறேன். இன்னும் வலையத்திலும் முகநூலிலும் தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்த்து பதிவிடுவார். வயது 81. இன்னும் இளைஞர் - மனத்தளவில். பேரா. முனைவர் வின்சென்ட் இன்னும் பாசிட்டிவாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
பதிலளிநீக்குநான் அவ்வளவு தூரம் பிரபல மடைய வில்லை ஆனால் மனதளவில் இளமையாக உயிர்ப்புடன் தான் இருக்கிறேன்
நீக்குமனசு கனத்தது. நிதர்சனத்தை ஜீரணிப்பது மிகக் கடினம்.
பதிலளிநீக்குநிதர்சனம் என்று தெரிந்துகொண்டாலேயே பாதி பளு குறைந்துவிடும்
பதிலளிநீக்குஉங்கள் மனதுக்கு பிடித்ததை செய்து கொண்டு இந் நினைவில் இருந்துநீங்குங்கள்.
பதிலளிநீக்கு/மரணம் வரும்போது நாம் இருக்க மாட்டோம் என்று நாம் .இருக்கும்போது மரணம் இல்லை வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு